Results 1 to 3 of 3

Thread: உண்மைக் காதல்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    உண்மைக் காதல்

    பார்மெச்சும் உன்அழகை பார்த்த கண்களுக்கு
    ஊர்வசியும் மேனகையும் தாடகையாய்த் தெரியுதடீ!

    உன்குரலை அனுதினமும் கேட்ட செவிகளுக்கு
    வனத்துறையும் குயிலோசை அவலயமாய்க் கேட்குதடீ!

    உன் பெயரை உச்சரிக்கையில் இனிக்கின்ற நாவுக்கு
    திருநெல்வேலி அல்வாவும் வேம்பாய்க் கசந்ததடீ!

    உன் கருநிற கூந்தலில் சூடிய செம்பருத்தி
    கழகக் கொடியை கண்களிலே காட்டுதடீ!

    குண்டு மல்லிகைப் பூவைத் தலையிலே சூடுகையில்
    வண்டுகள் கூட்டத்தை மொய்ப்பதற்கு விட்டுவிடாதே!
    பாரம் தாங்காது முறிந்து விழும் சிற்றிடையின்
    கோரக் காட்சியைக் காண்பதற்கு நான் சகியேன்.

    இரவுநேர மின்வெட்டும் இனித்திடுமே காதலர்க்கு!
    இருட்டிலும் படிக்கின்ற எழுத்தன்றோ காதலென்று
    கவியரசர் சொன்னசொல் காதலர்க்கு வேதமடீ!

    தாயைக் கண்டாலும் சலிப்பு வந்ததடீ! உன்வடிவில்
    பேயைக் கண்டாலும் காதல் பிறக்குமடீ! நீ உந்தன்
    வாயைத் திறந்து ஒருவார்த்தைப் பேசிவிட்டால்
    பாயை விரித்துப் படுத்திடுவேன் நிம்மதியாய்!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    குண்டு மல்லிகைப் பூவைத் தலையிலே சூடுகையில்
    வண்டுகள் கூட்டத்தை மொய்ப்பதற்கு விட்டுவிடாதே!
    பாரம் தாங்காது முறிந்து விழும் சிற்றிடையின்
    கோரக் காட்சியைக் காண்பதற்கு நான் சகியேன்.
    மெல்லிடையை வர்ணித்த விதத்தை மிகவும் ரசித்தேன்...

    வண்டு உட்கார அனுமதிக்காதே
    இடை முறிந்துவிடும்
    என்பது கற்பனை என்றால்,
    வண்டை மொய்க்கவே அனுமதிக்காதே
    இடை முறிந்துவிடும்
    என்பது கற்பனையின் உச்ச்சம்...


    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    தாயைக் கண்டாலும் சலிப்பு வந்ததடீ! உன்வடிவில்
    பேயைக் கண்டாலும் காதல் பிறக்குமடீ!
    வாய்விட்டுச் சிரித்துவிட்டேன்...
    காதலுக்குக் கண்ணில்லை என்று சும்மாவா சொல்கின்றார்கள்...

    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    உன் கருநிற கூந்தலில் சூடிய செம்பருத்தி
    கழகக் கொடியை கண்களிலே காட்டுதடீ!
    இந்த வரிகள் புரியவில்லை...

    ஐம்புலனும் கவர்ந்தவள்
    ஐம்புலனையும் நிறுத்திவிட்டாள்...

    ரசனைமிகு கவிதைக்குப் பாராட்டுக்கள் பல...
    (100 இ-பணம் வழங்கி மகிழ்கின்றேன்.)

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    அக்னியின் பாராட்டுக்கு நன்றி! இ.பணம் 100 வழங்கியமைக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •