Results 1 to 3 of 3

Thread: கோகுலானந்தாவின் தொகுப்பு

                  
   
   

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    புதியவர்
    Join Date
    01 Jul 2017
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    289
    Downloads
    3
    Uploads
    0

    கோகுலானந்தாவின் தொகுப்பு

    தாய்மை:

    அன்பின் அந்தம் தாய்மையே!
    அன்னை வடிவம் தெய்வமே!
    வாழ்க்கையின் பாடங்கள்
    அவளிடம் தொடங்குமே!
    வானமும் வணங்குமே!
    வையகம் விளங்குமே!

    சாதனை என்றால் தாயே என்னவென்று
    மகன் கேட்டான் !
    தாயவள் போதனை கேட்க அன்று ஒரு
    விதை போட்டான் !
    "சோதனை ஏணியின் உயரமே சாதனை!
    முயற்சியின் ஆதியே! மகிழ்ச்சியின் அந்தமே!
    அன்பு ,பணிவு,பொறுமை,கடமை கொண்ட மனிதன்
    என்ற பெயரை நீயும் அடைந்தால் பேறு பெறுவேன்!
    சாதனை வேறு எதுவுமே ஈடு இணையில்லை
    உன் தாய்க்கு!" என்றாள்

    பிள்ளையவன் வளர்ந்த பின்னும்
    தாயின் அன்பு மாறாது!
    அன்னையவள் பார்வையில் என்றும்
    அவன் வயது ஏறாது!
    குழந்தையின் அசைவுகள் அர்த்தங்கள் அறிந்தவள்!
    மழலையும் உறங்கவே இமைகளைத் துறந்தவள்!
    அழகு மொழியில் கொஞ்சி பேசி சிரித்து மகிழ்வாள்!
    மழையின் தூய்மை தோற்று போகும் அன்பை பொழிவாள்!
    குழந்தையோர் தெய்வம் என்று சொன்னால்
    தாயவள் தெய்வத்தின் தெய்வம்!

    மனிதன் இன்று:

    மனம் படைத்த மனிதர்களை
    மதங்கள் ஆள்கின்றது!
    குணமென்பதும் தொலைந்ததனால்
    அதர்மம் வாழ்கின்றது!
    காசிருந்தால் கடவுளிடம்
    பேரமும் பேசிடுவான்!
    ஆலயத்தை கல்லறையாய்
    ஒரு நாள் மாற்றிடுவான்!

    ஆண்டவன் பூமிக்கு வந்தான்! அன்று
    ஆணவம் ஒழிந்திட வாழ்ந்தான்!
    திருந்தா மனமும் திருந்திடுமா? இங்கு
    தவறிய வாய்ப்புகள் திரும்பிடுமா?
    உயிர் துடிக்க உயிர் பார்க்கும்
    அதிசய மிருகமென
    மனிதனின்று மாறிவிட்டான்!
    மனதினை தூக்கிலிட்டான்!

    செல்லரித்த ஒரு மரமாய்! உன்
    உள்ளமதை தினம் அரிக்கும்!
    மதமா வேண்டும்? மனமே வேண்டும்!
    மனிதா! இதை நீ உணர்வாயே!
    நதிகள் எல்லாம் கடலைக் கண்டால்
    பயணம் முடிந்து விடும!
    மதங்கள் எல்லாம் கடவுள் ஒன்றே
    என்றால் கலந்து விடும்!
    Last edited by gokul anand; 02-07-2017 at 12:33 AM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •