நிர்வாகிகளுக்கு: மீண்டும் இந்த தலைப்பை இங்கு பதிப்பதற்கு அனுமதிப்பீர்களாக.

நண்பர்களே

இந்த தளத்தில் தமிழுக்காக தமிழிலேயே கணணியில் தட்டச்சு செய்து கலந்துரையாடுவதை பார்க்கும் பொழுது மற்ற மகிழ்ச்சி அடைவதுடன் பாராட்டதக்கதாகவும் உள்ளது.

நான் ஒரு ஸ்காட்லாண்டு பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறேன். மின்னனுயியல் மற்றும் தொலைதொடர்பு பொறியியலில் எனது படிப்பு சார்ந்தது.

சில வருடங்களாக அண்ணாபல்கலைகழகத்தில் தமிழ் வழிபடி பொறியியல் பட்டபடுப்பு படிப்பதற்கு வழி அமைந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறென். இவ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழில் கணிதம் கற்கும் மற்ற பொறியியல் அல்லாத மாணவர்களுக்கும் உதவுவதற்காக தமிழில், பொறியியல் கணித புத்தகம் எழுத எனக்கு அதிக ஆர்வம். ஆனால் என் ஒருவனால் அதனை செய்து முடிப்பது என்றால் வெகு காலமாகும்.

ஆங்கிலத்தில் நான் அந்த புத்தகத்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் latex எனப்படும் மென்பொருளில் தயார் செய்துள்ளேன். அதனை தமிழ் font unicode உதவியுடன் தமிழாக்கம் செய்யவேண்டும். Google translator கொண்டு சரியற்ற தமிழாக்கம் செய்தபின்னர், அதன் உதவியுடன், சிறந்த தமிழாக்கம் செய்யவேண்டும். புத்தகத்தின் மொத்த பக்கங்கள் 3600 வரை இருக்கலாம். அதனால் அதிக வேலையுள்ளது. இந்த தளத்தில் தமிழ் ஆர்வம் உள்ளவர்கள் பலர் இறுகின்றீகள். இந்த தளத்தில் தமிழில் எப்படி தட்டச்சு செய்கிறீர்களோ அது போலவே இந்த புத்தகத்துக்கும் தமிழாக்கம் செய்ய வேண்டும். கணிதம் நன்கு அறிந்திருக்க வேண்டியதில்லை. latex தெரிந்திருக்க வேண்டியதில்லை. நான் கொடுக்கும் கோப்பை notepad-யில் திறந்து தமிழ் தட்டச்சு செய்தால் போதுமானது.

இந்த நல்ல ஒரு வேலைக்கு நான் சுமார் மூன்று நண்பர்கள் வரை இந்த தளத்திலிருந்து கிடைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். தமிழாக்கம் செய்யும் அனைத்து நண்பர்களும் இந்த புத்தகத்தின் ஆசிரியர்களாவார்கள். ஒவ்வொருவரும் சுமார் 1200 பக்கங்கள் தமிழாக்கம் செய்யவேண்டிவரும். அதனால் இந்த வேலைக்கு தினந்தோரும் அதிக நேரம் ஒதுக்க முடிந்தவர்கள் மட்டும் முன்வருமாறு வேண்டுகிறேன். இது ஒரு தமிழுக்காக நான் செய்யும் சேவையாக இருக்கும்.

நன்றி
நாக்ஸ்