புதுடெல்லி, செப். 16 -


அனைத்து இந்திய டென்னிஸ் சங்கம் மகேஷ் பூபதி மற்றும் ரோகன் போபண்ணா ஆகிய இருவரும் வரும் 2014 ஆம் ஆண்டு ஜூன் வரை டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொள்ள தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இது டென்னிஸ் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரு வீரர்களும் லண்டன் ஒலிம்பிக்கில் லியாண்டர் பேயஸ் உடன் சேர்ந்து விளையாட மறுப்பு தெரிவித்து இருந்தனர். அதனைத்தொடர்ந்து பூபதி-போபண்ணா ஒரு அணியாகவும், பேயஸ்-விஷ்ணு வர்தன் ஆகியோர் ஒரு அணியாகவும் அனுப்பிவைக்கப்பட்டனர்.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் விளையாட்டில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாட அனைத்து இந்திய டென்னிஸ் சங்கம் தீர்மானித்து இருந்தது. இந்நிலையில் பூபதி தனது ட்விட்டர் இணையதளச் செய்தியில் அனைத்து இந்திய டென்னிஸ் சங்கத்தை விமர்சித்து எழுதியிருந்ததை கண்டித்து அவர்கள் இருவருக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.


நன்றி : மாலை மலர்