Results 1 to 12 of 21

Thread: கோயமுத்தூர் ஐக்யூ டெக் கணிப்பொறி டீலருடன் ஒரு பிரச்சினை

                  
   
   

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0

    கோயமுத்தூர் ஐக்யூ டெக் கணிப்பொறி டீலருடன் ஒரு பிரச்சினை

    கிட்டத்தட்ட 35000 ரூபாய்க்கு புதிய கணிப்பொறி ஒன்றினை ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கினேன். இன்வாய்ஸ் எல்லாம் கொடுத்தார்கள். எனது நண்பர் மூலம் வாங்கினேன். அவசியம் கணிணிப் பாகங்களின் பாக்ஸ்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். அதன் படியே செய்தேன்.

    சரியாக ஒரு வருடம் முடிந்து, நான் வாங்கிய வயர்லெஸ் கீபோர்டு மற்றும் மவுஸ் வேலை செய்யவில்லை. டீலரைத் தொடர்பு கொண்டேன். அதற்கு என்ன சொன்னார் தெரியுமா? ஒரு வருடம் தான் வாரண்டி தர முடியும். ஆகையால் நீங்கள் புதிது வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். மவுஸ் கீபோர்டுக்கு மூன்று வருடம் வாரண்டி இருப்பதாக படித்த நினைவு. உடனே பெட்டியைத் தேடி எடுத்தால் படித்துப் பார்த்தால், மூன்று வருடம் என்று போட்டிருந்தது. மீண்டும் டீலரை அழைத்தேன். சார் மூன்று வருடம் வாரண்டி இருக்கிறதே என்று கேட்டேன். அதன்பிறகு கொண்டு வாருங்கள் என்று சொன்னார்.

    2010, மார்ச் மாதம் 31ம் தேதி ஐக்யூ சிஸ்டம் என்ற கோவையிலிருக்கும் கணிணி விற்பனையாளரிடம் கொண்டு போய் கொடுத்த போது ஒரிஜினல் இன்வாய்ஸ் இருந்தால் தான் சர்வீசுக்கு எடுத்துக் கொள்வோம் என்ற அழிச்சாட்டியத்தை ஆரம்பித்தனர்.இமெயிலில் ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தேன். ஒரிஜினலை நேரில் கொண்டு வந்து காட்ட வேண்டுமென்று சொன்னார் டீலர். (என்ன ஒரு அயோக்கியத்தனம் பாருங்கள்)

    கொடுத்து விட்டு வந்து பத்து நாட்களாகி விட்டது. மீண்டும் தொடர்பு கொண்டேன். டிரை செய்து கொண்டிருக்கிறோம் என்று ஆரம்பித்தார். உடனே லாஜிடெக் வெப் தளத்திற்கு சென்று லாஜிடெக் ஆதரசைடு சர்வீஸ் சென்டர் நம்பர் கொடுத்து இவ்விடத்திற்கு அனுப்பி சர்வீஸ் செய்து அனுப்பி வையுங்கள் என்று சொன்னேன். சரி என்று ஒத்துக் கொண்டார்கள்.

    அடுத்த பதினைந்து நாட்கள் கழித்து போன் செய்தேன். நான் கொடுத்த கீபோர்டு மவுஸ் வருவதில்லை என்பதால் புது செட் தருகிறோம் என்று சொன்னார்கள். ஸ்டாக் இல்லை என்பதால் இன்னும் வரவில்லை என்றும் சொன்னார்கள். ஸ்டாக் வந்தவுடன் உடனே தருகிறோம் என்று சொன்னார்கள்.

    இதோ இன்றைக்கு காலையில் போன் செய்தேன். நான் புதிய பையன். இன்றைக்குத்தான் வேலையில் சேர்ந்தேன் என்று கதை விட்டார் ஒருவர். இன்னும் அரை மணி நேரத்தில் கீபோர்டும் மவுசும் வரவில்லை என்றால் நாளைக் காலையில் கன்ஸ்யூமர் கோர்ட்டிலிருந்து நோட்டீஸ் அனுப்புவேன் என்று சொல்லி விட்டு எனது வக்கீல் நண்பரை அழைத்து விபரம் சொன்னேன். கவலைப்படாதீர்கள் தங்கம் உங்களுக்கு நிச்சயம் 10,000 ரூபாய் வாங்கித் தருகிறேன் என்று சொல்லி, டீடெயில்ஸை வாங்கிச் சென்றார்.

    சரியாக ஒரு மணி நேரம் கழித்து சார், ஸ்டாக் வந்து விட்டது. வந்து வாங்கிச் செல்லுங்கள் என்று சொன்னார் டீலர்.

    இதன் பிறகு நடந்த ஒரு கேனத்தனமான செயலால் தான் இந்தப் பதிவு எழுதவே தோன்றியது.

    கீபோர்டு மவுஸை இணைத்தால் வேலை செய்யவில்லை. என்னவென்று பார்த்தால் அந்த லாஜிடெக் கீபோர்டு மவுசுடன் வந்த பேக்கில் இருந்த மூன்று பாட்டரிகளை காணவில்லை. உடனே போன் செய்து விபரம் கேட்டால் லாஜிடெக் சர்வீஸ் செண்டர் கொடுக்கும் போதே பேட்டரி இல்லாமல்தான் கொடுத்தார்கள் என்றார் டீலர் சவுந்தர் ராஜன்.

    என்ன ஒரு சிறு பிள்ளைத்தனமான கேவலமான செயல் என்று பாருங்கள். மூன்று பாட்டரிகளும் சேர்த்து 60 ரூபாய் வரும். இது தான் ஒரு டீலரும், லாஜிடெக் நிறுவனமும் கன்ஸ்யூமருக்கு கொடுக்கும் மரியாதை.

    வாங்கிய பணத்திற்கு சரியான பொருளைக் கொடுக்க வேண்டியது அக்கம்பெனியின் பொறுப்பு. விற்பனையாளருக்கு கஸ்டமருக்கு சேவை செய்ய வேண்டியது கடமை. ஆனால் மேற்படி இருவரும் எப்படியாவது தட்டிக் கழித்து விடவே முயற்சித்தனர். மீண்டும் 1600 ரூபாய் செலவு வைக்க வேண்டுமென்ற ஆவல் போலும். சின்னஞ் சிறிய பேட்டர் மாற்றியதற்கு கூட பணம் வாங்கிக் கொண்டு கஸ்டமருக்கு சேவை செய்கிறார்கள் ஐக்யூ டெக்கில்.

    நமது உரிமையை அடைய எப்படி எல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பதைப் பாருங்கள். இழப்பும், வேதனையும், செலவும் தான் நமக்கு மிச்சம்.

    இந்திய அரசு கன்ஸ்யூமர் ரைட்ஸுக்காக கடுமையான சட்ட விதிகளை உருவாக்குதல் வேண்டும். காலத்தின் அவசியம் கூட.
    Last edited by தங்கவேல்; 31-05-2010 at 10:59 AM.
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •