சூப்பர்....
எந்த காலத்துக்கும் ஏற்ற கவிதை படைப்பவனைத்தான் முழுமையான கவிஞன் என்று சொல்லமுடியும். இந்த கவிதை எந்த காலத்துக்கும் உரியது.
இந்த கவிதையில் கவிதைகள் என்பது ஒரு குறியீடு. அதற்கு ஈடாக இன்னும் பல பொருள்களை உள்நுழைக்க முடியும். உதாரணத்திற்கு “பரத நடனம்”.

ஒரு கவிஞனுக்குத் தேவை, தன் படைப்பின் மீதான நம்பிக்கை, மிக அழுத்தமான நம்பிக்கை. கவிதை அதை மிகத் தெளிவாகச் சொல்லுகிறது. ஒவ்வொரு வரியையும் கவனிக்கும் போது,

அனைத்துள்ளங்களுக்கும்
ஆறுதல் தரும் ஆற்றல்..
ஆயிரமாயிரம்
அவதாரங்களில் வலம்வரும்
அபூர்வம்..
பக்தர்களை பரவசப்படுத்தும்
படையல்..
மனதை நிம்மதியாக்கும்
மந்திரம்..
உள்ளத்தை உறங்கவைக்கும்
உன்னத சக்தி..

இது, நன்கு சமைத்த கவிதை!!

ஒரு சமயத்தில் இங்கே தரமான படைப்புகள் நிறைய எழுதப்பட்டன. அதற்கு விமர்சிக்க நிறைய நண்பர்கள் இருந்தார்கள். நானும், என்னைப் போல பலரும் அந்த விமர்சக நண்பர்களுக்காக (பலசமயம் குட்டு வாங்கியும் சந்தோசப்பட்டிருக்கிறோம்) அவர்களின் விமர்சனத்திற்காகவே எழுதியிருக்கிறோம். கவிதைகளில் மந்திரமோ, உன்னத சக்தியோ இருந்ந்தோ இல்லாமலோ இருக்கலாம். ஆனால் பக்தர்கள் கூட்டத்திற்கு குறைவில்லாமல் இருந்தது. மீண்டும் அப்படியொரு நிலையைத்தான் எதிர்பார்த்திருக்கிறோம்,.