Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 22

Thread: பணவீக்கம்

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    பணவீக்கம்

    பணவீக்க விகிதம் என்று எதை சொல்லுகிறார்கள்.நீண்ட நாட்களாக இதில் எனக்கு சந்தேகம்.அது அதிகமானால் நல்லதா குறைந்தால் நல்லதா?தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    பணவீக்கம் அதிகரிப்பது என்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சியைக் குறிக்கும்.

    விரிவான விளக்கத்திற்கு மன்ற உறவுகள் உதவவேண்டும்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0
    பணவீக்கம் ஒரு உதாரணம்
    இன்றைய நிலை:
    100 ரூபாய் மதிப்புள்ள பொருளை நீங்கள் 100 ரூபாய்க்கு வாங்க முடியம்

    பணவீக்கம் அதிகரித்தால்:
    உம்மிடம் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் அதே சமயம்
    100 ரூபாய் பொருளை நீங்கள் 1000 ருபாய் கொடுத்து வாங்க வேண்டி வரும்.

    இதனால் தான் பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்கவேண்டியது அவசியம்.(எப்போதோ படித்தது)
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    எளிமையான புரியும்படியான விளக்கத்துக்கு நன்றி சக்தி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    பணவீக்கம் என்றால் என்ன ?
    ஏதாவது ஒன்று ஊதிப் பெருப்பதையோ, குண்டாவதையோ இன்ஃப்ளேஷன் என்று கூறுவோம். பொருளாதாரத்தில் இதற்கு இரண்டு பொருள் உண்டு. எல்லாப் பொருள்கள் மற்றும் சேவைகளின் பொதுவான விலை ஏறிவிடுவது... அல்லது பணத்தின் புழக்கம் அதிகரிப்பது. அதனால்தான், அதற்குப் பணவீக்கம் என்று பெயர். இதில் முரண்பாடான விஷயம் என்னவென்றால், பணத்தின் புழக்கம் அதிகம் ஆகும் போது, அதன் மதிப்புக் குறைந்து போகிறது என்பதுதான். தேவைக்கு அதிகமாக ஒரு விஷயம் கிடைக்குமென்றால், அதன் மதிப்பு சரிந்துவிடுவது இயல்புதானே!

    பணப்புழக்கம் அதிகமாக இருக்குமானால், மக்களின் கையில், பர்ஸகளில், வங்கிக் கணக்குகளில் பணம் அதிகமாக இருக்குமானால், அவர்கள் செலவழிக்கத் தொடங்குவார்கள். மேன்மேலும் பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். அதனால், அவற்றின் விலைகள் உயரத் தொடங்கும். பொருள்கள் மற்றும் சேவைகளின் இந்தப் பொதுவான விலை மாற்றத்தைத்தான் பணவீக்கம் என்கிறோம்.
    இப்போது இந்தியாவின் பணவீக்கம் 7 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட சில பொருள்கள் மற்றும் சேவைகளின் தொகுதியின் மதிப்புக் கூட்டிய சராசரி விலை (வெயிட்டட் ஆவரேஜ் பிரைஸ்) சென்ற ஓராண்டில் 7% அதிகரித்திருக்கிறது. இந்த மதிப்புக் கூட்டிய சராசரி என்ற வார்த்தைகளைப் புரிந்து கொள்ள சின்ன உதாரணம் போதும். ஒரு கூடை பழங்களின் விலை, சென்ற ஆண்டு 100 ரூபாயாக இருந்து, இந்த ஆண்டு 110 ரூபாய். ஆக விலையேற்றம் பெற்றிருந்தால், கடந்த ஓராண்டில் அதன் பணவீக்க விகிதம் 10%.

    பணவீக்கம் எவ்வாறு அளவிடப்படுகிறது ?
    வீட்டுக்கு வீடு, பொருள்களின் முக்கியத்துவம் மாறுபடும். இந்த முக்கியத்துவத்தைத்தான் ஒவ்வொரு பொருளோடும் சேர்க்கப்படும் வெயிட் என்று சொல்கிறோம். மத்திய புள்ளியியல் துறை, மக்கள் மத்தியில் சில கணக்கெடுப்புகளை நடத்தி, ஒவ்வொரு பொருளுக்கும் இருக்கக்கூடிய வெயிட்டை அளவிடுகிறது. விலை மாற்றத்தோடு இந்த வெயிட்டையும் பெருக்கினால் கிடைப்பதே வெயிட்டட் சராசரி விலை மாற்றம். பணவீக்கம் இதனடிப்படையில்தான் அளவிடப்படுகிறது.

    பணவீக்கம் என்பது ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?
    பணவீக்கம் ஏழைகளை பாதிக்கக்கூடியது. ஏழ்மையானவர்களும் மத்தியதரக் குடும்பங்களும் அரிசி, கோதுமை, பால், மீன், காய்கறிகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காகத்தான் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியைச் செலவிடுகின்றன. இதுபோன்ற அத்தியாவசிய பொருள்களின் விலைகள் ஏறுமானால், அது ஏழ்மையானவர்களையே அதிகம் பாதிக்கும்.
    அரசு எப்படி இந்தப் பணவீக்கத்தைக் கட்டுப் படுத்தும்?
    இதற்கு, பணவீக்கத்தின் பொருளாதார அர்த்தத்தைப் பார்த்துவிடுவோம். உபரியாகப் புழங்கும் பணம்தான், பொருள் மற்றும் சேவைகளின் தேவையை அதிகப்படுத்திவிடும். அதனால், அரசு பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். கடன்கள் மீதான வட்டிவிகிதத்தை உயர்த்துவதன் மூலம், ரிசர்வ் வங்கி இதைச்செய்ய முயற்சிக்கிறது. வட்டிவிகிதங்கள் உயரும்போது, மக்கள் கடன் வாங்குவதை தள்ளிப் போடுவார்கள். அதோடு, அந்தப் பணத்தை தங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பார்கள். அதன்மூலம் சேமிப்பு உயரும்.
    ------------
    பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கும் சில அதிரடி நடவடிக்கைகள், வளர்ச்சிக்கு எதிரானது அல்ல. ஏழைகளின் வாங்கும் சக்தியை பணவீக்கம் குறைத்துவிடுமென்றால், அந்தவகை உயர் வளர்ச்சிக்கு அர்த்தமே இல்லை. பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டுமென்றால், ரிசர்வ் வங்கியை சுதந்திரமாக தனித்தன்மையுடன் இயங்க அனுமதிக்கவேண்டும்.
    அரசு, பொறுப்புடன் செலவுகளை மேற் கொள்ளவேண்டும். அதேசமயம், பொருளா தாரத்தில், தேவையும் உற்பத்தியும் சம அளவு பெருகும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதை எல்லாம் இந்திய அரசு புரிந்துகொண்டுள்ளது. அதனாலேயே, அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்தப் பணவீக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று உறுதியாக நம்பலாம்.

    எப்போதோ படித்தது சிவா.ஜி உங்களுக்கு உதவும் என்ற நோக்கில் இங்கே வெட்டி ஒட்டியிருக்கேன்.

    நன்றி : நாணயவிகடன்
    பதிப்பு : மார்ச் 2007
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக்க நன்றி கேசுவர். மிகவும் அழகாக தெளிவாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். என்னுடைய மனப்பூர்வமான நன்றிகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    வர, வர நம் மன்றம் கேட்டதை கொடுக்கும் "அட்சய பாத்திரம்" ஆகி வருகிறது. இதற்கு மணிமேகலைகளாக இருக்கும் மன்ற உறுப்பினர்கள் தான் காரணம் என்பதை மறுக்க இயலாது.

    இது வெட்டி ஒட்டப்பட்ட பகுதி என்றாலும் கருத்துள்ள ஒரு விஷயத்தை, சரியான நேரத்தில் கொடுத்த கேஷ்வர் அவர்களுக்கு நன்றிகள்..!!
    அன்புடன்,
    இதயம்

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    எதோ நம்மால் ஆன உதவி இதயம்,,,நான் பங்குச்சந்தையைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டு ....அப்ப அப்ப கிடைக்கும் தகவல்களை சேர்த்துக்கொண்டுயிருக்கிறேன்...இன்னமும் தெரிந்தபாடுயில்லை , பங்குச்சந்தையையில் சேர்த்தபாடுயில்லை !!!!
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    கேசுவர்ஜி

    நன்றாகவே வெட்டி ஒட்டி இருக்கிறீர்கள். நன்றி.

    கடந்த ஓராண்டாக ரிஸர்வ் வங்கி, நாட்டுக்குள்ளே வரும் அந்நியச் செலாவணியை -- டாலரை -- வாங்கிக் குவித்து வருகிறது.

    தற்போதைய இருப்பு சுமார் $208 பில்லியன்.

    டாலரை வாங்க வாங்க, ரூபாய் புழக்கம் அதிகரிக்கிறது. விலைவாசி ஏறுகிறது. விலைவாசியைக் குறைக்க தாங்கள் எழுதியது போல் வட்டி விகிதத்தை, CRR, Reporate, இத்யாதிகளை அதிகமாக்குகிறது. அப்படியும் விலைவாசி குறைந்தபாடில்லை.

    கவனித்திருக்கலாம்... இரண்டு மாதங்களாக ரூபாய் மதிப்பு டாலருக்கிணங்க அதிகரித்திருக்கிறது. $1 = ரூ.45 லிருந்து, $1 = ரூ. 40க்கு வந்துவிட்டது.

    அதாவது டாலர் வாங்குவதை சற்றே நிறுத்தியுள்ளது.

    இறக்குமதியாகும் பொருள்களின் விலை இறங்குகிறது. அதை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஏனைய பொருள்களின் விலை குறையத் துவங்கியுள்ளது.

    இதனால்தான் மார்ச் '07 கடைசி வாரத்தில் 6.46%-ஆக இருந்த விலைவாசி உயர்வு, கடந்த வாரம் 5%-க்குக் குறைவாக ஆகியுள்ளது.

    இன்னும், பருவ மழை ஒழுங்காகப் பெய்தால் விலைவாசி மேலும் குறைய வாய்ப்புண்டு.

    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நல்ல விளக்கம் கரிகாலன்.இந்த இந்திய ரூபாய் மதிப்புயர்வினால் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் எங்களைப்போல உள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.இருந்தாலும் ஒரு சமாதானம்.நம் நாட்டின் பண மதிப்பு உயர்கிறதே என்று.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    நன்றி கரிகாலன், பருவமழை வரவேற்போம், நமது பொருளாதாரம் மின்னட்டும்...நான் இதில் கத்துக்குட்டி தான் ,
    ------
    கடந்த ஓராண்டாக ரிஸர்வ் வங்கி, நாட்டுக்குள்ளே வரும் அந்நியச் செலாவணியை -- டாலரை -- வாங்கிக் குவித்து வருகிறது.

    தற்போதைய இருப்பு சுமார் $208 பில்லியன்.
    -----
    இறக்குமது/ஏற்றுமதி டாலரில் தான் குறிப்பிடபடுக்கிறது என்று அறிவேன்,
    ஆகையால் இதற்கும் நாம் கையிருப்பு டாலர்க்கும் என்ன சம்பந்தம் அண்ணா ?
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    கேசுவர்ஜி

    டாலர் வரத்து அதிகரிக்க அதிகரிக்க ரூபாய் புழக்கம் அதிகரிக்கிறது.

    நமது ஏற்றுமதிகள் அதிகரிக்கின்றன.

    தொழில் பெருகுகிறது. வணிகம் பெருகுகிறது. மேலும் மேலும் ஆட்கள் வேலைக்கு அமர்த்தப் படுகிறார்கள். தேவைகள் அதிகரிக்கின்றன. தேவைகளைப் பூர்த்தி செய்யாவிடில், விலை அதிகரிக்கிறது.

    ரிஸர்வ் வங்கி டாலர்கள் வாங்குவதை சற்றே நிறுத்தினால் என்ன நடக்கிறது என்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்.

    ஏற்றுமதியாளர்களுக்கு வருத்தம்தான். வெளியூரிலிருந்து இந்தியாவுக்கு தங்களது சம்பாத்தியத்தை அனுப்புவோரும் வருத்தமடைகின்றனர்.

    தாங்கள் கேட்ட கேள்வி இருப்புக்கும் விலைவாசிக்கும் என்ன சம்பந்தம்?

    1990/91-ல் கையிருப்பு ஒரு பில்லியன் கூடக் கிடையாது. அடகுக் கடையில் வைப்பதுபோல், நமது நாட்டுத் தங்கத்தை விமானத்தில் ஏற்றி Bank of England-இடம் அடகு வைத்து அந்நியச்செலாவணி பெற்றோம். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு இல்லாத நிலை.

    இன்று கையில் 208 பில்லியன் என்றால், காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம் இல்லையா!!

    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •