Results 1 to 7 of 7

Thread: சிலப்பதிகாரத்தில் திருமணக்காட்சி

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0

    சிலப்பதிகாரத்தில் திருமணக்காட்சி

    சிலம்பிலே திருமணக்காட்சி

    தமிழர் திருமண முறை பற்றி அறிந்துகொள்ள சங்க இலக்கியங்களில் ஒன்றும்
    கைகொடுக்கவில்லை. அவற்றில் ஒன்றிரண்டிலே உவமைப் பொருளாகத் திருமணம் பற்றிச்
    சொல்லப்படுகிறது. திருமணத்தை முழுமையாகக் காட்சிப்படுத்தும் செய்யுள் ஒன்றுகூட
    இல்லை. தொல்காப்பியத்திலே திருமணம் பற்றிச் சொல்லப்படுகிறது என்றாலும் அதிலும்
    மேலெழுந்தவாரியாகச் சுட்டிச் சொல்லப்படுவதன்றி விரிவாகக் கூறப்படவில்லை. திருமணக்
    காட்சியை முழுமையாகக் காட்டும் முதல் இலக்கியம் சிலப்பதிகாரம்தான். அதிலே காப்பிய
    நாயகி, நாயகனான கண்ணகி - கோவலன் திருமணம் பற்றிக் கூறப்படுகிறது. அது
    வருமாறு:

    "யானை யெருத்தத்து அணியிழையார் மேலிரீஇ
    மாநகர்க் கீந்தார் மணம்
    அவ்வழி
    முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம்
    வெண்குடை
    அரசெழுந்ததோர் படியெழுந்தன அகலுள்மங்கல அணி
    யெழுந்தது
    மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
    நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
    வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்
    சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
    மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
    தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னை
    விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
    உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
    சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
    ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர்
    விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை
    முனைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
    போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார்
    காதலாற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
    தீதறு கெனவேத்எதிச் சின்மலர் கொடுதூவி
    அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
    மங்கல நல்லமளி ஏற்றினார் தங்கிய
    இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை
    உப்பாலைப் பொற்கோட்டு
    உழையதா வெப்பாலும்
    செருமிகு சினவேற் செம்பியன்
    ஒருதனி ழி உருட்டுவோ னெனவே
    (மங்கல வாழ்த்துப் பாடல்)

    மங்கல வாழ்த்துப் பாடலுள் வரும் "வானூர் மதியஞ் சகடு அணைந்த நன்னாள்"
    என்பதற்கு "வானத்திலுள்ள ரோகிணி என்னும் நட்சத்திரத்தை சந்திரன் கூடிய நன்னாள்"
    என்றுதான் பொருள் சொல்லப்படுகிறது. இதிலே புலவருலகில் கருத்து
    வேறுபாடிருக்கவில்லை.

    மணணுலக அருந்ததி

    ரோகிணிக்கும் சந்திரனுக்குமுள்ள உறவு மனைவிக்கும் கணவனுக்குமுள்ளது போன்றது
    என்று கதை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ரோகிணியைச் சந்திரன் கூடிய நாளே
    திருமணத்திற்கான நன்னாள் என்று கருதி அந்நாளிலே கண்ணகி-கோவலனுக்குத்
    திருமணம் செய்தனர் அவர்களின் பெற்றோர்- என்கிறார் இளங்கோவடிகள்.

    இன்னும் "சாலியொரு மீன் தகையாள்" என்கிறார் கண்ணகியை. கற்புக்குக் கடவுளாக
    அருந்ததி என்னும் நட்சத்திரத்தைக் குறிப்பிடுன்றன இந்து சமய காப்பியங்கள்.
    அதையொட்டியே கண்ணகி அருந்ததியோடு ஒப்பிடப்படுகிறாள். விண்ணுலகில் கற்புக்குக்
    கடவுள் அருந்ததி என்றால் மண்ணுலக மாதர்க்குக் கற்புக்கொரு கடவுளாவாள்
    கண்ணகியென்பது சிலம்பு தந்த சேர முனிவரின் பிரகடனம். இது பாரதப் பெருநாடெங்கும்
    பரவியுள்ள இந்துக்களின் நம்பிக்கையாகும். கவே இதுவும் தமிழருக்கேவுரிய திருமணச்
    சடங்கல்ல.

    இன்னும், "மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட", கண்ணகியைக் கைப்பிடித்துக்
    கோவலன் புரோகிதன் வளர்த்த தீயை வலம் வருகிறான் என்பதும் இளங்கோ தரும்
    திருமணச் செய்தி. "மாமுது பார்ப்பான்" என்பதற்கு, பிதாமகன் (பிரம்மதேவன்) என்றும்
    "புரோகிதனுமாம்" என்னும் பொருள் கூறுகின்றார் அடியார்க்கு நல்லார். பிரம்மா நால்
    வேதங்களைத் தந்தவன் என்பது பரத கண்டமெங்குமுள்ள இந்துக்களின் பொது
    நம்பிக்கை. அதனால் இந்துக்களாகவுள்ள தமிழர்களும் இதை நம்புகின்றனர்.

    "மாமுது பார்ப்பான்" என்பது புரோகிதனை மட்டும் குறிப்பதாகக் கொண்டு, அவன் வேத
    வழிப்படி திருமணத்தை நடத்தி வைத்தான் என்று பொருள் கொள்ளத் தூண்டும் வகையிலே
    "புரோகிதனுமாம்" என்கிறார் அடியார்க்கு நல்லார். இது ராயச்சிக்குரியது.

    "மாமுது பார்ப்பான்" என்பதற்குப் பிரம்ம தேவன் என்று மட்டுமே பொருள் கொண்டால்
    இடர்ப்பாடெதுவுமில்லை. மாறாக, "புரோகிதன்" என்பது மட்டுமே கொண்டால், அவன்
    வயதால் முதியவன் என்று நம்பியாக வேண்டும்.

    பொக்கை வாய்ப் புரோகிதர்

    பற்களை இழந்த பொக்கை வாய்ப் பார்ப்பானை புரோகிதத்திற்கு அழைக்கக்கூடாது என்பது
    இந்துக்களாகவுள்ள தமிழரின் நம்பிக்கை. "பல்லு போனால் சொல்லும் போம்" என்பதும்
    பழமொழி. வடமொழி மந்திரம் உந்தியிலிருந்து எழுந்து வாய் வழி ஒலிப்பதாகும்.
    அதனால்தான் அது மந்திர மொழி எனப்படுகிறது. அதிலேதான் புரோகிதம்
    நடத்தப்படவேண்டும் என்ற நம்பிக்கையும் பிறந்தது. பல்லில்லாதவன் மந்திரஞ் சொன்னால்
    சொற்களின் வலிமை போய்விடுமாம்! பொய்ப்பல் கட்டிக்கொள்ள வசதியில்லாத காலத்தில்
    பிறந்த சிலப்பதிகாரம் தலால், "மாமுது பார்ப்பான் மறைவழி" என்பதற்கு பிரம்மதேவன்
    தந்த வேதங்களில் சொல்லியுள்ள மந்திரங்களை யோதி புரோதிகன் திருமணத்தை
    நடத்தினார் என்று சொல்வதுதான் முறையாகும்.

    கண்ணகி கோவலன் திருமணம் தமிழர் இன வழி அல்லாமல் நால்வருணப்
    பாகுபாட்டின்படி வணிகருக்குரிய முறையில் நடந்ததாகவும் அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.
    ளவானூர் மதியம்" என்பதிலிருந்து "காண்பார்கண் நோன் பென்னை" என்பது
    வரையுள்ள வரிகளுக்கு,
    " மதியம் சகடணைந்த நான்னாளிலே பார்ப்பான் மறையிற் சோதிடாங்கத்துள்
    வணிகர்களுக்குக் கூறிய நெறியிலே சடங்கு காட்ட இவர் இங்ஙனம் தீவலஞ் செய்கின்ற
    இதனைக் காண்கின்றவர் கண்கள் முற்பவத்திற் செய்த தவம் யாதுகாண் என்பாராய்."
    என்பது அடியார்க்கு நல்லார் தரும் விளக்கம்.

    சிலம்பில் படும் புரோகிதர்

    இதுவரை கூறியவற்றால்-குறிப்பாக , சிலம்பு தந்த அடிகளாரும், அதற்கு விளக்கம் தந்த
    அடியார்க்கு நல்லாரும் காட்சிப்படுத்தும் கண்ணகி-கோவலன் திருமணமானது வேத
    (இந்து) மதத்தவருக்கு, அவர்களிலேயும் நால்வருணங்களிலே மூன்றாவது வருணத்தவரான
    வணிகருக்குரிய நெறிப்படி நடந்ததென்பது உறுதிப்படுகிறது. இதிலே அந்நாளிலும்
    இந்நாளிலும் தமிழ் இனத்தவருக்கே உரிய திருமணக்காட்சியில் சடங்காகிவிட்ட தாலி
    அணிவிப்பது குறிப்பிடப்படாததால், சிலப்பதிகாரக் காலத்தில் அவ்வழக்கம் இல்லையென்று
    கிவிடாது.

    கண்ணகி-கோவலன் திருமணத்தில் வேத வழியிலிருந்து வேறுபட்ட -விரோதப்பட்ட அல்ல
    - இனவழிப்பட்ட மணமகள் கழுத்தில் மணமகன் தாலியணிவிக்கும் சடங்கும் நடந்திருக்கும்
    என்பதற்கு சிலப்பதிகாரத்திலுள்ள வேறு காதைகளிலிருந்து செய்தி கிடைக்கிறது.

    சங்க இலக்கியமான புறநானூற்றுப் பாடல் 127-ல் "ஈகையரிய இழையணி மகளிர்" என
    வரும் சொற்றொடருக்கு,

    "மகளிர்க்கு மங்கல அணி ஒழியப் பிறவெல்லாம் நீக்குதற்கு உரியவாதலின் ஈகையறிய
    இழைபெற்றார்" என்கிறார் பழைய உரைகாரர்.

    சங்க இலக்கியமான நெடுதல் வாடையிலும், "ரந்தாங்கிய அவர் முலையகத்துப் பின்னமை
    நெடுவீழ தாழத் துணைதுறந்து" என்று வருகிறது. இதற்கு

    " முன் முத்தால் செய்த கச்சுச்சுமந்த பருத்த முலையினையுடைய மார்பிடத்தே இப்பொழுது
    குத்தலபுல் அமைந்த நெடிய தாலி நாண் ஒன்று மட்டுமே தூங்க"

    என்று உரையெழுதியுள்ளார். புலவர்கெளல்லாம் உச்சி மேற்கொண்டு போற்றும்
    நச்சினாக்கினியர்.

    சிலம்பில், "அகலுள் மங்கல அணியெழுந்தது" என்னும் வரிக்கு, "ஊரிலே மாங்கல்ய
    சூத்திரம் வலஞ்செய்தது" என்கிறார் அருபத உரைகாரர். மற்றும் கணவன் கோவலன்
    பிரிந்த வருந்தத்தால் அணிகல்னகளையும் அலங்காரத்தையும் துறந்து வாழும் கண்ணகியை
    பாதாதி கேசமாக வருணிக்குமிடத்து, கழுத்தண்டை வரும்போது "மஙகல அணியிற்பிறிதணி
    மகிழாள்" என்கிறார் இளங்கோவடிகள்.

    பிற அணிகளை அகற்றிவிடட்ட கண்ணகி, கணவன் இன்னும் உயிர்வாழ்கிறான்
    என்பதற்கு அடையாளமாகவுள்ள மங்கல அணியான மாங்கல்யம் ஒன்றை மட்டும்
    அணிந்திருந்தாளாம். அது ஒன்றுமட்டுமே அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்ததாம்.

    வஞ்சிக் காண்டத்துக் காட்சிக் காதையில் சேரன் செங்குட்டுவனுக்கு நல்லணிகளோடு
    கண்ணகி காட்சியளித்ததைக் கூறுமிடத்தும், " நாவலம் பொன் இழை" கழுத்தில்
    இருந்ததாக இளங்கோ அடிகள் கூறுகிறார்.

    திரும்பவும் கூறுகிறேன். சிலம்பில் திருமணத்தைக் காட்சிப் படுத்துமிடத்து கண்ணகி
    கழுத்தில் கோவலன் தாலியணிவித்ததைக் கூறாமல் விட்டது, அது வேத வழிப் பட்டதாக
    அல்லாமல் தமிழர் இனவழிப்படடதாக இளங்கோ கருதியதால்தான்.

    நன்றி
    மபொ சிவஞானம்
    தமிழர் திருமணம்
    பூங்கொடி பதிப்பகம்
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    மபொசி, தமிழ் கற்ற பெரியார். அவருடைய ஆராய்ச்சிகள் பல உண்டு. அதில் சிறிது இங்கே தந்தமைக்கு நன்றி பல.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    என்னும் இருக்கின்றன சிலம்பு மடல் 31 பாகம் உள்ளது பதியலாம் என்று உள்ளேன்
    Last edited by சுட்டிபையன்; 26-05-2007 at 01:31 PM.
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    தமிழில் சிலப்பதிகாரத்தில் தான் திருமன சடங்கை கூறி
    இருப்பதாக தந்த கட்டுரைக்கு நண்றி சுட்டி
    இது மிகவும் வியக்க வைத்தது.

    சிலப்பதிகாரத்துக்கு முன் தமிழகத்திலும் மற்ற பாரத பகுதியிலும் திருமனம் எப்படி நடந்தது என்று
    சிலப்பதிகாரத்துக்கு முன் எழுதியா காமசூத்திரம் என்னும் நூலில் நான் படித்திருகிறேன்.
    அது தமிழ் மொழியில் எழுத பட வில்லை. சமஸ்கிருதத்தி எழுத பட்டிருகிறது.

    அதில் அனைத்து பாரத மக்களின் திருமன சடங்கில் அக்னியை வலம் வந்தால் போதுமாம்
    மற்ற சடங்கெல்லாம் வசதியை பொருத்து தான் நடக்குமாம். எதுவும் கட்டாயம் இல்லையாம்.

    ஆனால் காமசூத்திரத்தி தாலியை பற்றி குறிப்பிட வில்லை.
    தாலி கட்டும் பழக்கம் இடையில் வந்திருக்கும்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    எமது பல நூல்கள் ஆன்களால் எழுதப்பட்டு ஆண்களை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கின்றன. சில நூல்கள் மட்டுமே பெண்களை மையப்படுத்தி எழுதப்பட்டது. அநேக காப்பியங்கள் மன்னரை வைத்து எழுதப்பட சிலப்பதிகாரம் குடிமக்களை வைத்து எழுதப்பட்டது. அதனால் அதில் அந்தக்காலக்கட்டத்தின் யதார்த்தம் கூறப்பட்டிருக்கின்றது. அதில் தாலி பற்றிக் கூறவில்லைத்தான். இது பற்றி ஒரு தமிழ் அறிஞரிடம் கேட்டேன். அவர் சொன்ன பதில் இதுதான்.
    நமது முன்னோர் காலத்திலும் அவர்கள் சார்ந்த சமூகத்திலும் பெண்ணடிமை என்பது இருந்தது. ஒரு பெண்ண் ஆடவனுடன் பேசக்கூடாது. முன்னின்று எதையும் செய்யக்கூடாது. வீட்டின் முன்னால் கூட வர அனுமதி இக்ல்லை. இப்படிப் பல அடிமைத்தனக்கள் இருந்தன. அப்படி வந்த ஒரு பழக்கமே இந்த தாலி. இது அவர் கருத்து.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    இல்லை ஐயா, உங்கள் நன்பர் சொல்வது தவறு

    Quote Originally Posted by அமரன் View Post
    நமது முன்னோர் காலத்திலும் அவர்கள் சார்ந்த சமூகத்திலும் பெண்ணடிமை என்பது இருந்தது. ஒரு பெண்ண் ஆடவனுடன் பேசக்கூடாது. முன்னின்று எதையும் செய்யக்கூடாது. வீட்டின் முன்னால் கூட வர அனுமதி இக்ல்லை.

    நம் முன்னோர் காலத்தில் அப்படி ஒரு கலாச்சாரம் இல்லை
    நிங்கள் சொல்வது இடை பட்ட காலத்தில் வந்தது
    இப்படிப் பல அடிமைத்தனக்கள் இருந்தன. அப்படி வந்த ஒரு பழக்கமே இந்த தாலி. இது அவர் கருத்து.
    தாலி என்பது இந்த பெண் திருமனமானவள் என்ற அடையாளம் காட்ட
    அந்த பெண்ணை மற்றவர்கள் காதல் பார்வையுடன் பார்க்க கூடாது என்பதற்க்கா தாலி கட்ட பட்டது

    பெண்களுக்கு தாலி போல் அந்த காலத்தில் மணமான ஆண்க்ளுக்கும் மெட்டி இருந்தது என்பது உங்களுக்கு தெரியாதா
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    உண்மையைச் சொல்லப்போனால் இன்றுதான் சிலப்பதிகாரத்தினை படித்திருக்கிறேன் சுட்டியின் வாயிலாக.
    உங்களிடம் சிலப்பதிகாரம் இ.புத்தகம் வடிவிலிருக்குமாகில் தந்துதவுங்கள்.

    சுட்டிக்கு மிக்க நன்றி.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •