Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 24

Thread: ஆதவனின் குளுகுளூ ஜொளுஜொளு பயணம் - பாகம் 2

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    ஆதவனின் குளுகுளூ ஜொளுஜொளு பயணம் - பாகம் 2

    தொடர்ச்சி.....

    முதல் பாகத்தில் பாதி விரிவாக எழுதாததால் அதை மீண்டும் தொடருகிறேன்....

    பைகாராவிலிருந்து ஊட்டிக்குச் செல்லும் வழியில் மழை பிடித்துக் கொண்டது. அந்த மலைபிரதேசங்களில் எப்போதுமே
    வானிலை மழை வரும்படியாகவே இருக்கும் ஆதலால் நாங்கள் மழை பிடித்ததும் ஒரு இடத்தில் ஒதுங்கிக் கொண்டோம்.
    மழையென்றால் சாதாரண மழையல்ல. பனிக்கட்டிச் சாரல்.. ஒவ்வொருதுளியும் சுள் சுள்ளென பிடித்தது. அதோடு
    பனிக்கட்டி மழை பார்த்து வெகு நாட்களாகிவிட்டமையால் ரொம்ப சாலியாக இருந்தது. அருகே இருந்த டீக்கடையில்
    பிஸ்கோத்துகளும் டீயும் சாப்பிட்டோம்... வெகு நாட்களுக்குப் பிறகு அருமையான தேநீர். மழை மிகவும் வழுத்தது.
    அதோடு மண்வாசனையும் சேர்ந்து பனிக்கட்டிகள் தாளமிட எனக்கு மட்டும் அந்த நேரத்தில் ஒரு நோட்டும் பேனாவும்
    இருந்திருந்தால்........

    வேறவழியில்லை... பொடானிகல் கார்டன் சுற்றிப் பார்க்க இயலாது. ஆக அடுத்தநாள் தங்கி இருந்து பார்த்துவிட்டு போக
    முடிவு செய்தோம். ஸ்கூபியின் மாமாவுக்கு போன் செய்து ஊட்டியில் இருக்கும் சித்தப்பாவை அறை வாடகைக்குப்
    பிடிக்கும்படி ஏற்பாடு செய்யச் சொன்னோம்... அதற்குண்டான ஏற்பாடும் நடந்தது.. கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம்
    மழைக்குப் பின் வண்டியை எடுத்து கிளம்பினோம்... நேரே ஊட்டி..

    ஊட்டியில் பொடானிகல் கார்டன் செல்லும் வழியில் ஒரு திரையறங்கு உள்ளது. அதனருகே வண்டியை நிறுத்திவிட்டு
    நால்வரும் ஸ்கூபியின் சித்தப்பா வருகைக்குக் காத்திருந்தோம். அப்போதே மாங்காய்களையும் மசாலா கடலைகளையும்
    சோளக்கருதுகளையும் வாங்கித் தின்று வயிறு உப்பிப் போய்,,,, இடம் தேட வேண்டிய சூழ்நிலைக்கு வந்து அப்பறமாக
    வயிறை சுத்தம் செய்துவிட்டு வந்து நிற்பதற்குள் மணீ ஆறாகிவிட்டது. பிறகு வேறொரு இடத்திற்கு சித்தப்பா வந்து
    சேர்ந்தார்.. வண்டியை உசுப்பி விட்டு ஸ்கூபி ராக்கி சித்தப்பா மூவரும் ஒரு ஹோட்டலுக்குச் செல்ல நானும் ஹெல்லும்
    நடந்துவந்தோம்... இரு கி.மீ தாண்டி அந்த ஹோட்டல் இருந்தது. வாடகை எவ்வளவு என்று கேட்டால் ஆயிரத்தி
    இருநூறு என்றார்கள்... எங்களுக்கு பக் பக் என்று இருந்தது.. அவ்வளவு பணமும் கொண்டுவரவில்லை.. ஆனால் ஸ்கூபி
    அந்த பணத்தை தான் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னான். சரி என்று ஒருமனதாக ஊட்டியில் அறையில் தங்க முடிவு
    செய்தோம்... இதற்கிடையே கொண்டு சென்ற கேமிரா போன்களின் பேட்டரி லோ என்று காண்பித்தது... பேட்டரி
    சார்ஜரும் கொண்டு செல்லவில்லை. இன்னும் அறையும் பதிவு செய்யப்படவில்லை.. வேறு யாரோ அறையைக் காலி செய்ய இருப்பதாகச் சொல்லி வரவேற்பறையிலேயே தங்க வைத்தார்கள். சரி இந்த விஷயத்தைப் பிறகு கவனித்துக் கொள்ளலாம் என்று சரியாக 7 மணிக்கு சாப்பிட கிளம்பினோம். செல்லும் வழியிலேயே எங்களுக்கு மனம் நிலைகொள்ளவில்லை. கண்கள் பாதையைக் காணாமல் பேதையைக் கண்டது. ஒருவழியாக மூன்று கிமீ வரை நடந்து வந்து ஏதாவது பொருட்கள் வாங்கலாம் என்று ஒரு கடைக்குச் சென்று நாங்கள் செய்த கூத்து இன்னும் நினைவிருக்கிறது.

    ஸ்கூபி பைனாகுலர் வாங்குவதாக விலை விசாரித்தான்.. 300 க்கும் மேலே விலையைச் சொல்ல, அவன் குறைக்கச்
    சொன்னான்.. கடைக்காரனும் வாங்குவதாக இருப்பின் நிச்சயம் குறைப்பேன் என்றும் பைனாகுலர் ஜூம் 2 கி.மீ தாண்டும்
    என்றான்... நான் வாங்கிப் பார்த்தேன். அது 50 அடியைக் கூட உறுப்பிடியாக ஜூம் செய்யவில்லை.. ஆதலால் 160
    ரூபாய்க்குக் கேட்டான்.. கடைக்காரனும் ஒத்துக் கொண்டான்.. இருப்பினும் எங்களுக்குத் திருப்தி இல்லை.. கடைசிக்கு
    1 கி.மீ ஜூமாவது ஆகவேண்டும்.. இது பக்கதிலிருக்கும் ஒரு பலகையைக் கூட ஒழுங்காக காண்பிக்கவில்லையாதலால்
    நாங்கள் வேண்டாம் என்று ஒதுங்க, அவனோ பெரும் வாக்குவாதத்தில் இறங்கிவிட்டான்.. நான் அமைதியாக இருந்தேன்..
    ஸ்கூபி திட்ட, அவன் திட்ட, இறுதியில் நாங்களே வெளியேறினோம்.. நேரே இசைக்கச்சேரி நடந்த இடத்திற்குச்
    சென்றோம். மனம் நிலைகொள்ளவில்லை.. சாப்பிட்டுவிட்டு அறைக்குச் செல்ல முடிவெடுத்து திரும்புகையில் ஒரு
    சம்பவம்.

    ஒரு ஆள் நடைபாதையில் நடந்துகொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணை இடித்துவிட்டுச் சென்றான்... எங்களுக்கோ
    ஒரே ஆச்சரியம். ஏனென்றால் சில பெண்களே வேண்டுமென்றே எங்களை இடித்த சம்பவம் நடந்தது அங்கேதான்..
    ஆனால் அந்த ஆசாமி இடித்த முறையும் கைபட்ட இடமும் அறுவறுக்கத் தக்கவகையில் இருந்தது. அந்த பெண் மிகவும்
    சோகமாக இருந்தாள். அவளோட அப்பா அவனைத் தேடி அலைந்துகொண்டிருந்தார்... அவனோ எப்படியோ தப்பி
    அடுத்த பெண்களை இடிப்பதற்குச் சென்றுவிட்டான்... பெண்களை ரசிக்கலாம் கமெண்ட் அடிக்கலாம்.... ஆனால் இப்படி
    தகாமல் புண்படும்படி நடப்பது வேதனை.. அநாகரீகம்..

    இப்படியே சிறிது நேரத்தில் அதாவது 9 மணி அளவில் ஹோட்டலுக்குச் சென்றால் அறைக்கு வாடகை 1500 என்றும் அதற்கு வேறு ஆள் வந்துவிட்டார்கள் என்றும் சொல்லவே, எங்களுக்கு திக் என்று ஆகிவிட்டது.. ஊட்டியில் 9 மணிக்கு அதுவும் அந்த கடும்குளிரில் வண்டியை எடுத்து 100 கி.மி தொலைவில் உள்ள எங்கள் வீட்டுக்குச் செல்வது நடக்கக் கூடிய காரியமா? நினைக்கும்போதே நடுக்கமாக இருந்தது.. ஹோட்டலைவிட்டு வெளியே நின்றோம்... ஒருவித பயம் எங்களைத் தாக்கியது....

    தொடரும்....

    மழை வந்த போது

    -------------------------------------------------------
    பைகாரா விலிருந்து கீழே

    -------------------------------------------------------
    அடர்ந்த உயரமான மரங்கள்...


    -------------------------------------------------------
    சூட்டிங் ஸ்பாட்


    -------------------------------------------------------

    இது என்ன இடமென்று கண்டுபிடியுங்கள்

    Last edited by ஆதவா; 26-05-2007 at 02:01 AM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    திக் திக் திரில்... அப்புறம்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அப்புறம்...நல்லா தான் அனுபவிச்சிருக்கீங்க....!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    என்னங்க... நல்லா அனுபவிச்சேனா?/ ரொம்ப சிரமப்பட்டேன்... பகல்ல ஜொல்லு விட்டதக்கு சரியான தண்டனை...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    என்ன ஆதவா சொல்லியிருந்தா எனக்கு தெரிந்த நண்பரின் வீடுக்கு செல்லி அழைத்து கவனிக்க சொல்லியிருப்பனே
    அப்ரம் எண்ண ஆச்சு....
    Last edited by மனோஜ்; 24-05-2007 at 04:35 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    அடடா அப்புறம் என்ன ஆச்சு ஆதவன்....
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பயணங்கள் முடியாது போல இருக்கே ஆதவா. நீங்கள் எழுதுவதைப் பார்த்தால் இது குளுகுளு பயணம் மாதிரித் தெரியவில்லை. திக் திக் பயணம் மாதிரி அல்லவா தெரிகின்றது.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    ஊட்டி அழகான சுற்றுலா தளமாக இருந்தது. இன்று அவை பழைய பெருமையை இழந்து விட்டது
    அதிகமாக காண்கிட் காடுகள் முழைத்து விட்டன. சுகாதரமும் குரைவு. கூட்டமும் அதிகம்

    குறிப்பாக மலர் கன்காட்சி நடக்கும் போது அங்கு போகவே கூடாது
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    பட்ட பெயர் கொடுத்து அழைக்கும் நண்பர்கள்...
    பைக் பயணம்...
    குளுகுளு ஊட்டி....
    மீண்டும் சில நினைவுகளை தட்டி எழுப்பிவிடுகிறய் ஆதவா... நாம் எல்லோரும் இப்படிதானே...

    வெகு நாட்களுக்குப் பிறகு அருமையான தேநீர்
    நாயர் கடை டீயா... தமிழ் சினிமாவில் வருவதுபோல வெள்ளை ஜாக்கெட் மட்டும் போட்டு ஒரு பெண் "எந்தா வேண்டே சேட்டா..??" என்று கேக்கலையா???
    ஒரு ஆள் நடைபாதையில் நடந்துகொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணை இடித்துவிட்டுச் சென்றான்... எங்களுக்கோ
    ஒரே ஆச்சரியம். ஏனென்றால் சில பெண்களே வேண்டுமென்றே எங்களை இடித்த சம்பவம் நடந்தது அங்கேதான்..
    ஆனால் அந்த ஆசாமி இடித்த முறையும் கைபட்ட இடமும் அறுவறுக்கத் தக்கவகையில் இருந்தது. அந்த பெண் மிகவும்
    சோகமாக இருந்தாள். அவளோட அப்பா அவனைத் தேடி அலைந்துகொண்டிருந்தார்... அவனோ எப்படியோ தப்பி
    அடுத்த பெண்களை இடிப்பதற்குச் சென்றுவிட்டான்... பெண்களை ரசிக்கலாம் கமெண்ட் அடிக்கலாம்.... ஆனால் இப்படி
    தகாமல் புண்படும்படி நடப்பது வேதனை.. அநாகரீகம்..
    சமீபத்தில் அலுவலகத்தில் வெள்ளைகாரி ஒருவரிடம் பேசி கொண்டிருந்த போது அவர் என்னிடம் அவர் தன்னுடைய இந்திய பயணத்தை பற்றி சொல்லி கொண்டிருந்தார், அதில் அவர் மிக மிக வருந்தி சொல்லியது... "பம்பாய், கோவா, ஹைதிராபாத், சென்னை, கேரளா என்று எல்லா இடங்களுக்கும் சென்றேன், அசிங்கமாக , தேவையில்லாமல் இடித்து, உரசி செல்லும் ஆண்கள் எல்லா இடத்திலும் பார்த்தேன்" என்று கூறிய போது எனக்கு மிக மிக அவமானமாக இருந்தது....
    "பாய்ஸ்" இதை எதோ ஒரு சாகாச செயலாக காட்டியிருந்தது அதை விட கொடுமை...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  10. #10
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நன்னாகத்தான் இருக்கு. அப்புறமென்ன? நன்னாக குளிர் காய்ந்தீர்களா?
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நண்பர்களே இன்னும் சில போட்டாங்கள் இணைத்துள்ளேன் பாருங்கள்.. நன்றிகள் உங்களுக்கு உரித்தாகுக...
    -----------------------------------------------------------
    Last edited by ஆதவா; 26-05-2007 at 01:56 AM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by மனோஜ் View Post
    என்ன ஆதவா சொல்லியிருந்தா எனக்கு தெரிந்த நண்பரின் வீடுக்கு செல்லி அழைத்து கவனிக்க சொல்லியிருப்பனே
    அப்ரம் எண்ண ஆச்சு....
    அப்படித்தான் ஆச்சு...... அடுத்த பாகத்தில் தொடருகிறேன் நண்பரே!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •