உலககோப்பை போட்டிக்கு சென்ற இடத்தில் பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப்உல்மர் ஜமைக்கா நாட்டில் கொலை செய்யப்பட்டார்.

வாயில் விஷத்தை ஊற்றி கழுத்தை நெரித்து அவர் கொலை செய்யப்பட்டதாக ஜமைக்கா போலீஸ் தெரிவித்தது. ஆனால் கொலையாளிகளை கண்டு பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

அவருடைய சாவு குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கிடையே ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கூறியதாக பாப்உல்மர் மரணம் குறித்து ஒரு செய்தி வெளியானது. அதில் பால் உல்மர் கொலை செய்யப்படவில்லை. இயற்கை யாக மரணம் அடைந்துள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.

இதை ஜமைக்கா போலீசார் மறுத்துள்ளனர். அந்த நாட்டு போலீஸ் செய்தி தொடர்பாளர் சார்ல்ஏஞ்சல் இது பற்றி கூறும்போது "பாப் உல்மர் கொலை செய்யப்பட்டது உறுதியாக உள்ளது. கொலையாளிகள் யார்ப என்பதை கண்டுபிடிக்க தொடர்ந்து விசாரித்து வருகிறோம்;; என்றார்.

நன்றி- லங்காசிரீ