Page 15 of 15 FirstFirst ... 5 11 12 13 14 15
Results 169 to 179 of 179

Thread: அறிவியல் செய்திகள்

                  
   
   
  1. #169
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    தாவர எண்ணெயில் ஓடிய விமானம்.


    சுவட்டு எரிபொருட்களான பெற்றோல் மண்ணெண்ணை என்பனவற்றின் பெறுதிகளைக் கொண்டு இயங்கி வந்த விமானங்கள் தற்போது எழுந்துள்ள வளிமண்டத்தில் அதிக காபனீரொக்சைட்டுச் சேர்க்கை மற்றும் பூமி வெப்பமுறுதல் விளைவுகளை அடுத்து தாவர எண்ணெயில் இயங்க ஆரம்பித்துள்ளன.

    இவ்வாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க வேர்ஜின் நிறுவனத்தின் விமானம் தாவர எண்ணெய் பயன்படுத்தி இயக்கப்பட்டு நீண்ட நேர பறப்பில் ஈடுபட்டு சாதனை் கண்டிருந்த நிலையில் 50% தாவர எண்ணெய்யையும் மிகுதி விமான எரிபொருளையும் கலந்து பெற்ற கலவையில் நியூசிலாந்து விமானிகள் நியூசிலாந்துச் சொந்தமான போயிங் 747 - 400 ரகத்தைச் சேர்ந்த பயணிகள் விமானத்தை 2 மணி நேரங்கள் பறப்பில் ஈடுபடுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

    உண்மையில் இரண்டாம் தர தாவர எண்ணெய்யே இப்பறப்பின் போது பாவிக்கப்பட்டிருந்ததாகவும் அது பல்வேறு தாவர வகைகளில் இருந்தும் பெறக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னர் வேர்ஜின் விமானம் தேங்காய் எண்ணெய் மற்றும் பிரேசில் babassu nuts இருந்து பெற்ற எண்ணெய்களின் கலவையில் இயங்கி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

    குருவிகள்

  2. #170
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    விண்வெளியில் தொலைந்த ஒரு பொருள்..!



    சர்வதேச விண்வெளி நிலையமான ஐ எஸ் எஸ் (ISS) இல் பணி புரிந்து வந்த ஒரு விண்வெளி வீராங்கணை ஒருவர் மிகச் சமீபத்தில்.. ஐ எஸ் எஸின் சூரிய மின்கலத்தகட்டில் திருத்த வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பொறிகள் திருத்தப் பயன்படும் உபகரணங்கள் அடங்கிய பை ஒன்றை விண்வெளியில் தவறவிட்டுவிட்டார்.



    சுமார் 70 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுள்ள அந்தப் பை அல்லது tool bag பூமிக்கு மேலே கிட்டத்தட்ட 200 மைல்கள் உயரத்தில் பூமியின் வடக்குப் பகுதியில் வைத்துத் தவறவிடப்பட்டுள்ளது.

    அது வேறு சில உபகரணங்களையும் (a pair of grease guns, wipes and a putty knife.) தாங்கிக் கொண்டு தற்போது 15000 மைல்கள்/ மணித்தியாலம் என்ற வேகத்தில் ஐ எஸ் எஸ்க்கு முன்னால் விண்வெளியில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

    பூமியின் குறிப்பிட்ட சில பாகங்களில் இருந்து தெளிவான இரவு வானில் அந்தப் பை விண்வெளியில் மிதந்து செல்வதை தொலைநோக்கிகள் கொண்டு காண முடிகிறதாம்.

  3. #171
    புதியவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    India
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    it is a scientific matter by man's mistake of lost his bags or material

  4. #172
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by சுட்டிபையன் View Post
    பூமியின் குறிப்பிட்ட சில பாகங்களில் இருந்து தெளிவான இரவு வானில் அந்தப் பை விண்வெளியில் மிதந்து செல்வதை தொலைநோக்கிகள் கொண்டு காண முடிகிறதாம்.
    அதை பிடித்து கொண்டு வருவதும் கடினம் தான்.. என்ன நடக்கிறது எனப்பார்ப்ப்போம்.

    செய்திக்கு நன்றி சுட்டி.....

  5. #173
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by bala71 View Post
    it is a scientific matter by man's mistake of lost his bags or material
    அன்பு பாலா தமிழில் பதிய முயற்சி செய்யுங்கள்.
    உதவிக்கு கீழ்கண்ட பதிப்பை பாருங்கள்.



  6. #174
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மிக்க நன்றி சுட்டிப்பையன்..

    கருந்துளை, மூன்றாம்நிலை புகை சேதிகள் புதுசு..
    தாவரக்காப்பு பதிவு மிக அவசிய, அவசரமான ஒன்று..
    விண்வெளிப்பை சுவாரசியம்..

    தொடருங்கள். நன்றி..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #175
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    சுட்டி, மீளவும் உங்களது அறிவியல் செய்திகளை இங்கே காணுவது கொள்ளை மகிழ்ச்சி...

    நமக்குத்தான் தேடிப் படிக்க இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதில்லை, அதனால் இப்பட்டி 'சுளை'யாக கொண்டு வந்து பதிவிட்டால் இலகுவாக இருக்கும்...!!

    தொடரட்டும் உங்கள் பணி..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #176
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    01 Oct 2008
    Posts
    177
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    விந்தைக்குரிய செய்திகள் வியப்புக்குரியன.

  9. #177
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0

    கொரில்லாவில் இருந்து மனிதனுக்கு தொற்றிய புதிய எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிப்பு.

    கொரில்லாவில் இருந்து மனிதனுக்கு தொற்றிய புதிய எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிப்பு.

    மனிதரில் எயிட்ஸ் நோயைத் தோற்றுவிக்கும் HIV-1 வைரஸிற்கு ஒத்த கொரில்லாவில் (Gorillas) இருந்து மனிதனிற்கு தொற்றியிருக்கக் கூடியது என்று கருதப்படும் புதிய எயிட்ஸ் வரைஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட வைரஸ் தொற்றுடன் பிரான்ஸ் பாரீசில் வாழும் கமரூன் நாட்டைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணொருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவரே இவ்வகை வைரஸின் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள முதல் மனிதனும் ஆவார்.

    இவர் கமரூன் நாட்டில் ஒதுக்குப்புற நகரமொன்றில் வாழ்ந்திருந்தாலும் கொரில்லாக்களோடு எந்த வித நேரடித் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் கொரில்லா அல்லது சிம்பன்சிகளின் இறைச்சிகளை உண்ணும் அல்லது தொடர்புகளைக் கொண்டிருக்கும் வேறு மனிதர்களிடம் இருந்து இவருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    HIV கள் சிம்பன்ஸிகளில் (chimpanzees ) காணப்படும் SIV (Simian Immunodeficiency Virus ) வைரஸிகளின் வகைகள் என்றும் எச் ஐ வி கூட சிம்பன்ஸிகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றி இருக்கலாம் என்றே இது நாள் வரை கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது இந்த புதிய வைரஸின் கண்டுபிடிப்பானது எச் ஐ வி கொரில்லாக்களில் இருந்தும் மனிதருக்கு தொற்றி இருக்கக் கூடும் என்ற நோக்கிலும் உயிரியல் மருத்துவ ஆய்வாளர்களைச் சிந்திக்கச் செய்துள்ளது.

    இந்த புதிய வகை வைரஸை எச் ஐ வியின் பெருக்கத்தை கட்டுப்படுத்தக் கூடிய மருந்துகள் கொண்டு கட்டுப்படுத்த முடியாது என்று நம்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்ற அதேவேளை இந்த வைரஸ் தொற்றுக் கொண்ட பெண்மணி எயிட்ஸ் நோய்க்குரிய எந்தக் குணங்குறிகளையும் காண்பிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

    விரைந்து கூர்ப்படையக் கூடிய எயிட்ஸ் வைரஸுக்கள் மனிதன் மற்றும் பழைய உலகுக் குரங்குகள் அடங்கும் பிரைமேட்டு வகை உயிரினங்களுக்கிடையே இனம் விட்டு இனம் தொற்றக் கூடியவனவாக விளங்குகின்றன.

    சமீபத்தில் தான் ஆபிரிக்கர்கள் மத்தியில் எயிட்ஸ் வைரசிஸிற்கு எதிரான தடுப்பூசிகள் பரிசோதனை ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டன என்பதும் ஆபிரிக்காவிலேயே உலகில் அதிக எயிட்ஸ் நோயாளிகள் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆபிரிக்காவை அடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் அடங்கும் ஆசியப் பிராந்தியம் அதிக எயிட்ஸ் நோயாளிகளைக் கொண்டிருக்கிறது.

    நன்றி குருவிகள்
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  10. #178
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0

    சூரியப் படுக்கைகள் (Tanning Beds) ஆசனிக் போன்று ஆபத்தானவை.

    சூரியப் படுக்கைகள் (Tanning Beds) ஆசனிக் போன்று ஆபத்தானவை.


    சூரியப்படுக்கைகள் (sun beds அல்லது Tanning Beds) என்று அழைக்கப்படும் புறஊதாக் கதிர்ப்புக்கள் (ultraviolet) கொண்டு ஆக்கப்பட்டுள்ள படுக்கைகள் உடல் நலத்துக்கு தீங்கானவை என்றும் அவை ஆசனிக் மற்றும் நச்சு வாயுக்களுக்கு (Mustard Gas) இணையாக மனிதரை சிறுகச் சிறுகக் கொல்லும் இயல்புடையன என்றும் குறிப்பாக தோல் மற்றும் கண் புற்றுநோய்களின் பெருக்கத்துக்கு காரணமாக இருக்கின்றன என்றும் சமீபத்திய பல ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

    முன்னர் புறஊதாக் கதிர்ப்புகளில் ஒருவகை மட்டுமே புற்றுநோய்க்குக் காரணம் என்று கூறப்பட்டு வந்துள்ள நிலையில் அனைத்து வகை புறஊதா கதிர்ப்புகளும் ஏதோ ஒருவகையில் மரபணு அலகுகளில் மாற்றங்களை உண்டு பண்ணி புற்றுநோயை உருவாக்கவல்லனவாக இருக்கின்றமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

    தங்கள் மேனியை இளமையோடு மிளிர வைக்க என்று இளம்பராயத்தினரில் 30 வயதிற்கு உட்பட்ட பலர் இந்த சூரியப்படுக்கைகளைப் பாவிக்கத் தொடங்கிய பின் அவர்கள் மத்தியில் தோற் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்திருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

    நடத்தப்பட்ட 20 ஆய்வுகளில் இருந்து இந்த சூரியப் படுக்கைகளைப் பாவித்த இளம் வயதினரிடையே 75% புற்றுநோய் தாக்க அதிகரிப்பு இனங்காணப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

    சூரியப் படுக்கைகளை அறிமுகப்படுத்திய விஞ்ஞானமே இப்போது அதன் ஆபத்துக்கள் பற்றியும் எச்சரிக்கின்றது என்பது ஒரு வகையில் ஆச்சரியத்தையும் இன்னொரு வகையில் விஞ்ஞானிகளின் அறிவிப்புக்கள் குறித்த கேள்விக் குறியையும் எழுப்பி நிற்கிறது.


    Tanning Beds as Lethal as Mustard Gas, Arsenic

    Maria Cheng, Associated Press

    July 29, 2009 -- International cancer experts have moved tanning beds and other sources of ultraviolet radiation into the top cancer risk category, deeming them as deadly as arsenic and mustard gas.

    For years, scientists have described tanning beds and ultraviolet radiation as "probable carcinogens." A new analysis of about 20 studies concludes the risk of skin cancer jumps by 75 percent when people start using tanning beds before age 30.

    Experts also found that all types of ultraviolet radiation caused worrying mutations in mice, proof the radiation is carcinogenic. Previously, only one type of ultraviolet radiation was thought to be lethal.

    The new classification means tanning beds and other sources of ultraviolet radiation are definite causes of cancer, alongside tobacco, the hepatitis B virus and chimney sweeping, among others.

    The research was published online in the medical journal Lancet Oncology on Wednesday, by experts at the International Agency for Research on Cancer in Lyon, the cancer arm of the World Health Organization.

    குருவிகள்
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  11. #179
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0

    நீங்கள் உண்பது நிறையுணவா..?! இங்கு பரிசோதித்துக் கொள்ளுங்கள்.


    அரோக்கியமான வாழ்வு வாழ உண்ண வேண்டியது நிறையுணவு (Balance diet) ஆகும். அந்த நிறை உணவு எவ்வகை உணவுப் பொருட்களை எவ்வெவ்வளவுகளில் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்கிறது இப்படம்.

    நீங்கள் உணவு உண்ணப் பாவிக்கும் வட்ட வடிவ உணவுத் தட்டில் மேற்படி அளவுக்கு குறிப்பிட்ட வகை உணவுகளை நீங்கள் நாள் தோறும் உண்டு வந்து.. நல்ல உடற்பயிற்சி அல்லது உடற்பயிற்சி அளிக்கக் கூடிய கடின வேலைகளையும் செய்து வந்தால் உங்கள் ஆயுள் நீண்டதாக இருக்கும்.

    பூமியில் பிறந்த யாருக்குத்தான் நீண்ட நாள் வாழ ஆசையில்லை. உங்களின் ஆசையை பூர்த்தி செய்ய இக்குறிப்பு உதவும் என்று நம்புகின்றோம்.

    விஞ்ஞான குருவிகள்
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

Page 15 of 15 FirstFirst ... 5 11 12 13 14 15

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •