Page 1 of 15 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 179

Thread: அறிவியல் செய்திகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    அறிவியல் செய்திகள்

    இங்கிலாந்தை சேர்ந்த வேதியல் நிபுணர்கள், மற்றும் டாக்டர்கள் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி செயற்கை ரத்தத்தை உருவாக்கி உள்ளனர்.இந்த செயற்கை ரத்தம் பிளாஸ்டிக் மூலக்கூறுகளால் ஆனது. அவற்றில் உள்ள இரும்பு அணுக்கள் ஹீமோ குளோபின்களாக செயல் படும். இவை ஆக்சிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்லும்.

    இந்த புதிய செயற்கை ரத்தத்தை போர் முனைகளில் ராணுவத்தினர், மற்றும் விபத்தில் சிக்கியவர்களுக்கு அவசர தேவையாக செலுத்தி உயிர் இழப்பை தடுக்க முடியும். ஆம்புலன்சுகளில் அதிக அளவு இந்த செயற்கை ரத்தத்தை எளிதாக எடுத்துச் செல்லவும் முடியும்.

    லண்டனில் 22-ந் தேதி தொடங்கும் விஞ்ஞான கண்காட்சியில் இந்த செயற்கை ரத்தம் பார்வைக்கு வைக்கப்பட்டுகிறது

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    எஸ்டோனிய அரசாங்க கணனி வலையமைப்புகள் மீதான இணையத் தளம் மூலமான தாக்குதலை, இராணுவ ஆக்கிரமிப்புடன் ஒப்பிட்டுள்ள நேட்டோ அமைப்பு, இந்த தாக்குலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக ஒரு நிபுணரை அங்கு அனுப்பியுள்ளது.

    இந்த இணையத்தளம் மூலமான தாக்குதல் குறித்து எஸ்டோனியா ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளது.

    எஸ்டோனியர்கள் தமது நடவடிக்கைகள், வணிகங்கள் ஆகியவற்றை நடத்துவதன் மையப் பகுதி வரை இந்த அச்சுறுத்தல் சென்றுள்ளதாக நேட்டோ சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

    எஸ்டோனிய இணையத்தள சார்வர்களை அளவுக்கு அதிகமாக நிரப்பி, அவை முடக்கப்படும் நிலையை ஏற்படுத்தும் ஒன்றிணைக்கப்பட்ட இந்தத் தாக்குதல்களால், எஸ்டோனிய அரசாங்க இணையங்கள், வங்கிகள் மற்றும் பத்திரிகைகள் ஆகியவை பல தடவைகள் செயலிழந்து போயின.

    இந்தத் தாக்குதல் ரஷ்ய அரசாங்கத்தினாலேயே ஆரம்பிக்கப்பட்டதாக எஸ்டோனியா கூறும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

    நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐரோப்பிய ஒன்றிய- ரஷ்ய மாநாட்டில் இந்த விவகாரம் முதன்மை விவகாரமாகக் கொள்ளப்பட வேண்டும் என்று எஸ்டோனியா விரும்புகிறது.


    Thanks-bbc.com

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இந்திய அமெரிக்கர்கள் உட்பட ஆசியாவைச் சேர்ந்த 90 சதவீத அமெரிக்கர்களுக்கு இண்டர்நெட் முக்கியப் பங்காற்றுகிறது.

    சுமார் 90 சதவீத ஆசிய அமெரிக்கர்கள் ஆன்லைனில் இருப்பதாகவும், 70 சதவீதம் பேர் குறிப்பிட்ட இணைய தளங்களை பார்த்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

    இவர்களில் 50 சதவீதம் பேர் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதாகவும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இரட்டிப்பாகியிருப்பதாகவும் 3-வது ஆண்டு ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.


    கடந்த 2005ம் ஆண்டில் இணைய தளத்தைப் பயன்படுத்தும் வரிசைப்பட்டியலில் ஆசிய அமெரிக்கர்கள் 8வது இடத்தில் இருந்து, கடந்த ஆண்டில் 5வது இடத்திற்கு வந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    ஆசிய இந்தியர்களும், சீனாவைச் சேர்ந்தவர்களும் இண்டர்நெட்டில் அதிக நேரத்தைச் செலவிடுவதாகவும், 25 முதல் 34 வயது வரையுள்ள இளம் அமெரிக்கர்கள் மிக அதிக எண்ணிக்கையில் இண்டர்நெட்டை பயன்படுத்துவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

    ஆசிய அமெரிக்கர்கள் அதிகமாக ஆன்லைனில் வாங்கியிருப்பது ஜவுளி மற்றும் புத்தகங்களே என்று தெரிய வந்துள்ளது.

    சுமார் 80 சதவீத ஆசிய இந்தியர்கள் பிரபல் செய்தித் தாள்களை இணைய தளத்தில் படிப்பதுடன் ரேடியோ மற்றும் டிவியையும் பார்ப்பதாக அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.

    நன்றி. msn

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    நல்ல திரி அமரன். நன்றி. தொடருங்கள்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் ஜோய்ஸ்'s Avatar
    Join Date
    10 Apr 2007
    Location
    மதுரை.
    Posts
    357
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    0
    Uploads
    0
    மிகவும் பயனுள்ள பதிவு.நம்மை சுற்றி நடப்பவைகளை உடனுக்குடன் தெரியப்படுத்தியதர்க்கு பாராட்டுக்கள்.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    நல்ல தகவல்கள் அமரன்.....

    தொடர்ந்து கொடுங்கள்...

    மூல ஆங்கில இணைப்பு இருக்குமானால் அதையும் கொடுங்கள்...

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    புகைப்பிடித்தலின் காரணமாக காச நோய்க்கான தாக்கம் அதிகரிப்பதாகவும் இதனால் இந்தியா உட்பட பல நாடுகளில் பலர் இந்நோயின் தாக்கத்து உள்ளாகியுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உலகில் பில்லியன் கணக்கானோர் காச நோய்க்கான பற்றீரியாவை (Mycobacterium tuberculosis) தமதுடலில் கொண்டுள்ள போதும் மில்லியன் கணக்கானோரே கடும் பாதிப்புக்குள்ளாகி நோய் கண்டு இறக்கின்றனர் அல்லது மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது...!
    Last edited by சுட்டிபையன்; 20-05-2007 at 12:48 PM.
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    நல்ல தகவல். நன்றி அமரன்ன்

    விஞ்ஞானம் மக்களை காக்குதா இல்லை அழிக்குதானு ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    பின்லாந்து நாட்டு உயிரியலாளர்கள் சிறுவர்கள் மத்தியில் எழும் கற்றல் தொடர்பான (கதைத்தல்,கிரகித்தல்,வாசித்தல்) குறைபாட்டிற்கான (Dyslexia) பரம்பரை அலகை (ஜீன்-Gene) கண்டறிந்துள்ளனர்....இக்கண்டறிதலானது இக்குறைபாடு தொடர்பான காரணங்கள், நிவர்த்திகள் விரைந்து பெறப்பட உதவியளிக்கும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    அகிலத்தில் (Universe) புதிய நட்சத்திரங்களின் (Stars like Sun) பிறப்பு வேகம் குறைவடைந்துள்ளதால் இன்னும் 10 பில்லியன் (10,000,000,000) வருடங்களின் பின் அகிலம் இருளடைந்து விடுமாம்..... இப்படி பிரித்தானிய எடின்பரோ பல்கலைக்கழக (University of Edinburgh) விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்....! ......அப்படி இருளடைந்தால் பூமியில் உயிரினங்களின் கதி என்னாவது.....???!...... தற்போது புதிய நட்சத்திரங்களின் பிறப்பு வேகம் 6 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட 30 மடங்குகள் குறைவடைந்து விட்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்....!


    பூமியில்தான் மனிதன் செயற்பாடுகாரணமாக சமநிலை குறைகிறது என்றால் அகிலத்திலுமா...........?
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    சுமார் 266 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் உயிர் வாழக்கூடிய நுண்ணுயிரி ( Strain 121) ஒன்றை பசுபிக் சமுத்திரத்தின் அடியில் உள்ள எரிமலை வெடிப்புப் பகுதியில் கண்டு பிடித்துள்ளதாக அமெரிக்க நுண்ணுயிரியலாளர்கள் அறிவித்துள்ளனர்....இது உயர் வெப்பநிலை நிலவும் பூமி அல்லாத பிற கோள்களிலும் உயிரினங்கள் வாழலாம் என்ற கருத்தை உறுதிப்படுத்துவதாக அவர்கள் ஊகமும் வெளியிட்டுள்ளனர்....!
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    மனித முளையம் ஒன்றின் அடிப்படை (Human embryonic stem cells) கலத்திலிருந்து ஒரு மூலவுயிர்ப்படைக்கான கலத்தொகுதியை (human ES Cell lines) ஆய்வு சாலையில் பிரித்தானிய உயிரியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்...இதே போன்று முன்னர் அமெரிக்க, அவுஸ்திரேலிய, இந்திய, சுவிடன் நாட்டு, உயிரியலாளர்களும் மனித முளைய அடிப்படைக் கலங்களிலிருந்து மூலவுயிப்படைக் கலங்களை உருவாக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது....பல நாடுகளில் இத்தொழில் நுட்பம் தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது...!
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

Page 1 of 15 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •