Page 4 of 15 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast
Results 37 to 48 of 179

Thread: அறிவியல் செய்திகள்

                  
   
   
  1. #37
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0
    நல்ல பல அரிய தகவல்களை கொடுத்த சுட்டிக்கு நன்றி
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

  2. #38
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    வெப்ப வலயத்தைச் சேர்ந்த சிறிய இன வளர்ப்பு மீன் ஒன்றிற்கு கடல் வாழ் ஜெலி மீன்களில் இருந்து பெறப்பட்ட ஒளிவீசும் புரதங்களை உற்பத்தி செய்யக் கூடிய பரம்பரை அலகுகளை புகுத்தி அவற்றில் ஒளிவீசும் இயல்பை ஏற்படுத்தி உள்ளனர்...இப்போ அவை பிறப்புரிமையியல் ரீதியில் மீள வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் வளர்ப்புப் பிராணிகளாக விற்கப்படவுள்ளன....!
    உண்மையில் இவை மாசுக்களை அடையாளம் காண உற்பத்தி செய்யப்பட்ட போதும் விற்பனை உரிமம் பெறப்பட்டு வளர்ப்பு மீன்களாகவும் விற்கப்படவுள்ளன...!
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  3. #39
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    எமது பூமிக்கு வயது கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வருடங்கள்....பூமியில் உயிரினங்கள் தோன்றியது சுமார் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர்... யுராசிக் பாக் டைனோசோரர்கள் வாழ்ந்தது சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர்....எனி விடயத்துக்கு வருவோமா...சமீபத்தில் அன்டாட்டிக்கா பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து சுமார் 251 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் எமது பூமியோடு சுமார் 4.6 பில்லியன் வயதுடைய மிகப்பெரிய விண்பாறை மோதி பூமியில் வாழ்ந்த உயிரினங்களில் கிட்டத்தட்ட 90சதவீதம் அழிந்திருக்கலாம் என்றும் அதன் பின் இன்னுமொரு விண் பாறை மோதலிலேயே டைனோசோரர்கள் அழிந்துள்ளன என்றும் தகவல் வெளியிட்டுள்ளனர்...இதற்கான ஆதாரங்கள் அன்டாட்டிக்காப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட விண் பாறைத்துகளை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்திய போது அறியப்பட்டுள்ளது....!
    இவ்வாய்வை the University of Rochester சேர்ந்த புவியியற்துறைப் பேராசிரியர் Asish R. Basu செய்துள்ளார்.....!
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    ஜப்பானிய உயிரியலாளர்கள் புதிய இனத் திமிங்கிலம் ஒன்றை கண்டுபிடித்து டி.என்.ஏ (DNA) பகுப்பின் மூலம் அடையாளபடுத்தியுள்ளனர்....! பல பிரபலியமான விலங்கு,தாவர இனங்கள் உலகில் அருகி வரும் இச்சமயத்தில் இத்தகவல் கொஞ்சம் மகிழ்ச்சி தருகிறது...பூமியில் மனித சனத்தொகை கட்டுக்கடங்காமல் வளர்ந்து செல்ல பல உயிரினங்களோ வாழிடம் இன்றியும் விரைந்த சூழல் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமலும் அழிந்தே போகின்றன....! மனிதன் தானும் வாழ்ந்து மற்ற உயிரினங்களையும் வாழவிடுவானா....?! அன்றில் மனிதனும் ஒரு நாள் இப்படியே அருகும் நிலைதான் வரும்.....!
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  5. #41
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    எமது உடலை ஆக்கும் தகவலை எமது அப்பா அம்மாவிடம் இருந்து கொண்டுவரும் நிறமூர்த்தங்கள்(Chromosomes) அடிப்படையில் DNA எனும் மாமூலக்கூற்றுக் கட்டமைப்பு மற்றும் புரதம் கொண்டு ஆனவை...இந்த DNA இல் தான் ஜீன்கள் இருக்கின்றன..அந்த ஜீன்களின் எண்ணிக்கை மனிதனில் 30,000 (30,ஆயிரம்) ஆகும்....!
    சரி... DNA யில் உள்ள ஜீன்கள் எப்படித் தாம் கொண்டுள்ள தகவலைக் கொண்டு கலத்தை (உடலை ஆக்கும் அடிப்படை அலகு) ஆக்குகின்றன... இயக்குகின்றன...ஆம் அதற்குத்தேவை புரதங்கள் எனும் மற்றுமொரு மாமூலக்கூறு...அவைதான் எமது உடலை ஆக்கும் கலத்தை ஆக்குகின்றன இயக்குகின்றன...DNAயில் உள்ள தகவலை சரியாக பெற்று உடலை இயக்குகின்றன....மனிதனில் உள்ள 30,000 ஜீன்களினதும் தகவல்களைக் கொண்டு எமதுடலை ஆக்கி இயக்க 250,000 புரதங்கள் தேவை...அதுமட்டுமல்ல அவை தமக்கிடையே பல வழிகளில் தொடர்புகளை ஏற்படுத்தி பிரத்தியேகத் தகவல்களையும் பரிமாறிக்கொள்கின்றன....மனிதனில் எல்லா புரதங்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை ஆனால் பழ ஈ (Drosophila melanogaster ) என்று ஒரு பூச்சியில் அது கொண்டுள்ள கிட்டத்தட்ட அனைத்துப் புரதங்களையும் (7,000) விஞ்ஞானிகள் இனம் கண்டுள்ளனர்....இது எதிர்காலத்தில் உயிரியல் விஞ்ஞானம் அதிநவீன கணணிகளை ஆக்க வழி செய்யும் என்று நாம் கருதுகிறோம்...அது மட்டுமல்ல மருத்துவரீதியிலும் உயிரியல் விஞ்ஞான ரீதியிலும் பல நோய்களுக்கான மருந்துகளையும் கண்டுபிடிக்க இவை உதவும் என்பதும் திண்ணம்...! இன்னும் பல அதிசயங்கள் நிகழவும் இவை வழி செய்யும்....!
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  6. #42
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    05 Mar 2007
    Posts
    54
    Post Thanks / Like
    iCash Credits
    30,802
    Downloads
    1
    Uploads
    0
    நல்ல பல செய்திகளை கொடுக்கிறீங்க... நன்றி சுட்டிபையன் அவர்களே...

  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    மனிதனின் செயற்பாடுகளினால் அதிகம் வெளிவிடப்படும் பச்சை வீட்டு வாயுக்களின் அளவு தொடர்ந்து வளி மண்டலத்தில் அதிகரிப்பதனால் ஆட்டிக் துருவப்பகுதியில் வெப்பநிலை அதிகரிப்பு மிக உயரிய அளவில் அவதானிக்கப்பட்டுள்ளது...இதனால் பனிப்படலம் உருகுவதும் கடல் உறிஞ்சும் சூரிய சக்தியின் அளவு அதிகரிப்பும் பூமியின் காலநிலையில் பாரிய மாற்றங்களுக்கு வழிகோலும் என்றும் அறியக்கிடைத்துள்ளது...!

    இச்செய்தி தொடர்பான நாசாவின் விடியோ..இங்கு அழுத்திப் பார்வையிடலாம்
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  8. #44
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    விண்ணியலாளர்கள் 450 ஒளியாண்டுகளுக்கு அப்பால் சோடி நட்சத்திரங்களில் ஒன்றை வலம் வந்து கொண்டிருக்கும் பொருமிப் பெருத்த கோள் என்று கருதக் கூடிய விண்பொருள் ஒன்றை அவதானித்துள்ளனர். இதற்கு HAT-P-1 என்ற குறியீட்டுப் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த HAT-P-1 இன் ஆரை கிட்டத்தட்ட வியாழக் கிரகத்தின் ஆரையைப் போல 1.38 மடங்குகள் இருக்கும் அதேவேளை அதன் திணிவு வியாழனின் திணிவைப் (வியாழனின் திணிவு 1.8987 10^27 கிலோகிராம்) போன்று வெறும் அரைப்பங்கு தானாம் இருக்கும் என்று அணுமானிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இவ்விண்ணியற் பொருளின் சராசரி அடர்த்தி என்பது சாதாரண கோள்களின் அடர்த்தியிலின்றும் மிகக் குறைந்திருப்பதுடன் இவற்றின் அடிப்படையில் இதன் தோற்றம் குறித்தும் பாரிய சந்தேகத்தைக் கிளப்பி உள்ளது.

    இதன் சராசரி அடர்த்தி குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஆய்வாளர்கள் இதன் அடர்த்தி நீரின் (1000 கிலோகிராம்/கன மீற்றர்கள்) அடர்த்தியின் 1/4 பங்கு தான் என்றும் இவ்விண் பொருளின் (கோள் என்று கருத்ததக்க) பெளதீகத் தன்மைகள் குறித்து விளக்கவல்ல கணிப்பீடுகளை வழமையான கணிதச் சமன்பாடுகளைக் கொண்டு தீர்க்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    இது தான் சுற்றி வரும் தாய் நட்சத்திரத்தை மிக அண்மித்த சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும் அதேவேளை 4.5 பூமி நாட்களுக்குள் இது ஒரு தடவை அதன் சுற்றுப்பாதையில் முழுமையாகப் பயணித்தும் விடுகிறதாம். இது அதன் தாய் நட்சத்திரத்தைக் கடக்கும் போது தாய் நட்சத்திரம் மக்கலாகத் தோன்றுகின்றதாம்.

    இந்த HAT-P-1 விண் பொருள் சூரியத் தொகுதிக்கு அப்பால் அவதானிக்கப்பட்ட கோள்கள் என்று கருதத்தக்க சுமார் 200 விண் பொருட்களில் ஒன்று என்றும் ஏற்கனவே கண்டறியப்பட்ட சூரியக் குடும்பத்துக்கு வெளியில் உள்ள இதே வகைக் கோளான HD 209458b இன் பொருமிப் பெருத்த அளவையும் விட இதன் பொருமல் 24% எதிர்பார்க்கப்பட்ட அளவை விட அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

    இந்தக் கோளின் பெளதீகத் தன்மைகள் குறித்து விளக்க பல வழிமுறைகள் முன்மொழியப்பட்ட போதும் அவை எதுவும் இதுவரை சரியாக அமையவில்லை என்றும் மேலும் ஆய்வுகள் தொடர்வதாகவும் இவ்வாய்வை நடத்தி வரும் ஆய்வு மையம் - Harvard-Smithsonian Center for Astrophysics (CfA)- விண்ணியல் சஞ்சிகை ஒன்றின் மூலம் அறியத்தந்துள்ளது.




    http://news.bbc.co.uk/1/hi/sci/tech/5346998.stm
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  9. #45
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0

    உலகின் மிகவும் சோம்பேறி சிறுவர்கள்.

    உலகின் மிகவும் சோம்பேறி சிறுவர்கள்.


    ரெஸ்கோ (Tesco) என்று அழைக்கப்படும் super market ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து உலகின் மிகவும் சோம்பேறிகளா பிரித்தானியச் சிறார்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

    பிரித்தானியச் சிறார்கள்..கணணி விளையாட்டுக்களோடும் தொலைக்காட்சியோடும் அதிக நேரத்தை செலவழிப்பதுடன்..2 தொடக்கம் 15 வயதுக்குள் அடங்கும் 19% பையங்களும்..22% பெண்களும்..கொழுத்த தேகம் உடையவர்களாக விளங்குகின்றனராம்.



    மேலதிக தகவல்களுக்கு
    http://news.bbc.co.uk/1/hi/health/5315358.stm
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  10. #46
    இளம் புயல் பண்பட்டவர் umakarthick's Avatar
    Join Date
    04 May 2007
    Location
    chennai
    Posts
    372
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    57
    Uploads
    0
    எப்படிங்க இதெல்லாம் பிடிக்கிறீங்க

  11. #47
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by umakarthick View Post
    எப்படிங்க இதெல்லாம் பிடிக்கிறீங்க
    எல்லாம் இணையத்தில சுத்திதான்
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  12. #48
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    எமது பூமிக்கு வயது கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வருடங்கள்....பூமியில் உயிரினங்கள் தோன்றியது சுமார் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர்... யுராசிக் பாக் டைனோசோரர்கள் வாழ்ந்தது சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர்....எனி விடயத்துக்கு வருவோமா...சமீபத்தில் அன்டாட்டிக்கா பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து சுமார் 251 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் எமது பூமியோடு சுமார் 4.6 பில்லியன் வயதுடைய மிகப்பெரிய விண்பாறை மோதி பூமியில் வாழ்ந்த உயிரினங்களில் கிட்டத்தட்ட 90சதவீதம் அழிந்திருக்கலாம் என்றும் அதன் பின் இன்னுமொரு விண் பாறை மோதலிலேயே டைனோசோரர்கள் அழிந்துள்ளன என்றும் தகவல் வெளியிட்டுள்ளனர்...இதற்கான ஆதாரங்கள் அன்டாட்டிக்காப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட விண் பாறைத்துகளை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்திய போது அறியப்பட்டுள்ளது....!
    இவ்வாய்வை the University of Rochester சேர்ந்த புவியியற்துறைப் பேராசிரியர் Asish R. Basu செய்துள்ளார்.....!
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

Page 4 of 15 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •