Page 2 of 15 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast
Results 13 to 24 of 179

Thread: அறிவியல் செய்திகள்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    உடலின் தசை வலிமையை தீர்மானிக்கும்,நாம் மாமிச உணவுகளின் மூலம் உள்ளேடுக்கும் கிறியற்றினைன் (creatine) எனும் இரசாயனப் பொருள் மூளையின் ஞாபகசக்தி, செயற்படு திறன் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வொன்று கூறிநிற்கிறது....!
    இக்கிறியற்றினைன் கலங்களில் சக்திக்கான சேமிப்பை (ATP) அதிகரிக்கச் செய்வதே இவ்விளைவுகள் ஏற்பட உதவுகிறதாம்....மனிதனில் ஆண்களே அதிக தசை வலிமை, அதிக சக்தி சேமிப்பைக் கொண்டவர்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது...!
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சுட்டி கலக்கிறே. தொடர்ந்து தகவல்களைத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். (எல்லாம் நேரம். இப்படி பணிவாகக் கேட்காதுவிட்டால் மிரட்டுறாங்கப்பா)

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    சுட்டி கலக்கிறே. தொடர்ந்து தகவல்களைத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். (எல்லாம் நேரம். இப்படி பணிவாகக் கேட்காதுவிட்டால் மிரட்டுறாங்கப்பா)
    அப்படியே ஆகட்டும் அமரேசா

    யாரப்பா இந்த அப்பவி புள்ளபூச்சி அமரேசர வெருட்டுறது

    சுட்டிட அரிவாளுக்கு வேளையா?
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    நித்திரையில் சிறுநீர்கழிக்கும் சிறு பிள்ளைகளைக் கண்டுள்ளீர்கள் தானே...அவர்கள் அப்படிச் செய்யக் காரணம் போதிய சுவாசம் இன்மைதானாம்...இது சுவாசப்பாதை பகுதியாக தடைப்படுவதால் நிகழ்கிறதாம்...( நாக்கு மடிப்படைந்து சுவாசப்பாதையை அடைத்தல் அல்லது கண்டக்கழலை வீக்கங்கள் ) இதை ஆய்வு மூலம் கண்டு இப்போ அதை சீர் செய்யக் கூடிய ஒரு உபகரணத்தையும் அறிமுகம் செய்து பரிசோதித்துப் பார்த்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளதாம்...!
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    இறுக்கமாக கழுத்துப்பட்டி (Necktie) அணிதல் கண்ணில் குருதி அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வர வழிவகுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவொன்று கூறி நிற்கிறது...குறிப்பாக ஆண்களில் Glaucoma (தொடரான கண் சம்பந்தமான நோய்கள்-a group of serious eye diseases) ஏற்பட வழிவகுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது..!
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    தென்கிழக்கு வெனிசுலாவில் ஆற்றுப்படுக்கை ஒன்றில் ( River Basin) 10 புதிய இன மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விலங்கியலாளர்களும் அமெரிக்க சூழலியல் அமையங்களும் அறிவித்துள்ளன....!
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    அருமை அருமை அமரன் மற்றும் சுட்டியின் தகவல்கள்
    தொடர்ந்து தாருங்கள்...
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    திரியை ஆரம்பித்த அமரனுக்கும், தொடரும் சுட்டிக்கும் நன்றிகள்...
    பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள உதவுகின்றது...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by மனோஜ் View Post
    அருமை அருமை அமரன் மற்றும் சுட்டியின் தகவல்கள்
    தொடர்ந்து தாருங்கள்...
    Quote Originally Posted by agnii View Post
    திரியை ஆரம்பித்த அமரனுக்கும், தொடரும் சுட்டிக்கும் நன்றிகள்...
    பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள உதவுகின்றது...
    இருவருக்கும் நன்றிகள்
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    கல்வித்துறையும் ஆயுளை, நோய்களை, பழக்கவழக்கத்தை நிர்ணயிக்கிறதாம்...விஞ்ஞானக்கல்வி ( உயிரியல்,பெளதீகம்,பொறியியல் மருத்துவம்) பயில்பவர்கள் நீடித்த ஆயுளைக் கொண்டு விளங்குவதாகவும் மற்றையதுறை சார்ந்தவர்கள் ஒப்பீட்டளவில் குறைந்த ஆயுளைக் கொண்டிருப்பதாகவும் பிரித்தானிய பல்கலைக் கழகங்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவொன்று கூறி நிற்கிறது...! இருப்பினும் மருத்துவத் துறை மாணவர்களே அதிகம் அற்ககோலுக்கும் (மதுபானம்) புகைப்பிடித்தலுக்கும் அடிமையாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...கலைத்துறை சார்ந்தவர்கள் சுவாசப்பை புற்று மற்றும் இதய நோய்களுக்கு உள்ளாவது மிக அதிகம் என்றும் அவ்வாய்வு கூறித் தொடர்ந்து செல்கிறது...!
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    உலக வெப்பமுறுதலின் (Global Warming) பக்க விளைவால் 160,000 பேர் வருடம் தோறும் மரணிப்பதாக விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது...மலேரியா,டயறியா மற்றும் போசனைக் குறைபாடுகள் போன்றவை இதற்கான முக்கிய நேரடிக்காரணிகளாக இருக்கின்றன...இது ஆபிரிக்க தெற்கு,தென்கிழக்காசிய பிராந்தியத்தையே மிகவும் பாதிப்பதாகவும்...சிறிய வெப்பநிலை உயர்ச்சி கூட பெரிய அளவில் நுளம்புப் பெருக்கத்திற்கு வழிவகுப்பதாகவும்... நுளம்புகள் பரந்து தேசம் விட்டு தேசம் பெருகவும் வகை செய்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது...! அத்துடன் இவ்வெண்ணிக்கை 2020இல் இருமடங்காகும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது..இந்த ஆய்வில் உலக சுகாதார ஸ்தாபனமும் (WHO) ஒரு பக்காளியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது...!
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    நமது செல்லப் பிராணிகளில் ஒன்றான நாயின் ஜீன்கள் முழுவதும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக உயிரியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்...இதன்படி நாய் ,மனிதனுடன் நெருங்கிய பாரம்பரியத் தொடர்பை எலிகளைவிடக் கூடிய அளவில் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்....! ஆனாலும் எலிகள் தான் பரினாம வளர்ச்சிப் பாதையில் எம்மோடு அதிக தூரம்/காலம் சேர்ந்து பயணித்துள்ளனவாம்...! நாயில் 2.4 பில்லியன் நைதரசன் உப்பு மூலச் சோடிகள் உள்ளன என்றும் இது மனிதனில் உள்ளதைவிட சுமார் 0.5 பில்லியன் குறைவு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்...ஜீன் வரிசைப்படுத்தலில் நுண்ணங்கிகள் தவிர மனிதன் எலி என்று தற்போது நாயும் இணைந்து கொண்டுள்ளது...!
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

Page 2 of 15 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •