Page 2 of 59 FirstFirst 1 2 3 4 5 6 12 52 ... LastLast
Results 13 to 24 of 700

Thread: கவிச்சமர் - விமர்சனம்.

                  
   
   
 1. #13
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  37,420
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by stselvan View Post
  கவிதைக்கு வேறெதுவும் தேவையில்லை
  கண்களை மூடினேன்
  உன் திருமுகம்
  கவிதையாய்
  கவிதைக்கு
  கவிதையே
  நீ எப்பொழுதும் எனக்கு கவிதையே, உன் அன்பு கவிதை, உன் பாசம் கவிதை...அனைத்தும் கவிதையே..எல்லாம் அண்ணிக்குதானே!!!!  Quote Originally Posted by murthykmd View Post
  கவிதை எழுத
  காதலிக்க வேண்டுமாம்!
  நானும்
  காதலிக்கிறேன்
  என் கவிதையை!
  சூப்பர்ங்கோய். நச்சுனு இருக்கு ...நல்ல சிந்தனை. பலே  Quote Originally Posted by ஆதவா View Post
  கவிதையே எழுதி எழுதி
  காதல் தொலைத்துவிட்டேன்
  இப்போது
  காதல் எழுதி எழுதி
  எல்லாமே தொலைத்துவிட்டேன்.
  இதான் காதலின் முடிவுரையோ...அருமையாக இருக்குலே


  Quote Originally Posted by stselvan View Post
  தொலைத்துவிட்டேன்
  மனம் முதலில்
  மதி பிறகு
  நிம்மதி இறுதியாக
  அண்ணா,
  மனம் என்பது அந்த இருமனம் இணைந்த திருமணம்தனே!! ஹி ஹி வாழ்த்துக்கள்!!!!!!! எங்கே நிம்மதி அங்கே அண்ணாக்கு ஒரு இடம் வேணும்...  Quote Originally Posted by ஆதவா View Post
  இறுதியாக எழுதப்பட்ட
  இரு கவிதைகள்
  நம் மடியில் உறங்குகின்றன
  பால் மனம் மாறாமல்
  இது குழந்தைகளா!!! சபாஷ்.  Quote Originally Posted by murthykmd View Post
  இறுதியாகவும், உறுதியாகவும்
  சொன்னாள்,
  என்னை மறந்துவிடு என்று!
  இதயம் பறிபோனதென்னவோ
  எனக்குதான்!
  காதலில் இதயம் பறிப்போவது சகஜமப்போ.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 2. #14
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  37,420
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by stselvan View Post
  மாறாமல் இருந்து விடு
  நீயாவது
  மாறுவது
  உன்னாலாவது
  மாறிப் போகட்டும்
  சொல் விளையாட்டு தூள் அண்ணா.


  Quote Originally Posted by ஆதவா View Post
  போகட்டும் உன்னோடு
  இக்கவிதையின் துளிகள்...

  நீ அருகிலிருக்கும் தருணங்களில்
  எழுதி வடித்தது இவைகள்.
  நீ பிரிந்த நாள் முதல்
  கவிதை வரைவதற்கும்
  தூரிகைகள் சஞ்சலப்படுகிறதே!!
  அட என்ன அருமையான சிந்தனை!!!!! பலே


  Quote Originally Posted by stselvan View Post
  சஞ்சலப்படுகிறதே
  இளமனது
  இவள் மனது
  இதயத்தில்
  ஒரு தராசு
  பாசமும் காதலும்
  தட்டுக்கள் உயர்ந்து இறங்க
  உணவிறங்கவில்லை
  யாரின் இதயமும் இரங்கவில்லை
  கடைசியில் சாதித்தாள்
  அவளுக்கு ஆயிரம்
  இரங்கல் கவிதைகள்
  யாரின் இதயமும் இரங்கவில்லை

  கடைசி நாலு வரி பிரமாதம்  Quote Originally Posted by ஆதவா View Post
  கவிதைகள் புலப்படுகிறது
  கண்களின் மொழிமாற்றத்தில்
  காதல் புலப்படுகிறது
  இதயத்தின் ஒலிமாற்றத்தில்
  காமம் புலப்படுகிறது
  தேகத்தின் சுகமாற்றத்தில்
  சோகம் புலப்படுகிறது
  இவையனைத்தின் பரிமாற்றத்தில்
  மீண்டும் ஒரு வார்த்தை விளையாட்டு, மொழிமாற்றத்தில், ஒலிமாற்றத்தில், சுகமாற்றத்தில், பரிமாற்றத்தில்............தூள்
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 3. #15
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  37,420
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by stselvan View Post
  பரிமாற்றத்தில் தடுமாற்றம்
  இதயம் பரிமாறி
  இதயத்தில் இளைப்பாறி
  இதையும் அதையும்
  இடம்மாற்றி
  காதல்
  நல்லா இருக்குலே, இப்படிதான் காதல் ஆரம்பிக்குதா??


  Quote Originally Posted by ஆதவா View Post
  காதல்
  என்னை நோகடிக்கிறது
  இந்த பாழாய்ப் போன
  கவிதைகளை எழுதச் சொல்லி
  ஹி ஹி ஹி மீண்டும் ஒரு உண்மை.  Quote Originally Posted by stselvan View Post
  சொல்லிச் சென்றவளே
  சொல்லாமல் மயங்கும்
  இதயம் புரியுமா உனக்கு

  புகை வண்டியில் சன்னலோரத்தில்
  எட்டிப் பார்த்து
  கையசைக்கையில்
  ஆடிப் போனது என் மனது
  அடுத்த கோடை விடுமுறை வரை
  நினைவுகளைச் சுமந்து
  பிளாட்பார பெஞ்சுகளில்
  என் மனக் கீறல்கள்
  பதியப் படும்
  உன் பெயராக
  காதலின் பிரிவு மாபெரும் துயரமாம்....கல்யாணத்திற்க்கு பின் 3 மாதம் அம்மா வீட்டில் டேரா அடிச்சாலும் சந்தோஷமாம். (ஹி ஹி இடிக்குதா அண்ணா)


  Quote Originally Posted by ஆதவா View Post
  உன் பெயர் அந்த பட்டியலில்
  கண்டபோது துடித்துப் போனது
  உன்னைக் காதலித்த உள்ளம்.
  எப்படி?
  ஏன்?
  எனக்குத் தெரியாத வஞ்சம்.
  பாதகத்தில் ஒரு கலையாக...
  உன்னால் இழுத்துவரப்பட்டு
  காவல் அறையில்
  எனக்கான கேள்வி கேட்கப்பட்டது
  " அந்த பிராஸ்டியூட் உன் காதலியா?"
  அட ஆதவா,
  இந்த கவிதையை படித்து ஆடிவிட்டேன்.....உன் சிந்தனையே தனிதான்.... வாழ்த்துக்கள்.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 4. #16
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  37,420
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by stselvan View Post
  காதலியா மனைவியா
  நீ
  நான் இன்னும்
  மகிழ்ச்சியாய் இருக்கிறேனே
  கொடுத்து வச்ச மகாராசாதான். உண்மை காதல் என்றும் நிலைக்கும். அருமையான வரிகள்.


  Quote Originally Posted by மனோஜ் View Post
  இருக்கிறேனே என்று நீ நினைப்பாய்
  உண்மையில் நான் இல்லை உன்
  இதயம் தான் இங்கு இருக்கிறது
  பெண்னே நீ சென்றால் நான்
  இங்கில்லை இறைவனிடம்
  காதல் தோற்றால் இறைவனின் சன்னிதிதான் சரணேன்றால்.......வெகுவிரைவில் அங்கு!!!!


  Quote Originally Posted by ஓவியா View Post

  இறைவனிடம் கேட்டு கேட்டு
  சலித்து விட்டது என் முகவரியை

  இனி ஒருமுறை அவன்
  இல்லை என்று சொன்னால்
  கல்லறை மட்டுமே கதி.....இது நிஜம்.
  சும்மா சும்மாதான்.  Quote Originally Posted by sinnavan View Post
  இது நிஜமானால்
  உம் அன்பை விட்டு
  பிரியும் நெஞ்சங்கள் பல..
  இதுவே கனவானால்
  உம் அன்பில் திளைக்கும்
  நெஞ்சங்கள் பல...
  நல்ல ஊக்க மருந்து போல் அழகிய கவிதை . நன்றி சின்னவன்.


  Quote Originally Posted by ஆதவா View Post
  நெஞ்சங்கள் மறுக்கிறது
  கண்கள் அதைக் கண்டு
  அலறுகிறது
  என்ன செய்வேன் காதலியே
  உன் ஒருத்திக்காக
  என் இளமை வீண்படுவதா?
  அப்ப காத்திருக்க முடியாமல், காதலை கொன்று வேறு துணையை தேடுவது ஞாயமா கண்ணு???
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 5. #17
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  37,420
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by stselvan View Post
  வீண்படுவதா தடத்தோள்கள்
  வீண்படுவதா உரமேறிய கைகள்
  வீண்படுவதா வீரநெஞ்சம்
  வீண்படுவதா வெற்றித் திருமுகம்
  வா தலைவா
  வெற்றிக்க் கொடிகட்ட
  ;;;
  ;;;
  ''''
  என் கட்சியில்
  கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்கள்
  அரசியல் கவிதை அற்புதம். அந்த வீண்படுவதா ஒரு வார்தையை எப்படி கையாண்டு இருகின்றீர்கள்...பலே செல்வா.


  Quote Originally Posted by ஆதவா View Post
  மாட்டேனென்கிறார்கள்
  சிலர் மணம் முடிக்க..
  அவர்களுக்குத் தெரிவதுண்டா
  தாம்பத்தியம் அறுசுவையுணவு
  பிரம்மச்சரியம் கடும்நோன்பு
  ஆமாம் ஆதவா,
  முயலுக்கு 5 காலுனு சொல்லி நழுவறாங்களே!!!
  அங்கே கேட்டா தாம்பத்தியம் ரணம், பிரம்மச்சரியம் நிம்மதினு சொல்லறாங்க...என்ன பண்ண????  Quote Originally Posted by stselvan View Post
  கடும் நோன்பு
  விரத வீரியம்
  இல்லாவிட்டால்
  காதல் இவ்வளவு
  தெய்வீகமா?
  இதுவுஞ்சரிதான். நல்ல கருத்து அண்ணா..  Quote Originally Posted by ஆதவா View Post
  தெய்வீகமா காதல்
  என்று சந்தேகப்படுகிறாய்
  தெய்வம் தான் காதல்
  என்று சந்தோசப் படுகிறேன்
  எது உண்மை?
  மிகவும் அருமையான கவி வரிகள். சபாஷ். உண்மையிலே தெய்வம் தான் காதல்.....  Quote Originally Posted by stselvan View Post
  உண்மை
  உன்மேல் காதல் உண்மை

  பி.கு:
  பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்த்த
  நன்மை பயக்கும் எனின்.
  ஹி ஹி ஹி  Quote Originally Posted by ஆதவா View Post
  நான் என்செய்ய
  நுதலும் செவிகளும்
  நோண்டிய ஓர்புறமும்
  துஞ்சலைத் துலைத்துவிட்டு
  நெஞ்சதிடம் கரைத்தனவே
  வில்லுமோர் விழிகள்
  சொல்லுமோர் பாக்களில்

  ஊன் தவிர்க்கக் கண்டேன்
  உளமாறச் சொன்னேன்.
  நிந்தனை ஏதுமில்லை
  நிந்தனையே நினைக்குமடி
  மிகவும் அபாரம் இந்த கவிதை, வர்ணமிட்ட வரிகள் பிரமாதம். இரண்டு மூரை படித்துதான் பாத்தி விளங்கியது. நன்றி.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 6. #18
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  132,076
  Downloads
  47
  Uploads
  0
  கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்கள் செலவழித்து பாதிக்கும் மேற்பட்ட கவிதைகளுக்குப் பின்னூட்டமிட்ட ஓவியா அவர்களை எப்படி நின்று பாராட்ட?! வணங்குகிறேன் சகோதரி. உம் பணி தொடர்க.
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 7. #19
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  17 Nov 2006
  Location
  USA
  Posts
  149
  Post Thanks / Like
  iCash Credits
  5,053
  Downloads
  9
  Uploads
  1
  மன்னிகவும் தவறான இடத்தில் பதித்துவிட்டேன்.
  அதனால் நீக்குகின்றேன்
  Last edited by vijayan_t; 13-05-2007 at 01:33 AM.
  விஜயன்
  - கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன். அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
  உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கன்னா. இதை உணர்ந்துகொன்டேன் துன்பமெல்லாம் .........


 8. #20
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  132,076
  Downloads
  47
  Uploads
  0
  தாமரை செல்வன் கவிதைகள்

  பாவி யாகிப் போனேன் - நீ
  பாராது போனதாலே
  காவி யாகிப் போகும் - ஆடை
  கந்தலான மனமே
  ஆவி யிருகி அழுது - கண்ணீர்
  ஆறாகி வருமே
  தேவி எந்தன் ராகம் - உனைத்
  தேடித்தேடி அழுமே!


  அழகிய எதுகைகள். அழகிய கருத்தடங்கிய காதல் கவி.. செல்வன் அண்ணாவின் வேகத்தில் விளைந்த முத்து.

  பூட்டியதால் உன்னை இதயத்தில்
  பூத்ததே ஒரு காதல் பூ
  இருட்டிலும் மலரும்
  இனிமையாய் மணக்கும்
  உன் நினைவுகள்
  கண்கள் மூடி
  இதயம் திறந்து
  சிந்திக்கிறேன்
  பூட்டிய மனதில்
  முட்டிப் போராடிய நீ
  திறந்த இதயத்தில்
  அமர்ந்துவிட்டாய்


  மீண்டும் செல்வன் அண்ணாவின் கைங்கர்யம். பூட்டிய மனதில் முட்டமுடியாது திறந்த மனதில் அமர்ந்துகொல்லும்(ள்) காதலி... சபாஷ்

  காதலியிடம் என்ன கண்டாய்
  அம்மா குமுறினாள்
  அப்பா அடிக்க வந்தார்
  அக்காவும் அண்ணனும் பொருமித்
  தீர்த்தனர்
  ஆமாம்
  யார் இவர்கள்?


  காதலுக்கு முன் யார் இவர்கள் எல்லாம்/??? வேகத்தில் இப்படி எழுதமுடியுமா என்ற ஆச்சரியம்


  எதிரியாய் யாரோ
  என் திரியில் வருவாரோ
  உதிரியாய் இருந்தாலும்
  உறுதியாய் இருப்பாரோ
  கதிரும் பதரும்
  கல்லும் புல்லும்
  எதுவும் புரிபடாமல்
  ஆயிரம் கவிதைகள்
  தெளிக்கப்படுமோ


  நிமிட நேரத்தில் எழுதப்பட்ட கவிதை. அந்த நொடிக்குள் அடங்கிய கருத்து.. நீங்கள் சொன்னதுபோலத்தான் எதிரியாய் அல்ல எதிராக நானே இருந்தேன்.... ஹி ஹி பிரமாதம்

  வசனமாம் என் கவிதை
  வசவுகள் வந்தன
  விமர்சனமாக
  விஷமாக
  விமர்சனங்கள் போகட்டும்
  விசனங்கள் வேகட்டும்
  சொந்த சனங்கள்
  சொல்வதென்ன
  காதலா காவியமா?


  சிலர் சொல்வார்கள், இந்த கவிதை வசன நடையில் இருக்கிறது என்று... இருக்கட்டுமே.. அது கவிதை இல்லையா?.. அண்ணாவின் நொடிக்கவிதை மிகுந்த அர்த்தம் பொதிந்ததாகவே இருக்கிறது

  கவிதைக்கு வேறெதுவும் தேவையில்லை
  கண்களை மூடினேன்
  உன் திருமுகம்
  கவிதையாய்
  கவிதைக்கு
  கவிதையே


  மீண்டுமொரு காதல் கவிதை மிக அழகாய்.. கவிதை வரிகள் சூப்பர்... தொடர்க செல்வரே!

  தொலைத்துவிட்டேன்
  மனம் முதலில்
  மதி பிறகு
  நிம்மதி இறுதியாக


  நான்கு வரி நச்.. எல்லாம் நடப்பது காதலினாலே! ஆனால் காதல் என்ற வார்த்தை வராமல் எழுதப்பட்டதுதான் கவியின் சிறப்பே!

  மாறாமல் இருந்து விடு
  நீயாவது
  மாறுவது
  உன்னாலாவது
  மாறிப் போகட்டும்


  அழகிய தத்துவம்.. நீ மாறாமல் இரு. உன்னால் மாறுவது மாறட்டும்.. தூள்...

  சஞ்சலப்படுகிறதே
  இளமனது
  இவள் மனது
  இதயத்தில்
  ஒரு தராசு
  பாசமும் காதலும்
  தட்டுக்கள் உயர்ந்து இறங்க
  உணவிறங்கவில்லை
  யாரின் இதயமும் இரங்கவில்லை
  கடைசியில் சாதித்தாள்
  அவளுக்கு ஆயிரம்
  இரங்கல் கவிதைகள்


  காதலோடு போராடும் பெண்... எந்த ஒரு விஷயத்திலுமே பெண்தானே அடிபடுகிறாள். நல்ல கருத்து.. இந்தமாதிரியான விசயங்களில் யாரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்... பாசம் மிரட்டும், காதல் கட்டிப் போடும்...

  பரிமாற்றத்தில் தடுமாற்றம்
  இதயம் பரிமாறி
  இதயத்தில் இளைப்பாறி
  இதையும் அதையும்
  இடம்மாற்றி
  காதல்


  வார்த்தைகளை எப்படி அமைக்கவேண்டும் என்பதில் பாடம் கற்றூக் கொள்ளவேண்டும் போல.... அட போடவைக்கிறது.

  சொல்லிச் சென்றவளே
  சொல்லாமல் மயங்கும்
  இதயம் புரியுமா உனக்கு
  புகை வண்டியில் சன்னலோரத்தில்
  எட்டிப் பார்த்து
  கையசைக்கையில்
  ஆடிப் போனது என் மனது
  அடுத்த கோடை விடுமுறை வரை
  நினைவுகளைச் சுமந்து
  பிளாட்பார பெஞ்சுகளில்
  என் மனக் கீறல்கள்
  பதியப் படும்
  உன் பெயராக


  அழகிய உவமை.. நிகழ்வைப் போன்றதொரு உவமை.. இந்த கவிதையை விமர்சித்தாலே போதும். ஆற்றல் விளங்கிவிடும்

  காதலியா மனைவியா
  நீ
  நான் இன்னும்
  மகிழ்ச்சியாய் இருக்கிறேனே


  இரண்டுமில்லை அவளொரு தெய்வம் என்று சொல்லாமல் சொல்கிறார்...

  வீண்படுவதா தடத்தோள்கள்
  வீண்படுவதா உரமேறிய கைகள்
  வீண்படுவதா வீரநெஞ்சம்
  வீண்படுவதா வெற்றித் திருமுகம்
  வா தலைவா
  வெற்றிக்க் கொடிகட்ட
  ;;;
  ;;;
  ''''

  என் கட்சியில்
  கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்கள்


  சமூக நோட்டத்தில் சமரில் ஒரு கவிதை இந்த சம்மரில்... ஹி ஹி.. அந்த கேப் தேவைன்னு சிலமுறை படிச்சதும் புரிஞ்சுபோச்சு.. கலக்குங்க தலை.
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 9. #21
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  132,076
  Downloads
  47
  Uploads
  0
  தாமரை செல்வன் கவிதைகள் தொடர்ச்சி

  நினைக்குமடி ஊர்
  ரோஜாக்களைப் பறித்து
  மந்திரிகளை வரவேற்க
  யானைகளின் கால்களில்
  சிதறவிடும் ஊர்..
  பூக்கள் நசுங்கின
  நாமும் நசுங்கினோம்
  யானையும் மணியோசையும்
  மந்திரிகளின் அடிபொடிகளும்
  முடிந்தவரை காலி செய்ய
  ஊர் மட்டும் மயானமாய்
  அன்று
  நினைக்குமடி ஊர்..


  உவமைகளைப் பாருங்கள்... இருந்தாலும் சற்று விளங்கவில்லை எனக்கு. விளக்கினால் நலம்... ஆனால் கவிதை வெகு சூப்பர்... வாழ்த்துக்கள்

  வாழ்வதெப்படி
  நூல் எழுதியவர்
  பணம் சம்பாதித்தார்
  வாழ்ந்து விட்டார்

  ஹி ஹி... அருமை அருமை... பணம் சம்பாதிக்க என்ன வழியென்று யோசித்து அதை யோசித்ததோடு நில்லாமல் யோசித்ததை புத்தகமாய் போட்டு...... (சே ஒன்னு சொல்ல மிக எளிதான வழி கவிதை என்பது தெரிகிறதா?) சூப்பர் கவிதை..

  மரியாதை
  கம்பீரமாய் வெளியில்
  தலை நிமிர்ந்து சென்றார்

  கிணற்றடியில்
  அவள் அழ
  அந்த கிணற்று நீர்
  உப்பானது.


  சே!! அண்ணாவிடம் செயிக்க இன்னொருவர் பிறக்கனும்... கிணற்றில் கண்ணீர் பட்டு உப்பாகிறதாம்... என்னே ஒரு கற்பனை..

  ஆயுள் தண்டனை அல்ல
  ஆயில் தண்டனை..
  ஆயுசு முழுதும்
  நியாய விலைக் கடையில்
  எண்ணை வாங்க
  கியூவில் நிற்கக் கடவது..


  இதைப்பற்றி ஷீ-நிசி சொல்லியிருக்கிறார்.. நிமிடத்தில் எப்படி இப்படி ஒரு கவிதை வந்தது? ம்ம்ம்... குறையேதுமில்லை கண்ணா...

  அறுக்க வேண்டுமாம்
  எழுதச் சொன்னார்கள்
  கவிதை
  என்னை


  ஹி ஹி. சிரித்தே விட்டேன்.. அறுப்பதற்குத்தானா கவிதை?

  தொலைந்துவிட்டது
  எனத் தேடிய இதயம்
  என் அருகிலே
  என்னை
  இதயமில்லாதவன் என
  திட்டிக்கொண்டே


  சூப்பரப்பு... தொலைந்துப்போய் தேடிக்கொண்டிருந்தால் அந்த இதயம் அருகில்.... ஹ் ஹி இதயமில்லாதவன் என்று திட்டிக் கொண்டு... சான்ஸே இல்லை.. உங்களை அடிக்க ஆள் இல்லை...

  குணப்பட்டுத்து
  உன்பார்வை துளைத்த காயத்தை
  நீயே குணப்படுத்து
  உதடுகளால்
  உன் எச்சில் மருந்திட்டு


  எச்சிலுக்கு எவ்வளவு பவர்!! உண்மையைத்தான் சொல்கிறேன்.. அனுபவிக்காமல்....

  பத்திரமா கண்மணி
  பார்த்துக் கொள் உடம்பை
  பத்திரத்தில் கையொப்பம் இடவேண்டும்
  அது வரை
  பத்திரம்


  ஹி ஹி ரகம்..

  மற்றவர்களுடையதும், செல்வன் கவிதைகள் மற்றவைகளும் பின்னர் விமர்சிக்கப் படும்...
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 10. #22
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  13 Apr 2007
  Location
  ஆஸ்திரேலியா
  Posts
  4,327
  Post Thanks / Like
  iCash Credits
  5,163
  Downloads
  3
  Uploads
  0
  இந்த கவிதையை ஆரம்பித்த பெருமை மட்டுமே என்னைச்சாரும் , அதை சிறப்பாக கொண்டு சொல்லும் உங்களுக்கே முழு பெருமையும் சேரும் ஆரம்பித்து 36 மணித்தியாலத்திற்க்குள் 300பின்னூட்டஙக்ளை அக்டந்து விட்டது 300 கவைதைகளுக்கு மேல் எழுதப்பட்டது, உண்மையாகவே இப்படிப்பட்ட கவிதகளில் தான் ஒரு கவிஞனின் முழு திறனையும் அறிய முடியும் கண்ணிமைக்கும் நேரத்தில் அழகான கவி வடிப்பது இலகுவான காரியமன்று, எல்லா கவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் கை வண்ணத்தை காட்டுங்கள் மன்றத்தில்
  விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

 11. #23
  இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
  Join Date
  31 Mar 2007
  Location
  கும்பகோணம்
  Posts
  738
  Post Thanks / Like
  iCash Credits
  5,152
  Downloads
  77
  Uploads
  2
  ஒவ்வொரு கவிதைக்கும் பின்னூட்டமிட்ட ஓவியாவின் பணியை என்னவென்று பாராட்டுவது. முதலில் அவர்க்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய............... நன்றி சொல்லியாக வேண்டியது நமது கடமையல்லவா. பிறகு ஆதவனின் கவிதை பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

  உங்கள் பணி சிறப்பாக தொடர எல்லோர் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  நன்றி ஆதவா, ஓவியா.

 12. #24
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  80,871
  Downloads
  97
  Uploads
  2
  கவிச் சமரில் வெல்ல முடியாத போராளியாக சொல்லெனும் கணைகளுடன் வெற்றி சங்கொலிக்கும் செல்வன் அண்ணாவைச் சமாளிக்கவே முடியுதில்லையே.

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

Page 2 of 59 FirstFirst 1 2 3 4 5 6 12 52 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •