Page 455 of 555 FirstFirst ... 355 405 445 451 452 453 454 455 456 457 458 459 465 505 ... LastLast
Results 5,449 to 5,460 of 6650

Thread: கவிச்சமர்

                  
   
   
  1. #5449
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    தொலைந்து போனேன்
    தடம் தெரியா பாதையில்
    திக்குத் தெரியாத திசையில்
    நீ விட்டுச் சென்ற
    என் நினைவுகளை மட்டும்
    சுமந்த படி..
    பூமனம் வாட
    வாடைக் காற்றில்
    செல்லும் சருகாக
    நான்..!

    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #5450
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    நான் தொலைந்த
    கணங்கள்...
    நீ என்னைத் துரத்திய
    கணங்களை சமன் செய்ய,

    கணக்காய்ப் போனது
    வாழ்க்கை...
    விடைகிட்டும்
    காலம் முடியக்கூடும்
    கணக்கு...
    Last edited by யவனிகா; 18-02-2008 at 06:06 AM.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  3. #5451
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கணக்கு முடியக்கூடும்
    வேண்டிய விடை
    வரவில்லையென்றாலும்...
    முடிந்த கணக்கு
    மதிப்பிடப்படும்...
    விடையை வைத்தல்ல
    விடை கொண்டுவர
    முனைந்த முயற்சிகளை வைத்து!
    கணக்குகள் கணிக்கப்படுகின்றன
    விடை தேடும் முயற்சிகளை
    மதிப்பில் கொண்டு!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #5452
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    கொண்டு வர
    முயற்சிக்கிறேன்
    சரியான விடையை...
    இன்னும்
    விடைகாணவேண்டிய
    எளிமையான கணக்குகள்
    காத்திருக்கும் போது...
    ஒற்றைக்கணக்குக்காய்
    உயிரின் ஊசலாட்டம்
    தேவையற்ற திண்டாட்டமோ?
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  5. #5453
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    திண்டாட்டமோ......?
    தெளிவில்லா முடிவையெண்ணி...
    மயக்கநிலை மனதுக்கு
    தயக்கங்கள் தடையே...
    வலுவான செயற்பாடு
    நிலையான முடிவடையும்!
    உடைபட்ட தயக்கங்கள்
    அடைபட்ட வழி திறக்கும்!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #5454
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    திறந்திருக்கும் ஜன்னல் கதவு...
    கம்பி வலைக்கு அப்பால்
    ஜன்னல் திண்டில் அமர்ந்தவாறு
    காதல் செய்யும்
    ஜோடிப்புறாக்கள்...
    மௌனமொழி பேசிக்கொண்டு...

    வீடு அடைத்துப் புறப்பட்டாக வேண்டும்...
    ஜன்னல் அடைக்க மனமில்லை...
    விரியத் திறந்திருக்கட்டும்...

    கொஞ்சமேனும் புழுக்கம்
    குறையக் கூடும்
    வீட்டுடன் சேர்த்து என் மனதிலும்...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  7. #5455
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    மனதில் ஆயிரம்
    பாரங்கள்..
    விடியவில்லை இன்னும்
    புறப்பட்டுவிட்டேன்
    இரவில்
    பாதையின் முடிவில்
    எங்காவது ஓர் ஓரத்தில்
    விடியல் தென்படாதா
    என்ற நப்பாசையில்

    தூரம் போனாலாவது
    அந்தகாரம் போகாதா?

  8. #5456
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    என் மனதிலும்
    இப்படியான எண்ணங்கள்
    எப்போதாவது எழுவதுண்டு
    திரும்ப வந்து...
    பறவைக் கழிவின் வீச்சம்
    நுகர நேர்கையில்....
    ஜன்னலடைக்காது போனதை எண்ணி
    என்னை நானே நொந்து கொள்கிறேன்!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #5457
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    போகாதா
    என்று எண்ணித்தான்
    விரட்டிப் பார்க்கிறேன்
    போவது
    தூரமாக இருக்கட்டும்
    பாரமாக இருக்க வேண்டாம்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #5458
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அந்தகாரம் போகாதா
    ஆதவக் கதிர் தோன்றாதா
    ஏக்கங்களை ஏந்திக்கொண்டு
    ஏகாந்தத்தை அடைந்து விட்டேன்
    எங்கு நோக்கினும் இருளே
    எனக்கு மட்டுமா...ஏனையோருக்குமா..
    எல்லோருக்கும் இல்லாதிருக்கும்
    விடியலின் வெளிச்சம் மெள்ள
    விழிகளுக்கு புலப்படுகிறது
    பூமியின் ஓரத்தில் ஒரு ஒளிக்கீற்று
    சாமியின் வரமாய் வெளி வருகிறது...
    பாதை தெரிந்துவிட்டது...இனி
    பயணம் எனதாகிவிட்டது!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #5459
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    எனதாகி விட்டது...
    நீ விட்டுச் சென்ற
    மூக்குக் கண்ணாடியும்
    புத்தகங்களும்...
    கூடவே கனக்கும்
    உன் நினைவுகளும்...

    என்றாவது ஒருநாள்
    உன்னைக் காணும்
    அந்த நிமிடத்திற்கு
    காத்திருக்கிறேன்...

    உன் பொருட்களை
    உன்னிடம் தந்து
    தப்பித்துப் போக...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  12. #5460
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தப்பித்துப் போகத்தான்
    எத்தனிக்கிறது எல்லா ஆன்மாவும்
    விட்டுப்போக வழியிருந்தும்
    அற்றுபோகா ஆசை தீர்க்க
    மற்றுமோர் உடல்தேடி
    வெற்று உருவில்
    வெறியோடு அலைகிறது!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 455 of 555 FirstFirst ... 355 405 445 451 452 453 454 455 456 457 458 459 465 505 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 2 users browsing this thread. (0 members and 2 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •