Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 56

Thread: லண்டனில் ஒருநாள் - பகுதி 2

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    லண்டனில் ஒருநாள் - பகுதி 2

    (விமான நிலையம் டூ அக்கா வூடு)

    மெதுவா விமானம் கெளம்பிருச்சு.. மொதமுறையா ஆதவன் பறக்கறான்... எனக்கு ஒரே குதூகலம். என் சீட்டுக்கு முன்னாடி ஒரு திரை இருந்துச்சு. அதுல படம் பாத்துக்கலாம்னு சொன்னாங்க.. இதைவிடக் கொடுமை ஒன்னு சொல்றேன். நீங்க நம்ப மாட்டீங்க.. எனக்கு பக்கத்திலயே ஒரு பொண்ணு உக்காந்துருச்சி. அடடா.. இதுதாண்டா சான்ஸ் னு விசாரிச்சேன்.

    " ஹாய்!" அப்படீன்னேன். அவளும் பதிலுக்கு

    " ஹாய் " என்றாள்.

    " எங்க போறீங்க?"

    " லண்டேன். யூ?"

    " நானும் லண்டன் தான். ஊரைச் சுத்திப்பாக்க டிக்கெட் கெடச்சுது. அதான் போய்ட்டு இருக்கேன். "

    " ஐ சி."

    கொஞ்ச நேரமா எதுவுமே பேசாம அந்த பொண்ணு ஏதோ ஆங்கில புத்தகம் படிச்சுக்கிட்டு இருந்திச்சு. எனக்கு பொறுமை இல்லை. திரும்பவும் கூப்பிட்டேன்

    " எக்ஸ்க்யூஸ்மீ. உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?"

    " சித்ரா,. யூ?"

    " ஆதவன்."

    " நைஸ் நேம். என்ன பண்ணீட்டு இருக்கே?"

    " தோ உங்க கூட பேசிட்டு இருக்கேன்.."

    " ஓ மேன். என்ன ஒர்க் பண்றே?"

    " பேசிட்டு இருக்கற ஒர்க் பண்றேன்,."

    "ஷிட்.. உன்னோட பிஸினஸ் என்ன?"

    " ஓ டெக்ஸ்டைல் டிசைனிங். ஐம் த ஓனர் ஆப் தெ கிரேட் டிசைனிங்க் கம்பெனி இன் திருப்பூர்,..."

    " ரியலி..."

    " ஆமாம் சுண்டெலி.."

    இப்படியே போய்ட்டு கடைசியில விட்டேன் பாருங்க.... எனக்கு கவிதை எழுதத் தெரியும்னு.... அந்த பொண்ணுக்கு கவிதைன்னா உசிரு போல. உடனே ஒரு கவிதை எழுதுன்னு பேனாவை நீட்டினா. நானும் எழுதி காமிச்சேன்.. அந்த பொண்ணு மிரண்டுட்டா.... சூப்பர்ப் சூப்ப்ர்ப் எக்ஸலண்ட் அப்படீன்னு ரொம்ப்ப பாராட்டீட்டு கடைசியில இதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டா பாருங்க... அப்படியே நொந்து போய்ட்டேன்.. இப்படியே நல்லா கடலை போட்டுட்டு தூங்கிட்டேன்..

    முழிச்சுப்பார்த்தா, லண்டன் நெருங்கிட்டதா அனவுன்ஸ் பண்ணாங்க.. எனக்கு கனவு வேற... லண்டன்ல முகம் தெரியாத ஓவியாக்கா கூட்டிட்டு போய் சுத்தறமாதிரி கனவு.. அப்படியே களைச்சுப் போய் எழுந்து படிக்கட்டுல நடந்து வந்தா, என்னை வரவேற்கறதுக்கு ஓவியா அக்கா வந்திருந்தாங்க. ஆனா அவுங்க முகத்தை நான் பார்த்ததே இல்லையே! இருந்தாலும் கண்டுபிடிச்சேன்... எப்படீன்னு நினைக்கிறீங்களா?

    சிவப்புக்கலர்ல சேலை கட்டிட்டு ஒரு ஓரமா சோகமா நின்னுட்டு இருந்தாங்க ஒரு பொண்ணு. முகம் இந்தியா முகம் அப்படியே இருந்தது. இவுங்க தான் ஓவியான்னு முடிவு பண்ணி ஹலோ ஓவி அக்கா. அப்படீன்னு கேட்டேன்... பேந்த பேந்த முழிச்சாங்க.. அய்யய்யோ அப்ப ஓவியா வரலையான்னு பயந்துபோய்ட்டேன்.. நல்லவேளை அவுங்க தமிழ்தான்... ஹி ஹி பேரு மணிமேகலைன்னு சொன்னாங்க.. எங்கயோ கேள்விபட்டமாதிரி இருக்கே...

    ஓவியா வந்துருவாங்க கொஞ்சநேரம் வெயிட் பண்ணுங்க ஆதவன் அப்டீன்னாங்க. சரின்னு ஒரு சேர்ல உக்காந்திட்டு இருந்தேன். திடீர்னு வந்து நின்னாங்க ஓவியா... கையில பொக்கே யோட.. அப்பத்தான் அக்காவை நேர்ல பார்க்கறேன்.

    நல்ல வட்டமான முகம். சாந்து பொட்டு. கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டிருந்தாங்க.. முடியை பின்னாம அப்படியே தொங்கவிட்டு இருந்தாங்க. நல்ல நிறம். பச்சைக் கலர்ல சேலை கட்டி இருந்தாங்க,.. அந்த முகத்தைப் பார்க்கனுமே... அப்படி ஒரு பொலிவு.. ஏதோ வறுமையில அடிபட்டவன் கூட சந்தோசப்படவைக்கும் முகம்.. குரல் ரொம்ப மிருதுவா இருந்தது... (டேய் டேய் ரொம்ப கதை உடாதே!!) பொக்கே எல்லாம் வாங்கி பழக்கமில்லை. இருந்தாலும் சும்மா வாங்கி இடுக்குல வச்சுகிட்டேன்.. போலாமா னு இரண்டு பேரும் கேட்டாங்க, சரி அக்கா அப்படீன்னு ஒரு பயபக்தியோட சொன்னேன்.. பின்னே.. எம்மாம் பெரியவங்க... நம்மள வரவேற்க நிற்கறாங்கன்னா சும்மாவா?

    லண்டன் விமான நிலையம் பேரு ஹெத்ரூ ஏர்போர்ட். உலகத்திலயே பிஸியான ஏர்போர்ட்டாமாம்... ஓவி அக்காதான் சொன்னாங்க.. பின்ன நம்ம ஊர் மாதிரியா? ஈ காக்கா ஓட்டிகிட்டு.... விமான நிலையத்து விட்டு வெளியே வந்தும் அதே வெப்பம்... சரியான அளவில் குளிர் இருந்தது. டாக்ஸியை கூப்பிட்டாங்க.. ஏதோ தஸ்புஸ்னு பேசி என்னை உள்ளார உக்காரவெச்சுட்டாங்க. லண்டன் டாக்ஸி நம்ம ஊருமாதிரி கருப்பு கலர் இல்லை. சுத்தமா மஞ்ச கலர். மேல லைட் இருந்தது.. டாக்ஸி ஓட்டினது ஒரு பொண்ணு.. ஹி ஹி ரொம்ப அழகா இருந்தது.. எனக்கு மட்டும் இங்கிலீசு கொஞ்சம் நல்லா தெரிஞ்சிருந்தா ஹி ஹி அந்த பொண்ன செட் பண்ணியிருப்பேன்... லண்டன் வீதிகள்லாம் அதிசுத்தமா இருந்தது. நிறைய இடத்தில பச்சை கலர்ல சிக்னல் போர்ட் வெச்சுருந்தாங்க. மாளிகைகள்லாம் பாக்கரதுக்கு அதி சூப்பரா இருந்துச்சு. ஆனா ஒன்னு சொல்றேனுங்க... லண்டன சுத்திப் பாக்க ஒருநாள் நிச்சயம் பத்தாது.. அதுலயும் என்னை மாதிரி ஆளுங்களுக்கு பத்து பதினஞ்சு நாள் வேணும்.. சரி வேறவழி. ஓசியில சுத்தறோம்ல... அதெல்லாம் நினைச்சு பார்க்க முடியுமா...

    டாக்ஸி நேரா ஓவியாக்கா வீட்டுக்கு போச்சு. சும்மா சொல்லக்கூடாதுங்க... ஓவியாக்கா பெரும் பணக்காரிதான்.. ரொம்ப பெரிய வீட்ல இருக்காங்க. ம்..... ஆனா ஏர்போர்ட்ல இருந்து இவங்க வீட்டு வந்துசேரதுக்குள்ள போதும்போதும்னு ஆயிருச்சு. எங்கயோ ஒரு மூலைல இருக்குங்க இவங்க வீடு... உள்ளே போனேன்... ஹி ஹி வலது கால வெச்சு... பின்னே.. எது பண்ணாலும் யோசிச்சு பண்ணுவோம்ல... அதுசரி.. இது வரைக்கும் ஓவியாக்கா சும்மாதான் இருந்தாங்க.. அப்பறம்தானே ஆட்டமே!!

    தொடரும்..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    அப்பாய்.....லண்டன் உண்மையாவே போனியா? போட்டோவக் காட்ட மாட்டேங்குறயே. இது நியாயமா?

    அந்தச் சின்னத்திரையில என்ன படம் போட்டாங்கன்னு பாக்கலையா? அநேகமா தமிழ்ப்படம் ஒன்னு போட்டிருப்பாங்க.

    ஏர்ப்போர்ட்டிலிருந்து டிரெயின் இருந்திருக்குமே. பிறகெதுக்கு டாக்சி. ஏனென்றால் ஐரோப்பாவில் டாக்சி ரொம்ப விலை.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    நானும் ஓவியாவும் சந்தித்த கதையை கேட்கலியா? ஓவியா கதை கதையா சொல்லுவாங்களே!!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    போட்டா பிற்பாடு விடப்படும்.... சின்னத்திரையில் நாமே என்ன படம் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். ஆனா நாந்தான் கடலை போட்டுட்டு தூங்கிட்டேனே.

    முதல்ல எனக்கும் ரயில்ல போகணும்னு தான் ஆசை. அதிலயும் பாதாள ரயில் வேற... இதுவரைக்கும் போனதில்லை... அன்றியும் போனேன்.. அதைப் பற்றிய விபரங்கள் பின் வரும்.....

    என்னவோ தெரியல.. பிரைவேசி விரும்பனாங்க போல./.. டாக்ஸியில தான் கூட்டிட்டு போனாங்க.... எனக்கும் தெருவெல்லா பாத்தமாதிரி ஆச்சு...
    -------------------------------
    ஓ!!! ஓவியா அவர்கள் சொல்லவே இல்லையே! சரி சரி... இன்னொருநாள் லண்டனுக்கு இலவச டிக்கெட் கிடைச்சா நிச்சயம் கேட்டுக்குவேன்...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    ஹ்ம்ம்.. பேராசை பெரியசாமி !! நன்றாகவே செல்கிறது பதிவு.. மொத்தம் எத்தனை அநியாயம்பா ...ஓ சாரி..அத்தியாயம்பா.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அநியாயங்களும் அத்தியாயங்களும் நிறைய இருங்குங்க,..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by ஆதவா View Post
    இதைவிடக் கொடுமை ஒன்னு சொல்றேன். நீங்க நம்ப மாட்டீங்க.. எனக்கு பக்கத்திலயே ஒரு பொண்ணு உக்காந்துருச்சி.
    பழக்கதோஷம் விட்டிருக்காதே?

    Quote Originally Posted by ஆதவா View Post
    " ஹாய்!" அப்படீன்னேன். அவளும் பதிலுக்கு
    " ஹாய் " என்றாள்.
    " எங்க போறீங்க?"
    " லண்டேன். யூ?"
    " நானும் லண்டன் தான். ஊரைச் சுத்திப்பாக்க டிக்கெட் கெடச்சுது. அதான் போய்ட்டு இருக்கேன். "
    " ஐ சி."
    அது தானே பார்த்தேன். ஆதவனாவது விடுறதாவது.
    ஏன் 15/3 டிக்கட் என சொல்லவில்லையா?

    Quote Originally Posted by ஆதவா View Post
    கொஞ்ச நேரமா எதுவுமே பேசாம அந்த பொண்ணு ஏதோ ஆங்கில புத்தகம் படிச்சுக்கிட்டு இருந்திச்சு. எனக்கு பொறுமை இல்லை. திரும்பவும் கூப்பிட்டேன்
    எப்படி பொறுமை வரும். ஆண்டவன் வந்து எழும்பி வா நான் உனக்கு 1 கோடி அமெரிக்க டொலர் தாறன் என்று சொன்னாலும் எழும்பியிருப்பீர்களா?

    Quote Originally Posted by ஆதவா View Post
    " எக்ஸ்க்யூஸ்மீ. உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?"
    " சித்ரா,. யூ?"
    " ஆதவன்."
    " நைஸ் நேம். என்ன பண்ணீட்டு இருக்கே?"
    " தோ உங்க கூட பேசிட்டு இருக்கேன்.."
    " ஓ மேன். என்ன ஒர்க் பண்றே?"
    " பேசிட்டு இருக்கற ஒர்க் பண்றேன்,."
    "ஷிட்.. உன்னோட பிஸினஸ் என்ன?"
    " ஓ டெக்ஸ்டைல் டிசைனிங். ஐம் த ஓனர் ஆப் தெ கிரேட் டிசைனிங்க் கம்பெனி இன் திருப்பூர்,..."
    " ரியலி..."
    " ஆமாம் சுண்டெலி.."
    கடலை போடல் ஸ்டார்ட்டட். ஆமா உண்மையில சுண்டெலி சொன்னீங்களா? நம்பமுடியவில்லை...

    Quote Originally Posted by ஆதவா View Post
    கடைசியில இதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டா பாருங்க... அப்படியே நொந்து போய்ட்டேன்
    அந்தப்பொண்ணுக்குமா? உண்மையிலே கொடுமைதான்.


    Quote Originally Posted by ஆதவா View Post
    முழிச்சுப்பார்த்தா, லண்டன் நெருங்கிட்டதா அனவுன்ஸ் பண்ணாங்க.. எனக்கு கனவு வேற...
    முளிச்சா..? நீங்களா... இன்னமும் கனவை விட்டெழும்பவே இல்ல.

    Quote Originally Posted by ஆதவா View Post
    லண்டன்ல முகம் தெரியாத ஓவியாக்கா கூட்டிட்டு போய் சுத்தறமாதிரி கனவு..
    இது மட்டும் உண்மை.

    Quote Originally Posted by ஆதவா View Post
    அப்படியே களைச்சுப் போய் எழுந்து படிக்கட்டுல நடந்து வந்தா,
    பொறுங்க பொறுங்க. களைப்பா... விமானத்தில இருந்தா? அல்லது கடலை போட்டா?

    Quote Originally Posted by ஆதவா View Post
    சிவப்புக்கலர்ல சேலை கட்டிட்டு ஒரு ஓரமா சோகமா நின்னுட்டு இருந்தாங்க ஒரு பொண்ணு. முகம் இந்தியா முகம் அப்படியே இருந்தது.
    இப்படியா?

    Quote Originally Posted by ஆதவா View Post
    இவுங்க தான் ஓவியான்னு முடிவு பண்ணி ஹலோ ஓவி அக்கா. அப்படீன்னு கேட்டேன்... பேந்த பேந்த முழிச்சாங்க..


    Quote Originally Posted by ஆதவா View Post
    ஓவியா வந்துருவாங்க கொஞ்சநேரம் வெயிட் பண்ணுங்க ஆதவன் அப்டீன்னாங்க. சரின்னு ஒரு சேர்ல உக்காந்திட்டு இருந்தேன். திடீர்னு வந்து நின்னாங்க ஓவியா... கையில பொக்கே யோட.. அப்பத்தான் அக்காவை நேர்ல பார்க்கறேன். நல்ல வட்டமான முகம். சாந்து பொட்டு. கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டிருந்தாங்க..
    இதில ஏதாச்சும் கவித சொல்லலாமே...

    நல்லா கதவுடுறீங்க.. ச்சீ... நல்லா உங்க சுவையான சம்பவத்தை பகிர்ந்தீங்க. நிஜமாகவே நன்றாக இருந்தது.

    தொடருங்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அட..அட..
    நல்லாருக்குங்க உங்க பயண அனுபவம்..
    ஹ்ம்ம்..
    ஓவியாக்காவை பாக்குற வாய்ப்பு உங்களுக்கு இவ்ளோ சீக்கிரமே கிடச்சுடுச்சே...

    செல்வர் கூட ஓவியாக்காவை பார்த்தை சொல்லவில்லை..!

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    பழக்கதோஷம் விட்டிருக்காதே?

    ஹி ஹி... என்னைப் பத்தி கரேட்டா தெரிஞ்சு வச்சுருக்கீங்க... சபாஷ்..


    அது தானே பார்த்தேன். ஆதவனாவது விடுறதாவது.
    ஏன் 15/3 டிக்கட் என சொல்லவில்லையா?

    இதென்ன 15/3 டிக்கெட். அந்த நேரத்தில அதெல்லாம் ஞாபகம் இல்லீங்க அன்பு..

    எப்படி பொறுமை வரும். ஆண்டவன் வந்து எழும்பி வா நான் உனக்கு 1 கோடி அமெரிக்க டொலர் தாறன் என்று சொன்னாலும் எழும்பியிருப்பீர்களா?

    ஆமாமா.... சரியா சொன்னீங்க...


    கடலை போடல் ஸ்டார்ட்டட். ஆமா உண்மையில சுண்டெலி சொன்னீங்களா? நம்பமுடியவில்லை...

    ஹி ஹி... கொஞ்சம் அடக்கி சொன்னேன்.. அந்த பொண்ணோட காதுல விழுந்திருக்காதுன்னு நினைக்கிறேன்.


    அந்தப்பொண்ணுக்குமா? உண்மையிலே கொடுமைதான்.

    என்ன பண்றது ரசிகரே! இதுக்குத்தான் ரொம்ப தற்பெருமை பேசக்கூடாதுங்கறது.... அந்த இடத்திலதான் நான் மாட்டீட்டேன்


    முளிச்சா..? நீங்களா... இன்னமும் கனவை விட்டெழும்பவே இல்ல.

    கனவுல கண்டது சொன்னா நிஜத்தைச் சொன்னதுமாதிரியே ஆயிடும்னு தான் சொல்லவே இல்லை... ஆனா உண்மையிலேயே வருத்தப்பட்டேன்.. பக்கத்தில அந்த பொண்ண வெச்சுகிட்டு அவ்ளோ நேரம் தூங்கிட்டு இருந்திருக்கேன்...


    பொறுங்க பொறுங்க. களைப்பா... விமானத்தில இருந்தா? அல்லது கடலை போட்டா?

    இரண்டும்தான்


    இப்படியா?








    இதில ஏதாச்சும் கவித சொல்லலாமே...

    ஏற்கனவே கவிதை சொல்லி அந்த பொண்ணுகிட்ட வாங்கிகட்டிட்டது பத்தாதுங்களா?

    நல்லா கதவுடுறீங்க.. ச்சீ... நல்லா உங்க சுவையான சம்பவத்தை பகிர்ந்தீங்க. நிஜமாகவே நன்றாக இருந்தது.

    எவ்ளோ கஷ்டப்பட்டு எழுதினா நீங்க சாதாரணமா கதை உடறதா சொல்றீங்க ... .. ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்.

    கதையைப் பிரிச்சு விமர்சனம் செய்த முதல் ஆளே நீர்தான்... வந்தனம்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by Rajeshkumar View Post
    அட..அட..
    நல்லாருக்குங்க உங்க பயண அனுபவம்..
    ஹ்ம்ம்..
    ஓவியாக்காவை பாக்குற வாய்ப்பு உங்களுக்கு இவ்ளோ சீக்கிரமே கிடச்சுடுச்சே...

    செல்வர் கூட ஓவியாக்காவை பார்த்தை சொல்லவில்லை..!
    நன்றிங்க மதி... நம்ம மன்றத்தில இன்னும் சிலரைப் பார்த்திட்டேனா போதும்.. நிறையபேரை பார்த்த முதல் ஆளுன்னு பேரு கிடைக்கும்... ஏற்கனவே அறிஞரைப் பார்த்தேன்... இன்னும் இருக்காங்க... அது அடுத்த மாசம் சொல்றேன்...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #11
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    எல்லாம் ஒரு அன்புதான் ஆதவா.. எல்லாரிடமும் ஷேஷ்டைகள் புரியமுடியாதே...
    உண்மையில் கதை அருமை.
    15/3 = O/C. (15, 3வது ஆங்கில எழுத்துக்களை சேருங்கள். அதாவது இலவசம்)
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    மனோ!! இந்த விஷயத்தை மதுகிட்ட கேட்டேன்... ஹி ஹி ஹி.. மனோக்கு அனுப்பவேண்டிய டிக்கெட்ட் கொஞ்சம் மாறுதலா உனக்கு வந்துருச்சு... சமாளின்னுட்டாரு.. இதுக்குத்தான்.. ஒம்பது மணிவரைக்கும் தூங்கன்னும்கிறது....
    என் வாய்ப்பை நீங்கள் பயன்டுத்தி விட்டதால் இந்த கதையில் நான் எங்காவத ஒரு இடத்தில் வரவேன்டும் ஆமா
    இல்லனா சட்டபடி நடவடிக்கை எடுக்கபடும்
    Last edited by மனோஜ்; 10-05-2007 at 11:25 AM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •