Results 1 to 6 of 6

Thread: ஒரு ஜப்பானியக் கதை

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    09 Apr 2007
    Posts
    23
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    0
    Uploads
    0

    ஒரு ஜப்பானியக் கதை

    ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை,குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான்.

    அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான்.

    தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது.

    அவன் பணக்காரனாகி விட்டான். பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.

    தெய்வமே என்னை அரசனாக்கக் கூடாதா? என்று வேண்டினான். தெய்வமும் "அவ் வண்ணமே ஆவாய்" என்றது.

    அவன் அரசனாகி விட்டான். முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் தேரில் ஊர்வலம் போனான்.
    அப்போது கடுமையான வெயிலடித்தது. அவன் வெயிலின் கொடுமையால் வெந்து புழுங்கினான். அவன் "தெய்வமே அரசனை விட சூரியனே அதிக சக்தி படைத்ததாகத் தெரிகிறது. எனவே நீ என்னை சூரியனாக்கிவிடு" என்றான். தெய்வமும் "அவ்வண்ணமே ஆகுக" என்றது.

    அவன் சூரியனாகி எல்லோரையும் சுட்டான். அப்போது ஒரு மேகம் அவனுக்கும் பூமிக்கும் இடையில் வந்தது. அதனால் பூமியில் உள்ளவர்களைச் அவனால் சுட முடியவில்லை. "தெய்வமே மேகம் சூரியனின் கதிர்களையே தடுக்கக் கூடிய சக்தியுடையதாக இருக்கிறது.ஆகையால் என்னை மேகமாக்கிவிடு" என்று வேண்டினான். தெய்வமும் "அவ்வண்ணமே ஆகுக" என்றது.

    அவன் மேகமாகி சூரியக் கதிர்களைத் தடுத்தான். பூமி மீது பெரு மழை பொழிந்தான். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, வீடுகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன, வயல்களெல்லாம் அழிந்து விட்டன. ஆனால் ஒரு பாறை மட்டும் அசையாமல் நின்று கொண்டிருந்தது. அவன் வெள்ளத்தை உண்டாக்கி எவ்வளவோ முயன்று பார்த்தான் அந்த பாறையை அசைக்கவே முடியவில்லை.

    "தெய்வமே மேகத்தை விடப் பாறையே சக்திவாய்ந்தது எனவே என்னை பாறையாக்கிவிடு" என்றான். தெய்வமும் "அவ்வண்ணமே ஆகுக" என்றது. அவன் பாறையாகி விட்டான். கர்வத்தோடு அமர்ந்திருந்தான்.

    அப்போது அங்கே ஒருவன் உளியும் சுத்தியலும் கொண்டு வந்து அந்த பாறையை உடைக்க தொடங்கினான். அவன் உளி பாறையைத் தகர்க்கத் தொடங்க்கியது.

    "தெய்வமே பாறையை விட கல்லுடைப்பவன் சக்தி மிகுந்தவன். என்னை கல்லுடைப்பவனாகவே ஆக்கி விடு என்றான்.

    தெய்வமும் "அவ்வண்ணமே ஆகுக" என்றது. அவன் மீண்டும் கல்லுடைப்பவனாக ஆகி விடடான்.

    கல்லுடைப்பவன் கல்லுடைப்பவனாகவே இருக்க வேண்டும்.ஆசைப்படக் கூடாது என்பதல்ல இந்தக் கதையின் நீதி.

    ஆசைக்கு எல்லை இல்லை. ஆசைப்படுபவன் நிம்மதியாக இருக்க முடியாது என்பது தான் இக் கதையின் நீதி.

    அன்புடன்
    ரலா

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நல்ல தத்துவக்கதை.

    வாழ்த்துக்கள் ரலா
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    ஆசை மனிதனையூம் அவனைசுற்றி உள்ளவர்களையூம பாதிக்கும்
    இதைதான் அனைவரும் கூறுகிறார்கள் ஆனால் வெல்வது எது என்றால் ஆசைதான்
    இதை உனர்த்தும கதைக்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள்
    Last edited by மனோஜ்; 09-05-2007 at 04:58 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    நல்ல கதை ஆசை ஆண்டவனையும் ஆழிக்கும்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இருக்கும் நிலையை விட்டு மற்றவராக மாறத்துடிப்பவர்களுக்கு நல்ல கதை...

    தொடருங்கள்...

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    கல்லுடைப்பவன் கல்லுடைப்பவனாகவே இருக்க வேண்டும்.ஆசைப்படக் கூடாது என்பதல்ல இந்தக் கதையின் நீதி.

    ஆசைக்கு எல்லை இல்லை. ஆசைப்படுபவன் நிம்மதியாக இருக்க முடியாது என்பது தான் இக் கதையின் நீதி.
    நல்ல தத்துவ கதை ராலா..

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •