Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 45

Thread: லண்டனில் ஒருநாள்

                  
   
   
 1. #1
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0

  லண்டனில் ஒருநாள்

  அன்னக்கி காலைல்ல 9.00 மணி.. நல்லா தூங்கிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு போன்... அட இந்நேரத்தில
  யாரப்பா தூக்கத்த கெடுக்கறதுன்னு போனை எடுத்தேன்.. பார்த்தால் வெளிநாட்டு அழைப்பு... எல்லா
  எண்களையும் போட்டு போன் திரையில் இடம் பத்தாம No Space என்று அந்த அழைப்புக்குண்டான எண்
  இருந்தது. எனக்கு பயம் வேற.. முன்னபின்ன தெரியாத நம்பர அட்டெண்டு பண்ணி நம்ம போனு கெட்டு
  போச்சுன்னா... சரி சரி.. அப்படி என்ன பெரிய போனா வெச்சுருக்கோம்... எடுத்து ஹலோ என்றேன்.

  " நான் தான் மது. எப்படி இருக்கே ஆதவா?"

  "மதுரகனா? இல்லை நம்ம மதியா? (ராஜேஸ்குமார்) நீங்க யார்னு தெரியலீங்க.. ஆனா ஒன்னு மட்டும் தெளிவு.
  தமிழ்மன்றத்தில இருந்துதான் கூப்பிடறீங்க"

  " அடப்பாவி ஆதவா! உலகக்கிண்ண பரிசுப்போட்டி நடத்தினேனே ஞாபகம் இல்லையா?"

  " அட ஆமாம்... நல்லா இருக்கீங்களா? என்னோட நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்? அது சரி நான் என்ன
  சனாதிபதியா?"

  " அதெல்லாம் இருக்கட்டுமப்பா.. உன் வீட்டு அட்ரஸ் சொல்லு. உனக்கொரு கொரியர் அனுப்பனும்.."

  " என்ன அனுப்பப் போறீங்க? ஆந்த்ராக்ஸா? " சிரித்துக் கொண்டே கேட்டேன்..

  " இல்லைப்பா. இது சஸ்பென்ஸ். வீட்டு அட்ரஸ் சொல்லு.. அப்பறம் உனக்குத் தெரியும்.."

  டொக்.

  எனக்கு பக் பக் னு இருந்தது... பாரின் காலெல்லாம் வருது. அட்ரஸ் கேக்கறாங்க. பார்சல்னு வேற
  சொல்றாங்க... அய்யய்யோ.. சரி மது நம்மாளு. பிரச்சனை இல்லை. அப்படீனுட்டு அன்றாட வேலைல்ல
  கவனம் செலுத்தினேன்..

  சொன்ன மாதிரியே ஒரு பார்சல் அனுப்பிட்டாருங்க பாருங்க.. அடடா.. ஒரே குஷி. ஏதோ அனுப்பி
  இருக்காரு.. பணமா இருக்குமோ? சேசே பணத்த பார்சலா அனுப்புவாங்களா... சுமாரா 200 கிராம் தேறும்.
  வாங்கி பிரிச்சா அதுக்குள்ள ஒரு லெட்டர் கிடந்தது,.
  அதை அப்படியே அடிபிறழாம இங்க எழுதறேன் படிச்சுக்கோங்க

  " அன்பு ஆதவனுக்கு,
  நலம் நலமறிய ஆவல். சமீபத்தில உலக் கிண்ண பரிசுப்போட்டி நடத்தினன். ஞாபகம் இருக்கல்ல.. அதில் நீர்
  இரண்டாவது இடம். வாழ்த்துக்கள் ஆதவன். சொன்ன மாதிரியே இரண்டாமிடத்து பரிசான " லண்டனில்
  ஒருநாள் - ஓவியா சுற்றிக் காண்பிப்பார் " என்ற பரிசு உங்களுக்கு வழங்கப்படுகிறது. விசா டிக்கெட் இருக்கு.
  பாஸ்போர்ட் வெச்சு இருக்கீங்கல்ல.. உடனே கிளம்பி வாங்க.. லண்டனில் ஓவியாவின் அட்டகாசத்தை
  சமாளிக்கவும். பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்
  அன்பு
  மது."

  அப்படியே மயக்கம் வந்துருச்சு.. லண்டனுக்கு இலவச டிக்கெட்டா...

  உடனடியா ஓடிப்போய் குமரன் சில்க்ஸ்ல ரெண்டு பேண்ட் ரெண்ட் சர்ட் எடுத்துக்கிட்டேன்.. எதுக்கும்
  தேவைப்படுமேன்னு கர்சீப் ஒன்னு வாங்கி வெச்சு கிட்டேன்.. வியாழக்கிழமை இரவு 8.00 மணிக்கு
  சென்னையிலிருந்து விமானம்.. புதன் கிழமையே சென்னைக்கு போய்ட்டேன்.. ஆனா இந்த விடயம்
  சென்னைவாழ் மன்றத்தினருக்குத் தெரியாது. சரியா அஞ்சு மணிக்கு மீனம்பாக்கம் போய் சேர்ந்து விமான
  நிலையத்தில முதன்முறையா கால் வெச்சேன்... யப்பா.. என்னாமாதிரி இருக்கு... நமக்கெல்லாம் இந்த
  கொடுப்பினை கிட்டுமான்னு ஏங்கிட்டு இருந்த காலம்.. நம்ம மது அண்ணாச்சியால நிறைவேறப் போகுது..
  அப்படியே சுத்திப் பாத்துகிட்டே கழுத்து வலிக்க ஒக்காந்தேன்.. அங்க வேலை செய்ற பொண்ணுங்கள
  அப்படியே நோட்டம் உட்டுகிட்டே இருக்கையிலே சரியா எட்டு மணிக்கு பாஸ்போர்ட் விசா எல்லாம் செக்
  பண்ணி ரன்வேக்கு அனுப்பினாங்க.... யப்பா. என்ன பெரிய ஏரோபிளேனு.. அப்படியே நடுங்கிட்டேன் சாமி..
  தனியா போறதனாலா கொஞ்சம் கூச்சம் இருந்தது. இருந்தாலும் பிரம்மாண்டம் நம்ம கண்ண மறச்சுட்டுது.
  மெதுவா போய் உட்கார்ந்தேன்.. பஞ்சு மாதிரி இருக்கைகள்.. சுத்தமான காற்று. ஏகப்பட்ட வசதிகள். ஒன்றா
  ரெண்டா. சொல்றதற்கே இன்னொரு திரி வேணும்... அங்க பணிப்பொண்ணுங்க வந்தாங்க.. நல்லா
  பேசனாங்க.. எப்படி எப்படி எது உபயோகப்படுத்தனும்னு சொல்லிக் கொடுத்தாங்க.. எல்லாம் ஆங்கிலம் தான்..
  ஹி ஹி எனக்கு ஒன்னுமே புரியல.. உதடு அசையறது மட்டும் ஜொல்லீட்டு இருந்தேன்...

  தொடரும்..
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  79,611
  Downloads
  97
  Uploads
  2
  ஆதவா அசத்தலா ஆரம்பிச்சு இருக்கீங்க!, தொடரும் பாகங்களில் பலரது தலை உருளப் போகிறது என்பதை நினைக்கும் போதே மனசிலே ஆர்வம் பேயாட்டம் போடுது.

  தொடருங்க தலைவா!

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 3. #3
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  36,060
  Downloads
  5
  Uploads
  0
  அடடே ஆதவா, அசத்துரே,

  அச்ஷோ, உன்னை பாராட்டியே ஃபோரடிக்குதுலே!!!!!!!!!

  சரி தொடரும்லே.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 4. #4
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
  Join Date
  15 Dec 2006
  Location
  சென்னை
  Posts
  4,771
  Post Thanks / Like
  iCash Credits
  32,572
  Downloads
  26
  Uploads
  1
  ஆரம்பமே அசத்தல்.... லண்டனைப் பற்றி நானும் தெரிஞ்சிக்கிறேன்.. உன் (உடான்ஸ்) தயவால....
  Email: arpudam79@gmail.com
  Web: www.nisiyas.blogspot.com
  Web: www.shenisi.blogspot.com

  கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
  __________________________________________________

  என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

 5. #5
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
  Join Date
  10 Jun 2006
  Location
  ரோஜா கூட்டம்
  Posts
  1,147
  Post Thanks / Like
  iCash Credits
  3,790
  Downloads
  8
  Uploads
  0
  ஆதவா.....அசத்தலான தொடர்..இன்னும் சற்று நேரத்தில் ஓவியாவின் அட்டகாசத்தையும் சொல்வீர்கள் தானே?
  இணையத்தில் ஒரு தோழன்

 6. #6
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  36,060
  Downloads
  5
  Uploads
  0
  அதே அதே சபாபதே
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 7. #7
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
  Join Date
  10 Jun 2006
  Location
  ரோஜா கூட்டம்
  Posts
  1,147
  Post Thanks / Like
  iCash Credits
  3,790
  Downloads
  8
  Uploads
  0
  Quote Originally Posted by ஓவியா View Post
  அதே அதே சபாபதே

  ஆதவா - ஓவியாவின் மிரட்டல்களுக்கு பயப்பட வேணாம். எல்லாம் சொல்லுங்கள்
  இணையத்தில் ஒரு தோழன்

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
  Join Date
  16 Jan 2007
  Location
  திருச்சி
  Posts
  4,192
  Post Thanks / Like
  iCash Credits
  7,486
  Downloads
  14
  Uploads
  0
  Quote Originally Posted by Mathu View Post
  இதற்கு மேல் ஜாருமே சரிஜான பதிலை சொலவிலை, எனவே இதுவரை பெற்ற புள்ளிகளை வைத்து பரிசுகள் வளங்கபடுகிறது

  முதலிடம் பூ.............25 புள்ளிகள்

  இரண்டாமிடம் மனோஜ்.....25 புள்ளிகள்

  மூன்றாமிடம் ஆதவா.... 20 புள்ளிகள்

  4. நரன்..........15 புள்ளிகள்
  5. ஷீ-நிசி.... 10 புள்ளிகள்

  பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
  உங்களுக்கு மூன்றவது இடமாச்சே மது எனக்கு தராம உங்களுக்கு கூடுத்துடாரா அனியம் அக்குரமம்
  இத தட்டி கேட்க யாரும் இல்லையா ஆதவா நீங்களாவது கேலுங்க
  உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
  இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

 9. #9
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  133,031
  Downloads
  161
  Uploads
  13
  தொடருங்கள் சூரியப்புதல்வரே...
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

 10. #10
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  45,159
  Downloads
  78
  Uploads
  2
  நல்ல தொடக்கம் ஆதவா...
  லண்டன் பயணம் எப்படி..?? ஹிஹி

 11. #11
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  25,577
  Downloads
  17
  Uploads
  0
  அதென்னபா லண்டனில் ஒரு நாள்.. நீர் போய் சேர்வதற்கே ஒருநாள் போயிடுமே!! அப்படியே அதே ஃபிளைட்டை பிடிச்சி திரும்ப வந்திடணுமா??

 12. #12
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  79,611
  Downloads
  97
  Uploads
  2

  Smile

  Quote Originally Posted by மன்மதன் View Post
  அதென்னபா லண்டனில் ஒரு நாள்.. நீர் போய் சேர்வதற்கே ஒருநாள் போயிடுமே!! அப்படியே அதே ஃபிளைட்டை பிடிச்சி திரும்ப வந்திடணுமா??
  அட சரியான கேள்வி!

  எங்கேயப்பா நம்ம ஆதவனைக் காணோம்???

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •