Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 37

Thread: இந்தப் பகுதியின் நோக்கம்/வரைமுறைகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    25 Mar 2003
    Location
    அமீரகம்
    Posts
    2,365
    Post Thanks / Like
    iCash Credits
    16,632
    Downloads
    218
    Uploads
    31

    இந்தப் பகுதியின் நோக்கம்/வரைமுறைகள்

    நண்பர்களே..!

    'கவிஞன்' என்ற சொல்லைத் தாங்க பல தமிழ் மன்ற உறுப்பினர்கள் கூச்சப் படக் கூடும். தயங்காதே நண்பர்களே!! உங்களது கவிதைகள் மசாலா பத்திரிக்கைகளில் வரும் கவிதைகளுக்கு சிறிது சளைத்ததல்ல. அவற்றின் தரம் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    தமிழ் மன்றத் தோழர்கள், கவிதை உலகில் சிறகடித்து பறக்கும் காலம் வந்து விட்டது. அதனால், கவிதைக்கு தனிப் பகுதி ஒதுக்கியதுடன், அதன் படைப்பாளிகளுக்கும் அவர்களுடைய படைப்புகளை தொகுத்து வழங்க, ஒரு தனியிடம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

    இந்த பகுதியின் நோக்கம்;

    1) நமது மன்றத்து கவிஞர்களுக்கு, அவர்களுடைய கவிதைத் தொகுப்புகளை ஒரே திரியில் சுட்டிகளாக கோர்த்து வைக்க வசதியளித்தல்.

    2) அதன் மூலம் புதியவர்கள், கவிதைகளை தேட அதிக நேரம் செலவிடவேண்டாம்.

    3) இங்குள்ள கவிஞர்களைப் பற்றி புதியவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தல்.

    3) கடைசியாக, அவர்கள் என்ன மாதிரியான படைப்புகளை ரசிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதாகும்.

    வரைமுறைகள்:

    1) தமிழ் மன்றத்தில் ஒரு கவிதை/பாடல் படைத்திருந்தாலும், இங்கே உங்கள் பெயரில் ஒரு தனி திரி துவங்க தகுதியுடையவராகிறீர்கள். ஒரு கவிஞருக்கு ஒரு திரி மட்டும் போதும். அதற்கு மேல் துவங்க வேண்டாம்.

    2) உங்கள் கவிதைத் தொகுப்பு சுட்டிகளை கொடுக்குமுன், உங்களைப் பற்றியும், உங்கள் விருப்பம், ஆர்வம் பற்றியும் சிறிது கூறுங்களேன்.

    3) நீங்கள் படைத்த கவிதைகளை சுட்டிகளுடன் கொடுக்கவும். (சுட்டிகளை எவ்வாறு இணைப்பது என்று தெரியாதவர்கள், நிர்வாக உதவியாளர்களின் உதவியை நாடலாம்)

    4) நீங்கள் படைத்த கவிதைகள் மட்டுமல்லாது, நீங்கள் இங்கே ரசித்த, மற்றும் உங்கள் சிந்தனையை தூண்டிய படைப்புகளையும் பட்டியலிட்டு கொடுக்கலாம்.

    5) கடைசியாக, நீங்கள் படித்த சிறந்த புத்தகங்கள், மற்றும் ஆசிரியர்களையும் நமது மன்றத்து உறுப்பினர்களுக்கு அறிமுகப் படுத்தி விட்டுச் செல்லுங்கள். அது கவிதை தொகுப்பாகவும் இருக்கலாம், வேறு வகை புத்தகங்களாகவும் இருக்கலாம்.

    6) உங்கள் புதிய படைப்புகளை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை சுட்டிகளை சேர்க்கவும் அல்லது மேம்படுத்தவும்.

    வெகு நாட்களாக மன்றம் வராமல் இருக்கும் பழைய உறுப்பினர்களில் தொகுப்பை, நிர்வாக உதவியாளர்கள் கோர்த்து வழங்குவார்கள்.

    உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..

    இராசகுமாரன்
    Last edited by இராசகுமாரன்; 30-04-2007 at 01:02 PM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    எங்கள் ஒத்துழைப்பு என்றும் உங்களுக்கு உன்டு
    கவிதைக்கு தனிஇடம் தந்த உங்களுக்கு மிக்க நன்றிகள்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அருமையான முயற்சி அண்ணா!

    எங்கள் பூரண ஒத்துழைப்பு இதற்கு கிடைக்கும்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    கவிஞர்களை உற்சாகம் ஊட்டும் நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    இது மிகச்சிறப்பானா முயற்சியாய் அமைந்திடும் என்பதில் சந்தேகமில்லை...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    கவிஞர்களின் தமிழ் வேட்கை தீர்க்க, புதிதாய் வாசல் திறந்து தந்த இராசகுமாரன் அவர்களுக்கு நன்றிகள்...

    உலகத் தமிழரை ஒரு குடைக்குள், ஒன்றிணைக்கும் தமிழ்மன்றம், மேலும் ஒரு கிளை பரப்பத் தொடங்கிவிட்டது. கவிஞர்களே இந்த அணியாரத்தில், நீங்களும் ஒரு முத்தாய் இணைந்திடுங்கள்... ஒளி சிந்தப் புறப்படுங்கள்... மனதில் ஊற்றெடுக்கும் உணர்வுகளை வெளிச்சிந்துங்கள்...

    நான் இப்பொழுதுதான், இரண்டு குறும் படைப்புக்கள் (கவிதைகள்...???) பதித்துள்ளேன். மன்றம் எனது படைப்புகளுக்கு அங்கீகாரம் தந்தால், நானும் இங்கு இணைந்து கொள்கின்றேன்.

    இங்கு, ஏலவே பதிந்திருப்பவையை, உரிய திரிகளில் படைப்பாளர்கள் சேர்க்க வேண்டுமா (எனின் எவ்வாறு...)? அல்லது மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் அதனைச் செய்வார்களா?
    Last edited by அக்னி; 04-05-2007 at 11:59 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    நன்றி.. ராசகுமாரன்...
    இன்று மன்றம் வந்த எனக்கு ஆனந்த அதிர்சி....
    அருமையான தொகுப்பு இது...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    25 Mar 2003
    Location
    அமீரகம்
    Posts
    2,365
    Post Thanks / Like
    iCash Credits
    16,632
    Downloads
    218
    Uploads
    31
    Quote Originally Posted by agnii View Post
    இங்கு, ஏலவே பதிந்திருப்பவையை, உரிய திரிகளில் படைப்பாளர்கள் சேர்க்க வேண்டுமா (எனின் எவ்வாறு...)? அல்லது மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் அதனைச் செய்வார்களா?
    இந்த பகுதியில் ஒரு புதிய திரி துவக்குங்கள், தலைப்பை agnii-யின் அறிமுகம், அல்லது அக்னியின் தொகுப்பு என்று இருக்கலாம்.

    அதனுள் உங்களைப் பற்றி கூறுங்கள், உங்களுக்கு பிடித்தவைகளை கூறுங்கள், அதனுடன் உங்கள் படைப்புகள் என்ன என்று கூறுங்கள், அதன் சுட்டிகளை கொடுங்கள்.

  9. #9
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    வரைமுறைகள்:

    1) தமிழ் மன்றத்தில் ஒரு கவிதை/பாடல் படைத்திருந்தாலும், இங்கே உங்கள் பெயரில் ஒரு தனி திரி துவங்க தகுதியுடையவராகிறீர்கள். ஒரு கவிஞருக்கு ஒரு திரி மட்டும் போதும். அதற்கு மேல் துவங்க வேண்டாம்.

    2) உங்கள் கவிதைத் தொகுப்பு சுட்டிகளை கொடுக்குமுன், உங்களைப் பற்றியும், உங்கள் விருப்பம், ஆர்வம் பற்றியும் சிறிது கூறுங்களேன்.

    3) நீங்கள் படைத்த கவிதைகளை சுட்டிகளுடன் கொடுக்கவும். (சுட்டிகளை எவ்வாறு இணைப்பது என்று தெரியாதவர்கள், நிர்வாக உதவியாளர்களின் உதவியை நாடலாம்)

    4) நீங்கள் படைத்த கவிதைகள் மட்டுமல்லாது, நீங்கள் இங்கே ரசித்த, மற்றும் உங்கள் சிந்தனையை தூண்டிய படைப்புகளையும் பட்டியலிட்டு கொடுக்கலாம்.

    5) கடைசியாக, நீங்கள் படித்த சிறந்த புத்தகங்கள், மற்றும் ஆசிரியர்களையும் நமது மன்றத்து உறுப்பினர்களுக்கு அறிமுகப் படுத்தி விட்டுச் செல்லுங்கள். அது கவிதை தொகுப்பாகவும் இருக்கலாம், வேறு வகை புத்தகங்களாகவும் இருக்கலாம்.

    6) உங்கள் புதிய படைப்புகளை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை சுட்டிகளை சேர்க்கவும் அல்லது மேம்படுத்தவும்.

    வெகு நாட்களாக மன்றம் வராமல் இருக்கும் பழைய உறுப்பினர்களில் தொகுப்பை, நிர்வாக உதவியாளர்கள் கோர்த்து வழங்குவார்கள்.

    உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..

    இராசகுமாரன்

    சுட்டிகளை எவ்வாறு இணைப்பது என்று எனக்கு தெரியப்படுத்துங்கள்.
    Last edited by இராசகுமாரன்; 30-04-2007 at 04:28 PM.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    25 Mar 2003
    Location
    அமீரகம்
    Posts
    2,365
    Post Thanks / Like
    iCash Credits
    16,632
    Downloads
    218
    Uploads
    31
    Quote Originally Posted by murthykmd View Post

    சுட்டிகளை எவ்வாறு இணைப்பது என்று எனக்கு தெரியப்படுத்துங்கள்.
    எடிட்டர் டூல் பாரில் தெரியும் இந்த படத்தை சொடுக்கி, சுட்டி கொடுக்கலாம்.

    அல்லது தட்டச்சு செய்து கொடுக்க வேண்டுமென்றால் கீழ்கண்டவாறு கொடுக்கலாம்.

    [U R L="மன்றத்தில் அதன் இணைய முகவரி, http://www.tamilmantram.com/vb/xxxxxxxx"] படைப்பின் பெயர் [/U R L]

    * U R L என்ற எழுத்துக்களுக்கு நடுவே இடைவெளி விடவேண்டாம்.
    Last edited by இராசகுமாரன்; 01-05-2007 at 02:26 PM.

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் franklinraja's Avatar
    Join Date
    24 Oct 2006
    Location
    சென்னை
    Posts
    341
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    2
    Uploads
    0
    மிகச் சிறப்பான, கவி ஆர்வலர்களுக்குத் தீனி போடும் பகுதி,,,!

    வாழ்த்துக்கள் !
    அன்புடன்...
    Franklin Raja

    "புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    நண்பர்கள் தங்களை பற்றி அறிமுகம் கொடுக்க இவ்வளவு நேரம் எடுப்பது தயக்கமா இல்லை பணிபளுவா???

    ஓவி.. மக்கா உன் அறிமுகம் எங்கே???

    ஓவியின் "நம் மன்ற கவிகள்" லிஸ்டுல இருக்கிர எல்லோரும் தங்கள் அறிமுகத்தை கொடுக்க அன்புடன் கேட்டு கொள்கிறென்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •