Page 4 of 4 FirstFirst 1 2 3 4
Results 37 to 46 of 46

Thread: கவிதா : மரபுக் கவிதை எழுதுவது எப்படி?.

                  
   
   
  1. #37
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    கவிதா கவிதா எனக்கேட்டே தந்தார்
    கவிபல, நானும் எடுத்து எழுதினேன்
    ஓர்கவி யிங்கே சரியா தவறா?
    விழிமுழிக் கின்றேனே அண்ணே!
    கடைசி வரியில் மற்றும் தளை தட்டுவதாய் ஒரு சம்சயம் :-)
    அதாவது வெண்பாவின் ஈற்றடி மூன்று சீராய் ஒருப்பினும் அந்த
    மூன்றாவது சீர் ஓரசையாய் முடியுமாறு இருப்பது அவசியம்.அந்த ஓரசையும் நாள்,மலர்,காசு பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் இருப்பது அதைப் போல் முக்கியம்.அதே போல் கொஞ்சம் எகனை மொகனையாகவும் இருத்தல் நன்று இப்போது உங்கள் ஈற்றடியைச் சற்றே
    தட்டி திருத்திப் பார்ப்போம்.

    கவிதா கவிதா எனக்கேட்டே தந்தார்
    கவிபல, நானும் எடுத்து எழுதினேன்
    ஓர்கவி யிங்கே சரியா தவறாசொல்
    பாரண்ணே தம்பியின் பாட்டு

    ஓர்கவி என்பதற்கு பாரண்ணே எதுகையாய்
    பாரண்ணே என்பதற்கு பாட்டு மொகனையாய்..
    கடைசி சீர் காசு வாய்ப்பட்டின் கீழ்
    Last edited by poornima; 26-07-2008 at 02:44 PM.

  2. #38
    புதியவர்
    Join Date
    12 Sep 2009
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    கவிதை இலக்கணம் குறித்த
    மிக மிக அருமையான
    மிக மிக அவசியமான
    மிக மிக அற்புதமான
    மிக மிக விளக்கமான
    கட்டுரைக்கும்
    கட்டுரைக்கான
    ஆசிரியர்க்கும் வந்தனங்கள்.

    - டாக்டர் ரா.நிரஞ்சனா தேவி
    சென்னை

  3. #39
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Apr 2003
    Posts
    104
    Post Thanks / Like
    iCash Credits
    12,246
    Downloads
    5
    Uploads
    0
    மரபுக் கவிதைகள் எழுத இங்கே குறிப்பிட்டுள்ள இலக்கண மரபுகளை கட்டாயம் அறிந்திருக்க வேண்டுமா?

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    ++++++++++++++++++++++++++++++++++++++++
    ஐகாரக் குறுக்கம்
    ஐ என்பது நெடில் எழுத்து. இவற்றுள் பை, நை, ஐவர், தை மாதம் போன்றவற்றிலுள்ள பை, நை, ஐ, தை ஆனது 2 மாத்திரை கொண்டு விளங்கும்.
    ஆயினும் சில இடங்களில் இவ்வெழுத்துத் தன் இயல்பான இரண்டு மாத்திரையை வ்�டக் குறைந்து ஒலிக்கும். இது ஐகாரக்குறுக்கம் ஆகும்.
    தைத்து, பைத்து, கைத்து ஆகிய சொற்களில் தை, பை, கை ஆகிய எழுத்துக்கள் தன் இயல்பான இரண்டு மாத்திரையை விடக் குறைவாக ஒலிப்பதைக் காணலாம்.
    (வாசித்து பயிற்சி பெறுக!)

    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    நான் படித்த யாப்பிலக்கண அடிப்படைச் செய்தியில்,

    சொல்லின் முதலில் வரும் ஐகாரத்திற்கு 2 மாத்திரை
    சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும் ஐகாரத்திற்கு 1 மாத்திரை
    என்று படித்தது நினைவிருக்கிறது.

    அதைப்பற்றி விளக்கம் தந்தால் உதவியாக இருக்கும்.

  5. #41
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    ஒரே நாளில் அனைத்தையும் படிக்கமுடியாது.

    இதைப் பார்க்கும்பொழுது படிக்கும் காலத்தில் எவ்வளவு விட்டிருக்கிறோம் என்று தெரிகிறது.

    கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பார்கள், அந்த நிலையில் நான் இருக்கிறேன்

  6. #42
    புதியவர்
    Join Date
    17 Jul 2014
    Posts
    4
    Post Thanks / Like
    iCash Credits
    316
    Downloads
    1
    Uploads
    0
    எடுத்து - நிரைநேர் - புளிமா - மாமுன்நிரை வந்த
    எழுதினேன் - நிரைநேர்நேர் - காய்முன்நேர்வந்த

    எழுதினேன் என்பது - - நிரைநிரை என்றுதானே வருகிறது.
    தாங்கள் நிரைநேர்நேர் என்று குறிப்பிட்டுள்ளீர்களே

    அது எவ்வாறு என்று விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்...

    எடுத்து என்ற சொல் குற்றியலுகரம் அதன் பின்னே எழுதினேன் என்ற சொல் வருவதால்
    மாத்திரை வித்தியாசப் படுகிறதா விளக்கவும்... நன்றி!

  7. #43
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ராஜன் View Post
    எடுத்து - நிரைநேர் - புளிமா - மாமுன்நிரை வந்த
    எழுதினேன் - நிரைநேர்நேர் - காய்முன்நேர்வந்த

    எழுதினேன் என்பது - - நிரைநிரை என்றுதானே வருகிறது.
    தாங்கள் நிரைநேர்நேர் என்று குறிப்பிட்டுள்ளீர்களே

    அது எவ்வாறு என்று விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்...

    எடுத்து என்ற சொல் குற்றியலுகரம் அதன் பின்னே எழுதினேன் என்ற சொல் வருவதால்
    மாத்திரை வித்தியாசப் படுகிறதா விளக்கவும்... நன்றி!
    மன்றத்துக்கு நல்வரவு ராஜன். முதலில் உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை இங்கு பகிர்ந்துகொள்ளுங்கள்.

    தங்கள் ஐயத்தை ஆதவா விரைவில் வந்து விளக்குவார் என்று நம்புகிறேன்.

  8. #44
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by ராஜன் View Post
    எடுத்து - நிரைநேர் - புளிமா - மாமுன்நிரை வந்த
    எழுதினேன் - நிரைநேர்நேர் - காய்முன்நேர்வந்த

    எழுதினேன் என்பது - - நிரைநிரை என்றுதானே வருகிறது.
    தாங்கள் நிரைநேர்நேர் என்று குறிப்பிட்டுள்ளீர்களே

    அது எவ்வாறு என்று விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்...

    எடுத்து என்ற சொல் குற்றியலுகரம் அதன் பின்னே எழுதினேன் என்ற சொல் வருவதால்
    மாத்திரை வித்தியாசப் படுகிறதா விளக்கவும்... நன்றி!
    எழுதினேன்.. நிரைநிரை. தேமா. நீங்கள் சொல்வது சரியே.

    இவை எழுதிய காலத்தில் நானும் கத்துக்குட்டியே. (இப்போதும்)
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #45
    புதியவர்
    Join Date
    17 Jul 2014
    Posts
    4
    Post Thanks / Like
    iCash Credits
    316
    Downloads
    1
    Uploads
    0
    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல


    என்ற குறளை எவ்வாறு வெண்பா விதிகளோடு ஒப்பிட்டு பார்ப்பது...

    நான் வெண்பா விதிகளோடு ஒப்பிட்டு பார்த்தேன் சரியாக வரவில்லை...

    (தளை, சீர்) இவைகளை விளக்க முடியுமா?

  10. #46
    புதியவர்
    Join Date
    17 Jul 2014
    Posts
    4
    Post Thanks / Like
    iCash Credits
    316
    Downloads
    1
    Uploads
    0

    தளை-சீர் விளக்கம் தாருங்கள்

    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல


    என்ற குறளை எவ்வாறு வெண்பா விதிகளோடு ஒப்பிட்டு பார்ப்பது...

    நான் வெண்பா விதிகளோடு ஒப்பிட்டு பார்த்தேன் சரியாக வரவில்லை...

    (தளை, சீர்) இவைகளை விளக்க முடியுமா?

Page 4 of 4 FirstFirst 1 2 3 4

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •