Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 34

Thread: ♔. சின்னக் குழந்தை..பெரிய மனசு...!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0

    ♔. சின்னக் குழந்தை..பெரிய மனசு...!

    ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியை இருந்தாள்..அவள் பெயர் கமலா. மிகுந்த சிடுமூஞ்சி.முதல் வகுப்பு ஆசிரியை. சிறுவயதினர் என்றும் பாராமல் குழந்தைகளைத் துவைத்து எடுப்பாள்.அவளுக்கு 30 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. அது கூட கமலா சிடுசிடுக்க ஒரு காரணமாக இருக்கலாம். அவளைப் பெண் பார்க்க அன்று வருவதாக ஏற்பாடாகியிருந்தது. என்றாலும் தேர்வு நாளானபடியால் விடுப்பு எடுக்க அவளால் இயலவில்லை.தேர்வை முடித்துவிட்டு ஒரு மணி நேரம் முன்னதாகக் கிளம்பிவிடலாம் என்று திட்டமிட்டிருந்தாள். இந்நிலையில் தலைமை ஆசிரியர் கமலாவைக் கூப்பிடுவதாக ஏவலர் வந்து சொல்ல, அவர் அறைக்குச் சென்றாள்.

    "என்னம்மா.. பெற்றோர்கிட்டேருந்து ரொம்ப புகார் வருதே.. பிள்ளைங்க கிட்ட ரொம்ப கடுமையா நடந்துக்கறியாமே..?"

    "அப்படியெல்லாம் இல்ல சார்.. சில வால் பசங்களை கொஞ்சம் அடக்கிதான் வைக்க வேண்டியிருக்கு.."

    "நல்ல பசங்கன்னு அடுத்த டீச்சர்ஸ் சொல்ற பசங்க பெற்றோர் கூட புகார் சொல்றாங்களேம்மா..?"

    தலை கிழம் அறுக்க ஆரம்பித்தால் விடாது.இன்றைக்கு வீட்டுக்கு போவது தாமதமாவதை உணர்ந்த கமலா..
    "சரி சார்..இனிமே புகார் வராம நடந்துக்கறேன்..!"

    சொல்லிவிட்டு ஓட்டமாய் வகுப்புக்கு வந்தாள்.பள்ளியும் முடிந்து விட்டது. விடைத்தாட்களை சீர்படூத்தி அலுவலகத்தில் ஒப்படைக்கும் பொறுப்பை சக ஆசிரியை ஒருத்தி ஏற்றுக்கொண்டிருந்தாள்.. கிளம்பவேண்டியதுதான் பாக்கி.. திடீரென ஒரு சிறு மாணவன்..சதீஷ்..

    "மிஸ்.. என் கையிலே அடிபட்டிருச்சு.. ஷூ போட முடியாது.. ப்ளீஸ்.. கொஞ்சம் போட்டு விடறீங்களா..? கெஞ்சினான்.
    சுற்றும் முற்றும் பார்த்தாள் கமலா. யாரும் இல்லை. வேறு வழியின்றி மண்டியிட்டு அவனுக்கு காலணி அணிவிக்கத் துவங்கினாள்.நேரம் பார்த்து மின்சாரம் வேறு தடைபட, அரையிருட்டு. மின்விசிறி செயல்பாட்டை நிறுத்திவிட, தெப்பலாக நனைந்துவிட்டாள் கமலா. சதீஷின் காலணிகள் வேறு காலில் நுழையாமல் பொறுமையைச் சோதித்தது. ஒருவழியாய் போட்டு முடித்து மணியைப் பார்த்தாள்..4.30.

    "மை காட்..!"

    கிளம்ப எத்தனித்தவளை சதீஷின் ஈனக்குரல் நிறுத்தியது..

    "என்னடா..?"

    "இல்லே மிஸ்.. ஷூவை கால் மாத்தி போட்டு விட்டிருக்கீங்க.."

    குழந்தை சொன்னது உண்மைதான்.. அரை இருட்டில் இடது வலது தெரியாமல் போட்டு விட்டிருக்கிறாள். அப்படியே போ என்று சொல்லலாமா என்று நினைத்தவள், தலைமை ஆசிரியர் எச்சரித்தது நினைவுக்கு வர,ஒரு பெருமூச்சை வெளியிட்டு மறுபடி குனிந்து அமர்ந்தாள்.ஏவலர் யாருக்கோ தேநீர் வாங்கிப்போவதைப் பார்த்த கமலா,

    "முனியன்.. கொஞ்சம் என் ஸ்கூட்டியை வெளிலே எடுத்து வச்சுடு.."

    "சரிங்கம்மா.."

    போட்டுவிடுவதை விட கடினமாக இருந்தது கழற்றுவது. பல்லைக் கடித்தபடி, ஒருவழியாக கழற்றி கால் மாற்றிப் போட்டுவிட்டாள்.மணி..4.45.

    "மிஸ்.. இது என்னோட ஷூ இல்லே...!"

    ஓங்கிய கையை சிரமப்பட்டு இறக்கினாள். குழந்தை அதற்கே அஞ்சி நடுங்கியது. பெரும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளை. எதுக்கு வம்பு. கல்யாணம் ஆகிவிட்டால் வேறு ஊருக்குப் போகும் வேளையில் அனாவசிய பிரச்சினைகள் எதற்கு என நினைத்தவளாய் அவன் காலில் இருந்து காலணிகளை அகற்றினாள். ஏதோ சொல்ல வந்தவனை ஒரு முறைப்பில் அடக்கியவளாய்க் கேட்டாள்..

    "நீ போட்டுட்டு வந்த ஷூ எங்கே..?"

    கழற்றிக் கிடந்த காலணிகளைக் காட்டியபடியே சதீஷ் சொன்னான்..

    "இதுதான் மிஸ்.."

    "உன்னுது இல்லேன்னு சொன்னே..."

    " என்னுது இல்லே மிஸ்.. என் தம்பியோடது.. அம்மாதான் இன்னைக்கு மட்டும் போட்டுக்கிட்டு போகச் சொன்னாங்க.."

    "ஏண்டா நேரம் காலம் தெரியாமக் கொல்றே..?நான் அவசரமா போயாகணும்டா..சரி.. சரி.. வா..!"

    உலகத்தின் பொறுமையனைத்தையும் மனதில் தேக்கி மறுபடியும் கழற்றிய காலணியைப் போட்டு விட்டாள். மணி 5.15. கிளம்பும் போதுதான் கவனித்தாள் ஸ்கூட்டி சாவியைக் காணோம் என்பதை.. இந்தப் பாவி படுத்திய பாட்டில் எங்கே வைத்தாள் என்பதே மறந்துவிட்டோமே..கடவுளே.. என்று எண்ணியவளாய் சதீஷையே கேட்டாள்..

    " ஏண்டா.. என் ஸ்கூட்டி சாவியைப் பாத்தியா..?"

    " பாத்தேன் மிஸ்.."

    "எங்கே..?"

    "நீங்க ஷூ போட்டுவிடும் போது அதுக்குள்ள விழுந்துடிச்சு.. இப்போ உள்ளதான் இருக்கு..!"
    _________________[தொடரும்...]
    Last edited by ராஜா; 18-12-2008 at 05:44 AM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    தொடர்ச்சி...

    எங்கிருந்துதான் அவ்வளவு ரௌத்ரம் வந்ததோ.. சதீஷை பின்னி எடுத்துவிட்டாள்.

    "சனியனே.. முதல்லேயே சொல்றதுக்கென்ன..? முப்பது வயசுக்கப்புறம் இன்னிக்குதான் எனக்கு நல்ல நேரம் வந்துது.. அது உங்களுக்குப் பொறுக்கலே.. ஊத்தி மூடிட்டீங்க.. தொலையுங்க.."

    கோபமாக அவன் காலணியை வெடுக்கென்று பறித்து எடுத்து தன் சாவியைக் கைப்பற்றிக் கொண்டு எக்கேடோ கெட்டுப் போ என்று கிளம்பிவிட்டாள்.


    வீட்டை அடைந்தவுடன், அம்மா வீறிட்டாள்..

    "ஏண்டி.. அந்தப் பாழாப் போன உத்தியோகத்தை இன்னைக்கு மூட்டை கட்டி வைக்கக் கூடாதா..? நல்லநாள் பெரிய நாள் கூட வீட்டுல இருக்காம இப்படி பண்ணா எப்படிடி வரன் தகையும்..?"

    " என்னம்மா.. வந்துட்டுப் போயிட்டாங்களா..?" நிச்சலனமாய்க் கேட்டாள். மனசு குழந்தையை தண்டித்ததில் கனத்துப் போயிருந்தது. வரும் வழியெல்லாம் சிந்தித்ததில் ஒருவாறு தெளிந்திருந்தாள்.

    "இன்னும் இல்லேடி.. போய் தயாராகு.. வர்ற நேரம்தான்.. அவங்க உனக்கு முன்னாலே வந்துடக் கூடாதேன்னு வயித்திலே நெருப்பைக் கட்டிக்கிட்டு இருந்தேன்.."

    நடைப்பிணமாய் தயாரானாள்..ஒரு மணி நேரம் கடந்து வாசலில் பரபரப்பு. பிள்ளை வீட்டினர் வந்து விட்டனர்.. வழக்கமான விசாரிப்புகள்.. சொந்தங்களின் அடையாளம் கண்டுகொள்ளல்..
    இடை நண்பர் குரல் கொடுத்தார்..

    "பொண்ணைப் பார்த்துடல்லாமே..!"

    அம்மா கமலாவின் அறைக்குள் வந்து படபடத்தாள்..

    "மாப்பிள்ளை ஜம்முன்னு இருக்காருடி.. காலேஜ் ப்ரொபஸராம்.. பெருமாளே.. இந்த சம்மந்தம் மட்டும் முடிஞ்சுட்டா தமிழ் மன்றம் அறிஞருக்கு மொட்டை அடிக்கிறேன் ..!"

    கமலா மெல்ல வந்து பொதுவாக வணங்கினாள்.. இடை நண்பர் சொன்னார்..

    "மாப்பிள்ளையைப் பாத்துக்கோம்மா..!"

    நிமிர்ந்தவளுக்கு அதிர்ச்சி.. மாப்பிள்ளை அருகில் சதீஷ் அமர்ந்திருந்தான்..கன்னத்தில் கைவிரல் ரேகை இன்னும் இருந்தது..

    கமலா முடிவுக்கு வந்துவிட்டாள்.. தன் கோபம் தன் திருமணத்தை இன்னும் கொஞ்ச காலத்துக்குத் தள்ளிப் போட்டுவிட்டது. பரவாயில்லை. இளம் பிஞ்சை தண்டித்ததற்கு இது தேவைதான்.. ஆனால் சதீஷ் எப்படி இங்கே..?உள்ளே திரும்பினாள்.

    அவளது கேள்விக்கு உடனடியாக விடையும் கிடைத்தது.. மாப்பிள்ளையின் தந்தையே சொன்னார்,,

    "நம்ம தூரத்து உறவுக்காரங்க இவங்க.. இவங்க இருந்ததால வீட்டை சுலபமா அடையாளம் கண்டுக்கிட்டோம்.. ஆமாம்..பொண்ணு எங்க பேரன் சதீஷ் பள்ளியிலேதான் வேலை பாக்குதாமே.. இப்பதான் சொன்னான்.."

    சரி.. சதீஷ் போட்டுக் குடுத்துட்டான்.. மெல்ல அலங்காரத்தைக் கலைக்கலானாள். அம்மா வந்து கிசுகிசுத்தாள்..

    " ஏய்.. கமலு.. அந்தப் பிள்ளையாண்டான் உன்கிட்ட ஏதோ பேசணுமாம்...." அம்மா வெளியேற மாப்பிள்ளை உள்ளே வந்தார்.. மெல்லக் கனைத்தபடி பேச்சை ஆரம்பித்தார்..

    " சதீஷ் சொன்னான்.."

    நாகம் தலை தூக்குவதுபோல வெடுக்கென்று நிமிர்ந்தாள்.

    "இன்னிக்கு கூட அவனுக்கு நீங்கதான் ஷூ போட்டு விட்டீங்களாமே..?"

    கமலா ஒன்றும் பேசவில்லை.. அவரே முடிவை அறிவிக்கட்டும்..

    " ரொம்ப சர்டிபிகேட் கொடுத்தான்.. நல்லா பாடம் நடத்துவீங்கன்னு.. நேரா விஷயத்துக்கு வரேன்.. எனக்கு உங்களப் புடிச்சிருக்கு.. உங்களுக்கு என்னப் புடிச்சிருக்கான்னு கேட்கத்தான் தனியாக் கூப்பிட்டேன்.. ஒருவேளை என்னைப் பிடிக்கலேன்னா சொல்லிடுங்க.. அந்தப் பழியை நான் ஏத்துக்கறேன்.. எனக்குப் பிடிக்கலேன்னு சொல்லிடறேன்.. ஏன்னா கொஞ்சம் வயசானதாலே எந்த மாப்பிள்ளையையும் ஏத்துக்கணும்ன்னு மத்தவங்க எதிர்பார்ப்பாங்க.. அப்படி உங்களுக்குப் பிடிக்கலைன்னு சொன்னீங்கன்னா கொஞ்சம் கோபப் படுவாங்க.. அதனாலேதான் சொன்னேன்.."

    " பிடிச்சிருக்கு..!" முழு நிம்மதீயுடன் சொன்னாள்.

    பின்னர் மளமளவென பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தபோது கமலா சதீஷை அறைக்குள் கூப்பிட்டு வரச்சொன்னாள். தயங்கியபடியே வந்தவனைக் கேட்டாள்..

    "ஏண்டா.. நான் அடிச்சதைச் சொல்லலியா..?"

    "இல்லே மிஸ்..!"

    ஆச்சர்யம் தாங்காதவளாய்க் கேட்டாள்..

    "ஏண்டா..?"

    "மத்த மிஸ் எல்லாம் இண்டர்வெல் அப்போ பேசிட்டுருப்பாங்க.. உங்க குணத்துக்கு தான் இன்னும் கல்யாணம் ஆகலேன்னு.. இப்போ நான் போய் இந்த மிஸ் நல்லா அடிப்பாங்கன்னு சொன்னா மாமா கட்டிக்க மாட்டார்.. அப்புறம் உங்க கல்யாணம் இன்னும் லேட் ஆயிடும்.. நான் செஞ்ச தப்புக்குதானே அடிச்சீங்க.. பரவால்லே மிஸ்.."

    பாய்ந்து சென்று சதீஷை வாரியணைத்தவள் முடிவு செய்தாள்..இனி யார் மீதும் கோபப்படுவதில்லை.. இந்த சிறுவனுக்கு இருக்கும் பெருந்தன்மை நமக்கு இல்லாமல் போய்விட்டதே.. இனி நான் புது கமலா..அப்போது நண்பர் குரல் கொடுத்தார்..

    "இந்த தை கடைசியிலேயே கல்யாணம்.. எல்லாருக்கும் சம்மதம்தானே..?".

    _____________________________________________

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கொஞ்சம் கண்கள் கலங்கின கடைசியில்..

    குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் ...
    இதையும் தாண்டிய சதீஷுக்கு ஒரு சந்தோஷ இச்!

    நன்றி ராஜா...
    நல்லுணர்வுகளைத் தட்டி எழுப்பிய இக்கதைக்கு!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    ஆஹா!

    அன்பின் பெருமையை மீண்டும் சொல்லிக் கொடுத்த கதை.

    சின்னக்குழந்தைகள் கடவுளுக்கு சமம்.

    சதீஷ் போன்ற ஒரு குழந்தை தெய்வத்தின் பெருந்தன்மையை நிறுபிக்கும் சம்பவம் ஒன்று என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது, நேரம் வரும் போது சொல்கிறேன்.
    பரஞ்சோதி


  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி நண்பர்களே..!

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    இது ஒரு நல்ல குழந்தயின் பெருந்தன்மை அபாரம்.

    அப்புரம் அந்த மொட்டை போடர சமாசாரம் என்னா ஆச்சுனு சொல்லவே இல்ல?????

    வெளியில் உலாவும் ஒரு வாலு பையன ((குட்டி பிசாசு'னு)) புடிச்சு ஒரு கத எழுதுங்களேன். படிப்போம்.


    நேஞ்சம் நிரைந்த சுபம்.
    குட்டிப்பயன் கதைக்கு குட்டியா ஒரு பாராட்டு.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    கூடிய சீக்கிரம் எழுத முயற்சிக்கிறேன் ஓவி.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    மிகவும் ரசிக்க வைத்தது ராஜா சார். ரொம்ப நன்றாக இருந்தது.. நீங்க தொடர்ந்து எழுதலாமே!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி ஷீ..!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    அருமை அண்ணா உண்மையில் எப்படி இப்படி கதைஅனைத்தும் உணர்ச்சி பொங்கு படி எழுதுகிறீர்கள் நன்றி
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி திருச்சிக் காரரே..!


  12. #12
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by ராஜா View Post
    "இந்த தை கடைசியிலேயே கல்யாணம்.. எல்லாருக்கும் சம்மதம்தானே..?".
    அப்போ கலியாணம் முடிஞ்சுது... சந்தோஷம்...

    Quote Originally Posted by ராஜா View Post
    இந்த சம்மந்தம் மட்டும் முடிஞ்சுட்டா தமிழ் மன்றம் அறிஞருக்கு மொட்டை அடிக்கிறேன் ..!"
    அப்போ அடிச்சாச்சா...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •