Quote Originally Posted by சாம்பவி View Post
அந்த விதி இவை அனைத்துக்குமே பொருந்தும் நண்பரே. இவை மட்டுமல்ல இன்னமும் பல வன்றொடர் குற்றியலுகரங்கள், கள்
விகுதியோடு புணரும் போது ஒற்று மிகாதது போல உச்சரிக்கின்றோம். அது வழக்கு தமிழ்.
ஆனால் தொல்காப்பியருக்கோ, அவரைக் காதலித்த வசந்தா டீச்சருக்கோ இது புரிந்தது மாதிரி தெரியவில்லை.. பாட்டுகளுக்கும் மெட்டுகளுக்கும், ஸ்கேலால் ( அதுவும் புறங்கையில் ) வாங்கிய அடியின் பயன், தூக்கத்திலும் பாட்டுக்களும் மெட்டுக்களும் தான்..!

இன்னொன்று, வாழ்த்து குறித்து எம் தந்தையிடம் கேட்ட போது அவர் கேட்டது.. வாழ்த்தில் எதற்கு பன்மை..? பல முறை வாழ்த்த போகிறாயா இல்லை...பலருடைய வாழ்த்துக்களா... அல்லது.. Best Wishes என்பதின் தாக்கமா... என்கிறார். என் சொல்வது... ?

தமிழ்த் தாய் வாழ்த்து
.
Quote Originally Posted by அக்னி View Post
அண்மையில்,
ஒரு வாழ்த்துச் சுவரொட்டிக்காக,
பிறந்ததின வாழ்த்துகள்’
என்றெழுதியிருந்தேன். அது சரியென விளக்கம் சொல்லியே போதுமென்றாகிவிட்டது.
இத்திரியை இன்று சுற்றிவருகையில், சாம்பவி அவர்களின் விளக்கத்தை மீளவும் காண,
இப்போது,
வாழ்த்துகள் - வாழ்த்துக்கள்
எது சரியென்பதில் மீளவும் குழப்பம்.
முதலில் ஒருவரை மட்டும் வாழ்த்துவதெனில் "வாழ்த்து" என்று மட்டுமே கூற வேண்டும். ஒருவருக்கு எனில் வாழ்த்துக்கள் / நன்றிகள் என்று கூறக்கூடாதென்பது சாம்பவியின் பின்னூட்டத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

இருவருக்கு மேற்பட்டவர்களுக்கு என்றால் வாழ்த்துக்கள் என்று கூற வேண்டும்.