ழ, ள, ல ஆகியவற்றிற்கு உச்சரிப்பு விதிகள் உள்ளன. ஆனால் இந்த வார்த்தைக்கு இந்த எழுத்தை உப்யோகிக்கவேண்டும் என வார்த்தை உருவாகும்பொழுது நிர்ணயிக்கப்படுகிறதென எண்ணுகிறேன்..
ண, ன, ந ஆகியவற்றிற்க்கு ஒரு விதி...
பந்தி, நந்தி, சந்தி, கந்தி.. மந்தி..
த விற்கு முன்னால் நகர ஒற்று வரும்
மண்டி, சண்டை, கெண்டை, என டகரத்திற்கு முன்னால் ணகர ஒற்று வரும்..
கன்று, மென்று, கொன்று, சென்று என றகரத்துக்கு முன் னகர ஒற்று வரும்.. அதனாலேயே இவை டண்ணகரம், தந்நகரம், றன்னகரம் என அழைக்கப் படுகின்றன.
www.thedmk.org உள்ள இலக்கணப் புத்தகம் எங்கு இவை உபயோகப்படுத்தப் படலாம் என சில ஆலோசனைகளைத் தருகின்றன
முழு விதிகள் ... தேடித் தேடிப் பார்க்கிறேன்..
Bookmarks