Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 52

Thread: திருவிழாவில் ஆதவன் தெருஉலா

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    திருவிழாவில் ஆதவன் தெருஉலா

    எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ள ஒரு ஊரில் பிரசித்தி பெற்ற கோவில் ஒன்று உண்டு. கொண்டத்து காளியம்மன்
    என்பது அந்த தெய்வத்துக்கு வைத்த பெயர். வருடா வருடம் பங்குனி மாதத்தில் திருவிழாவே நடக்கும். நேற்று
    பெளர்ணமி என்பதால் இன்னும் அங்கு உச்சகட்ட திருவிழாதான்...

    திருப்பூரின் பெரும்பாலான பெண்கள் அங்கேதான் இருப்பார்கள்.. ஹி ஹி குறிப்பாக நங்கைகள். அதிலும் சுரிதார்கள்
    முதல் பாவாடை தாவணிவரை என்ன அழகு என்ன அழகு! எங்கள் ஊரில் அழகான பெண்கள் இத்தனையா என்று
    ஆச்சரியப்படுத்தும் கூட்டங்கள் இவை/// ம்ம்ம்ம் நமக்கு கண்கள் அலைபாய்ந்தாலும் நான் பொறுப்பில் இருப்பதால்
    கொஞ்சம் அடக்கியே வாசித்தேன். முன்பெல்லாம் இப்படியில்லை.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, காதலர்கள் முதல், கள்ள சோடிகள் வரை அங்கே கும்மாளமிடுவதைக்
    கண்கூடாக கண்றாவியாகப் பார்க்கலாம்.. இது ஒருபக்கம் இருக்கட்டும்.. எங்கள் ஊரிலிருந்து கிட்டத்தட்ட 12 கி.மி
    தொலைவில் பெருமாநல்லூர் என்ற ஊரில் இருக்கிறது. தே.நெ சாலைக்கு மிக ஒட்டியவாறு அந்த கோவில்
    அமைந்திருக்கும். திருப்பூர் மட்டுமல்ல அண்டை ஊரிலிருந்தும் பெண்களும் ஆண்களும் பக்தர்களும் ஒன்றாக நடந்தே
    வந்து சேர்வார்கள்.. இங்கே கவனிக்க வேண்டியது, இரவு நேரத்தில் இந்த நடை பயணத்தை ஆரம்பிப்பார்கள்... திருப்பூர்
    - பெருமாநல்லூர் சாலை முழுக்க மஞ்சள் வண்ணப் புடவை கட்டிய பக்தப் பெண்களையும் மஞ்சள் வேட்டி கட்டிய
    ஆண்களையும் காணமுடியும். இதனோடு ரவுசு செய்யவே எங்களைப்போல செல்லும் கூட்டம் மிக அதிகம்.

    பொதுவாக பக்தர்கள் அவரவர் ஊரிலிருந்து கிளம்பும்போது அங்கங்கே உள்ள கோவிலில் விசேச பூசைகள் செய்துவிட்டு
    பின் பயணத்தைத் தொடருவார்கள். பெரும்பாலும் மஞ்சள் உடை தரித்தவர்கள் எல்லாருமே மாலை அணிந்து
    வேண்டியிருப்பார்கள்.. குண்டம் இறங்குபவர்கள்.. வழி முழுக்க குடம்குடமாய் நீராடலும் பக்திப் பரவசத்தில் அருள் வந்து
    ஆடும் பக்தர்களிடம் நிறைகுறை கேட்பதுவும் திருநீறு பூசிவிடுவதும் நிறைய இடத்தில் காணலாம். இங்கே எத்தனை
    நாள் திருவிழா என்று எனக்குத் தெரியாது. எல்லாருமே கிட்டத்தட்ட 6 மணியளவில் கிளம்பிவிடுவார்கள். இரவு 11
    மணிக்கு கிளம்பும் கூட்டமும் உண்டு.. கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் அங்கே கூடியிருந்தார்கள் என்பது என் கணக்கு.
    மேலும் இருக்கலாம்.

    நான் ஏற்கனவே சென்றிருக்கிறேன் என்றாலும் நேற்று வேளையிருந்ததால் கிட்டத்தட்ட யோசனையே இல்லை..
    என்னிடம் எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு.. நான் எங்காவது வருவதாக யாரிடமும் வாக்கு தரமாட்டேன். என்
    நண்பர்கள் என்னிடம் எங்காவது போவதைப் பற்றி முன்பே சொல்லுவார்கள் ஆனால் நான் முடிவெடுப்பது அன்று இரவு
    அல்லது அன்று அதிகாலைதான்... அதேமாதிரி நேற்று பத்து மணியளவில் திடீரென ஒரு யோசனை. கொண்டாத்தா
    கோவிலுக்குச் சென்றால் என்ன? என்று. சரி உடனே என் நண்பர்களை அழைத்தேன். குமார், எங்கள்
    அலுவலகத்திற்கருகில் வேலை புரியும் நண்பர், என் இளமைப் பருவமுதலே பழகும் இனியவன் சுரேஷ், அவன் அண்ணன்
    ரமேஷ், இவர்களின் பெரியப்பா மகன் ரவி, நான், இன்னொரு நண்பர் திருப்பதி ஆகிய ஆறுபேர் கிளம்பினோம்.
    பொதுவாக என்னுடைய குழு இவர்கள் கிடையாது சுரேஷ் தவிர, எங்கள் குழுவில் மொத்தம் இருபதுக்கும்
    மேற்பட்டவர்கள் இருப்பார்கள்.

    இரவு சுரேஷ் வீட்டிற்கு சென்று அவனை அழைக்க இருக்கையில் பசியெடுத்ததால் நானும் குமாரும் நேரே
    உணவகத்திற்கு சென்றோம். ஒரு புரோட்டா, இரண்டு தோசைகள் இரண்டு மீன் மற்றும் ஒரு அரைவெம் முட்டை
    (ஆப்பாயில்) சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். ஒரு கிமீ தாண்டியிருப்போம். அப்போதே கூட்டம் அதிகமாக
    சென்றுகொண்டிருந்தது. எங்களுக்கு முன்னே இரண்டு வண்டிகள் சென்று கொண்டிருந்தது. பின்னே கிட்டத்தட்ட
    இருபது வண்டிகள் வந்துகொண்டிருந்தன. நாங்கள் முன்னும் பின்னுமாக சென்று கொண்டிருந்தவேளையில் எங்களுக்குள்
    இரு வண்டிகளில் நல்ல வடிவான பெண் அமர்ந்து சென்று கொண்டிருக்க, வண்டியோட்டிய நானோ அந்த பெண்ணை
    பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். நாங்கள் லூட்டி அடிக்க, அந்த பெண்கள் இருவரும் கையசைக்க,, ஒரே
    கூத்துதான் போங்கள்... பெருமாநல்லூர் வரை நாங்கள் பிந்தொடர்ந்தே சென்றோம். அட! வண்டியை நிறுத்தும்போதுகூட
    அருகிலே தானே நிறுத்தினோம்...

    நிறுத்தியதும் தே.நெ சாலை கடந்து சென்றுகொண்டிருக்கையில் ஒரு சுற்றுலா வேன். அதில் சில நங்கைகள்
    அமர்ந்திருந்தனர். திருவிழாவை ரசித்துக்கொண்டே சென்றுகொண்டிருக்க, நான் அவர்களுக்கு கையசைத்தேன்.
    அவர்களும் சிரித்துக்கொண்டே கையசைத்தார்கள். கூட்டமாக இருந்தமையால் அவர்களின் வேன் மெதுவாகவே
    சென்றுகொண்டிருந்தது. நான் நடந்தவாறே நீங்கள் இந்த ஊரா என்று கேட்டேன். பதில் ஆமாம் என்று வந்தது. பின்
    ஒருசில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.. பொறுக்க முடியாத நண்பர்கள் என்னை அப்படியே திருவிழா நடக்கும்
    இடத்திற்கு அழைத்துச் செல்ல, நானும் அந்த கிளியும் கொஞ்சம் சோர்ந்துபோனதென்னவோ உண்மைதான்..

    நேரே ராட்டினங்கள் சுற்றும் இடத்திற்கு சென்றோம்... செம கூட்டம். அங்கு நிற்கவே முடியவில்லை. கொஞ்சம்
    கொஞ்சமாக அங்கிருந்த நங்கையர்களை ரசித்தவாறே மெல்ல பொருள்கள் விற்கும் இடம் நோக்கி அகன்றோம். என்
    கண்களில் முதலில் தென்பட்டது பலூன் சுடும் இடம். போன வருடம் வந்தபோது கிட்டத்தட்ட சாம்பியனாக இருந்தேன்.
    பத்து குண்டுகளில் எட்டு பலூன்களை சுட்டு நண்பர்களிடம் பாராட்டு பெற்றமையால் இம்முறை என்னிடம் எதிர்பார்ப்பு
    கூடியது. ஆனால் ஏமாற்றம். அப்படியே தலைகீழ் ஆனது. பத்து குண்டுகளில் இரண்டு பலூன்களை மட்டுமே சுட்டேன்.
    துப்பாக்கி லேசாக கோணமாக இருந்ததுதான் காரணம் என்று நினைக்கிறேன்.

    பெண்கள் உபயோகப் பொருள்களான முடிப்பின்னல், சீப்பு, கண்ணாடி, வளையல், நகச்சுருள், தங்கமாதிரி மாலை,
    போன்றவைகள் பார்த்துக்கொண்டே வந்தோம். சில கடைகளில் பீங்கான்களால் ஆன பாத்திரங்கள், சிலவற்றீல்
    களிமண்களை பீங்கான் என்று சொல்லி விற்கும் பாத்திரங்கள் என்று பலவகைகளைப் பார்த்தோம். முக்கியமாக
    நங்கையர்கள் எங்கே நிற்கிறார்களோ அங்கேயெல்லாம் சென்று நின்றுகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வீட்டு
    உபயோகப் பொருள்கள், சிறார்களுக்கு விளையாட்டுப் பொருள்கள், பலவகை திண்பண்டங்கள் என்று அந்த இடமே
    களிப்பாக இருந்தது,... எங்களைப் போன்ற இளைஞர்களின் கூட்டத்தால் திருவிழாவே அல்லோலகல்லோலமாக
    இருந்தது. அங்கே கிட்டத்தட்ட ஒருமணிநேரம் உலாவிக்கொண்டிருந்தோம், மெல்ல பட்டி மன்றம் நடக்கும் இடத்திற்கு
    சென்றோம்

    திரைப்பாடல்களைப் போட்டு அதில் உள்ள குறைபாடுகளைச் சொன்னவாறு பட்டிமன்றம் நடந்தது. தலைப்பு
    என்னவென்று தெரியவில்லை... நங்கையர் தலைப்பைத் துலாவிக்கொண்டு வரும் எங்களுக்கு பட்டிமன்றத்தலைப்பு எப்படி
    கண்களுக்குத் தெரியும்?. சரி, இடையில் ஒன்றுமே சாப்பிடவில்லையா என்று கேட்டீர்களேயானால் எப்படி நான் மறுக்க,
    ஒன்று விடாமல் ருசி கண்டுவிட்டோம். பெரும் அப்பளம்,. காரவடை, காளிப்ப்பூ சில்லி சுண்டல் என்று காரமாக ஒரு
    இடத்திலும், மாங்காய், கரும்பு, கொய்யா., என்று இயற்கை பதார்த்தங்கள் ஒரு இடத்திலும், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள்
    என்று ஒரு இடத்திலும் சாப்பிட்டு நடக்க முடியாமல் தள்ளாடியது தனிக்கதை. ஆனால் நாங்கள் எங்கு சென்றாலும்
    அங்கே ஒரு பெண்கள் கூட்டம் இருப்பது ஏன் என்றே தெரியவில்லை./

    சரி இம்முறை எப்படியும் ராட்டினம் சுற்றுவது என்ற முடிவோடு, சென்று கூட்டத்தில் நின்றால், எங்களுக்கு முன்னால்
    கிட்டத்தட்ட நூறுபேராவது இருந்திருப்பார்கள். இதுவேண்டாம் என்ற முடிவோடு, பிரேக் டான்ஸ் எனப்படும் ஒரு சுற்று
    ஒன்றில் பயணம் செய்ய நுழைவுச் சீட்டு வாங்கினோம். அதற்கே போதும்போதுமென்றாகிவிட்டது. சென்று அமர்ந்து
    சென்று சுற்றினால், வேகமேஇல்லை, இரண்டு நிமிடங்கள் தான் சுற்றினோம். அதற்குள் இறக்கிவிட்டார்கள்,. இதற்கு
    இருபது ரூபாய் தண்டம்... பேசாமல் பிளாக் தண்டர் போயிருந்தால் நன்றாக சுற்றி இருக்கலாம். (நிறைய நங்கையர்
    கூட்டம் வரும்... ) மணி பனிரெண்டாகிவிட, நண்பன் சுரேஷுக்கு தூக்கம் வந்துவிட்டது. மெதுவாக அங்கிருந்து
    கழன்று வந்தோம். வரும் வழியில் நாக்கு சும்மா இருக்காமல் ஐஸ்கிரீம் கேட்டது. சரி என்று தண்டம் வைத்துவிட்டு
    வண்டியை எடுத்து கிளம்பினோம்,. சுமார் 20 நிமிடத்தில் நாங்கள் எல்லாரும் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம்.///

    வந்தபின்னர் பார்த்தால் மணி கிட்டத்தட்ட 1.15 இந்நேரத்தில் மன்றத்தில் யாரும் இருக்கமாட்டார்கள் என்று வந்தால்
    அறிஞர், இளசு இருந்தார்கள். நான் சிலவற்றிற்கு பதில் அளித்துக்கொண்டிருக்கையில் ஓவியாவும் வந்தார்....

    அப்பறம் இரண்டு மணியளவில் தூக்கம் வந்துவிட, நான் தூங்கிவிட்டேன். காலை நேரம் கழித்து எழுந்தேன்.....

    திருவிழா என்றாலும் கோவில் விசேசம் ஆகையால் நான் கோவிலுக்குச் சென்றிருக்க வேண்டும்.. ஆனால் இம்முறையும்
    செல்லவில்லை... ஹி ஹி நான் இதுவரை கோவிலுக்குள் சென்றதே இல்லை.// அந்த வழியில் சென்றாலே நம் நண்பர்கள்
    உடனே ராங் ரூட் என்கிறார்கள்.. என்ன செய்ய../?

    நடக்கக் கூடாதவைகள் நான் அங்கே கண்டது :

    மிக வேகமாக சென்று கொண்டிருந்த ஒரு வண்டி பேருந்து மீது மோதி வண்டி நபருக்கு பலத்த காயம்... அதை நேரிலே
    வேறு கண்டு தொலைத்துவிட்டு சென்றமையால் கொஞ்சம் கவனமாகவே வண்டியைச் செலுத்தினேன்.

    திருவிழாவில் பெண்களை ரசிப்பதில் தவறில்லை. ஆனால் துன்புறுத்துதல் மிகவும் தவறு. ஒரு இளைஞன் ஒரு பெண்ணின்
    மீது மோதி கை பதிந்து தவறுசெய்யப் பார்க்க, அச்சமயம் பார்த்து அங்கிருந்த காவல்துறையினர் தம் கடமையினை கம்பு
    வழியே காண்பிக்க, பாவம் அந்த பெண்.... இந்தமாதிரி ஆண்கள் நடந்துகொள்ளும் விதத்தைக் கண்டால் எனக்கு
    ரொம்பவே வெறுப்பு வரும்.// சைட் அடிங்கடா! பிரச்சனையில்லாம கடலை போடுங்கடா; ஆனா அநுமதி இல்லாம
    அவங்களைத் தொடாதீங்க என்பது என் கொள்கை....

    சரி சரி... திருவிழாவில் நடந்தவைகள் நான்கண்டவைகள் இவைதான்..... இனி என்ன... பதில் எழுதுங்கள் எப்படி
    இருந்தது என்றூ..

    அன்பு
    ஆதவன்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    ம்ம்.. கலக்கி இருக்கீங்க ஐயா... திருவிழாவில சாமியைப் பார்த்த இளவயசு ஆசாமிங்க ரொம்ப கம்மிதான்...

    நேற்று 11 மணிக்கு பௌணர்மி நிலவொளியை ரசித்தேன்.. சில நிமிடங்கள்..அதே வேளை நீங்க என்ன அழிச்சாட்டியம் பண்ணி இருக்கீங்க..

    எங்களையும் அந்த கூட்டக்கடலுக்குள் அழைத்துச் சென்று...கடைசியில சாமி கும்பிட வைக்காம விட்டுட்டீங்க...

    என் கரகக்கிளியை இந்த பதிவுக்குப்பின் எழுதி இருக்கலாம்... பின்னே திருவிழா எப்படி இருக்கும்னு எல்லோருக்கும் நினைவுபடுத்தி இருக்கீங்களே..

    கால்கட்டு மாட்டிக்கிறதுக்குள்ள நல்லா கலகலன்னு அனுபவிங்க நண்பரே!!
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    திருவிழாவை கண்முன்னே நிறுத்தினீர்கள்.. ஆதவா....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by ஆதவா View Post
    எங்களுக்கு முன்னே இரண்டு வண்டிகள் சென்று கொண்டிருந்தது. பின்னே கிட்டத்தட்ட
    இருபது வண்டிகள் வந்துகொண்டிருந்தன.
    நாங்கள் முன்னும் பின்னுமாக சென்று கொண்டிருந்தவேளையில் எங்களுக்குள்
    இரு வண்டிகளில் நல்ல வடிவான பெண் அமர்ந்து சென்று கொண்டிருக்க, வண்டியோட்டிய நானோ அந்த பெண்ணை
    பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். நாங்கள் லூட்டி அடிக்க, அந்த பெண்கள் இருவரும் கையசைக்க,,
    ஆதவன்
    எங்கள் ஊரில் தற்பொழுது இராணுவ வண்டி தான் அப்படிச்செல்லும்.

    நீங்கள் சந்தோஷமாய் இருந்தீர்கள் தானே. அது போதுமைய்யா...
    சிறுவயதில் தண்ணீர்ப்பந்தலில் பானம் அருந்துவதற்காக துள்ளிக்குதித்தவை நினைவில் வந்ததது. அந்த அனுபவங்களை மீட்டித்தந்ததற்கு நன்றி ஆதவா.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    வர்ணனை அட்டகாசம் ஆதவா!
    அதில் உம்முடைய லொள்ளு அருமை ஆதவா!
    அதற்கு மேலாக நீர் அதற்கு வைத்த பெயர் - அடடடா என்னே ஒரு பொருத்தம், நான் என்னவோ எதோவென்று ஓடி வந்தேன்.

    பி.கு - நேற்று நீர் சொல்லாமல் கொள்ளாமல் தெருவுலாவிற்குப் போய் விட்டீர் இந்த பயலுகள் சரியான சந்தோசத்தில மயூரசனின் திரியிலே செம ரகளை பண்ணிட்டாங்க
    Last edited by ஓவியன்; 03-04-2007 at 11:11 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    மிகவும் நன்றி பூ! உங்கள் கரகக்கிளிக்கும் இதற்கும் ஏணி என்ன ராக்கெட்டே விட்டாலும் வானம் தொடமுடியா தூரம்.. அதற்கு உண்டான அர்த்தமே என்னை மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது... அதுதான் உண்மைக் கவிஞனின் பார்வை

    இப்போவே கால்கட்டா? அதற்கு இன்னும் எழெட்டு வருடங்கள் இருக்கிறது... அதற்குள் கலகலத்திரவேண்டியதுதான்.....

    ---------------------------------------------------------------
    நன்றிங்க ஷீ! உங்கள் கண்களுக்கு முன் கொண்டுவந்ததாக இருக்குமானால் அதுவே என் வெற்றி...
    --------------------------------------------------------------
    அன்பு ரசிகன், உங்களின் அந்த வார்த்தைகள் கண்டதும் எனக்கு மனம் என்னவோ போலாகிவிட்டது.... நாம் அனுபவிப்பவைகளும் அதற்கு நேர்மாறாக என் ஈழ சகோதர சகோதரிகள் அனுபவிப்பதும் கண்களுக்குள் வருகிறது..... விடிவு பிறக்கும் நண்பரே! எத்தனை நாள்தான் மேகம் முடங்கிக் கிடக்கும்.?
    -----------------------------------------------------------
    நன்றி ஓவியரே! (ஓவியான்னு சொல்ல முடியாது....ஏற்கனவே ஒரு ரீட்டா இருக்கச்சே எப்படி சொல்ல?.) நீங்கள் அடித்த கூத்தைக் கண்டேனே பல பக்கங்கள்.... பக்கம் திருப்பி திருப்பியே கை வலித்துவிட்டது, இருக்கட்டும்.. வேலைப் பளு ஓயட்டும்... அப்போது கவனித்துக்கொள்கிறேன் அவர்களை............. நர நர நர (பற்களிடமிருந்து சவுண்டு )
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    20 Feb 2007
    Posts
    73
    Post Thanks / Like
    iCash Credits
    8,951
    Downloads
    50
    Uploads
    0
    பரவாயில்லையே.....நல்ல பிள்ளையா இருக்கீங்களே ஆதவா...

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    ஏங்க ராஜ்... கிண்டால் பண்டுறீங்க! நான் ரொம்ப நல்லவன்னு ஊர்ல பேசிக்கிட்டாலும் ஓவரா ரவுசு உடறதால எனக்கு கொஞ்சம் என்மேலெயே சந்தேகம் வேற..............

    நன்றிங்க ராஜ்..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அன்பு தம்பி ஆதவா,

    உன் கைவண்ணதில் மலரும் அத்தனை பதிப்புகளும் நச்சத்திர பதிவு. ஒவொன்றும் ஒரு அழகான படைப்பு.

    கட்டுரை படிக்க முகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றது. இது போல் படைக்கும் இன்னொரு படைப்பளியும் நம் மன்றத்தில் உண்டு.

    ரசித்து படித்தேன். இந்த வயதில் வரும் குறும்புகளை புட்டு-புட்டு அழகாக எழுதியுல்லாய். நல்ல பதிவு.

    நன்றி ஆதவா சார்.....


    தொடர்ந்து இன்னும் பல திருவிழாக்கள் சென்று சைட் அடித்து இன்புற்று வாழ்க.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2005
    Location
    TAMILNADU
    Posts
    402
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    1
    Uploads
    0
    அய்யோ அய்யோ மிஸ் பண்ணிட்டேனே ஆதவா அவர்களே
    படிக்கும்போதே ஜாலியா இருக்கே. அடுத்தமுறை அழச்சிட்டு போங்க. சரிங்களா?

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    மிகவும் நன்றி ஓவியா அவர்களே!! சார் என்று அழைக்க வேண்டாம்... தம்பி என்று அழையுங்கள்... இது என் வேண்டுகோள்... உங்கள் வாழ்த்துப்படி நடக்க வேண்டுகிறேன்..
    என்னைப் போல எழுதுபவரா? யாருங்க? சொல்லீடுங்க.. இல்லைன தலை வெடிச்சுரும்..
    ------------------------------------------------------------
    பார்த்திபன் அவர்களே! கவலை விடுங்கள்... இன்னும் பல திருவிழாக்களும் உலாக்களும் இருக்கின்றன.... முன்னதாக.. நன்றி பார்த்திபன் அவர்களே!
    Last edited by ஆதவா; 03-04-2007 at 04:36 PM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    மிகவும் நன்றி ஓவியா அவர்களே!! சார் என்று அழைக்க வேண்டாம்... தம்பி என்று அழையுங்கள்... இது என் வேண்டுகோள்... உங்கள் வாழ்த்துப்படி நடக்க வேண்டுகிறேன்..
    என்னைப் போல எழுதுபவரா? யாருங்க? சொல்லீடுங்க.. இல்லைன தலை வெடிச்சுரும்..
    ------------------------------------------------------------
    பார்த்திபன் அவர்களே! கவலை விடுங்கள்... இன்னும் பல திருவிழாக்களும் உலாக்களும் இருக்கின்றன.... முன்னதாக.. நன்றி பார்த்திபன் அவர்களே!
    சொல்ல மாட்டேன். ஹி ஹி ஹி ஹி

    ஒருவர் ரொம்ப ரசனை மழை சொட்ட சொட்ட பதிவு போடுவார்...

    ஒரு வேளை இளசு சார் வந்து இது யார் என்று சொன்னாலும் சொல்லாம்.....
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •