Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 19

Thread: ஆதவனும் வீடியோ விளையாட்டுகளும்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    130,816
    Downloads
    47
    Uploads
    0

    ஆதவனும் வீடியோ விளையாட்டுகளும்

    அவையோர்களுக்கு..
    இன்று நான் எழுதப் போகும் அனுபவம்.. கணிணியுடனான வீடியோ கேம்ஸ். முதலில் கணிணி எப்படி எனக்கு
    அறிமுகம்?. எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் கணிணியை கண்ணில் பார்த்தேன். எட்டாக் கனி.
    தொடக்கூட அநுமதியில்லாமல் இருந்தது. DOS என்ற OS படித்த பின்தான் கணிணியைத் தொடவிட்டார்கள். பள்ளிக்கு
    வெளியே மாதக் கட்டணத்தில் படித்த போது சில மொழிகளையும் (qbasic, foxpro) சேர்த்து படித்தேன். கணக்கு நமக்கு
    சருக்கும் என்பதால் qbasic ல் தோற்றுவிட்டேன். வேலை நிமித்தமாக சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி
    இருக்கும்போதுதான் Windows படித்தேன். நான் எடுத்தது PGDCA ( Post Graduate Diploma in Computer Application)
    எல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் நான் படித்தது இரண்டு மட்டும்தான். ஒன்று முழுமையாக Windows
    (கிட்டத்தட்ட 95 சதம்) மற்றது இணையம்.
    ஊரில் வேலைக்காக Corel படித்தேன் photoshop படிக்கவில்லை; தானாக தெரிந்துகொண்டேன்.

    வேலைக்கு அமர்ந்த போதுதான் விளையாட்டுக்கள் பற்றி அறிந்து கொண்டேன். எனக்கு மிகச் சரியாக அறிமுகமாகிய
    விளையாட்டு wolf. இது ஒரு ஆக்ஸன் விளையாட்டு என்றாலும் கிராஃபிக்ஸ் அவ்வளவாக நன்றாக இருக்காது. அப்போது
    எனக்கு அதுவே பெரிதாகப் பட்டது. அந்த விளையாட்டை முழுவதுமாக முடித்துவிட்டேன். பிறகு கிடைத்தது Doom.

    எனக்கு மிக ஆர்வமுண்டாக்கிய விளையாட்டில் இதுவே முதல். முழு கேமையும் முடிப்பதற்கு நான் வெகு காலங்கள்
    எடுத்துக்கொண்டேன். DOS சார்ந்த கேம் என்றாலும் வெகு சிறப்பாக இருந்தது. அதன் பின் வேலையிருந்ததாலும்
    பெரும்பாலும் டெமோ மட்டுமே கிடைத்ததாலும் அவ்வளவாக விளையாடாமல் இருந்தேன்.

    வீட்டில் கணிணி வாங்கியதும் முதல் வேலையாக கேம் பதிவு செய்தேன். என் முதல் கேம் wolf, மற்றும் doom ஐ
    திரும்பவும் விளையாடினேன். Roadrash என்ற மோட்டார்சைக்கிள் ஓட்டும் கேம் எனக்கு பிடித்தது.. தெரிந்த ஒருவரிடம்
    முழுமையாக வாங்கி எல்லா Race ஐயும் முடித்துவிட்டேன்.. இருந்தாலும் எனக்கு திருப்தி சற்று குறைந்தே இருந்தது.

    SOF II (Soldier of Fortune II ) :

    என் வாழ்வில் மறக்க முடியாத விளையாட்டு.. First Person shootter வகையை சார்ந்தது. என் நண்பரின் உதவியில்
    டூப்ளிகேட் தகட்டில் பதிந்த இதை வாங்கி விளையாடினால்.... சீக்கிரமே செத்துவிடுவேன் (கேமில்.. ) கொஞ்சகாலம்
    எனக்கு அது பிடிக்கவே இல்லை. ஒருநாள் என் நண்பன் விஷ்ணு என்பவன் ஏதாவது கேம் விளையாடலாம் என்றான். சரி
    என்று SOF II போட்டு விளையாடினோம். அவனும் சரி நானும் சரி இருவருமே கத்துக்குட்டிகள். இருந்தாலும் கொஞ்ச
    கொஞ்சமாக விளையாடி அடுத்தடுத்த லெவலுக்கு முன்னேறினோம். இது ஆக்ஸன் கேம் என்றாலும் மூளை வேண்டும்.. சில
    இடங்களில் மூளையின் பிரயோகம் அதிகம் தேவைப்படும். வைரஸ்களை தயாரிக்கும் கும்பல் உலகம் முழுவது
    நிறைந்திருக்கும் அவர்களை அழிக்க கதாநாயகன் செல்லுவதே கதை.. கதைக் களம் எல்லா பருவநிலையிலும் எல்லா
    திணைகளிலும் நடக்கும். எனக்கு மிகவும் மிகவும் பிடித்த விளையாட்டில் இதுவும் ஒன்று.

    ஒரு ஆளாக விளையாடி முடிக்கவேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 7 மணிநேரம் வீதம் ஒரு வாரத்தில் முடித்துவிடலாம்.
    நான் எடுத்துக்கொண்ட காலம் 6 மாதம்.. இந்த விளையாட்டில் சிறப்பம்சம் என்னவென்றால் நிறைய Mission கள்
    துப்பாக்கிகள் அதைவிட புத்திசாலித்தனமான போக்கு, சிறப்பான கிராபிக்ஸ் என அனைத்து அருமையாக இருந்தது.
    இந்த கேமிற்கு அடிமையாகிவிடுவேனோ என்ற அளவிற்கு விளையாடினேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

    SOF II முடிப்பதற்குள் Spiderman, NFS, Cricket போன்றவைகளும் முடித்துவிட்டேன். குறிப்பாக Spiderman மிக
    எளிதாக இருந்தமையால் நான் அவ்வளவாக விளையாடவில்லை. விஷ்ணு அதை முடித்துவிட்டான். அதுவும்
    சுவாரசியமான கேம்தான்...

    SoF II முடித்து சில நாட்கள் சும்மாவே இருந்தேன். வேறு எந்த கேமும் கிடைக்கவில்லை. அச்சமயம் பார்த்து டிவியில்
    COD என்ற விளம்பரம் பார்த்தேன்... ஏதோ சொல்லுவார்களே Love at First Sight என்று. அதேபோல் Addict at first
    sight ஆகிவிட்டேன்..

    COD (Call of Duty)

    SoF II வை விட என் வாழ்வில் மறக்கமுடியாத கேம். இரண்டாம் உலகப் போரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது..
    எல்லா வகையிலும் SoF II வை விஞ்சும் விளையாட்டு. ஒரு போர்களத்தில் புகுந்துகொண்ட அனுபவமே இது தந்தது..
    இது தனிநபராக இணைந்து போராடும் விளையாட்டாக அல்லாமல் ஒரு குழுவாக சென்று தாக்கவேண்டும்.. அதன்
    நேர்த்தி இன்றும் என்னால் மறக்கமுடியாது. ஏகப்பட்ட Mission கள். அதிலும் பல நினைத்தாலே எனக்கு இன்றும்
    மன்றத்தில் எழுதுவதை விட்டுவிட்டு கேம் ஆடலாமோ என்று தோன்றும். அத்துணை சிறப்பு இந்த கேமிற்கு. இந்த
    கேமிற்காகவே யாருக்கும் தெரியாமல் 2500 ரூபாய் செலவு செய்து nVidia Card வாங்கினேன்.

    நான் எதிர்பார்த்த திருப்தி எனக்கு இந்த கேம் மூலமாக மட்டுமே கிடைத்தது. துப்பாக்கிகளோடு கையெறி குண்டுகள்.
    கால குண்டுகள் மற்றும் வண்டி ஓட்டிக்கொண்டே சுடுவது.. பீரங்கிகள் ஓட்டி குண்டு எய்வது.. வானில் பறக்கும்
    விமானங்களை சுடும் சிறப்பு எந்திரங்களை சிறப்பாக கையாள்வது, தந்திரமாக எதிரியின் கட்டிடத்தில் கால குண்டு
    வைப்பது என்று அனைத்தும் படு பிரமாதம்.. இடையிடையே SOF II போலவே படமாக ஓடும்.. SoF II கேமிற்கு
    நிச்சயமாக ஆங்கில அறிவு தேவை. இதற்கு அவ்வாறில்லை.. சுமார் 4 மாதத்தில் முடித்துவிட்டேன். (இதுவரை
    மூன்றுமுறை முடித்துவிட்டேன்...)

    நிச்சயமாக பலரும் விளையாடக்கூடியது. வாய்ப்பு கிடைத்தால் Call of Duty விளையாடிப்பாருங்கள்

    அதன்பிறகு Maxpayne, MIB, WWE, போன்றவைகள் வந்துபோனாலும் எனக்கு அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை.

    DOOM 3 . நான் பெரும்பாலும் Activision கம்பனி கேம் களை மட்டுமே வாங்குவேன். அந்த கம்பனி மட்டுமே
    யதார்த்தமாகவும் 3D கிராபிக்ஸ் அழகாகவும் கொடுக்கும் கம்பனி. அதன் அடுத்த தயாரிப்பாக Doom 3 வாங்கினேன்.

    DOS ல் விளையாடிய அதே தான்.. இப்போது 3D முலாம் பூசி கொடுத்திருக்கிறார்கள்,. மிகவும் சிறப்பான 3D க்ராபிக்ஸ்
    கொண்ட கேம்.. இதன் தேவைப்படி பாருங்கள் : 128 MB Video Ram, 512 MB RAM.

    நீங்கள் இதயநோயாளியானால் தயவுசெய்து இந்த கேம் பார்க்கக்கூட வேண்டாம்.. அவ்வளவு கொடூரமானது.. அதைவிட
    ஒலி........ சொல்லக்கூட முடியாது. திடீரென தாக்குதலுக்கு திடீர் ஒலி கொடுப்பார்கள்.. நான் பயத்தாலேயே இதன் Patch
    Resurrection of Evil விளையாடவே இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. மார்ஸ் கிரகத்தில் நடப்பதாக
    விளையாட்டு செல்லும். (ராக் நடித்த டூம் படமும் இதைப் பார்த்து எடுத்த படம்தான்.) ஒவ்வொரு நொடியும் பயந்தவாறே
    செல்லவேண்டும்.. பயந்துகொண்டே முடித்துவிட்டேன்.. ஆனால் முடிக்க ஒருவருடமே ஆகிவிட்டதுதான் கொடுமை..

    இதில் Mission களுடன் PDA உபயோகமும் செய்யவேண்டும்.. அந்த யுக்தி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. PDA
    மூலமாக மெயில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது வாங்கிக்கொள்ளலாம். பேயால் தாக்குண்டு இறந்துபோன
    விஞ்ஞானிகளிடமிருந்து ரகசிய வார்த்தைகள் அவர்களை பற்றிய குறிப்புகள் போன்றவைகளை பெற்றுக்கொள்ளலாம்.
    கேம் நகருவதற்கு முக்கிய காரணியாக இது இருக்கிறது. துப்பாக்கிகள் விதவிதமாய்.... ஒவ்வொன்றும் மிக அருமை.

    World of Warcraft III : குறிப்பிட்டு சொல்லக்கூடிய கேமில் இதுவும் ஒன்று.. முழுமையும் என் நண்பன் விஷ்னு
    உதவியுடன் முடித்தேன். நான்கு பிரிவுகளாக சண்டையிடவேண்டும். இந்த வகை விளையாட்டு ( platform என்று
    நினைக்கிறேன் ) பிடித்திருந்தது. இந்த கேமில் கேம் கிராபிக்ஸைவிட இடையிடையே வரும் Movie கிராபிக்ஸ் எந்த
    ஒரு ஹாலிவுட் படத்திலும் பார்த்ததில்லை. வீடியோ இணைத்துள்ளேன் பாருங்கள் நேர்த்தியை..

    [media]http://www.youtube.com/watch?v=1rquXW-rKJ8[/media]


    Age of empires 3 வந்ததும் வாங்கியதுதான். விளையாடவே இல்லை. ஆர்வம் குறைந்துவிட்டது..

    இதுவும் முடிந்த பிறகு பல கேம்கள் கிடப்பில் கிடக்கின்றன.. Brothers in Arms, Hulk, போன்றவைகளும் பட்டியலில்
    அடக்கம்... Hulk முழுவதுமாக முடித்துவிட்டேன். பலவற்றிற்கு பெயர்கூட மறந்துபோய்விட்டது.. இதற்கு பின்
    முழுமையாக விளையாடிய ஒரே கேம் COD II தான்..

    COD II (Call of Duty 2) : பழைய கேம் போலத்தான். கிராபிக்ஸ் வித்தியாசம் இருக்கிறது. இது இன்னும் யதார்த்தம்.
    பழைய கேமில் மருத்துவப் பெட்டி எடுத்துக்கொண்டால்தான் உயிரோடு கேம் முடிக்கமுடியும். இதில் அப்படியில்லை.
    ஆசுவாசப்படுத்திக்கொண்டு பின் செல்லவேண்டும். நாட்டின் சார்ப்பாக விளையாடவேண்டும்.. பல அம்சங்கள் எனக்கு
    பிடித்திருந்தன.. இருந்தாலும் முதல் கேம் போல இல்லை..

    இப்போது கேம் விளையாடுவதில் ஆர்வம் குறைந்துவிட்டது. ஆனாலும் பட்டியல் இருக்கிறது

    முக்கியமாக கவனிக்கவேண்டியது: பக்குவம் உள்ளவர்கள் மட்டுமே விளையாடவேண்டும்.. எந்த சூழ்நிலையிலும் Cheat
    code உபயோகித்தல் கூடாது.. நான் டூம் 3 க்கும் மட்டுமே உபயோகித்தேன். அதுவும் கடைசி கிளைமாக்ஸில்.
    Last edited by ஆதவா; 16-03-2007 at 03:49 PM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    25,577
    Downloads
    17
    Uploads
    0
    ஹ்ம்ம்ம்.. உங்களுக்கு நிறைய நேரம் இருக்கு போல .. வருடக்கணக்கில் விளையாடியிருக்கீங்க.. கம்ப்யூட்டர் கேம் ஆடுவது மிகவும் அலாதியான சுகம். எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனாலும் பாருங்க.. நான் அதிகம் கேம் விளையாடியது கிடையாது. CLAW என்ற விளையாட்டில் சில லெவல்கள் போயிருக்கேன். கார் ரேஸ், பைக் ரேஸ் போன்ற கேம்கள் ஆடியிருக்கேன். நீங்க சொல்லிய அனைத்து கேம்களையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். விளையாடுவதற்கு கொடுத்துவைக்கவில்லை . COD (Call of Duty) இணையத்தில் கிடைக்குமா ஆதவா?

    (நீங்க கொடுத்திருக்கும் வீடியோ எந்த கேம். படம் மாதிரியே இருக்கே..)

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    130,816
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by மன்மதன் View Post
    ஹ்ம்ம்ம்.. உங்களுக்கு நிறைய நேரம் இருக்கு போல .. வருடக்கணக்கில் விளையாடியிருக்கீங்க.. கம்ப்யூட்டர் கேம் ஆடுவது மிகவும் அலாதியான சுகம். எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனாலும் பாருங்க.. நான் அதிகம் கேம் விளையாடியது கிடையாது. CLAW என்ற விளையாட்டில் சில லெவல்கள் போயிருக்கேன். கார் ரேஸ், பைக் ரேஸ் போன்ற கேம்கள் ஆடியிருக்கேன். நீங்க சொல்லிய அனைத்து கேம்களையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். விளையாடுவதற்கு கொடுத்துவைக்கவில்லை . COD (Call of Duty) இணையத்தில் கிடைக்குமா ஆதவா?

    (நீங்க கொடுத்திருக்கும் வீடியோ எந்த கேம். படம் மாதிரியே இருக்கே..)
    இல்லையில்லை.. வார இறுதிநாட்கள் மட்டும்தான். அதனால்தான் வருடக்கணக்கில் விளையாடவேண்டியதாகப் போயிற்று. நான் இணைத்துள்ள வீடியோ படம் World of Warcraft III இல் லெவல் முடிந்து வரும் வீடியோ. அதன் முழுமையான வீடியோ என்னிடம் உள்ளது. 23 MB வரும். கிராபிக்ஸ் நேர்த்தியை சற்று பெரிதாகவே பார்த்துக்கொள்ளலாம். இம்மாதிரி ஐந்தாறு வீடியோக்கள் உள்ளன.. கிராபிக்ஸ் தரம் மலைக்க வைக்கிறது.
    COD கிடைக்கிறது.. தங்களுக்கு அனுப்புகிறேன்.
    Last edited by ஆதவா; 16-03-2007 at 04:44 PM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    250,670
    Downloads
    151
    Uploads
    9
    நமக்கு வீடியோ விளையாட்டுக்கெல்லாம் நேரமில்லைப்பா. குடுத்து வைத்தவரப்பா நீர்.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    34,827
    Downloads
    15
    Uploads
    4
    வளர்ந்து பெரிய ஆளாக மாறினவுடன் தான் வீடியோ கேம் பற்றி தெரிந்தது... இப்ப விளையாட நேரமில்லை.. இன்னும் சில வருடங்கள் பையன்கள் கொஞ்சம் வளர்ந்தவுடன் சேர்ந்து விளையாடனும்.
    ஆதவா, கண்ணாடி போட்டதின் இரகசியம் இது தானா....

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    18,750
    Downloads
    61
    Uploads
    0
    நானும் உங்களைப் போல்தான் ஆதவா. முதலில் Dave விளையாட ஆரம்பித்தேன். கடைசி லெவல் வரை விளையாடிய பிறகு Dave-2I விளையாடினேன். ஆனால் இதில் கடைசி லெவல் வரை போகவில்லை. அப்புறம் உங்களை மாதிரியே Wolf, Doom அனைத்தும் விளையாடிவிட்டு மம்மி-2 விளையாடினேன். அருமையான விளையாட்டு அது. சுமார் ஆறு மாதங்களாயிற்று அதை முடிக்க. அப்புறம் கிரிக்கெட். இப்போது கேம் என்பதே மறந்து போச்சு...!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    130,816
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by Nakkeeran View Post
    நமக்கு வீடியோ விளையாட்டுக்கெல்லாம் நேரமில்லைப்பா. குடுத்து வைத்தவரப்பா நீர்.
    அப்படியெல்லாமில்லை.. ஞாயிறு மட்டும்தான்...

    Quote Originally Posted by அறிஞர் View Post
    வளர்ந்து பெரிய ஆளாக மாறினவுடன் தான் வீடியோ கேம் பற்றி தெரிந்தது... இப்ப விளையாட நேரமில்லை.. இன்னும் சில வருடங்கள் பையன்கள் கொஞ்சம் வளர்ந்தவுடன் சேர்ந்து விளையாடனும்.
    ஆதவா, கண்ணாடி போட்டதின் இரகசியம் இது தானா....
    ஆம் அறிஞரே! அவர்களுக்கு வாங்கிக்கொடுங்கள்.. அனுபவத்தில் சொல்கிறேன்.. சுடும் விளையாட்டுகளை என்று வாங்கிகொடுக்காதீர்கள். அடிமையாக்கிவிடும். கண்ணாடி, கணிணி பார்க்காததற்கு முன்னிருந்தே போட்டது.. (கிட்டத்தட்ட )

    Quote Originally Posted by ஜே.எம் View Post
    நானும் உங்களைப் போல்தான் ஆதவா. முதலில் Dave விளையாட ஆரம்பித்தேன். கடைசி லெவல் வரை விளையாடிய பிறகு Dave-2I விளையாடினேன். ஆனால் இதில் கடைசி லெவல் வரை போகவில்லை. அப்புறம் உங்களை மாதிரியே Wolf, Doom அனைத்தும் விளையாடிவிட்டு மம்மி-2 விளையாடினேன். அருமையான விளையாட்டு அது. சுமார் ஆறு மாதங்களாயிற்று அதை முடிக்க. அப்புறம் கிரிக்கெட். இப்போது கேம் என்பதே மறந்து போச்சு...!
    அட டேவ்... மறந்து போய்விட்டது. மம்மி முதல் பாகம் ஆடியிருக்கிறேன். இரண்டாவது இப்போதுதான் கேள்வி படுகிறேன். ஏனோ தெரியவில்லை. நம்மவர்கள் தோற்றுப் போனால் கிரிக்கெட் எடுத்து விளையாடுவேன்.. என்னிடம் Brain Lara 98 Game, EA Sports 2002, 2005, 2006, Brain lara 2006 International Cricket Captain ஆகிய எல்லாமே இருக்கிறது.. ஒன்றும் உருப்படி இல்லை. EA கொஞ்சம் பரவாயில்லை.. அதிலும் வீரர்களின் பெயர்களை மாற்றிவிட்டார்கள்..

    எனக்கும் கிட்டத்தட்ட அது மறந்து போயிற்று.. அப்படிசொல்வதை விட சலித்து போய்விட்டது. அதைவேறு காசு கொடுத்து வாங்கவேண்டும்.. புது கேம் என்பதால் டூப்ளிகேட் வருவதற்கும் நேரமாகும்.. இப்போது இணையமிருப்பதால் பரவாயில்லை.


    டுமீல் டுமீல்....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    7,486
    Downloads
    14
    Uploads
    0
    நானும் உங்களைப் போல்தான் ஆதவா எங்க அப்பாவிடம் இதனால் நல்ல அடி வாங்கினதுன்டு எங்க அப்பா கால்வதுரையில் பணிபுரிவதால் பஞ்சமே இல்லாமா அடி விழும் இப்ப தா நா Age of empires 2 வியையாட ஆரம்பிச்சுருக்கேன்
    Last edited by மனோஜ்; 16-03-2007 at 08:19 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    56,107
    Downloads
    4
    Uploads
    0
    கொஞ்சம் ஆரம்பத்தில் சீட்டுக்கட்டு , பின் மகனுடன் சேர்ந்து சில கேம்ஸ் இவ்வளவே என் அனுபவம்..

    ஆதவாவின் நீண்ட அனுபவம் படிக்க சுவை...
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    9,784
    Downloads
    60
    Uploads
    24
    அடப்பாவி பயலே ....
    இணையம் பார்க்கவே நேரம் கிடைக்காது.. கேம் விளையாட்டுமா???

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    130,816
    Downloads
    47
    Uploads
    0
    நன்றி இளசு மனோ மற்றூம் மயூரேசன் அவர்களுக்கு..
    -------------------

    இப்போல்லாம் இல்லைப்பா!! மன்றம் வந்தபிற்பாடு கேம் மறந்தே விட்டது...............

    உ.கோ வில் இந்தியா தோற்றதும் சிறிது நேரம் கிரிக்கெட் கேம் விளையாடி எல்லா அணியையும் தோற்கடித்து மகிழ்ந்தேன்........ ஹி ஹி
    Last edited by ஆதவா; 30-03-2007 at 06:54 PM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    9,784
    Downloads
    60
    Uploads
    24
    1. 3D wolf
    2. Age of Empire
    3. Doom III
    4. Spider Man
    5. Project IGI (முற்றாக முடித்தேன்)
    6. Max payne (முற்றாக முடித்தேன்)
    7. NFS - Underground, Most wanted, Carbon (விளையாடியதில் பிடித்தது மோஸ்ட் வோன்டட், கார்பன் விளையாட இப்போதெல்லாம் நேரம் இல்லை)
    8. Terminator
    9. Red Alert
    10. Men In Black
    11. Lord of the Rings
    இன்னும் சில... இதுதான் என்னோட விளையாட்டுடுப் பட்டியல்!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •