கடவுசீட்டை காணாவில்லை. (தமிழ் வார்த்தை உதவிக்கு நன்றி: இளசு)
சில வினாடிகள் இதயம் நின்று அப்புறம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது, தொலைந்ததின் விளைவுகள் மனதில் வர இன்னும் பயம் அதிகரிக்க, இதயம் அடிப்பது வேகமானது
சுற்றி இருப்பவர்களை அவர்களிடம் என் கடவு சீட்டு தவறி இருக்கிறதா என்று கேட்டு கொண்டேன்
சிலர் நக்கல் சிரிப்போடு நகர்ந்தனர்,
சிலர் பரிதாபமாக பார்த்து நகர்ந்தனர்.
ஆனால், அனைவரும் அவரவர் கடவு சீட்டு சரியாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டனர்.
பக்கத்தில் இருந்த இருக்கையில் என்னை அமர்த்தி கொண்டு மீண்டும் ஒருமுறை எல்லா ஆவணங்களையும் சோதனை செய்ய ஆரம்பித்தேன்
எல்லாம் இருந்தது, கடவுச்சீட்டை தவிர.
பயப்படுவதால் எந்த பயனும் இல்லை என்பது தெரிந்து கொண்டதான் என்னை நானே அமைதிபடுத்திகொள்ள வழக்கம்போல் கண்களைமூடி ஒரு சின்ன ஜெபம் செய்து கொண்டேன்.
அடுத்து என்ன
மணியை பார்த்தேன் அதிகாலை 1:30
இப்போ இந்தியாவில் உள்ளவர்களையும் தொடர்பு கொள்ள முடியாது, சீனாவில் உள்ளவர்களையும் தொடர்பு கொள்ளமுடியாது. ஒரே வழி விடியும் வரை காத்திருந்து சீன அலுவலகத்தில் உள்ளவர்கள் வழியாக எதாவது செய்யவேண்டும் இந்திய மேலாளர்களுக்கு தகவல் சொல்லனும் ஆனால் எதுவானாலும் விடியும் வரை காத்திருக்கனும். அப்படியே அதுகுள்ள கடவு சீட்டு கிடைத்துவிட்டாலும் நல்லதே.
காத்திருக்க பிரச்சினைவராமல் இருக்க முதலில் இங்க உள்ள போலிஸ் கிட்ட சொல்லிடலாம் என்று அங்கிருந்த ஒரு போலிஸ்கரரிடம் போயி எனது கடவுசீட்டு கானாமல் போயிருப்பதை சொன்னேன்.
ஒரு கம்பிளையண்ட் கொடுங்களேன்..
கொடுக்கிறென் அதுக்கு முன்னால் சிறிது தேட வேண்டும், சிறிது அவகாசம் தேவை
சரி
நான் நகர்ந்து ஒரு காப்பிகடையின் நாற்காலியில் அமர்ந்து கொண்டேன் கொஞ்சம் கொஞ்சமாக விமான நிலையம் காலியாக ஆரம்பித்திருந்தது. அடுத்த விமானம் காலை 6:00 மணிக்குதானாம்.
எவ்வளவுதான் மனசு பயப்படாதது போல் காண்பித்து கொண்டாலும், பேச்சில் காண்பித்து கொள்ளாமல் இருந்தாலும் ஒரு பயம்
சீன சிறைசாலைகள் எவ்வாறு இருக்கும்???
என்ன உணவாயிருக்கும்????
எத்தனை நாள் இங்க மாட்ட வேண்டியிருக்கும்..???
என் அலுவலக நிலை??
எத்தனை, எத்தனையோ கேள்விகள்
பயத்தை குறைத்துகொள்ள பல பல யுக்திகள் கையாண்டாலும், கடைசியாக என்னுடைய ஜெபமாலைதான் கைகொடுத்தது எடுத்து உருட்ட ஆரம்பித்தேன்
அதை எப்போதும் கையில் வைத்திருந்தாலும், வழக்கம்போல் பயம், தேவை வரும்போது மட்டும் பக்தியில் ஓங்கிபோயிருந்தேன் நானும் மனுசந்தானே
கொஞ்சம் பயம்விட மறுபடியும் சுற்றுமுற்றதை ஆராய ஆரம்பித்தேன். இரவு நேரம் ஆதலால் ஆட்களின் ஓட்டம் குறைவாக இருந்தது. சர்வதேச விமானநிலயங்களுடம் போட்டி போடவேண்டும் என்றே எல்லாவற்றையும் ஆடம்பரமாக வைத்திருந்தது தெரிந்தது. தூரத்தில் ஒரு பணமாற்றும் இயந்திரம் இருப்பதை பார்த்து அதில் ஒரு 100 அமெரிக்க டாலரை போட்டு அதற்கான சீன பணத்தை எடுத்து கொண்டேன். சுமார் 760 யுவான் கிடைத்தது அதில் 50 யுவான் தரவு காசாக எடுத்து கொண்டது அந்த இயந்திரம். கையில் கிடைத்த பணத்தில் 6 யுவான் கொடுத்து ஒரு காப்பி வாங்கி கொண்டேன். அந்த நிமிடத்திலும் காப்பி ருசிக்கதான் செய்தது
கையில் கடிகாரம் கட்டும் பழக்கம் எனக்கு இல்லை. அதனால் அலைபேசியில் நேரத்தை பார்த்து கரைந்து கொண்டிருந்தேன். சுமார் 2:15 மணிக்கு ஒரு இந்தியன் விமான நிலையத்தினுள் வந்து அங்கும் இங்குமாக யாரையோ தேடி கொண்டிருந்தான். நானும் எதுவும் விசாரிக்காமல் அவனை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அவன் அவன் கையில் இருக்கும் கடவி சீட்டை விரித்து பார்த்து என்னிடம்..
நீங்க பெஞ்சமின்..
ஆமா
சாரி, சார், உங்க கடவு சீட்டை என்னுடையது என்று எடுத்துட்டு போயிட்டேன்
பரவாயில்லை, நன்றி
கோபமில்லையே..
திரும்ப வந்து கொடுத்திங்களே அதுக்கு நன்றி
சரி.. பார்க்கலாம்
.. நான் பதில் எதுவும் சொல்லவில்லை
அவனும் கண்டு கொள்ளவில்லை, அவன் பெயரை கூட நானும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. அந்த நேரத்தில் நான் கொஞ்சம் நாகரிகமாக அவனிட நடந்து கொண்டதே அவன் திரும்ப வந்து அந்த கடவுச்சீட்டை தந்தமைக்கு, ஆனாலும் என்னை அத்தனை நேரம் கஷ்டபடுத்தியத்ற்கு கோபம் இருந்தது.
நான் முதலில் பேசிய போலிஸ்காரரிடம் என்னுடைய கடவு சீட்டு கிடைத்ததை கூறி விட்டை, கஸ்டம்ஸ் பகுதியும் ஆவணக்களை கொடுத்துவிட்டு மீண்டும் பணமாற்றி இயந்திரத்தை அணுகி மேலும் 100 டாலர்களை யுவான்களாக மாற்றி கொண்டு விமான நிலையத்தின் வேளியே வந்தேன் அலைபேசியில் மணி 2:30 என்று காட்டியது, சுற்றி பார்த்தேன் ஒரு போலிஸ்காரரை தவிர வேறு எதுவும் இல்லை.
அவரிடம் போயி
டாக்ஸி என்று வாயால் சொல்லி, கையால் எங்கே? என்று கேக்க அவ்ர் வலதும் இடதுமாக தலையாட்டினார்
அடுத்தவிமானம் காலை 6:00 மணிக்குதான் என்று அவர்கள் சொன்னது நியாபகம் வர.
அட அப்ப அதுவரைக்கும் பிளாட்பார தூக்கம்தானா!!!!!
ஒரு நப்பாசையில் மீண்டும் ஒருமுறை சுற்றிபார்த்தேன் தெருவிளக்குகளையும் விமான நிலைய காவலர்களையும்தவிர எதுவும் என் கண்ணுக்கு தென்படவில்லை..
Bookmarks