Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 50

Thread: முயற்சிப்போமே..!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    Thumbs up முயற்சிப்போமே..!

    அன்பு நண்பர்களே,

    இந்தப்பதிவை அதிகமான உறவுகள் விரும்பப்போவதில்லை என்றாலும் பதிக்கிறேன். மன்றத்தில் இணைய வரும் புதிய உறவுகளுக்கு இந்தப்பதிவின் கருத்துக்கள் பொருந்தாது.

    ஆங்கிலத்தில் மட்டுமே தட்டச்சு செய்து பழகியவர்கள் தமிழைக்கண்டதும் ஆர்வம் கொண்டு, தட்டச்சு செய்வது சாதாரணமான ஒன்று. அவ்விதம் செய்யும் போது எழுத்துப்பிழைகளும், கருத்துப்பிழைகளும் வருவதும் சாதாரணமான ஒன்றுதான். அதே போல் ஆங்கில வார்த்தைகள் அல்லது எழுத்துக்களை சில இடங்களில் உபயோகிக்கவும் செய்கிறோம். தமிங்கிலம் என்ற புதிய வார்த்தைக்கே உரித்தான வகையிலும், தட்டச்சு செய்கிறோம்.

    ஆரம்பத்தில் தமிழில் தட்டச்சு செய்வதில் சற்று சிரமம் இருந்தாலும், காலப்போக்கில் தட்டச்சு சுலபமாகிவிடும் என்பதுதான் உண்மை. எனக்கும் அடிப்படையிலேயே ஆங்கில தட்டசோ, தமிழ் தட்டச்சோ தெரியாது. மன்றத்தில் இணைந்த பின்னர் ஆங்கிலத்தில் தட்டச்சுவதை விட தமிழில் தட்டச்சுவதுதான் எளிது என்கிற நிலைமைதான் இப்போது இருக்கிறது.

    இயன்றவரையில் தமிழில் பதிவுகள் இடுவது, பிற மொழிச்சொற்களை தவிர்ப்பது, புதிய தமிழ் சொற்களை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவது ஆகியவை நன்று. மன்றத்தில் உறவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதும், கவிதைகள், கதைகள் உட்பட எல்லாப்பகுதிகளிலும் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் அளவில்லா இன்பத்தைத் தருகிறது.

    கவிதை, உரைநடை, கட்டுரை, பேச்சு, வழக்கு - என பல வகைகளிலும் வரும் தமிழ்ப்பதிவுகள் ஓவ்வொரு வகையில் இன்பத்தைத் தரும். வட்டார மொழிக்கும், வழக்குத்தமிழுக்கும், கணினித்தமிழுக்கும் இலக்கணம் அவ்வளவாக பொருந்தாது என்றே நான் தனிப்பட்ட முறையில் எண்ணுகிறேன். ஆனால் அங்கும் எழுத்துப்பிழைகள் நம்மை மிகவும் சங்கடப்படுத்தக்கூடியவை.

    புதிய பதிவுகளை பதிப்பதிலும், கருத்துக்களை பதிவு செய்வதிலும், நண்பர்களை உரிமையுடனும், நகைச்சுவை உணர்வுடனும் கிண்டல் செய்வதிலும் நமக்கு இருக்கும் ஆர்வம், அதை பிழையின்றி எவ்விதம் செய்வது என்பதில் சற்றும் இல்லை என்பதை நாம் வருத்தத்துடன் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

    சாப்பாட்டில் ஒரே ஒரு கல் இருந்தாலும், வாய்க்குள் வைத்து மெல்லும் போது நாம் படும் இன்னலை சொல்லத்தேவையில்லை. அப்படி இருக்க இப்போது தினமும் படிக்கும் பல பதிவுகளில், கற்களுக்கு நடுவே, ஆங்காங்கே சோற்றுப்பருக்கைக்கள் கண்களுக்கு தென்படுகின்றன என்ற சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்கிறேன். சில பிழைகள் நம் கண்களுக்குத் தெரியாமல் போகும் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். எனினும் உதாரணமாக - ஒற்றுப்பிழைகள் குறித்து இலக்கணம் தெரியாது என்றாலும், குறைந்த பட்சம் எழுத்துப்பிழைகளை தவிர்க்கலாமே?

    சில மன்ற உறவுகளின் பதிவுகளில் வேண்டுமென்றே தமிங்கிலம் நடமாடுவதையும் காண முடிகிறது. முன்பெல்லாம் பிழைகளை சுட்டிக்காட்டும் விதமாக வர்ணத்தில் மேற்பார்வையாளர்கள் திருத்திக்காட்டுவார்கள். படிப்பவர்களுக்கு பதிவாளர்கள் செய்த பிழைகள் தெளிவாக தெரியும். நமது பதிவில் அப்படி எதுவும் வந்து விடக்கூடாது என்கிற பதற்றம் அனைவருக்கும் ஓரளவுக்கு இருக்கும். உறுப்பினர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கும் போது இது சாத்தியமானதாக இருந்தது. இப்போது இருக்கும் நிலைமையில் மேற்பார்வையாளர்களால் அவ்விதம் செய்வது மிகமிகக் கடினம்.

    எனவே தயவு செய்து அனைவரும் இயன்ற வரையில் பிழையின்றி தமிழில் தட்டச்சு செய்வது என்பதை ஒரு உறுதியாக ஏற்று, நடைமுறைப்படுத்துவது அவசியமானதாகும்.

    மன்றத்தின் பெயரைக் காப்பாற்றுவதற்காவது நாம் அனைவரும் பிழையில்லாத் தமிழை தட்டச்சு செய்ய வேண்டும்; குறைந்த பட்சம் முயற்சியாவது செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோளை அன்புடன் உங்கள் முன் வைக்கிறேன்.
    Last edited by பாரதி; 14-03-2007 at 07:33 AM. Reason: பிழை திருத்தம்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    நீங்கள் கூறுவது 100 ற்க்("")கு 100 உண்மை
    முடிந்த வரை முயல்கிறேன் பாரதி அவர்களே...
    நன்றி
    Last edited by மனோஜ்; 13-03-2007 at 03:21 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    அண்ணா,
    சரியான சமயத்தில் சுட்டிக் காட்டினீர்கள். நானும் இதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் நீங்கள் சொல்லியது போல் பல பதிவுகளில் இருந்ததனால் கடினமாக இருக்கிறது.

    எனினும் என்னால் இயன்ற அளவு இதனைச் சரி செய்கிறேன்...
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அருமையான பதிவு,. நான் முடிந்த வரையில் பிழைகள் தவிர்த்து வருகிறேன் என்றாலும் என்னை அறியாமல் பிழைகள் நேர்வதை தவிர்க்க முடியவில்லை. இங்கு தட்டச்சு பயிலும் காரணத்தினாலும் வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் சிலர் தவறு நேர தட்டுவதும்தான் பிழைக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிடும்.

    தமிங்கிலீஸ் வார்த்தைகள் கலப்பு அதிகமில்லை என்றாலும் சில இடங்களில் சுற்றுவது நானும் கண்டிருக்கிறேன். ஆனால் அவை கிண்டல், நக்கல், நையாண்டி, சீண்டல் போன்றவைகளுக்கு மட்டுமே உபயோகிக்கிறார்கள் என்பதால் கவலை வேண்டாமே! இருப்பினும் அதை சற்று குறைத்தால் நலம்.

    மேற்பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களும் ஒரு வேலையில் இருந்துகொண்டு நம்மை கவனிக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். கூடுமானவரையில் திருத்த முயற்சிக்கலாம். அல்லது எழுதியவர்களே அதை மீண்டும் படித்து பிழையிருக்கக்காணின் திருத்தலாம்.

    சிலர் தம் பதிவை திருத்துகிறார்களே என்று சங்கடப் படுவார்கள் (அப்படி மன்றத்தில் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.)
    என் பதிவில் ஏதாவது பிழையிருந்தால் திருத்துவதில் சங்கடப்பட மாட்டேன். பிழை நீக்குவது என்பது சுத்தம் செய்வதுபோல.. சுத்தம் செய்ய வந்தால் விருப்பப்படாமல் போவது அழகல்லவே!

    கூடுமானவரையில் பிழையின்றி ஆங்கிலக் கலப்பின்றி எழுதுங்கள் மக்களே! அன்றைய பாரதி மெல்லச் சாவும் என்றார். இன்றைய பாரதி பிழையாவது நீக்குவோம் என்கிறார்.

    முயற்சி செய்வோம்..... முயன்று காட்டுவோம்

    ஆதவன்

    (பிழையின்றி எழுதச் சொன்ன இந்த கட்டுரையில் நான் கண்டு பிடித்தது ஒரே ஒரு பிழை... சரி செய்யவும் பாரதி அவர்களே! )
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பூனைக்கு மணி கட்டினாய் என வீர ஆசாமியாய்ப்
    பாராட்டினால் (நீதி)மன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரலாம் என்பதால்
    தமிழ்ப் பூசைக்கு மணி ஒலித்தாய் எனப் பாராட்டுகிறேன் பாரதி..

    --------------------------------------------------------

    புதியவர்கள், பள்ளித் தமிழ்க்கல்வி அதிகம் இல்லாதவர்கள்
    எந்த அளவுக்குத் தட்டச்சினாலும் மகிழ்ச்சியே..

    மெல்ல மெல்ல மொழி நன்கு பழகி
    பிழை குறைத்து அவர்கள் வளர்வதைப் பார்ப்பதே
    ஒரு சுகானுபவம்..

    அதற்காகவே அவர்கள் அறிமுகப்பதிவை திருத்தாமல் விட்டுவைக்கணும்..

    ( சொக்காய் போடாத குழந்தை படம் அதன் கல்யாண வயதில் சபைக்கு
    வரும் சங்கட சுகம் அது..)

    அந்தத் தமிழ்க் குழந்தைகளுக்கு ஒரு பா(ரா)ட்டு -

    அன்பால் குழந்தை கடிக்கின்றது
    அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது
    தடவிப்பார்த்தால் இனிக்கின்றது - தமிழ்த்
    தாயின் உள்ளம் துடிக்கின்றது..


    ------------------------------------------------------

    ஆனால், இந்தச் சலுகைகள் தமிழில் வளர்ந்துவிட்ட
    (தடிக்)குழந்தைகளுக்கு அல்ல..
    நீங்கள் கடித்தால் நம் தாய் அழுவாள்...:angry: கடிவாள்..!

    1) சூடாக பதில் அளிக்கும் உரையாடல் திரிகளில் பிழைகள் வர வாய்ப்பு அதிகம்.
    பதித்தபின் ஒரு முறை நீங்களே படியுங்கள்..
    பிழை கண்டால் எடிட்டுங்கள்..

    2) கதை,கவிதை போன்றவை பிழைகளால் படிப்பவரின் இதயம் சேராமல், சேதாரமாகும்.

    ஓவியா பரிசு பெற்ற கவிதைகள் நம் நண்பர்களால்
    பிழை களையப்பட்டு, பின் பதிக்கப்பட்டன..

    தனிமடலில் நம் நண்பர்களை அணுகுங்கள்..
    நேரமிருந்தால் நிச்சயம் செய்வார்கள்..

    3) கண்காணிப்பாளர்களும் அவ்வப்போது நேரமிருப்பின்
    மற்றவர் பதிவுகளில் உள்ள முக்கிய பிழைகளைத் திருத்துங்கள்.

    பதிவாளர்களுக்கு நீங்கள் எடிட்டியது தெரியும்..புரியும்.


    4) ஒற்றுப்பிழைகள், சந்திப்பிழைகளை கணினித் தமிழ் அங்கீகரிக்கும்
    என மொழியியலாளர்கள் கருதுகிறார்கள்..
    (நானும் இவ்வகைப் பிழைகள் என் பதிவுகளில் ஊடுருவ அனுமதிக்கிறேன்..)


    -------------------------------------------------

    பொதுவாய் அனைவருக்கும்,

    கணினித் தமிழும் கைவிரல் பழக்கம்!

    தவறாகவேனும் தட்டச்சி பதியுங்க மக்கா..
    தட்டச்சாமலே இருப்பதுதான் பெரிய தவறு..

    நம் பின்னூட்டங்களை மட்டுமே எதிர்பார்த்து
    பொன்னான நேரமிட்டு நம் நண்பர்கள் தரும் ஆக்கங்களுக்கு
    வேறென்ன நாம் செய்ய கைம்மாறு???


    நன்றி..
    Last edited by இளசு; 13-03-2007 at 08:23 PM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    நல்ல விஷயத்தை முன்வைத்திருக்கிறீர்கள் பாரதி.

    நான் 17 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுடன் உறவை புதுப்பித்திருக்கிறேன். 17 ஆண்டுகளுக்கு முன் படித்ததையே நினைவில் கொண்டு முடிந்த அளவில் தமிழில் எழுதுகிறேன். சொற்பிழை வரவாய்ப்பிருக்கிறது.

    யாராவது கண்டால் அவசியம் திருத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    அநேகமாக ண, ன மற்றும் ர, ற வில் தவறு வர வாய்ப்பிருக்கிறது. மேலும் ப்ப, க்க, போன்ற புள்ளி வைத்த எழுத்துக்கள் சேர்க்கும் போது தவறு வரவாய்ப்பிருக்கிறது.

    தவறாமல் சுட்டிக்காட்டுங்கள், திருத்திக் கொள்கிறேன்.

    நன்றி.
    Last edited by leomohan; 14-03-2007 at 07:18 AM.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    பாரதி கூறுவது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையின் செய்திதான்..

    தூயத்தமிழில் நாம் எழுத வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.
    ------
    சிலருக்கு மோகன் சொல்வது.. எந்த ந,ன போடுவது.. ர, ற போடுவது என சந்தேகம் வரும்....

    சரியான வார்த்தை - தவறான வார்த்தை என பெட்டி வடிவில் பட்டியல் அமைத்து... முல்லை மன்றத்தில் கொடுக்கலாம். புதியவர்கள் சரியாக தமிழ் எழுத வசதியாக இருக்கும்.

    உதாரணத்திற்கு..

    அருமை----அறுமை
    உள்ளது----உல்லது
    அநேகம்----அனேகம்.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    இதைப் பற்றி நானும் சிந்தித்தாலும் இந்த தவறை நானும் செய்திருக்கிறேன். தக்க சமயத்தில் பதமாகவும், இதமாகவும் அறிவுறுத்திய பாரதி அவர்களுக்கு நன்றி..

    பதிவர்களுக்கு தங்களுக்கே தாங்கள் எழுதியதில் இந்த வார்த்தையில் எழுத்துப்பிழை இருக்கும் என்று கருதுவீர்களானால், உதா.. இந்த 'ற' போட வேண்டுமா அல்லது 'ர' போட வேண்டுமா என்று சந்தேகம் இருந்தால் சிகப்பு கலரில் அந்த வார்த்தையை நிறப்படுத்தி காட்டுங்கள்... மேற்பார்வையாளர்கள் அதை சரி செய்துவிடுவார்கள்.. சிகப்பு நிறத்தை நாம் பிழைகளுக்கு மட்டும் உபயோகிக்கலாம்...
    Last edited by பென்ஸ்; 14-03-2007 at 03:56 AM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    இதைப் பற்றி நானும் சிந்தித்தாலும் இந்த தவறை நானும் செய்திருக்கிறேன். தக்க சமயத்தில் பதமாகவும், இதமாகவும் அறிவுறுத்திய பாரதி அவர்களுக்கு நன்றி..

    பதிவர்களுக்கு தங்களுக்கே தாங்கள் எழுதியதில் இந்த வார்த்தையில் எழுத்துப்பிழை இருக்கும் என்று கருதுவீர்களானால், உதா.. இந்த 'ற' போட வேண்டுமா அல்லது 'ர' போட வேண்டுமா என்று சந்தேகம் இருந்தால் சிகப்பு கலரில் அந்த வார்த்தையை நிறப்படுத்தி காட்டுங்கள்... மேற்பார்வையாளர்கள் அதை சரி செய்துவிடுவார்கள்.. சிகப்பு நிறத்தை நாம் பிழைகளுக்கு மட்டும் உபயோகிக்கலாம்...
    நல்ல யோசனை அற்புதராஜ். நன்றி.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by அறிஞர் View Post
    பாரதி கூறுவது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையின் செய்திதான்..

    தூயத்தமிழில் நாம் எழுத வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.
    ------
    சிலருக்கு மோகன் சொல்வது.. எந்த ந,ன போடுவது.. ர, ற போடுவது என சந்தேகம் வரும்....

    சரியான வார்த்தை - தவறான வார்த்தை என பெட்டி வடிவில் பட்டியல் அமைத்து... முல்லை மன்றத்தில் கொடுக்கலாம். புதியவர்கள் சரியாக தமிழ் எழுத வசதியாக இருக்கும்.

    உதாரணத்திற்கு..

    அருமை----அறுமை
    உள்ளது----உல்லது
    அநேகம்----அனேகம்.
    நன்றி அறிஞரே. திருத்திக் கொண்டேன்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    தலையில் கொட்டாமல் தடவி தரும் அறிவுரை பாரதி வழங்கியிருக்கிறார். ஒன்றிரண்டு எழுத்துக்கள் பிழையானால் பரவாயில்லை. புரிந்துக்கொள்ளப்படும்.. ஆனால்

    அப்படி இருக்க இப்போது தினமும் படிக்கும் பல பதிவுகளில், கற்களுக்கு நடுவே, ஆங்காங்கே சோற்றுப்பருக்கைக்கள் கண்களுக்கு தென்படுகின்றன என்ற சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்கிறேன்
    சில பதிவுகளில் இது காணப்படுகிறது. இனி பதிவுகளை மேற்பார்வையாளர்கள் எடிட் செய்து மாற்றுகிறோம்.

    இளசு அண்ணா சொன்னதைப்போல தவறு இருந்தாலும் பின்னூட்டம் பதியுங்கள். சுட்டிக்காட்ட நாங்க இருக்கிறோம். கவலைப்படாதிங்க மக்கா..

  12. #12
    இனியவர் பண்பட்டவர் வெற்றி's Avatar
    Join Date
    03 Mar 2007
    Location
    இரும்பூர்
    Posts
    701
    Post Thanks / Like
    iCash Credits
    12,009
    Downloads
    33
    Uploads
    2
    உங்களின் பட்டியலில் அடியேனும் ஒருவன்..
    இனி தவறில்லாமல் பதிக்க முயற்சிக்கிறேன்.
    Last edited by அறிஞர்; 14-03-2007 at 12:49 PM.
    ஜெயிப்பது நிஜம்

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •