Results 1 to 6 of 6

Thread: 10ம் பகுதி கள்ளியிலும் பால்

                  
   
   
 1. #1
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
  Join Date
  22 Aug 2004
  Location
  Bangalore
  Posts
  7,242
  Post Thanks / Like
  iCash Credits
  20,802
  Downloads
  5
  Uploads
  0

  10ம் பகுதி கள்ளியிலும் பால்

  "நீ எதுக்கு முசுமுசுன்னு அழுகுற? அதான் டாக்டர் கிட்ட போறோமே. ஒன்னயப் பாத்து இவனோட அழுகையும் கூடுது பாரு." சிவகாமி சந்தியாவை அதட்டினார். எதற்கு என்று கேட்கின்றீர்களா? வரிசையாகச் சொல்கிறேன்.

  1. கவிப்பூ தேன்மொழியின் "கள்ளியிலும் பால்" கையெழுத்து நிகழ்ச்சிக்காகச் சுந்தரைத் தூக்கிக் கொண்டு சந்தியாவும் சிவகாமியும் ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள லேண்ட்மார்க் கடைக்குச் சென்றனர்.

  2. அங்கு எக்கச்சக்க கூட்டம் தேனை மொய்த்துக்கொண்டிருந்தது. இருந்தாலும் தேன்மொழி சந்தியாவை முன்னால் அழைத்து ஒரு புத்தகத்தைப் பரிசளித்தாள்.

  3. அந்நேரம் பார்த்து சுந்தர் முனகலில் தொடங்கி அழுகைக்கு மாறி கதறலுக்குத் தாவினான். சிவகாமி என்ன செய்தும் அழுகை நிற்கவில்லை.

  4. தேன்மொழியிடம் அவசரமாக விடை பெற்று இருவரும் வெளியே வந்தனர். நேராக மலர் மருத்துவமனைக்குச் சென்று குழந்தை மருத்துவர் மதிவதனனைப் பார்க்கச் சென்றார்கள்.

  5. வழியில் சரவணன் சந்தியாவைத் தொலைபேசியில் அழைத்திருக்கிறான். சிவகாமியிடம் அழைப்பது யாரென்று பார்க்கச் சொன்னாள் சந்தியா. யாராக இருந்தாலும் பிறகு பேசுவதாகச் சொல்லச் சொன்னாள். ஆனால் அது சரவணன் என்பதால் சிவகாமி "சுந்தருக்கு உடம்பு சரியில்லை. மலருக்குப் போறோம். பிறகு பேசுறோம்" என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட்டார்.

  6. ஏற்கனவே சரவணன் அழுவதால் கலங்கியிருந்த சந்தியா இதைக் கேட்டதும் மிகவும் துவண்டு போனாள். என்ன செய்வது என்று ஒரு அச்சம். அது மெல்லிய அழுகையாகக் கண்களில் வழிந்தது.

  அப்பொழுதுதான் சிவகாமி சந்தியாவை அழாமல் இருக்கச் சொன்னார். சுந்தர் அழுவதுதான் அவள் அழுகைக்கான முழுக்காரணம் என்பது சிவகாமியின் நினைப்பு.

  சிவகாமியிடம் பேசிய பிறகு குழம்பிப் போனான் சரவணன். சுந்தருக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னது அவனைக் குழப்பியது. சுந்தரராஜன் என்று சொல்லியிருப்பாரோ என்று நினைத்தான். பெரியவரும் கூட. அவருக்கு எதுவும் பிரச்சனை இருக்கலாம் என்று நினைத்து பயந்தான். அப்பொழுது அடையாறில்தான் இருந்ததால் மலருக்கே நேராகச் சென்று விடலாம் என்று முடிவு செய்தான்.
  இதுவரை வாசகர்கள் அனைவரும் எதிர்பார்த்த சரவணன் சுந்தர் சந்திப்பு மலர் மருத்துவமனை வாசலில் நடந்தது. சரவணனை அங்கு எதிர்பார்க்காத சந்தியா கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனாள். அழுததன் காரணமாக மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தாள்.

  சரவணனைப் பார்த்து சிவகாமி சம்பிரதாயமாக "நல்லாயிருக்கியா சரவணா" என்று முதலில் கேட்டார்.

  பிறகு, "நீயே சொல்லுப்பா சந்தியாகிட்ட. சுந்தர் அழுகுறான்னு இவளும் முசுமுசுன்னு அழுகுறா. குழந்தைன்னா அப்படி இப்பிடி ஏதாவது இருக்கும். அழுதா ஆச்சா?" என்று சொன்னவர் சந்தியாவைப் பார்த்து "வா உள்ள போகலாம்" என்று அழைத்து உள்ளே சென்றார்.

  மலர் மருத்துவமனையில் சுந்தரின் பெயர் ஏற்கனவே பதியப்பட்டிருந்தது. அங்கு பிறந்தவந்தானே. அதுவுமில்லாமல் மதிவதனன்தான் சுந்தருக்கு முதலிலிருந்தே மருத்துவம் பார்ப்பது. ஆகையால் அவனை நன்றாக அறிவார் அவர். சுந்தருடைய விவரங்களை மருத்துவமனை ரிசப்ஷனில் சரிபார்க்கையில் சரவணனுக்குச் சுந்தர் சந்தியாவின் குழந்தை என்று தெரிந்து போனது. அவனுக்கு எப்படி இருந்திருக்கும்? நீங்களே சொல்லுங்கள்? ஒரு நெருங்கிய தோழி. அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் உண்மையான அன்புடைய தோழி. அவளுக்குக் குழந்தை பிறந்த செய்தியையே சொல்லாமல் மறைத்திருந்தால்? ஏன் அப்படிச் செய்தாள் என்று கேள்விகள் முளைக்குமல்லவா? அதுவுமில்லாமல் சந்தியாவிற்குக் குழந்தை பிறந்தது....இவனுக்கே குழந்தை பிறந்தது போலத் தோன்றியது. ஒவ்வொரு பொழுது நாமும் இப்பிடிச் சொல்வோம். "ஏய்...என்னோட மருமகனா இருந்தாலும் மகன் மாதிரி." என்று. அந்த மாதிரி...சந்தியாவை வெளியாள் என்று அவனால் நினைக்க முடியவில்லை.

  உண்மையைச் சொன்னால் மொத்தத்தில் தடுமாறித்தான் போனான் சரவணன். நல்லவேளை. அவன் சற்று யோசித்து முடிவெடுக்கின்றவன். ஆகையால் அங்கு எதுவும் கேட்கவும் விரும்பவில்லை. சந்தியாவும் சிவகாமியையும் திரும்ப வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு இவன் வீட்டிற்குச் சென்றான். வீட்டில் படுக்கையில் சாய்ந்து படுத்தவன் யோசித்துக் கொண்டேயிருந்தான். அப்படியா யோசிப்பார்கள்? அதுவும் இரவு பத்து மணி வரைக்கும். பிறகு யோசனைகளைத் தலையணக்கு அடியில் தள்ளி வைத்து விட்டு சந்தியாவை அலைபேசியில் அழைத்தான்.

  சந்தியா அதற்குள் சுதாரித்திருந்தாள். இனிமேல் எதையும் மறைப்பதில் பயனில்லை. உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதான் என்ற நிலைக்கு அவளும் வந்திருந்தாள். என்ன நடந்தாலும் சரி என்று அவள் துணிந்திருந்தாள். அதுவுமில்லாமல் வயிற்றுச் சூட்டினால் அழுத சுந்தர் மருந்து குடித்து விட்டு அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தான். சரியாக அந்நேரத்தில் சரவணனின் அலைபேசி அழைப்பு வந்தது.

  "ஹே சந்தி, என்ன பண்ற?"

  "ஒன்னும் பண்ணலடா. சும்மா உக்காந்திருக்கேன்."

  "சுந்தருக்கு இப்ப எப்படி இருக்கு?" நேரடியாக பிரச்சனைக்குள் தலையை விட்டான் சரவணன்.

  "மருந்து குடுத்தப்புறம் நல்லா தூங்குறான். வயித்து வலி குறைஞ்சிருக்கனும்." அவளும் சளைத்தவள் இல்லையே.

  "சுந்தரப் பத்தி எங்கிட்ட ஒன்னுமே சொல்லலையே சந்தி! ஏம்மா?" சமயங்களில் நமக்கு வேண்டியவர்கள் ஏதாவது செய்து விட்டால் அவர்கள் மீது ஆத்திரத்தை விட வருத்தம்தான் வரும். அந்த வருத்தத்தில்தான் கேட்டான் சரவணன்.

  "உண்மதான். கண்டிப்பா ஒங்கிட்ட சொல்லீருக்கனும். ஆனா ஏதோ நெனைச்சுக்கிட்டு மறைச்சிட்டேன். உன் கிட்ட மறைச்சது என்னைக் குத்தாத நாளே கிடையாது. ஆனா இந்தக் குழந்தையைப் பெத்துக்கிறதுக்கு நீதான் காரணம் தெரியுமா?"

  "என்னது நானா? என்ன சொல்ற?" சரவணன் என்ற பெயரை ஹிரோஷிமா நாகசாகி என்று மாற்றியிருக்கலாம். இல்லை ஈராக் என்று மாற்றியிருக்கலாம்.

  "ஆமா. நீ சென்னைல இருந்த வரைக்கும் உன்னோட துணையும் நட்பும் இருந்ததால எனக்கு ஒன்னும் தெரியல. ஆனா நீ நெதர்லாண்ட் போனப்புறம் திடீர்னு ஒலகத்துல தனியா நிக்குற மாதிரி நெனைப்பு வந்தது. ஒன்னய திரும்ப வான்னும் கூப்பிட முடியலை. நீ என்னை அங்க வரச்சொன்னப்பவும் ஒத்துக்க முடியலை. இந்த நிலமைல என்னோட தனிமையப் போக்க ஒரு குழந்தை வேணும்னு தோணிச்சு. அதான் பெத்துக்கிட்டேன். அதுனால என்னோட தனிமை போச்சு. என்னை விட்டு நீ போனதுக்கு உன்னையப் பழி வாங்குனதா ஒரு திருப்தி. அதான் உங்கிட்ட சொல்ல முடியாமத் தவிச்சேன். ஆனா என்னைக்காவது உண்மை வெளிய வரும்னு தெரியும். அதுனால எனக்குக் கஷ்டம் வந்தா உதவ நீ இருக்கன்னு தெரியும். அதுனாலதான் அப்படியே விட்டுட்டேன். இதுக்காக உன் கிட்ட மன்னிப்பு கேக்க மாட்டேன். ஏன்னா நான் செஞ்சது தப்புன்னா நீ கொடுக்குற தண்டனை எதானாலும் சரி. ஏத்துக்கத் தயார்." திரைப்பட வசனம் போல இருந்தாலும் சந்தியா உண்மையைத்தான் சொன்னாள்.

  "எல்லாம் சரிம்மா. எதுன்னாலும் எங்கிட்டதான வந்து கேப்ப! அப்படியிருக்குறப்போ ஒனக்குக் கொழந்த வேணும்னதும் என்னோட நெனைப்பு வரலயே. அதத்தான் என்னால தாங்கிக்க முடியல. அந்த அளவுக்கா என் மேல கோவம்?" சரவணனும் உண்மையைத்தான் சொன்னான்.

  "இல்லடா. இல்ல. குழந்தை வேணும்னதும் நான் மொதல்ல உன்னையத்தான் நெனச்சேன். அதுனால.......Sundar is our son. அதாவது சுந்தர் ஒனக்கும் எனக்கும் பொறந்தவன்."

  தொடரும்.....
  Last edited by gragavan; 13-03-2007 at 11:34 AM.

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  3,776
  Downloads
  5
  Uploads
  0
  ம்ம்ம்... ஆக துப்பாக்கிக் குதிரைய ஒரு வழியா அழுத்தியாச்சு.
  குண்டு என்னாகுதுன்னு இனிதான் பாக்கணும்... இருக்கட்டும் இருக்கட்டும்..
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 3. #3
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  36,060
  Downloads
  5
  Uploads
  0
  நானும் படிச்சுட்டேன்.

  எங்கன போய் முடிய போகுதோ......நல்ல சுபமா போடுங்க.


  உங்களயும் மயிலாரையும் ஒரு பேட்டி எடுக்கனும்..
  நேரம் கிடச்சா சொல்லுங்க.....ரெண்டுபேரும் நல்வே யோசிக்கிறீக
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 4. #4
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  45,159
  Downloads
  78
  Uploads
  2
  விர்ரென்று.....போகுது கதை...
  சீக்கிரம் சுபம் போடுங்க ராகவன்...!
  ரொம்ப நாளாவே கதை போகுற மாதிரி ஒரு ஃபீலிங்...

 5. #5
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  3,776
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by Rajeshkumar View Post
  விர்ரென்று.....போகுது கதை...
  சீக்கிரம் சுபம் போடுங்க ராகவன்...!
  ரொம்ப நாளாவே கதை போகுற மாதிரி ஒரு ஃபீலிங்...
  இத்தினி இத்தினியா எழுதினா இத்தினி நாளு போவாம என்ன செய்யுமாம்??? வேகமா எழுதுங்கய்யா...
  சீக்கிரமே முடிச்சா சனிக்கெழம பாரடைஸ்ஸூல பிரியாணி விருந்து!!!!
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
  Join Date
  16 Jan 2007
  Location
  திருச்சி
  Posts
  4,192
  Post Thanks / Like
  iCash Credits
  7,486
  Downloads
  14
  Uploads
  0
  குன்டு வெடிச்சிறுச்சு
  அதன் விளைவு என்ன தொடருங்கள்....ஆவலுடன்
  உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
  இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •