Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 39

Thread: நானும் ஒரு கதைச்சொல்லி தான்.

                  
   
   
  1. #1
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0

    நானும் ஒரு கதைச்சொல்லி தான்.

    கதை கேட்பது என்பது அனைவருக்கும் பிரியமான ஒன்று, அக்கதைகளை சொல்லுபவர்கள் சொல்லும் போது இன்னும் இன்னும் சுவையாக இருக்கும். அது ஒரு தனிக்கலை.



    சின்ன வயசில் வில்லுப்பாட்டு என்றால் உயிர், ஆஹா! என்னமாய், அருமையாய் வில்லை அடித்து, நல்ல குரல்வளத்தோடு, கடம், மற்றும் இசைக்கருவிகளோடு அவர்கள் சொல்லும் கதைகளை வாயில் ஈ புகும் அளவுக்கு பிளந்து கொண்டு கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போ கூட ஆன்மீக சொற்பொழிவு என்றால் முழுவதும் அமர்ந்து கேட்பேன்.



    சின்ன வயசில் எனக்கு கதைகள் சொல்ல நிறைய பேர் இருந்தார்கள் என்பது எனக்கு கிடைத்த அற்புதமான பரிசு. எங்க பாட்டி, என் அம்மா, அத்தைகள், தெருப் பாட்டிகள், என் வயதை ஒட்டிய அத்தை மகன் சிவா, எங்க வீட்டுக்கு வேலைக்கு வருபவர்கள், வருடத்தில் 3 மாதங்கள் எங்கள் வீட்டில் தங்கியிருக்கும் நாடோடி பாட்டி இப்படி பெரிய பட்டியலே இருக்குது.

    முதலில் எங்க அம்மா! அவங்க கதை சொன்னா இரவு முழுவதும் கேட்டுகிட்டே இருக்கலாம், அத்தனை அருமையாக கதை சொல்வாங்க. அதிலும் அப்பா இல்லாமல் வளர்ந்த எங்களை நல்ல வழியில் நடத்த, நல்ல நல்ல அறிவுரைகள் கொண்ட கதைகள் சொல்லுவாங்க, நிறைய மாயாஜாலக்கதைகள் அவர்களிடம் உண்டு, பால நாகம்மா, மகாபாரதம், விட்டலாச்சாரியார் படங்கள், அலிபாபா, அலாவுதீன் மற்றும் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதைகளாக சொல்வாங்க, பல முறை கேட்டு அழுதிருக்கிறேன். என் அம்மா தன் பேத்திக்கு கதைகள் சொல்ல ஆவலாக இருக்காங்க, கதைகள் கேட்க என் மகள் சக்தி கொடுத்து வைத்தவர் தான்.



    நான் சின்ன வயசில் ரொம்ப முரட்டுத்தனமான ஆள், எதுக்கெடுத்தாலும் கோபம், நினைத்ததை சாதிக்கும் வெறி, ஆதிக்க மனப்பான்மை அதிகம் அதனால் தினம் தினம் தெருவில் சண்டை போட்டு வருவேன், எதிர்ப்பவர்களை அடித்து நொறுக்கிடுவேன், அடியும் வாங்கி வருவேன். அப்போ எல்லாம் எங்க அம்மா அடிக்காம, இரவில் கதைகள் வாயிலாக அறிவுரை சொல்வாங்க. என்னிடம் இருந்த சுயநலம் என்ற குணத்தை குறைக்க எங்க அம்மா சொன்ன கதை இன்னும் நினைவில் இருக்குது.

    ஒரு ஊரில் ஒரு அம்மா, அப்பா இறந்து போயிட்டார். அவங்களுக்கு இரண்டு பிள்ளைகள், அவங்க ரொம்பவே கஷ்டப்பட்டாங்க (அப்படியே எங்க கதை மாதிரி தான்), அம்மா கடுமையாக உழைத்து, சம்பாதித்து வந்தால் தான் சாப்பாடு.

    அப்படி இருந்த வாழ்க்கையில் ஒரு நாள், அந்த அம்மாவுக்கு கடுமையான காய்ச்சல், அந்த அம்மாவால் வேலைக்கு போக முடியவில்லை, வீட்டில் சாப்பிட ஒன்றுமே இல்லாத நிலை. எல்லோருக்கும் கடுமையான பசி.

    அப்போ பார்த்து அந்த ஊரில் கோவிலில் அன்னதானம் செய்வதாக செய்தி கிடைத்தது, அந்த அம்மா தன் இரு பிள்ளைகளையும் அழைத்து இன்று என்னால் உங்களுக்கு உணவு கொடுக்க முடியவில்லை, ஆகையால் கோவிலில் கொடுக்கும் சாப்பாட்டை வயிறாற சாப்பிட்டு வாங்க என்று அனுப்பினாராம்.

    அண்ணனும், தம்பியும் இருவரும் கோவிலுக்கு போய் வீட்டுக்கு திரும்பினார்கள். மூத்தமகன் அம்மாவை பார்த்து அம்மா! சாப்பாடு எல்லாம் நல்லா இருந்தது, வயிறு நிறைய சாப்பிட்டேன் என்றானாம்.

    இளைய மகன் அம்மா! நான் அங்கே சாப்பிடவில்லை என்றாராம்.

    அம்மா ஏண்டா மகனே! சாப்பிடலை, வீட்டிலேயும் சாப்பாடு இல்லையே

    இளைய மகன் அம்மா! நான் சாப்பாட்டை சாப்பிடாம, உங்களுக்கு கொண்டு வந்திருக்கிறேன், நீங்க பாவம், பட்டினியில் தானே இருக்கீங்க

    அம்மா உடனே இளைய மகனை கட்டிபிடித்து கண்ணீர் விட்டார்கள், மூத்த மகனுக்கு அவமானமாக போய் விட்டது.

    அந்த இரு மகன்களில் மூத்தவர் சூரியனாகவும், இளைய மகன் சந்திரனாகவும் இப்போவும் இருக்காங்க. அதான் சந்திரன் அழகாகவும், குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பும் ஒன்றாகவும், குளிர்ச்சியாகவும், தான் வாங்கிய ஒளியை பூமிக்கு இரவில் கொடுக்கிறது, சூரியன் வெப்பமாகவும் இருக்காங்க.

    ஆகையால் அடுத்தவர்களைப் பற்றி கவலைப்பட்டு அவர்களுக்கு உதவுபவர்கள் என்றும் சந்திரனைப் போல் வாழ்வாங்கன்னு, எங்க அம்மா அறிவுரை சொன்னாங்க.

    அன்று முதல் முடிந்தவரை யார் என்ன கொடுத்தாலும், வீட்டுக்கு கொண்டு வர முயல்வேன். இன்றும் கூட அந்த கதை அடிக்கடி நினைவுக்கு வரும். இது எங்க அம்மா சொன்ன கதைகளில் ஒரு சான்று தான், இது மாதிரி பல கதைகள் இன்றும் எனக்கு நல்ல வழி காட்டுகிறது.

    (தொடரும் ..)
    பரஞ்சோதி


  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அழகான கதை. பல படிப்பினைகளை அள்ளிக் கொடுத்திருக்கிறது. தொடருங்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    பரம்ஸ் அண்ணா,
    இத்தனை நாள் எங்கே போயிருந்தீர்கள்?
    உங்கள் அனுபவங்கள் அனைத்துமே எங்களுக்குப் படிப்பினைதான்.
    தொடர்ந்து தரவும்.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    விழியோரம் மகிழ்வான நெகிழ்வால் கொஞ்சம் கசிந்தேன்..பரம்ஸ்..

    அம்மாவுக்கு என் அன்பான விசாரிப்புகள்.. சக்திக்கும்தான்..

    அம்மா போன்றவர்களால்தான் உலகம் இன்னும் அழகாக இருக்கிறது..

    என் பெரியம்மா திரைப்பட, புத்தகக்கதைகள் சொன்னால்
    படம் பார்க்காதவர்கள், கதை படிக்காதவர்கள் எல்லாம்
    சிரித்து, அழுது கதை கேட்ட நினைவுகள் எனக்குள்..


    தொடரட்டும் இந்த இலக்கியத் தொடர்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    அருமை அருமை என் அம்மா நினைவு வந்தது மிக்க நன்றி தொடருங்கள்.....
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    மீண்டும் ஒரு அருமையான பதிவு. பாராடுக்கள் அண்ணா.

    இன்னும் அதிகம் கதை பதியுங்கள்.

    அந்த கருந்தேள் பதிவு துள்.

    ஒரூ முறை என் அப்பா இரவில் பேய் கதை சொல்லி நான் பயத்தில் அழுதே விட்டேன்.
    நான் மிகவும் பயந்த சுபாவம்.
    (இன்னமும் அப்படிதான் சொன்னால் யாரும் நம்ப மாட்டேன்றாங்க )
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    (இன்னமும் அப்படிதான் சொன்னால் யாரும் நம்ப மாட்டேன்றாங்க )
    இல்லையே... உங்க விடுதியில் இருக்கும் பேய்கள் எல்லாம் இதேதான் சொல்றாங்களாம்...
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    கதைக்கு ஏற்ப படங்களும் அருமையா இருக்கு நண்பா..

  9. #9
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    அழகான கதை. பல படிப்பினைகளை அள்ளிக் கொடுத்திருக்கிறது. தொடருங்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்
    நன்றி அண்ணா. இன்னும் வரும்.
    பரஞ்சோதி


  10. #10
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt View Post
    பரம்ஸ் அண்ணா,
    இத்தனை நாள் எங்கே போயிருந்தீர்கள்?
    உங்கள் அனுபவங்கள் அனைத்துமே எங்களுக்குப் படிப்பினைதான்.
    தொடர்ந்து தரவும்.
    தம்பி எங்கேயும் போகலை. அப்போ அப்போ வேலைகள் அதிகமாகுது, கிரிக்கெட் தொடங்கியாச்சு, ஆக ஏகத்துக்கும் பிஸியாக்கும்

    நீங்க சிரிக்கும் முன்பே நானே சிரிச்சிட்டேன்.
    பரஞ்சோதி


  11. #11
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    விழியோரம் மகிழ்வான நெகிழ்வால் கொஞ்சம் கசிந்தேன்..பரம்ஸ்..

    அம்மாவுக்கு என் அன்பான விசாரிப்புகள்.. சக்திக்கும்தான்..

    அம்மா போன்றவர்களால்தான் உலகம் இன்னும் அழகாக இருக்கிறது..

    என் பெரியம்மா திரைப்பட, புத்தகக்கதைகள் சொன்னால்
    படம் பார்க்காதவர்கள், கதை படிக்காதவர்கள் எல்லாம்
    சிரித்து, அழுது கதை கேட்ட நினைவுகள் எனக்குள்..


    தொடரட்டும் இந்த இலக்கியத் தொடர்..
    இளசு அண்ணாவின் பின்னோட்டம் படித்தாலே இதயம் நெகிழும். இதை தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன் அண்ணா.
    பரஞ்சோதி


  12. #12
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by manojoalex View Post
    அருமை அருமை என் அம்மா நினைவு வந்தது மிக்க நன்றி தொடருங்கள்.....
    நன்றி நண்பரே!

    அன்னையை போல் ஒரு தெய்வமில்லை என்பதை நான் உணர்ந்தவன்.
    பரஞ்சோதி


Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •