Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 34

Thread: நீ ஹாவ்...!! ஐ யாம் சாரி....!! பாகம்-2

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1

    நீ ஹாவ்...!! ஐ யாம் சாரி....!! பாகம்-2

    ஒரு லேப்டாப் பேக், ஒரு கேரி பேக் இதை மட்டும் தூக்கிட்டு போறதுக்கே எனக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு. எப்படிதான் நம்ம தாய்குலங்கள் வயத்துல ஒன்னு, இடுப்புல ஒன்னு , கையில ஒன்னு என்று ஒரு குருப்பாவே போவங்களே ஒரு புட்பால் டீமே இருக்கனும்னு நினைப்பு இருக்கிறதால சரி இத எல்லாம் தூக்குறதுன்னு முடிவேடுத்தேன்.

    இப்ப சேக்கூரிட்டி சேக்-இன்ல கொள்ளகூட்டமில்ல (நன்றி: மதுரை தமிழ்) வருசை அப்படியே நம்ம மண்ணென்னை லைன்னுமாதிரி இருந்த்து நானும் அப்ப்டியே போயி வாலில் ஒட்டி கொண்டேன் அது என்னமோ பாருங்க நான் போயி நின்னதும் இன்னொரு வருசையை உருவாக்கிடாங்க அதுலையும் நான் தான் கடைசி. அதுலையும் மர்பீஸ் லா எனக்கு சரியா வேலை செய்யும். நான் முதலில் நின்ன வருசை என்னா வேகமா போகுது!!!! எல்லாம் நன்மைக்கே..
    அது அவங்களுக்கு பணி நேரம் முடிந்து அடுத்த ஷிப்ட் ஆட்க்கள் வந்து கொண்டிருந்தார்கள். என்னை முறைத்து கொண்டிருந்த அந்த போலிஸ்காரனும் போயிட்டான். அப்படா இந்த முறை வந்த போலிஸ்காரன் காலையிலே பெண்டாட்டிகிட்ட சண்டை போடல போல சிரித்த முகத்தோடயே உள்ள போக சொன்னான்.

    அப்படியே நடந்து விமானத்துக்காக காத்திருக்கும் இடத்தில் போயிருந்தேன். ஒரு பாட்டி வந்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தாங்க அவங்க மகள் டெல்லியில் வேலை செய்யுறாளாம், இப்போ குழந்தை பிறந்து இருக்காம் அதனால பாக்க போறாங்களாம். (இவங்க பாட்டி, அவங்க மகளுக்கு இப்பதான் குழந்தை பிறக்குதா??.. இப்படியெல்லாம் கேள்வி வந்தாலும், வாயை மூடிட்டு கேட்டுடே இருந்தேன்.

    வழக்கம் போல தாமதமான போர்டிங் எனக்கு விமானத்தில் கடைசி இருக்கைக்கு முந்தைய இருக்கை. கடைசி இருக்கை விமான பணி பெண்களுக்கு உள்ளதாம். விமான எப்போ எழும்பியது என்று கூட எனக்கு தெரியாமல் உள்ளே உறங்கிபோயிருந்தேன். தோளில் எதோ பட திடீர் என்று எழும்பினேன். விமான பணிபெண் சிரித்த பெண்
    உணவு பரிமாற போகிறேன், முகம் கழுவ விரும்புகிறீர்களா???
    சரி
    ஆச்சரியமாக இருந்தது, உறங்கி கொண்டிருப்பவனின் முன்னாலையே உணவை எறிந்து கொண்டுபோகும் மற்ற விமானசேவையை விட இது என்னவோ வித்தியாசமாக பட்டது.

    முகம்கழுவி உக்கார்ந்த போதுதான் கவனித்தேன் மும்பையில் ஏறிய அனேகர் இல்லை (முக்கியமா நீல ஸ்கேர்ட்டும், வெள்ளை டாப்சும் போட்ட அந்த பொண்ணு) டெல்லி கடந்தாச்சு எனது பக்கத்து இருக்கையும் காலியாகி இருந்தது. சுற்றி இருப்பவங்களை ஆராய துவங்கினேன். ஒரு பத்து பசங்க அப்படியே கலகல என்று , விசாரித்தேன் சீனாவில் எதோ ராக் ஷோ கொடுக்க போகிறார்களாம் அது என்னமோ தெரியலை ராக் குரூபில் இருந்தால் முடியெல்லாம் வளத்து, கழுத்துல எக்கசக்கத்துக்கு இரும்பு பட்டை எல்லாம் தொங்கவிட்டு, கிழிந்த ஜீன்ஸ், அழுக்கி சட்டை இது எல்லாம் எழுதாத விதிகளோ என்னவோ இவங்களும் அப்படிதான் இருந்தார்கள். ஒரு வெள்ளையன் ஒருவன் என் பின்னால் இருந்த பணிபெண்கள் இருக்கையை ஆக்கிரமிக்க, ஒரு பணிபெண் வந்து மருயாதையுடம் அவருடைய சீட்டில் இருக்கும் படி வேண்டினார்
    நான் ஏன் இதுல இருக்க கூடாது
    இது எங்களுக்காக கொடுக்க பட்ட சீட்..
    அதனால் என்ன..?? நீ என் சீட்ல உக்காரு..
    நாங்கள் பயணிகளுடன் இருக்க கூடாது..
    சரி.. மற்ற காலி சீட்டில் உக்காரு நான் இதில் இருக்க வேண்டும்..
    நீங்கள் இதில் விதிமுறைகள் படி இருக்ககூடாது மேலும் இந்த இருக்கைகளுக்கு இன்ஸ்சிரன்ஸ் இல்லை
    இப்படியே இவர்களது பேச்சு தொடர்ந்தது. கடைசியில் வெள்ளையன் தன் இருக்கைக்கு திரும்பினாலும் இந்திய விமானக்கள் என்றால் எல்லோருக்கும் ஒரு இளக்காரம் நம்மவர்களே மற்ற விமானக்களில் வருபோது அமைதியாக வருவார்கள், இந்திய விமானக்களில் ஏறும்போது இவர்களின் நடவடிக்கை மாறிடுது், நம்மவர்களே இப்படி இருக்கையில் அடுத்தவர்களை குறைகூறுவதில் என்ன இருக்கு.
    சாப்பிட்டு மீண்டும் உறங்கி போனேன் கண்விழித்து பார்த்த போது எல்லோரும் இறங்கி கொண்டிருந்தார்கள்
    இது எந்த ஏர்போட்?? என்று பணிபெண்ணிடம் கேக்க
    பாங்காக் என்று பதில் சொல்லிவிட்டு இறங்குபர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.
    நான் மீண்டும் உறக்கதில் இருந்தேன். எதோ கிர்..கிர் என்று சத்தம் கேக்க லேசா விழித்து பார்த்தேன் விமானத்தை கிளீன் செய்து கொண்டிருந்தனர் கண் சொக்க , நான் மீண்டும் உறங்கி போனேன்

    மீண்டும்.
    தோளில் எதோ பட திடீர் என்று எழும்பினேன். வேறு ஒரு விமான பணிபெண்
    உணவு பரிமாற போகிறேன், முகம் கழுவ விரும்புகிறீர்களா???
    சரி ம் ம் பாங்காகில் விமானம் எவ்வளவு நேரம் நின்றது
    மூன்று மணி நேரம்..
    ஷாங்காய் செல்ல இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு?
    உத்தேசமாய் இரண்டு மணி நேரம்

    முகம் கழுவி கொண்டு, சாப்பிட ஆரம்பித்தேன் இன்னும் இந்திய சுவை சாப்பாட்டில் ஒட்டி இருந்தது. நேரத்தை எப்படி சொல்லுவது என்ரு எனக்கு புரியலை லேப்டாப்பை எடுத்து அலுவலக வேலையை செய்ய ஆரம்பித்தேன் நேரம் போயிடுச்சு

    இறங்கபோவதாக சொல்ல லேப்-டாப்பை மூடி வைத்து பெல்டை கட்டி கொண்டேன்
    ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிட முடியாது, ஆனா ஷாங்காயை அதன் விமானநிலையத்தை வைத்து மதிப்பிட முடிந்தது பெங்களூரில் இப்போது கட்டும் விமான நிலையம் கூட இந்த அளவு வரவே வராது அது என்னமோ தெரியலங்க நம்ம நாட்டில மட்டும் எந்த வேலையும் உலக தரத்தில் இல்லவே இல்லை. இறங்கி இமிகிரேசனில் முத்திரை குத்தி கொண்டேன் இமிகிரேசனில் இருப்பவரும் எதற்க்காக வருகிறென் என்றும் அலட்டி கொள்ளவில்லை.
    அப்படியே வந்து எனது பைகளை எடுக்க போனேன் அடடே என் கூட இவ்வளவு இந்தியர்கள் சீனா வாறாங்களா.விமானத்தில் வந்ததில் அனேகர் இந்தியர்தான். நான் எவரையும் கண்டு கொள்ளவில்லை, என்னையும் எவரும் கண்டு கொள்ளவில்லை. நான் எனது பையை எடுத்து கொண்டு கஸ்டம்ஸ் டிக்லரேசன் பாரம் பூர்த்தி செய்ய ஆரம்பித்தேன் எனக்கு என்னுடைய பாஸ்போட் எண் எப்பவும் மறக்கதான் செய்யும், அல்லது சரியா என்ரு ஊர்ஜித படுத்தி கொள்ள, பாஸ்போர்ட்டை எடுத்து அதை பார்த்து தாண் எழுதுவேன் நான் எழுதுவது வரை காத்திருந்து, என்னுடைய பேனாவை பக்கத்தில் இருந்த இந்திய பெண் கேக்க
    இந்தாங்க என்று பெரிய மனதுடன் கொடுத்தேன் திரும்ப வாங்கி திரும்புகையில் எதோ ஒன்று குறைவது போல் ஒரு உணர்வு

    பாஸ்போர்ட்

    தேட ஆரம்பதேன்.. சட்டை பை, கேட் பை, பேண்ட் பை.. லேப்டாப் பை.. பக்கத்தில் இருந்த பெண்ணும் அவரமாக தேடினார் அவர் கைபையில் அவர் பாஸ்போட் இருப்பது கண்டு அவர் கஸ்டம்ஸ் நோக்கி நடக்க, நான் என் பாஸ்போட்டை மீண்டும் தேட ஆரம்பித்தேன்

    எங்கும் இல்லை


    பாஸ்போர்ட் தொலைந்து போயிருந்தது
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அருமையான அனுபவ பதிவு....

    ரசித்து படிதேன்...(இன்னொருவர் வேதனை இவளுக்கு வேட்டிக்கைனு பாட்டு பாடதீக )

    இருந்தாலும் ஒரு புது பாட்டி தோழியாகிட்டாள்....

    சுவாரஸ்யமா படிசுட்டு வர்றயிலே இப்படி ஒரு குண்டு போடுறீகலே பென்சு....பாஸ்போர்ட் தொலைந்து போயிருந்தது

    அச்சச்சொ...
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    என்னது பாஸ்போர்ட் இல்லைய
    அட டா இத செல்லமா விட்டுடனே ரும்ல இருக்கும் பொழது...
    இப்பெ செல்லிர்லாம் பெஞ்ஜமின் சார் பாஸ்போட்ட பாத்தறமா பாத்துக்கோங்க சரியா
    Last edited by மனோஜ்; 10-03-2007 at 12:52 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by benjaminv View Post
    ஒரு லேப்டாப் பேக், ஒரு கேரி பேக் இதை மட்டும் தூக்கிட்டு போறதுக்கே எனக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு. எப்படிதான் நம்ம தாய்குலங்கள் வயத்துல ஒன்னு, இடுப்புல ஒன்னு , கையில ஒன்னு என்று ஒரு குருப்பாவே போவங்களே
    தலைவரே கொஞ்ச நாள்ல பாருங்க கங்காருமாதிரி எல்லாரும் வயித்துல லாப்டாப்பை கட்டிகிட்டு அலையப்போறாம்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    என்னது பாஸ்போர்ட்டக் காணோமா? அடக்கொடுமையே. பாஸ்போர்ட்டே ஒரு கரச்சல் பிடிச்ச விசயமாச்சேய்யா. எந்த ஊரு பாஸ்போர்ட்டு? திருச்சியா? சென்னையா?

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சேரன்கயல்'s Avatar
    Join Date
    17 May 2003
    Location
    வானலை...
    Posts
    3,192
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    இப்பத்தான் சூடு பிடிக்குது கதையில்...
    இந்தியன்னு என்கிட்ட சொன்னீரே பென்ஸ்...இந்தியள்னு சொல்ல மறந்தீட்டிகளோ)
    நலம் வாழ்க...
    சேரன்கயல்...

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    ஹ்ம்ம்.. சாப்பிடறது தூங்கறது என்ற டூட்டியை விமானத்தில் கூட விடலையா.. பாஸ்போர்ட் போனா என்ன, ரேசன் கார்டு கொண்டு போயிருந்தீங்கள்ளே......!!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    இனிய பென்ஸ்

    தொடர்தூக்கத்தை ஊக்குவித்து
    நற்சேவையைச் சிலாகித்து
    சிலர் நடத்தையை சேர்ந்து கோபித்து
    ரசித்துப் படித்து வருகையில் -

    கடவுச்சீட்டு தொலைந்தது தெரிந்ததும்
    பகீர் பயமும்... உன்மேல் சுரீர் கோபமும் வந்தது
    எதிரில் இருந்திருந்தால் கடுமையாய்த் திட்டி இருப்பேன்..

    எக்காலத்திலும் எல்லாரும் சர்வ ஜாக்கிரதையாய்க் காப்பாற்றவேண்டிய
    ஒரே பயண ஆணவம் - கடவுச்சீட்டு.

    இ-டிக்கட்டால் பயணச்சீட்டு கூட தொலைந்தால் சமாளிக்கலாம்.

    பொதுவாய் பயண ஆவணங்களில் சிறு துரும்பைக்கூட முழு பயணமும்
    முடியும் முன்னே எறியக்கூடாது என்பதை
    ஒரு சின்ன கஸ்டம்ஸ் துண்டுச்சீட்டை குப்பையில் எறிந்துவிட்டு
    அமெரிக்கா விமான நிலையம் ஒன்றில் நான் பட்ட அவஸ்தை இருக்கே......போதும்பா போதும்!

    சீக்கிரம் இந்தப் பிரசினை தீர்ந்த விதம் சொல்லி
    என் கோபம், பதற்றம் தணிக்கவும்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அண்ணாத்த..
    அப்புறம் என்னாச்சு...
    பாஸ்போர்ட்டை எங்க தான் வச்சிருந்தீரும்...

    எப்பவுமே இப்படி தான்....
    எல்லாத்தையும் பத்திரமா ஒரு இடத்தில வச்சிகிட்டு அந்த பத்திரமான இடத்த மட்டும் மறக்க வேண்டியது...ஹ்ம்ம்ம்

    அடுத்து என்னாச்சுன்னு சீக்கிரமா எழுதவும்...

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    அடங்கொக்காமக்கா...
    பாஸ்போர்ட்டையா காணோம்...
    அப்புறம் என்ன பண்ணீக??? இப்ப இங்க வந்துருக்குறது பென்ஸூதானா? இல்ல வேற யாராவதா?
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by ஓவியா View Post
    அருமையான அனுபவ பதிவு....

    ரசித்து படிதேன்...(இன்னொருவர் வேதனை இவளுக்கு வேட்டிக்கைனு பாட்டு பாடதீக )

    இருந்தாலும் ஒரு புது பாட்டி தோழியாகிட்டாள்....

    சுவாரஸ்யமா படிசுட்டு வர்றயிலே இப்படி ஒரு குண்டு போடுறீகலே பென்சு....பாஸ்போர்ட் தொலைந்து போயிருந்தது

    அச்சச்சொ...
    அந்த வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும்....
    ரொம்ப சிரிச்சுட்டா பூமிக்கு ஆனந்த கண்னிர் வரும்முன்னு சொல்லகூடாது...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by manojoalex View Post
    என்னது பாஸ்போர்ட் இல்லைய
    அட டா இத செல்லமா விட்டுடனே ரும்ல இருக்கும் பொழது...
    இப்பெ செல்லிர்லாம் பெஞ்ஜமின் சார் பாஸ்போட்ட பாத்தறமா பாத்துக்கோங்க சரியா
    இல்லை... சொல்லிதான் விட்டீங்க.... (அந்த மனோஜை சொல்லுறேன்)...

    "பத்திரமா வச்சுக"... என்று சொல்லிதான் கொடுத்ததே...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •