Page 1 of 8 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 96

Thread: ♔. பிரபலங்கள் வாழ்க்கையில் நகைச்சுவை..

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0

    ♔. பிரபலங்கள் வாழ்க்கையில் நகைச்சுவை..

    வணக்கம் நண்பர்களே..!

    இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்
    ..


    1. உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர் வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.
    உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் "]வாலி"பன் அல்லவா ?" என்றார். எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார
    Last edited by ராஜா; 18-12-2008 at 06:00 AM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திடம் ஒருமுறை நிருபர்கள் கேட்டனர்..

    அய்யா.. தமிழ்ப் புலவர்கள் எல்லாம் கம்பன், இளங்கோ, வள்ளுவர் என சிறிய பெயராக வைத்திருந்தார்கள்.. நீங்கள் இவ்வளவு பெரிய பெயராக வைத்துள்ளீர்களே..?

    அவர்கள் எல்லாம் பெரிய கவிஞர்கள்.. சிறிய பெயராக வைத்திருந்தனர்.. நான் சின்னக் கவிஞன்.. பெயராவது பெரிதாய் இருக்கட்டுமே..!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    பட்டுக்கோட்டை அருமையான பாடலாசிரியர். அநியாயமாக சிறிய வயதிலேயே இறந்துவிட்டார். அவர் இன்னும் வாழ்ந்திருந்தால் பல சிறப்பான பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கும்.

    எம்ஜியாரிடம் இப்படி வாலி வெளிப்படையாக பேசியிருப்பாரா? சந்தேகமாக உள்ளது. இருந்தாலும் நகைச்சுவை நன்றாக இருந்தது.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நல்ல திரி இது ராஜா. பாராட்டுகள்..

    -------------------------------------------

    அரசு விழா.
    ஒலிபெருக்கியில் அறிவிப்பு :
    'அடுத்து மீன்வளத்துறை அமைச்சர் பேசுவார்'

    இருக்கையில் இருந்து எழுந்த அமைச்சரின் காதில் முதல்வர் கலைஞர்
    கிசுகிசுத்தார் :
    அயிரை மீன் அளவுக்குப் பேசு, அதிகமாய் பேசாதே!

    தகவல் உபயம் : கவிஞர் வைரமுத்து.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    சுவாரஷ்யமான திரி.

    தொடர்ந்து கொடுங்க ராஜா..

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    நண்றி நண்பரே..!

    காவடிச்சிந்து பாடுவதில் பெரும் புகழ் பெற்றவர் புலவர். சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார். இவர் ஒரு குறு நில மன்னரின் அவைப்புலவராக இருந்தார். ஒருநாள் ஒரு ஏழை விவசாயி அவரிடம் வந்து, " அய்யா.., மன்னரிடம் சொல்லி எனக்கொரு ஒரு ஆடும், ஒரு மூட்டை அரிசியும் வாங்கித் தாருங்கள்" என வேண்டினார்.

    இதைக் கேட்ட ரெட்டியார், " நீங்கள் கேட்டதில் ஒன்று நடக்கும்.. ஒன்று நடக்காது..!" என்றார். உடனே ஏழையின் முகம் வாடி விட்டது. மெல்லச் சிரித்த ரெட்டியார், " அய்யா.. கவலைப் படாதீர்கள்.. நீங்கள் கேட்டவை கிடைக்கும்.. அதில் ஆடு 'நடக்கும்.'. அரிசி மூட்டை 'நடக்காது' .. ! இதைத்தான் அப்படிச் சொன்னேன"
    என்றாராம்..!

    ________________________________________________________

    ஆதாரம் ; சான்றோர் வாழ்வில்.... ஆசிரியர் ; புலவர்.அ.சா. குருசாமி.

    சுரா புக்ஸ் [பி] லிட் வெளியீடு.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அசத்துங்க ராஜா..

    -------------------------

    எதிர்க்கட்சித் தலைவர் அனந்தநாயகி : என்னை அரசு சி.ஐ.டி. வைத்து வேவு பார்க்கிறது. என்னை சிஐடி போலீசார் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள்..

    முதல்வர் கலைஞர் : உங்களுக்குத் தெரியும்படி உங்களைக் கண்காணிப்பவர்கள் எப்படி சிஐடி போலீஸாக இருக்க முடியும்?
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    கலைஞரின் முத்துச்சிதறல்கள் அருமை இளசு அவர்களே. நீங்களும் தொடர்ந்து கொடுங்கள்.

    ராஜா - உங்களுடைய ஹாஸ்ய ஞானம் வியக்கவைக்கிறது. தொடருங்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    அருமையான நகைச்சுவைகள் ராஜா அண்ணா தொடருங்கள்
    Last edited by இளசு; 11-03-2007 at 03:39 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நன்றி அன்பின் ஆரென், மனோஜ்..

    --------------------------------------------

    நடிகவேள் எம் ஆர் ராதாவுக்கு உலகமெங்கும் மனைவியர், ஊரெங்கும் பிள்ளைகள் என்று மிகைப்படுத்திச் சொல்வார்கள்.
    அதையொட்டிய நிகழ்ச்சி ஒன்று:

    ராதா காரில் போய்க்கொண்டிருக்க ஒரு சிறுவன் சட்டென குறுக்கே வர
    திடீர் பிரேக் போட்டுக் காரை நிறுத்திய டிரைவர்,
    'பாத்து வரக்கூடாது..? அப்பன் பேர் தெரியாத பையன்..'' என திட்ட,

    ராதா சொன்னாராம் -
    'பாத்து திட்டுப்பா.. என் மகனா இருக்கப் போறான்..''
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  11. #11
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    03 Dec 2006
    Location
    பெங்களூர்
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    11,037
    Downloads
    53
    Uploads
    0
    நல்ல திரி ராஜா... தோடருங்கள்... பல விஷயங்கள் நகைச்சுவையுடன் தெரிந்து கொள்ளும் கலமாக உள்ளது...

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    ராதா சொன்னாராம் -
    'பாத்து திட்டுப்பா.. என் மகனா இருக்கப் போறான்..''
    இதை அப்படியே சத்யராஜ், வடிவேல் நடித்த ஒரு படத்தில் காமெடியாக வைத்திருக்கிறார்கள்..

Page 1 of 8 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •