Results 1 to 7 of 7

Thread: சொர்க்கத்தில் ஒரு காதல் - பகுதி 8

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    130,816
    Downloads
    47
    Uploads
    0

    சொர்க்கத்தில் ஒரு காதல் - பகுதி 8

    உயிர் உடலோடு
    சேர்ந்தால்தானே மனிதன்?
    முயற்சிக்கலாமே என்று
    படுத்திருந்த உடலோடு
    ஆவியான இவள் படுத்தாள்..
    ஆனால் எதுவும் நடக்கவில்லை..
    கைகளை ஆட்டிப் பார்த்தாள்.
    தலையை நீட்டிப் பார்த்தாள்.
    ம்ஹீம்...
    அச்சமயம் பார்த்து
    தலைமை மருத்துவர் வந்து சேர்ந்தார்..
    கோமாவில் படுத்திருக்கும் உடலை
    எடுத்து சென்றுவிடுமாறு
    பூங்குழலியின் அக்காவிடம் சொன்னார்,,,
    அனைத்தையும் கேட்டறிந்தாள்
    அவர்களுக்கு மிக
    அருகே நின்றுகொண்டே...


    மெல்ல அவனோடு சோர்ந்தவாறு
    வீடு சேர்ந்தாள்...


    கவிதை சேர்க்கும் மொட்டை மாடியில்
    எண்ணங்களை உலவ விட்டார்கள்,,
    எண்ணங்கள் காதலித்தால்
    இவர்கள் காதலர்கள் தாம்..
    ஆவியுடன் காதலா?
    எண்ணலாம்...
    சொல்லியிருக்கிறார்களே
    "காதலுக்கு கண்ணில்லை,
    காதில்லை
    மூக்கில்லை
    முழியில்லை "என்று...


    கதிரவன் ஒரு முடிவு செய்தான்
    உடலைத் திருடி வந்துவிட....
    என்றாவது ஓர்நாள் உயிர் இணையுமல்லவா,,


    நண்பன் உதவியால்
    மெல்ல மருத்துவமனை சென்றான்
    நாசியைப் பிடுங்கும்
    நாற்றம் கமழும் இடம் இது..
    மூக்கைப் பிடித்தவாறே
    ஒரு பூனை போல சென்றார்கள்..
    இது என்ன மடமா? சத்திரமா?
    மருத்துவமனை..
    காவலின்றி போகுமா?
    கடத்தலில் புதியவன் என்பதால்
    கதிரவன் தவறிழைத்துவிட்டான்.
    காவல் காரர்கள் சுற்றி வளைத்தார்கள்..
    இருப்பினும் அவள் உடல் அடங்கிய
    சக்கர மெத்தையை உசுப்பி
    அங்கிருந்து அகன்றான்.
    ஆனால் பிடிபட்டான்...


    கோமாவிலிருந்த குழலி
    இந்த கூச்சல் குழப்பங்களுக்கிடையில்
    இறந்தே போனாள்...
    நினைவுகளின் இறப்பால்
    உடலைவிட்டு பிரிந்த நினைவுகள்
    உடல் போனது நினைவுகளும் போயிற்று..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    32,572
    Downloads
    26
    Uploads
    1
    இறப்புக்கு பின் ஒவ்வொருவருமே தன் சடலத்தின் அருகில் இருந்து வேடிக்கை மனிதர்களின் வார்த்தைகளை கேட்பார்கள்தான் போலும்....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    130,816
    Downloads
    47
    Uploads
    0
    பார்க்கலாம் ஷீ@
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    13,760
    Downloads
    38
    Uploads
    0
    விறுவிறுப்பை எட்டிவிட்டது..

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    56,107
    Downloads
    4
    Uploads
    0
    உயிரையும் உடலையும் இணைக்கும்
    முயற்சியில் சறுக்கல்..

    இனியும் இணையுமா?
    கதிரவன் கதி என்ன?


    ஆதவாவின் சொல்லோவியத்தில் முடிச்சு விழுந்த இடமிது..
    அவிழும் விதம் எப்படி? பார்க்கலாம்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    36,060
    Downloads
    5
    Uploads
    0
    ஆவியுடன் காதலா?
    எண்ணலாம்...
    சொல்லியிருக்கிறார்களே
    "காதலுக்கு கண்ணில்லை,
    காதில்லை
    மூக்கில்லை
    முழியில்லை "என்று...

    சிந்தனை ரமணி இல்ல இல்ல சிகாமணி


    நினைவுகளின் இறப்பால்
    உடலைவிட்டு பிரிந்த நினைவுகள்
    உடல் போனது நினைவுகளும் போயிற்று..
    அப்படியா கத ....

    படிக்க படிக்க சுவரஸ்யம் பிச்சுக்கினு போகுது... சபாஷ் பலே

    நான் இன்னும் இந்த பேய் படம் பார்க்கவில்லையே அதான்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    130,816
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    அப்படியா கத ....

    படிக்க படிக்க சுவரஸ்யம் பிச்சுக்கினு போகுது... சபாஷ் பலே

    நான் இன்னும் இந்த பேய் படம் பார்க்கவில்லையே அதான்.
    இந்த பஞ்ச் யாருக்கு????!!!!

    இன்னும் இரு பாகம்தான்... மேலே படியுங்க
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •