Results 1 to 6 of 6

Thread: சொர்க்கத்தில் ஒரு காதல் பகுதி 7

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    சொர்க்கத்தில் ஒரு காதல் பகுதி 7

    பகுதி 7

    ஒருவன் அடிபட்டுக் கிடந்தான்...
    மருத்துவர்கள் எவருமில்லை..
    ஒருவேளை இருந்தாலும்
    உதவுவார்களோ?
    மானங்கெட்ட மனிதர்கள் சிலர்
    தண்ணீர் கொடுக்கவும் தயங்குவார்கள்.
    குழலியினால் மற்றவர்கள் கண்களுக்கு
    காட்சி தரவும் முடியாது..
    பொருள்களைத் தொடவும் முடியாது.
    கதிரவனைத் தூண்டினாள்..
    முதலில்
    முதலுதவி செய்ய....

    ஒன்றுமே அறியாத அவன்
    அவள் சொல்படி
    ஒவ்வொன்றாய் செய்தான்.
    விபரங்களை அவளிடம் கேட்டறிந்தான்.
    மற்றவர்களின் கண்ணுக்கு
    அவள் தெரியாள்.
    ஆக இவன் பேசியது
    அவர்களுக்கு விசித்திரமாக இருந்தது...
    முதலுதவியில் அவன் உயிர்பெற்றான்.
    அச்சமயந்தான் பூங்குழலி அறிந்துகொண்டாள்
    தானொரு மருத்துவச்சி என்று...


    ஞாபங்களின் இழப்பால்
    ஞானம் போய்விட்டதே!
    கதிரவனின் துணையால்
    தூண்டு பெற்றிருக்கிறாள்
    அழகிய கிழத்தி.
    விழிகளில் யோஜனை செய்தாள்
    அவள் பணி செய்த மனைக்குச்
    சென்று விசாரிக்க முடிவெய்தாள்..

    உடனே விரைந்து சென்றார்கள்
    இருவரும்
    ஒரு மனதின் வேகத்தைப் போல..
    தன் இறப்புக்கு முந்தைய வாழ்க்கை
    தன் பிறப்புக்கு பிந்தைய வாழ்க்கை
    எவ்விதமிருந்திருக்கும்?
    அறிந்து கொள்ள ஆவலுற்றாள்..

    அங்கே வரவேற்பரையில்........

    மருத்துவமனை என்றால்,
    நாற்றம் வீசவேண்டுமா?
    நோயாளிகளின் அழுகிய வாசனையும்
    பணம் திருடும் மருத்துவர்களின்
    மெல்லிய பேச்சும்
    மருத்துவச்சிகளின் அவசர ஓட்டமும்
    தான் இறப்பதை இன்னும் அறியாது
    அவசரப் பிரிவில் படுத்திருக்கும்
    இருதய நோயாளிகளும்
    மருத்துவமனையை அடையாளம் காட்டின,,
    வரவேற்பறைப் பெண், ஓவியா
    வாய் திறக்க கஷ்டப் படுவாள் போலும்
    பூங்குழலியைப் பற்றி கதிரவன் விசாரித்தான்.
    பூங்குழலியைத் தன்னருகே வைத்துக்கொண்டே...
    என்னே ஒரு உலகம்/? விந்தை?
    அருகிலே அவள்...
    முகவரி கேட்கிறான் வேறொருவளிடம்//

    ஓவியா, தேன்மொழியைக் காட்டுகிறாள்.
    தேன்மொழி, பூங்குழலிக்கு உற்ற நண்பி.

    கதிர், மேல் மாடி சென்றான்.
    தேன்மொழியைச் சந்தித்தான்.
    விசாரித்தான்
    அப்போது.........

    தேன்மொழி சொன்னாள்,
    " பூங்குழலி இறக்கவில்லை..
    மாறாக அவள் நினைவுகள் இறந்துபோனது.
    கோமாவில் இருக்கிறாள். "
    குழலிக்கு புரிந்து போனது..
    மெல்ல அவள் படுத்திருந்த அறைக்கு
    அவளே சென்றாள்...

    இந்த வாக்கியம் பார்த்தீர்களா?
    இனிமையாக
    இருக்கிறதல்லவா?

    இனிமையில்லாது போனாள்
    இவள்.

    குழலியின் உடல் வெறும் ஜடமாய்
    உயிர் மட்டும் உலாவிக் கொண்டிருக்கிறது
    கதிரவன் கண்களுக்குத் தெரிந்தவாறு..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உடல் கோமாவில்..
    உயிர் அருவமாய் -
    நினைவுகள் இடையில் உலவ
    இவளும் மற்றவருமாய் சேகரம் செய்ய..

    இணையுமா? இனிமை திரும்புமா?

    புதுமைத் தொடரைத் தொடருங்கள் ஆதவா..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    மெல்ல அவள் படுத்திருந்த அறைக்கு
    அவளே சென்றாள்...


    இனிமையாகவே இருக்கிறது.....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நன்றிங்க ஷீ!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    ஞாபங்களின் இழப்பால்
    ஞானம் போய்விட்டதே!
    கதிரவனின் துணையால்
    தூண்டு பெற்றிருக்கிறாள்
    அழகிய கிழத்தி.
    விழிகளில் யோஜனை செய்தாள்

    பலே பலே



    ஓவியா
    வாய் திறக்க கஷ்டப் படுவாள் போலும்.

    இப்படி ஒரு ஆசை உங்களுக்கு இருக்கா ஆதவா??? ஓவியாவை ஊமையகிட்லாபுலே இருக்கு!!!!!!!!!!

    ஓவியா, தேன்மொழியைக் காட்டுகிறாள்.
    இந்த ஒரு வரி போதும்...நல்லாவே ரகசியத்தை காக்கறீக....நீர் வாழியே உம் பணி வாழியே.


    தேன்மொழி சொன்னாள்,
    " பூங்குழலி இறக்கவில்லை..
    மாறாக அவள் நினைவுகள் இறந்துபோனது.
    கோமாவில் இருக்கிறாள். "
    குழலிக்கு புரிந்து போனது..
    மெல்ல அவள் படுத்திருந்த அறைக்கு
    அவளே சென்றாள்...

    இந்த வாக்கியம் பார்த்தீர்களா?
    இனிமையாக
    இருக்கிறதல்லவா?

    இனிமையில்லாது போனாள்
    இவள்.

    குழலியின் உடல் வெறும் ஜடமாய்
    உயிர் மட்டும் உலாவிக் கொண்டிருக்கிறது
    கதிரவன் கண்களுக்குத் தெரிந்தவாறு..
    சில வரிகள் அபாரம். அருமையான கதைக்கவிதை.

    பாராட்டுகிறேன் கவிஞசரை.

    நன்று ஆதவா.

    கிழத்தி என்றால் என்ன பொருள்???
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    சில வரிகள் அபாரம். அருமையான கதைக்கவிதை.

    பலே பலே

    ஓவியா
    வாய் திறக்க கஷ்டப் படுவாள் போலும்.

    இப்படி ஒரு ஆசை உங்களுக்கு இருக்கா ஆதவா??? ஓவியாவை ஊமையகிட்லாபுலே இருக்கு!!!!!!!!!!

    ஓவியா, தேன்மொழியைக் காட்டுகிறாள்.
    இந்த ஒரு வரி போதும்...நல்லாவே ரகசியத்தை காக்கறீக....நீர் வாழியே உம் பணி வாழியே.


    பாராட்டுகிறேன் கவிஞசரை.

    நன்று ஆதவா.

    கிழத்தி என்றால் என்ன பொருள்???

    கிழத்தி என்றாலும் பெண் தான்..... ஓவியாவாது ஊமையாவது???? என்னாங்க ஆவறது... சும்மா கவிதைக்கு எழுதினேன்..........

    நன்றிங்க அக்கா
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •