Results 1 to 8 of 8

Thread: சொர்க்கத்தில் ஒரு காதல் பகுதி 2

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    130,816
    Downloads
    47
    Uploads
    0

    சொர்க்கத்தில் ஒரு காதல் பகுதி 2

    முதல் பகுதி.

    கவிதைநாயகன் கதிரவன் வாயிலாக.....

    என் அம்மாவை அழைத்துக்கொண்டு
    புதிதாக தங்கப் போகும்
    வீட்டைப் பார்வையிட
    சென்றேன்.
    நம் உள்ளம் அழகென்றால்
    வீடும் அழகாகவே அமையுமல்லவா?
    பூவின் அழகு முள்ளிலே இருக்கிறது.
    முற்கள் என்றும் அழகானவை.
    இல்லம் எனக்கு
    இஷ்டமில்லை..
    இல்லாத வசதிகள் ஏராளம்..


    காற்று இன்றி நாமேது ?
    மென் காற்றின் சுகம் அறியாத
    மனிதனும் இருக்கிறான உலகில்?
    எதிர் அபார்ட்மெண்ட்டில்
    ஒரு அழகிய வீடு இருப்பதாக
    ஒரு காகிதம் சொல்லியது
    காற்றின் உதவியால்
    நன்றி காற்றே!
    உன்னால் எனக்கு ஆகப் போகும்
    மாற்றம் என்னே!!


    காகிதத்தின் செய்தியறிந்து
    அடுத்த வீட்டை வாடகைக்கு
    எடுக்கச் சென்றேன்.


    முகப்பிலே தொங்கும் ஆனை
    முகனின் தோற்றம்
    முகம் மலர்ந்து வரவேற்றது...
    இது போதுமே ஒரு உதாரணம்
    இடது மூலையில் சோபா!
    வலது மூலையில் வெற்றிடம்
    அனேகமாய் தொல்லைக் காட்சி
    வைப்பதாக இருக்கலாம்.
    மத்திய தரையில் கோலங்கள்..
    மேலே சிற்பியும் சொக்கும் வர்ணங்கள்
    அங்கங்கே அடுக்கப் பட்ட பூந்தொட்டிகள்
    சற்று தள்ளி குளியலறை..
    அழகூட்டப்பட்ட சன்னல் அறைகள்
    இத்யாதி இத்யாதி
    மேலே மாடி.....


    மாடி என்றாலே
    கவிஞர்களுக்கு குஷிதான்.
    வானம் இன்றி கவிதைகள் பிறக்குமா?
    மிகச் சுத்தமாக டைல்ஸ் பொதிக்கப்பட்ட
    மேல்மாடியின் இடது மூலையில்
    வானுயர்ந்த கட்டிடங்களும்
    நேர் எதிரே அமைதியான கடலும்
    மனம் குன்றிய மனிதர்களையும்
    நேர் செய்திடும் தோற்றங்கள்.
    இயற்கையின் படைப்புகளுக்கு
    ஈடாக செய்திட்ட கட்டிடங்களும்
    வானும் கடலும்
    காற்றின் மெல்லிய கீதங்களும்.....


    அட! இந்த வீட்டை விட வேறென்ன வேண்டும்?

    அதீத சுகத்தில் ஆட்கொண்ட
    நான், சோபாவில் சுகமாய் அமர்ந்து
    எதிரே தொல்லைக் காட்சியைக்
    காணுகையில்
    மனம் கோக் குடிக்கச் சொல்லுகிறது..
    தனிமையான வாழ்க்கைதான்
    இனிமையான இல்லத்தில்//
    குளிரூட்டும் பொட்டியில்
    அடுக்கி வைக்கப்பட்ட
    கோக்குகளில் ஒன்றை
    எடுத்து திறந்தவாறே மெல்ல நிமிர்ந்தேன்...
    அங்கே......... அவள்...........


    தொடரும்......
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    56,107
    Downloads
    4
    Uploads
    0
    மொட்டை மாடி, வானம், தூரத்தில் கடல்..

    நகரக்கவிஞனின் ஆதர்ச வசிப்பிடம்..

    ஆனைமுகன் படம் மாட்டி
    ஆங்கிலக் கருவுக்கு 'சுதேசி' நிறம் தந்த யுத்திக்கு பாராட்டு..

    தொடரட்டும் உற்சாகம் குறையாமல்..

    பாராட்டுகள் ஆதவா..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    7,486
    Downloads
    14
    Uploads
    0
    ஆதவா அருமையான கவிதை சூழ்நிலையை கண்முன் கொன்டுவந்து நிறுத்துகிறது
    கவிதையா கவிதை கதையா
    வாழ்த்துக்கள் தொடருங்கள்
    Last edited by மனோஜ்; 25-02-2007 at 01:16 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    130,816
    Downloads
    47
    Uploads
    0
    நன்றிங்க இளசு மற்றும் மஞ்சு......
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    36,060
    Downloads
    5
    Uploads
    0
    பூவின் அழகு முள்ளிலே இருக்கிறது.
    முற்கள் என்றும் அழகானவை
    .

    முகப்பிலே தொங்கும் ஆனை
    முகனின் தோற்றம்
    முகம் மலர்ந்து வரவேற்றது...

    வானம் இன்றி கவிதைகள் பிறக்குமா?

    மனம் குன்றிய மனிதர்களையும்

    அடடா என்ன ரசனை,

    அருமையான கவிஞன். நல்ல சுவரஸ்யமாக செல்கின்றது.

    குட் குட் குட்
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    130,816
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    அடடா என்ன ரசனை,

    அருமையான கவிஞன். நல்ல சுவரஸ்யமாக செல்கின்றது.

    குட் குட் குட்
    சரி சரி... ரொம்ப புகழாதேங்கோ!! மேலே படியுங்க மேடம்.

    நன்றி
    Last edited by ஆதவா; 09-04-2007 at 02:06 AM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    79,611
    Downloads
    97
    Uploads
    2
    நாயகன், நாயகி அறிமுகம் அருமை ஆதவா!
    ஒரு வீடு எப்படி இருக்க வேண்டுமென்பதிலே - உங்கள் ஆர்வம் நன்றாகவே வெளிப்படுகின்றது.


    ''இடது மூலையில் சோபா!
    வலது மூலையில் வெற்றிடம்
    அனேகமாய் தொல்லைக் காட்சி
    வைப்பதாக இருக்கலாம்."


    மேலும்,

    "மாடி என்றாலே
    கவிஞர்களுக்கு குஷிதான்.
    வானம் இன்றி கவிதைகள் பிறக்குமா?
    மிகச் சுத்தமாக டைல்ஸ் பொதிக்கப்பட்ட
    மேல்மாடியின் இடது மூலையில்
    வானுயர்ந்த கட்டிடங்களும்
    நேர் எதிரே அமைதியான கடலும்
    மனம் குன்றிய மனிதர்களையும்
    நேர் செய்திடும் தோற்றங்கள்.
    இயற்கையின் படைப்புகளுக்கு
    ஈடாக செய்திட்ட கட்டிடங்களும்
    வானும் கடலும்
    காற்றின் மெல்லிய கீதங்களும்....."


    ஆமாம் ஆதவா இதனை விட வேறென்ன வேண்டும் ஒரு கவிஞனுக்கு அவன் வீட்டில் - அசத்துகிறீர்கள் ஆதவன்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    130,816
    Downloads
    47
    Uploads
    0
    மிகவும் நன்றிங்க ஓவியன்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •