Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 24 of 24

Thread: பங்குச் சந்தை: நல்ல நிறுவனத்தின் குணங்கள்

                  
   
   
  1. #13
    புதியவர்
    Join Date
    17 May 2007
    Posts
    3
    Post Thanks / Like
    iCash Credits
    8,968
    Downloads
    0
    Uploads
    0
    அற்புதமானப்பாடம். மிகத் தெளிவாக உள்ளது. ஆவலுடன் அடுத்த பாகத்தை எதிர் பார்க்கிறேன்.

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by hemalathaa View Post
    அற்புதமானப்பாடம். மிகத் தெளிவாக உள்ளது. ஆவலுடன் அடுத்த பாகத்தை எதிர் பார்க்கிறேன்.
    அன்பரே.. தங்களை பற்றி.. அறிமுகப்பகுதியில் கொடுக்கலாமே..

  3. #15
    இளம் புயல் பண்பட்டவர் என்னவன் விஜய்'s Avatar
    Join Date
    16 Sep 2007
    Location
    ஐக்கிய இராட்சியம்
    Posts
    398
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    2
    Uploads
    0
    தரமான தகவல்கள், பங்குச்சந்தை பக்கம் போய்பார்க்கும் ஆசையை தூண்டியுள்ளது......
    நன்றி
    Last edited by என்னவன் விஜய்; 24-09-2007 at 08:56 PM.
    அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
    பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே!!

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    உங்கள் கட்டுரை எனக்கு பங்கு சந்தையை பற்றி அடிப்படை அறிவையை தந்தது. நண்பரே நாம் முழுமையான அறிவு பங்கு சந்தையை பற்றி இல்லாமல் இருக்கும் பொது நாம் நேரடியாக வாங்குமால் ஏதாவது நிறுவனத்தின் மூலம் வாங்குவது சிறந்ததாக இருக்கும் இல்லையா?

  5. #17
    இளம் புயல் பண்பட்டவர் saguni's Avatar
    Join Date
    07 Oct 2006
    Posts
    127
    Post Thanks / Like
    iCash Credits
    13,884
    Downloads
    125
    Uploads
    0
    அன்பு நண்பர் ஜெகா தமிழில் தட்டச்சு செய்ய பழகிக்கொள்ளுங்கள். நம் முல்லை மன்றத்தின் தமிழ் எழுத்துரு உதவி பகுதியிலும் மற்ற சுட்டிகளிலும் உலாவி அறிந்து கொள்ளுங்கள். ஏதாவது உதவி தேவைப்படின் தயங்காமல் கேட்கவும் உதவ ஆவலாய் இருக்கிறோம்

  6. #18
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    நல்ல தகவல்கள் இராசகுமாரன். வாழ்த்துக்கள். மீதியையும் எதிர்ப்பார்க்கிறோம்.
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  7. #19
    இளம் புயல் பண்பட்டவர் அமீனுதீன்'s Avatar
    Join Date
    19 Dec 2009
    Location
    துபாய்
    Age
    56
    Posts
    181
    Post Thanks / Like
    iCash Credits
    16,346
    Downloads
    137
    Uploads
    6
    விழுகிறதா துபாய்....?

    வடிவேல் காமெடியில் வருவது போல இன்றைய நிலையில் துபாய், துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்து என எங்கெங்கும் வியாபித்திருப்பது துபாயின் பொருளாதார வீழ்ச்சி பற்றிய பேச்சுக்கள் தான். சமீபத்தி்ல் துபாயில் புயலைக் கிளப்பிய பொருளாதாரப் பிரச்சினையை துபாய் கடன் குமிழ் (Dubai Debt Bubble) என வர்ணிக்கின்றன மீடியாக்கள்.


    சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா ஆரம்பித்து வைத்த பொருளாதார வீழ்ச்சி அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டுமின்றி உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்பார்த்ததைப் போல இன்றைக்கு துபாயிலும் ஒரு பெரும் பிரச்சினையின் வால் தென்பட்டிருக்கிறது. கடன் பிரச்சினை.. அங்கே லேமென் பிரதர்ஸ் வங்கி என்றால் இங்கே துபாய் வேர்ல்டு நிறுவனம். துபாய் முழுக்க அலுவலகக் கட்டிடங்கள், ஷாப்பிங் மால்கள், டூரிஸ்டுகளைக் குறி வைக்கும் பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட வளாகங்களைக் கட்டித் தள்ளியது அந்நிறுவனம். ஏன்? துபாயின் புதிய அடையாளமாகத் தென்படும் கடலில் மிதக்கும் பனைமரத்தீவையும் கட்டியது இந்த நிறுவனம் தான். அதற்குத்தான் இந்தக் கடன் பிரச்சினை எழுந்திருக்கிறது.

    என்னதான் நடந்தது அப்படி?

    கடந்த நவம்பர் 26ம் தேதி, துபாய் வேர்ல்டு நிறுவனம் தனக்கு 59 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 5900 கோடி ரூபாய்) கடன் இருப்பதாகவும், தனக்குக் கடன் கொடுத்தவர்களிடம் அதைத் திருப்பிக் கட்ட அடுத்த வருடம் மே மாதம் வரை கெடு கேட்டது. பேங்க் ஆஃப் பரோடா வங்கி அதிக பட்சமாக கடன் வழங்கியுள்ளது. துபாய் வேர்ல்டு நிறுவனத்திற்கு மட்டும் சுமார் 9 பில்லியன் (900 கோடி) ரூபாய் அளவு உள்ளது கடன்.

    மறுநாளே உலகம் முழுக்க அனைத்து பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன. மும்பை பங்குச் சந்தை மட்டும் 390 புள்ளிகளை இழந்தது. இத்தனைக்கும் அன்றுதான் இந்திய, மத்திய புள்ளியியல் நிறுவனம், இந்தியாவின் ஜி.டி.பி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.9 புள்ளிகள் வளர்ச்சியைக் கொண்டிருப்பதாக அறிவித்தது. துபாய் பிரச்சினை கிளப்பப் படாமல் இருந்திருந்தால் அன்றைய வர்த்தகம் ஒரு நல்ல வளச்சியைக் கண்டிருக்கும்.

    ஆனால் இதனால் இந்தியப் பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது என்று கூறுகிறார்கள் பொருளாதார வல்லுனர்கள். பார்க்கலாம். ஆனால் துபாயின் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இந்தியர்கள், அங்கே வேலை செய்பவர்கள். இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் பட்சத்தில் ஒய்2கே பிரச்சினை முடிந்த நேரத்தில் அமெரிக்காவிலிருந்து இந்திய கம்ப்யூட்டர் என்ஜினியர்கள் திருப்பி அனுப்பப் பட்டது போல இவர்களும் திருப்பி அனுப்பப் படலாம்.

    துபாயின் மொத்த மக்கள் தொகை 2.26 மில்லியன் (அதாவது சுமார் 22இலட்சத்து அறுபதாயிரம் பேர்) அதில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டுமே பத்து இலட்சம். இது மொத்த மக்கள் தொகையில் சுமார் 42 சதவீதம் ஆகும். கிட்டத்தட்ட பாதி. அப்புறம் இது இந்தியாவை பாதிக்காமல் என்ன செய்யும்? நேரடியாக இல்லாவிட்டால் மறைமுகமாகவாவது பாதிக்கும் அல்லவா?.

    மறைமுகமாக என்றால் எப்படி?

    துபாய் தொழிலாளர்கள் வேலையிழந்து இந்தியாவிற்கு திரும்பி வந்தால் இங்கே அவர்களுக்கு வேலை? இங்கே அவர்களுக்கு வேலை கிடைத்தால் இங்கிருப்பவர்களுக்கு போட்டி வருமல்லவா? ஆக... போட்டி அதிகமாகும் போது தொழில் நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தில் ஆட்களை எடுக்க முயற்சி செய்யும். ஊதியம் குறைவாகக் கிடைக்கும் பட்சத்தில் செலவும் குறைவாகத்தான் செய்ய முடியும். பணப்புழக்கமும், மக்களின் வாங்கும் சக்தியும் குறையும்.

    வாங்க முடியாத பொருட்கள் விற்பனையாகாமல் இருந்தால் பொருட்களின் உற்பத்தி குறையும், உற்பத்தி குறைந்தால் உற்பத்தித் துறையில் வேலையிழப்பு நடக்கும். உற்பத்தித் துறையைத் தொடர்ந்து சேவைத்துறை. இப்படியே செயின் இழுத்து, கேயாஸ் தியரி ரேஞ்சுக்கு யோசித்துப் பாருங்கள். என்ன நடக்கும்? மக்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்சப் பணமும் செலவு செய்யப் படாமல் வங்கிகளில் முடங்கும். பணப் புழக்கம் இல்லாவிட்டால் இந்தியப் பொருளாதாரம் தடுமாறும். (இதெல்லாம் நடக்கும் என்று சொல்லவில்லை ஐயா, பயப் படாதீர்கள், நடக்க வாய்ப்புண்டு என்றுதான் சொல்கிறேன். அப்படி நடக்கும் பட்சத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும்.)

    உலகப் பொருளாதாரத்தின் தாக்கம் துபாயின் சுற்றுலாத்துறையை பலமாகவே பாதித்துள்ளது. கையில் காசு இருந்தால் தானே அய்யா ஜாலியாக ஊர் சுற்ற முடியும்? கையில் காசு இல்லை, கிரெடிட் கார்டு தேய்க்கவும் லிமிட் கொடுத்தாயிற்று. அப்புறம் எப்படி டூரிஸ்ட் வருவார்கள்? காசு வரும்? துபாயின் பொருளாதாரம் முக்கியமாக சுற்றுலாத்துறையை நம்பியே உள்ளது.

    அங்கே தற்போது ரியல் எஸ்டேட் துறை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நிலங்களையும் கட்டிடங்களையும், கிட்டத்தட்ட பாதி விலைக்குக் கூவிக் கூவி விற்கிறார்கள். இதன் தாக்கம் துபாயில் செயல்பட்டு வரும் இந்தியக் கட்டுமான நிறுவனங்களின் இலாபத்திற்கு கடும் வீழ்ச்சியைத் தரும். அதே போல் பழைய விலைகளில் வாங்கியுள்ள அல்லது வாங்குவதாக அக்ரிமெண்ட் போட்டுள்ள நிறுவனங்கள் தலையில் துண்டைப்போட்டுத்தான் போக வேண்டும். அப்படி வாங்கும் பட்சத்தில் அவர்களது இலாபத்தில் ஒரு பெரும் இழப்பு உண்டு.

    ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானம் குறித்த வேலைகள் செய்து தர அங்கே சென்றுள்ள நிறுவனங்களுக்கும் அடி. பாதிப்பு. பேமெண்ட் பேசியபடி பேசிய அளவு பேசிய நேரத்தில் வராது. அதனால் அவர்களது பாட்டம் லைன் எனப்படும் அசல் வரம்பு பாதிக்கப் படும். இதனாலேயே அங்கே பெரிய பெரிய புராஜக்டுகள் கேன்சல் செய்யப் பட்டு வருகின்றன. இவற்றில் இந்தியாவின் நாகார்ஜூனா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், லார்சன் அண்டு டூப்ரோ ஓமேக்ஸ் மற்றும் பி.எஸ்.ஈ.எல் இன்ஃப்ரா ஆகிய நிறுவனங்களும் அடக்கம்.

    துபாய் வேர்ல்டின் தற்போதைய அறிவிப்பு இந்தியப் பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பு எதையும் உடனடியாக ஏற்படுத்தாது என்றும் இதனால் அதிர்ச்சி ஏதும் அடைய வேண்டாம் என்றும் இதனால் அங்கு பணிபுரியும் இந்தியர்களுக்கு உடனடி வேலையிழப்பு ஏதும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் திரு. வேணு ராஜாமணி (India's consul-general in Dubai) கூறியுள்ளார். (அப்படி என்றால் என்ன அர்த்தம். உடனடியாக இல்லை. மெள்ள மெள்ள ஏற்படும் என்றா?)

    இதில் மற்றொரு ஹைலைட்டாக மும்பை படவுலகம் (ஏன் தமிழ், தெலுங்கு உள்ளிட்டவையும் தான்) கூட இதனால் பாதிக்கப் பட்டுள்ளன. திரைப்படங்களைப் பொறுத்த வரை, அவை தமிழ், தெலுங்கு, இந்தி என எதுவாக இருக்கட்டும், அவற்றிற்கு துபாய் முக்கியமானதொரு வர்த்தகக் கேந்திரம். இந்திப் படங்களுக்கான வெளிநாட்டு வியாபாரத்தில் சுமார் 50 சதவீதம் துபாயில் இருந்து மட்டுமே கிடைக்கிறது.

    இப்போது எழுந்துள்ள பொருளாதாரப் பிரச்சினையால் அங்கே மந்தமான நிலை நீடிக்கிறது. யாரும் சினிமா பார்க்க விரும்பவில்லை. சமீபத்தில் துபாயில் வெளியாக வேண்டிய ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் வழங்கும் அமிதாப்பின் பா திரைப்படம் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது போக பல கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப் பட்டுள்ளன.

    முதலீடு என்று பார்த்தாலும் பாலிவுட் பட்டையைக் கிளப்புகிறது. துபாயில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் ஷாருக் கானுக்கு 5000 சதுர அடி வீடு ஒன்று உள்ளது. இது தவிர இன்னும் சில முதலீடுகளும் வைத்துள்ளாராம் ஷாருக். ஹ்ரித்திக் ரோஷன், கரீனா கபூர் சுனில் ஷெட்டி போன்றோர் துபாய் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர். இது போக அபியும் ஐஸூம் சேன்க்சுவரி ஃபால்ஸ் என்ற இடத்தில் ரிஸார்ட் வீடு ஒன்றை வாங்கியுள்ளார்களாம்.

    regards...
    Ameen
    Last edited by அமரன்; 20-12-2009 at 08:43 AM.

  8. #20
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நீங்க் சொல்லீட்டீங்க.. அவுங்க விலையை மலித்து விற்றதும் வாடகையை குறைத்ததும் கிரீன்ஸ் பக்கமும் டிஸ்கவரி காடின் பக்கமும் தான். பேர்துபாய் பகுதி இன்னமும் உச்சத்தில் தான் விலை எல்லாம் உள்ளது. பணப்புழக்கம் குறைந்தமாதிரி தெரியவில்லை. மந்த நிலை தோன்றியது உண்மை தான். இதனால் பாதிக்கப்பட்ட பாரிய தொழில் கட்டுமானத்தொழில் தான்.

    பேர்துபாய் மன்கூல் போன்ற பகுதியில் 140 150 ஆயிரங்கள் ஒருவருடத்திற்கான வாடகை. அதுவும் திருமணமாகாதவர்களுக்கு வாடகை விலைக்கு மேலதிகமாக வேறு போட்டுக்கொடுக்கணுமாம்.

    நானிருந்த வீட்டின் நிலமை நம் மன்ற உறவுகள் பாரதி மற்றும் சிவா அண்ணன்களுக்கு தெரியும். 2 அறையில் 8 பேர் தங்கியிருந்தோம். சொல்லப்போனால் சட்டவிரோதம் தான். காரணம் அங்கு திருமணமாகாதவர்களுக்கு தங்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அப்பப்பா... அங்கு வசிக்கும் போது பட்ட பாடுங்கள்.

    மோல் ஒப் எமிரேட்ஸ் போய் பாருங்கள். துபாய் மோல் போய் பாருங்கள். ஜூமைரா கடற்கரை... அனைத்தும் வழமைபோல் தான் உள்ளது... ஆனால் ரோட்டில் வாகனப்புழக்கம் குறைந்தது உண்மை. காரணம் Dubai water front மூடப்பட்டுவிட்டது... அதுக்கு பொருளாதார வீழ்ச்சி மற்றும் தேவையற்ற கிம்பளங்கள் முறைகள் தான் காரணம்....


    -நொந்த நெஞசம்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    தொலைபேசி எண்ணை நீக்கி விடவும்.. யாருக்காவது தொலைபேசி எண்ணைத் தருவதென்றால் தனிமடலில் தரவும்..

    மன்ற நிர்வாகிகள் கவனித்து தக்க ஆலோசனைகளை தனிமடலில் அனுப்பி வைக்கவும்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #22
    புதியவர்
    Join Date
    01 Aug 2010
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    very useful

  11. #23
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    Quote Originally Posted by k.k.mani View Post
    very useful
    உங்களை அறிமுக படுத்தி பின் இந்த பகுதியே ரசிக்கலாமே..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  12. #24
    புதியவர்
    Join Date
    01 Aug 2010
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    very useful.simplysuprb.thank you for your hardwork

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •