Page 5 of 8 FirstFirst 1 2 3 4 5 6 7 8 LastLast
Results 49 to 60 of 95

Thread: எனது டைரியிலிருந்து சில குறிப்புகள்

                  
   
   
 1. #49
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  190,954
  Downloads
  47
  Uploads
  0
  திருப்பூர் நாங்கள் வந்த போது எனக்கு வருடம் ஞாபகம் இல்லை... எனக்கு தம்பியும் தங்கையும் பிறந்து இருந்தார்கள்... அப்போதே என் அம்மா அப்பாவை விட்டு பிரிந்து சில மாதங்கள் நாங்கள் குடியிருந்த வீட்டில் தனியே தங்கியிருந்தேன்... அரைவருட பரீட்சை முடியும் வரை (இரண்டாம் வகுப்பு) பக்கத்து வீட்டிலேயே தான் இருந்தேன்.. எனக்கு அப்போதும் வீட்டை விட்டு பிரிந்து இருக்கிறோமே என்ற கவலை இருந்தாகத் தெரியவில்லை...
  ஈரோட்டில் படித்தவரை ,,, எனது பள்ளியின் பெயர் அருள்நெறி திருப்பள்ளி,.. வாத்தியாரம்மா பெயர் ஞாபகம் இல்லை என்றாலும் என்னிடம் போட்டோ உள்ளது... அந்த ஞாபகம் வைத்துள்ளேன்.... காரணமிருக்கிறது. நான் படிக்க சேரும்முன்னேவரை தமிழ் சுத்தமாய் தெரியாது. தெலுகில் சொன்னால்தான் புரிந்து கொள்வேன் அல்லது பேசுவேன். அப்படியிருக்க, எனக்கு தமிழ் வார்த்தைகள் சொல்லி கொடுத்தது என் அம்மா.. படிக்கச் செல்லும் முன் நான் அழுதது கிடையாதாம்.. ரெம்ப ஜாலியாகவே செல்வேனாம்.. எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த டீச்சரம்மா தெலுகு என்பதால் சீக்கிரமே தமிழும் கற்றுக் கொண்டதாகத் தெரிகிறேன். அவர்களுக்கு என்மேல் அளவுகடந்த பாசம் வேறு.. மற்ற பையன்களை விட முன்னமே தமிழ் வார்த்தைகள் தெரிந்து வைத்திருந்தது என்னை வேறுபடுத்தியது.. எங்கள் பள்ளிக்கு பக்கத்தில் மேனிலைப் பள்ளி. இரண்டுக்கும் நடுவே அழகான தோட்டம். நாங்கள் அங்கேதான் உலாவுவோம். அங்கே நான் கண்டவைகள் (வெட்டுக்கிளி, பலவிதமான பூச்சிகள்; இலைகள், கையில் இலையை வைத்தால் குறுகுறுக்கச் செய்யும் ஒருவகையான செடிகள் இன்னும் பல./ ) எனக்கு அந்த சூழல் நிரம்ப பிடித்துப்போக.... ஒரு நாள் அங்கேயே இருந்துகொண்டு வகுப்பறைக்குச் செல்லாமல் அடம் பிடித்தது கூட எனக்கு ஞாபகம் இருக்கிறது..
  அரையாண்டு விடுமுறையில் திருப்பூர் சென்றுவிட்டேன். அந்த காலத்து திருப்பூர் ரெம்ப கேவலம். எனக்கு பிடிக்கவே இல்லை.. சுத்தமான ரோடு கிடையாது; பக்கத்தில் விளையாட குழந்தைகள் (குறிப்பாக பெண் குழந்தைகள்) கிடையாது. என்ன செய்ய? விதி. அங்கே இருக்க வேணுமென்பது தலையெழுத்து.. என்னை ரெண்டாம் வகுப்பில் சேர்த்து விட்டார்கள் அது திருநீலகண்டபுரத்து அரசு ஆரம்பப் பள்ளி.. (அந்த பள்ளிக்கு மிக அருகில்தான் எனது அலுவலகம்..) முதலில் சேர்ந்த வகுப்பு இரண்டு என்பதால் சில காலத்திற்கு துணைக்குக்கூட ஆட்கள் இல்லாமல் தனியே சென்று வந்துகொண்டு இருந்தேன். அப்போது பைத்தியம் மாதிரி ஏதாவது உளறிக்கொண்டே இருப்பேனாம். அதனாலேயே இரண்டு மூன்று நண்பர்/நண்பிகள் ஒதுங்கியிருந்து என்னை அவர்களுடன் சேர்த்துக்கொண்டனர். என் வகுப்பு டீச்சரம்மா ரெம்ப நல்லவங்க.. எனக்குத்தெரிந்து அவர்களிடம் அடிவாங்கினதே கிடையாது. நான் யாரிடமும் அவ்வளவாக பேசவும் மாட்டேன். அதுவும் ஒரு காரணம். கொஞ்ச நாட்கள் கழித்து எனக்கு ஒரு குழு சேர்ந்தது... ஐந்துபேர் கொண்ட குழு அது... நான், நதீஸ், செந்தில், சுரேஸ், அப்பாஸ்.. இதில் அப்பாஸ் தவிர நாங்கள் இன்றும் தொடர்புடன் இருக்கிறோம். நாங்கள் வரிசையாக ரேங்க் வாங்குவோம். ஒன்னாம் ரேங்க் எப்பவுமே அய்யாதான்... ரெண்டவது நதீஸ்.. இப்படித்தான் சென்று கொண்டிருந்தது. அப்போது அது பெண்களும் சேர்ந்துபடிக்கும்படியான பள்ளி என்றாலும் நான் பெண்களுடன் அவ்வளவாக பேசமாட்டேன்.. அதற்கு பெரும்காரணம் என் அம்மாதான். அந்த வயதிலேயே பெண்களுடன் பேசினால் திட்டக்கூட மாட்டார்கள்... விலாசல் தான்.......... இருந்தாலும் நான்காவது அல்லது ஐந்தாவது படிக்கும்போது ஷகீலா மற்றும் அமலா, ராதா போன்றவர்கள் என்னுடன் உரையாடினர். அப்போதும் எனக்கு கூச்சமாகவே இருக்கும்...
  ஐந்தாம் வகுப்பு முடிவதற்குள் நாங்கள் வீட்டை மாற்றிவிட்டு ஒரு பெரிய தோட்டத்தில் குடிபெயர்ந்தோம்... என் வாழ்க்கையில் சிறகுகள் பறந்த காலம் அது... கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் இடம். ஒரே வீடு.. அந்த ஏக்கரைச் சுற்றியும் சவுக்கு மரங்கள்... மற்றது எதுவும் கிடையாது.. வெறும் மண்தான். என் அப்பா அதை எப்படி பயன்படுத்தினார் தெரியுமா? அந்த ஏக்கரை அழகான காய்கறித் தோட்டமாக மாற்றினார். அந்த வீட்டில் இருந்தவரை காய்கறிகள் தட்டுப்பாடு இன்றி இருந்தது. (சுற்றி இருந்த குறுங்கடைகள் எங்களிடம் காய்கறிகள் வாங்கிப்போவதைக் கண்டிருக்கிறேன்.). அங்கே இருந்தபோதுதான் நிறைய புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். வியாசபாரதம், வில்லிப்புத்தூராரின் இலக்கியத்தோடு வில்லிபாரதம்.. இராமாயணம். சில பெரியார் சம்பந்தப்பட்ட புத்தகங்கள். சத்திய சோதனை, பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் மற்றும் கண்ணதாசன் காதல் கவிதைகள் இன்னும்.....
  இன்னுமொரு தகவல்.. அங்கே இருந்தவரை பாம்புகள் நடமாட்டம் அதிகம்.. என்வீட்டு வாசல் வழியே ஊர்ந்து சென்றதையெல்லாம் கண்டிருக்கீறேன்.. கொஞ்ச நாட்களில் அந்த பயம் போய் என்வீட்டுக்கு வந்த நண்பர்களிடம் காண்பித்து அவர்கள் பயந்து போய் ஓடக்கண்டிருக்கிறேன்... பாம்புகள் நம்மை ஒன்றும் செய்வதில்லை என்பதற்கு இதுவே சாட்சி...
  ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பு சேருவதற்குத்தான் ஏகப்பட்ட பிரச்சனைகள்.. நான் கேட்ட அதே பள்ளியில் சேர்த்துவதற்கு நடையாய் நடந்து ஒரு இடம் வாங்கிவிட்டார் தந்தை.. அங்கே எனது குழுமத்திலிருந்து வந்தவர்கள் நான் நதீஸ், செந்தில், சுரேஸ்.... அப்பாஸ் அதனால்தான் தெரியாமல் போனான்...
  எனது வகுப்புக்கு வந்தவன் சுரேஸ் மட்டுமே.. இன்றளவிலும் என்னுடன் இருக்கும் உயிர் நண்பன் அவன் ஒருவன் மட்டுமே... ஆறாம் வகுப்பில் என்னைவிட புத்திசாலிகள் பலர் இருந்தனர்... குறிப்பாக வினோத் ( எனது ஆருயிர் நண்பன். பெங்களூரில் விப்ரோவில் இருக்கிறான் ) கதிரவன், கவின் ( மோட்டாரோலா, ஐதராபாத் ) இன்னும் பலர்... இந்த குழுவிலும் நான் இருந்தேன்... நான் எப்போதுமே மூன்றாவது ரேங்க் தான். முதல் ரேங்க் எப்போதுமே வினோத் தான் ( மலையாளத்து நண்பன் பா! அவன் மூலம் மலையாள சிறிது கற்றுக்கொண்டது மட்டுமில்லாமல் இன்றும் என்னால் மலையாளம் எழுத முடியும்.. ) அவன் பத்தாம் வகுப்பு வரை முதல் ரேங்கே தான்.......... பத்தாம் வகுப்பில் நான் எவ்வளவு தெரியுமா???? 18 வது ரேங்க்... எப்படியென்று பிறகு சொல்லுகிறேன்.
  இப்படியாக சென்று கொண்டிருந்த வேளையில் நான் திடீரென சிறப்பு பெற்றது ஒரு ஓவியத்தின் மூலமாக ( அப்போதெல்லாம் ஓவியம் மிக அருமையாக வரைவேன். சரியான ஊக்கமில்லாததாலும் அக்கரையில்லாத தாலும் ஓவியம் என்னோடு வளரவில்லை ) பள்ளிச் சின்னத்தை ஓவியமாக வரைந்து ஃபாதர் முன்னிலையில் பாராட்டும் பெற்றேன்... அதன்பின் அவர்கொடுத்த ஊக்கத்தில் மயில் போன்ற ஓவியம் வரைந்து கொடுத்தேன். பின் ஒரு பெண்ணின் முகமும், காந்தி ராட்டினம் சுற்றுவது போலவும், நேதாஜி மற்றும் பகத்சிங் ஓவியமும் வரைந்து கொடுத்து மிக அதிக அளவில் பாராட்டும் பெற்றேன்.. எனது கையெழுத்துக்கு கூட பரிசு வாங்கினேன்.. அப்போதே சில கவிதைகள் எழுதி புலவர்களிடம் பாராட்டும் பெற்றேன்.. அந்த சமயங்களில் என் தமிழார்வம் கண்டு புலவர் கோவிந்தராஜன் என்பவர் எனக்கு மட்டும் சில இலக்கணங்களைச் சொல்லி கொடுத்தார்... தமிழில் அதிலும் செய்யுள் பகுதியில் யாராலும் செய்யமுடியாத இலக்கணங்கள் அதாவது அன்றைய காலத்தில் நான் படித்த பாடங்களைவிட மேலும் அதிகமாக இலக்கணம் படித்து தமிழ் கற்றுக்கொண்டேன். தமிழ் என்றாலே " டேய் கூப்பிடுடா அவன" என்று என்னை கூப்பிடுவார்கள்... செய்யுள்களுக்கு என்னிடம் விளக்கம் கேட்பார். நானும் அதை கிட்டத்தட்ட சரியாகவே சொல்லுவேன்.. (சரி சரி ரெம்ப ஓவரா என்னைபத்தி பேசவும் கூடாது... அடுத்து பார்ப்போம்)
  புலவர் கோவிந்த ராஜன் பற்றி... எனக்குத் தெரிந்து அவர் போல தமிழ் விளையாட்டை யாரும் விளையாடியதில்லை. அப்படி பேசுவார்,. நாம் பேசும் தமிழில் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து எது தமிழ் எது சமச்கிருதம் என்று அருமையாக சொல்லுவார்,,,, அதைவிட எனக்கு பிரமிப்பக இருந்தது அலகிட்டு வாய்ப்பாடு கூறலில்தான்... அடேயப்பா எந்த செய்யுள் எடுத்துக்கொண்டாலும் அதை அப்படியே பிரித்து
  இன்ன அசை
  இன்ன சீர்,
  சீரோடு சேர்ந்த இவை இன்னை பா
  இது இன்ன அணி என்று நொடிப்பொழுதில் கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்.... சத்தியமாய் சொல்லுகிறேன்.. தொல்காப்பியரே இப்படி சொல்வாரா என்பது சந்தேகம்தான்... அப்படி ஒரு வேகம்...... என் தமிழ் வளர்ச்சிக்கு அவர் பெரும் காரணமாக இருந்தார்... இன்னும் கொஞ்ச நாட்கள் அவரிடம் இருந்திருந்தால் பா வகைகள் அறிந்திருப்பேன்.. முடியாமல் போனது..
  ஏழாம் வகுப்பிலிருந்து எனக்கு ஏழரைச்சனி ஆரம்பித்துவிட்டது.. என்னுடைய இன்னொரு குழு அதற்குக் காரணம். வகுப்பில் எனது நண்பனே (வினோத்) லீடர்.. நானோ பேசியவர்கள் பட்டியலில் அவன் எழுதும் முதல் பெயராக இருந்தேன். அதற்கு காரணம் நான் உயரமாக இருக்கிறேன் என்று என்னை கடைசி பெஞ்சில் போட்டு வேண்டாத குழுவோடு சேர்த்திவிட்டார்கள்... (அந்த வயசிலேயும் புகைபிடித்தவர்கள் அவர்கள்; கொசுறு தகவல்: இன்று வரை என் தந்தை என்னை ஒரு பீடி கூட தொட அனுமதித்தது கிடையாது; நானும் தொட்டது கிடையாது ) நான் அவர்களின் தலைவனாகவே மாறிவிட்டேன்.. இந்த லட்சணத்தில் அவர்களுக்கு ட்யூசன் லீடர் நாந்தான்.. விளங்குமா? யவரும் படிக்கவேயில்லை.. ஆனால் நான் மட்டும் மூன்றாவது ரேங்க் வாங்கிவிடுவேன். பக்கத்தில் இருப்பவர்களுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கும். நான் எப்போதுமே சொல்லிக்கொடுக்கும்போது படிப்பதோடு சரி. வீட்டில் கூட படிக்கமாட்டேன். அட எழுதக்கூட மாட்டேங்க... இது இப்படி இருக்க, என் பத்தாவது வகுப்பு மெல்ல மெல்ல வந்தே விட்டது...... அங்கே இருக்குங்க என் வாழ்க்கையின் திருப்பம்...........
  இத்தனை சொன்னேனே ஒரு கவிதை சொல்லலியே?

  இது என் மூன்றாவது கவிதை:

  படிநெல் லாவது போதுமென் பாரே
  பிடித்த வயிறு உழவர் மக்கள்
  பிடித்த கழப்பை, கிழவர் நிலை
  படித்த தமிழா அறிவாயோ?  தொடரும்..
  Last edited by ஆதவா; 11-02-2007 at 04:07 PM.
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 2. #50
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  7,076
  Downloads
  5
  Uploads
  0
  படிநெல் லாவது போதுமென் பாரே
  பிடித்த வயிறு உழவர் மக்கள்

  பிடித்த கழ -ல ப்பை, கிழவர் நிலை
  படித்த தமிழா அறிவாயோ?

  படித்த தமிழன் இதையெல்லாம் அறிந்தால் ஏன் இப்படி இருக்கிறான்???
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 3. #51
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  190,954
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by pradeepkt View Post
  படிநெல் லாவது போதுமென் பாரே
  பிடித்த வயிறு உழவர் மக்கள்
  பிடித்த கழ -ல ப்பை, கிழவர் நிலை
  படித்த தமிழா அறிவாயோ?

  படித்த தமிழன் இதையெல்லாம் அறிந்தால் ஏன் இப்படி இருக்கிறான்???
  நன்றி பிரதீப் அவர்களே கவணிக்கவில்லை என்பதைவிட நான் முன்பு எழுதியதும் அப்படித்தான் எழுதியிருந்தேன்
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 4. #52
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  7,076
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by mayooresan View Post
  செல்வன் அண்ணா கன்னடமா?????நம்பவே முடியவில்லையே!!!
  சரி, அப்ப என்ன செய்யலாங்கிற???
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 5. #53
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  190,954
  Downloads
  47
  Uploads
  0
  பத்தாம் வகுப்பில் சுமாராக படிக்கும் பையந்தான் என்றாலும் முதல் மூன்று அல்லது ஐந்து ராங்கிற்குள் வந்துவிடுவேன்.. ஆனால் இதெல்லாம் முதல் இடைத்தேர்வு மற்றும் காலாண்டோடு போய்விட்டது.

  அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன், எங்கள் வீடு வாடகை வீடு என்பதால் அப்போது வீடு மாற்றினோம்.. அது மூன்று வீடுகள் அடங்கிய காம்பெளண்ட். முதல் வீட்டில் ஒரு இந்திக்கார குடும்பமும் இரண்டாவது வீட்டில் நாங்களும் மூன்றாவது வீட்டில் வீட்டு உரிமையாளரும் இருந்தார்கள்..
  முதல் வீட்டில் இருந்த இந்திக்காரக் குடும்பம் சில நாட்களில் காலி செய்து விட்டு போய்விட்டார்கள். அந்த சிலநாட்களிலும் அவர்களுடன் நல்ல நட்பு இருந்தது.. அவர்களுக்கு ஒரே ஒரு பெண். அவள் பெயர் சுனில் ரோஜா பட்.. (உண்மையான பெயர் வேறு ஆனால் மறந்துவிட்டது. அவர்கள் வீட்டில் ரோஜி என்றுதான் கூப்பிடுவார்கள். சுனில் அவள் அப்பாவின் பெயர்.) அவளும் பத்தாம் வகுப்பு படித்திருந்தாள் நானும் அப்படியே! அவளுக்கு தமிழ் அவ்வளவாக வராது.. பத்தாம் வகுப்புவரை எப்படி பாஸ் செய்தாள் என்பதே ஆச்சரியம். நான் அப்போது கவிதைகள் எழுதுவதும் அவளுக்குத் தெரியும். அதுவே நான் மிகப்பெரிய கவிஞன் என்று நினைத்துக்கொண்டாள்.. ஆனால் ஒரு கெட்ட பழக்கம் அவளுக்கு.. கவிதை என்று பேச்சு எடுத்தாலே ஓடிவிடுவாள்..
  அவர்கள் வீட்டைவிட்டு மாற்றிவிட்டாலும் எனக்கு மட்டும் அவளுடன் பேசவேண்டும் பழகவேண்டும் என்ற துடிப்பு இருந்தது.. அவளுக்கு தினமும் கோவில் போகும் பழக்கமுண்டு. எங்கள் ஊரில் ஓம்சக்தி என்ற கோவில் உண்டு. அங்கே தினமும் சந்திப்போம். அவள் உறவினர் பெண் ஒருத்தி சைலஜா. அவளும் கூட வருவாள்..
  அட ரோஜாவைப் பத்தி நான் சொல்லலியே! ரொம்ப அழகு.. நடிகை மீனா மாதிரி இருப்பாள்.. நான் அவளை பேர் வைத்தே கூப்பிடுவேன். அவளும் அப்படியே! நல்ல துணிச்சலான பொண்ணு. பிரில்லியண்ட் மனசு.
  அவளுக்காகவே நன் ஹிந்தி படிச்சேன். ஹிந்தியில் எல்லா வார்த்தைகளும் எழுதக் கற்றுக்கொண்டேன். உச்சரிப்புகள் அவளிடம் அறிந்துகொண்டேன். எழுதப் படிக்க மிக சரளமாகிவிட்டது. பேசுவதற்கு மட்டும் முடியவில்லை.. அது ஒரு பக்கம் போக.... நான் அவளுக்கு தெலுகு சொல்லிக்கொடுத்தேன்.. நிறைய நினைவுகள் இருக்கிறது.. எல்லாம் இன்னும் அழியாமல் இருக்கிறது.. சொல்லத்தான் நேரமில்லை.
  அன்றைய சமயம்தான் காதலர்தினம் என்ற படம் வந்தது... அதில் ரோஜா ரோஜா என்ற பாடல் பிரசித்தி. எனக்கு உயிர்கொடுத்த பாடல் அது. அவளுக்காகவே ஏங்கி பாடிய பாடல் அது.. (ஆமாங்க காதலில் விழுந்துவிட்டேன்) என் நண்பர்களைத் துணைக்கு அழைத்து காதலை வெளிப்படுத்த முயன்றேன்.. கதிரவன் என்ற ஒரு நண்பன் அப்போது ஒருத்தியைக் காதலித்துக்கொண்டிருந்தான்.. அவனிடம் ஐடியா கேட்க, அவன் பல ஐடியா கொடுத்தான்.. சிரமப்பட்டு ஹிந்தி கடிதம் எழுதி அதை கிட்கேட் (Kitkat) உள்புறம் வைத்து கொடுக்குமாறு சொன்னான்.. இன்னொன்று தினமும் கோவிலுக்குப் போவதால் அங்கே வைத்து அவள் மனதை அறிந்து கொண்டு காதல் சொல்லச் சொன்னான்.. இன்னொன்று, ஒரு புத்தகத்தில் ஐலவ்யு என்று பக்கம் முழுவதும் எழுதி கொடுக்குமாறு சொன்னான்... எனக்கு எதுவும் பிடிபடவில்லை..

  கிட்டத்தட்ட பிப்ரவரி 14ல் சொல்லிவிட முயன்று தோற்றுப்போய் பிறிதொருநாள் சொன்னேன்..
  அவள் பள்ளிக்கு ஆயத்தமாகிக்கொண்டு இருந்தாள். இருவரும் ஒன்றாக சென்றோம்.. அவள் பள்ளி வழி வேறு. இருந்தாலும் கூடவே சென்றேன்.. சைலஜா வருவதற்குள் சொல்லவேண்டும் என்பதால் வீட்டை விட்டு வெளியேறிய 10வது நிமிடத்தில் சொல்லிவிட்டேன்..
  உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள ஆசை என்று சொன்னேன். அவள் சிரித்தாள்.. ஏளனமாய்.. நிஜமாகச் சொல்வதாகச் சொன்னேன். அவள் அப்போது கோபப் படவில்லை... அதேசமயம் காதலை ஏற்கவுமில்லை.. அவள் சொன்ன பதிலால்தான் நான் இன்றுவரையும் நல்லவனாகவும் பெண்களை மதிப்பவனாகவும், பெற்றவர்கள் பார்த்து நிச்சயம் செய்தால் போதும், காதல் வேண்டாம் என்று கொள்கை உடையவனாகவும் மாற்றி இருக்கிறது..

  என்ன சொன்னாள்? அது அடுத்து.......
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 6. #54
  இளம் புயல் பண்பட்டவர் guna's Avatar
  Join Date
  09 Oct 2006
  Location
  Malaysia
  Posts
  249
  Post Thanks / Like
  iCash Credits
  7,087
  Downloads
  3
  Uploads
  0
  ரோஜா அப்படி என்ன தான் சொன்னாங்க ஆதவா?
  சுகுணா ஆனந்தன்

 7. #55
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  7,076
  Downloads
  5
  Uploads
  0
  அதானே... அடுத்து எத்தனையோ பிப்ரவரி 14 வந்தாலும் உங்களை மாற்றிய அந்தப் பெண் சொன்னது என்னவோ?
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 8. #56
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  190,954
  Downloads
  47
  Uploads
  0
  என்னங்க நண்பர்களே! அடுத்தடுத்த நான் எழுதிய குறிப்புகளை யாரும் கவனிக்கவில்லையா? ஏதாவது சொல்லுங்கப்பா!

  அதுபோகட்டும்.. ரோஜா என்னிடம் என்ன சொன்னால்? என் வாழ்நாளில் மறக்க முடியா வார்த்தைகள் அவை... மிகச் சாதாரணமான வார்த்தைகள். அதிபுத்திசாலி எப்படி பேசுவாளோ அதே போன்றதொரு பேச்சு. அந்த சின்ன வயதில் அவளிடம் இருந்து வந்த வார்த்தைகள் இன்று நினைத்தால் எனக்கு வியப்பு மலைப்பாய் இருக்கிறது.

  முதல்காதலை என்றுமே மறக்கமுடியாது. அவள் முகம் இன்று எனக்கு ஞாபகமில்லை என்றாலும் நாங்கள் அமர்ந்து பேசிய தருணங்கள் இறைவனை வழிபட்டபோது ஒருமுறை எனக்கு இட்ட திருநீறு, அதே சன்னதியில் அவளுடன் அமர்ந்து திக்கி திக்கி பேசிய நிமிடங்கள், அவளிடம்ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக படிப்பை மறந்து ஹிந்தி புத்தகத்தை அவளிடம் நீட்டி வார்த்தை உச்சரிப்பு கற்றுக்கொண்ட நாள்கள், அவள் செய்த எண்ணை பதார்த்தங்களை அவள் வீட்டில் சென்று தின்று என் மனைவியின் சமையல் என்று நான் சிலாகித்த அந்த வினாடிகள், எதை நான் மறப்பது? ஆயினும் நாங்கள் விரல்கள் கூட தீண்டாமல் இருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. எனக்குள் அச்சம் இருந்தது. காதலும் அச்சமும் இணைந்தால் தோல்வி உறுதி என்பது சிறிது நாட்களில் தெரியவே மனதை தைரியப்படுத்திக்கொண்டேன் அவள் மூலமாகவே!. அவள் என்னிடம் கொண்டிருந்தது உண்மையான நட்பு, நான் அதை தவறாகக் கொண்டது மிகப்பெரும் தவறு,. இன்று அவள் எங்கள் ஊரில் இருந்திருந்தால் என் வாழ்க்கைப் பயணம் இன்னும் கூராகி இருக்கக்கூடும்.. அவளுக்கு இந்நேரம் மணம் முடித்திருப்பார்கள். அவளின் கூரிய புத்தியில் பைத்தியம் பெற்றவன் கூட புத்தி தெளிவான்... அவள் கணவனுக்கு எனது வாழ்த்துக்கள்...

  நான் காதலை சாதாரணமாக தெருவில் வைத்து சொன்னேன். அவளுக்கு வியப்பு மேலிட்டது. என்னுள் இருந்து இந்த வார்த்தை வந்திருக்க அவள் வியப்புற்றது ஆச்சரியம்தானே! அவள் சிரித்தால் அந்த சிரிப்பில் ஏளனம் இருந்தது. நான் உண்மையைத் தான் சொல்லுகிறேன் என்றேன்,. அவளுக்கு நம்பமுடியாத சிரிப்புதான் மேலோங்கி இருந்தது.அவள் சொன்னது இதுதான்

  " சரி நான் உன்னை காதலிக்கிறேன். எனக்கு எக்ஸாம் முடிஞ்சுரும், உனக்கும்தான். எங்கவீட்லயும் சரி உங்க வீட்லயும் சரி ஒத்துக்கமாட்டாங்க,. அதனால் நாம் ஓடிப்போயிதான் கலியாணம் பண்ணிக்கனும், அப்படீன்னா என்ன எப்படி வெச்சு காப்பாத்துவ? நான் ஓடிவர ரெடியா இருக்கேன்" என்றாள்.

  நான் மறுமொழி சொல்லத் தெரியாமல் முழித்தேன்.. அன்றைய காலத்தில் அலைபாயுதே வரவில்லை. ஆனால் நான் அவளிடம் சொன்னது இது " யாருக்கும் தெரியாம காதலிக்கலாம். அப்பறம் எனக்கு வேலை கிடச்சதும் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்'" என்றேன்

  " டேய் முட்டாள்! புரிஞ்சிக்க, என்னை வெச்சு காப்பாத்த இன்னிக்கு உன்னால முடியுமா? உனக்கு அந்த தகுதி இருக்கா ? நீ சொன்னமாதிரியே வெச்சுக்கிட்டாலும் நாளைக்கே வீட்ல தெரிஞ்சா என்ன பண்ணுவ? நமக்கு இப்போ மைனர் வயசு. நீ நல்லா படிப்பே னு எனக்குத் தெரியும். நல்ல வேலைக்கு வருவ. உன்னால எப்போ என்னை வெச்சு காப்பாத்த முடியும்னு ஒரு நம்பிக்கை வருதோ அப்போ வந்து சொல்லு நான் உன்கூட வரதுக்கு தயாரா இருக்கேன். அதுவரைக்கும் நான் உனக்காக வெயிட் பண்றேன். பார்க்கலாம் நீ எனக்காக காத்திட்டு இருக்கியான்னு.... " என்றவள் கூடவே ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.

  அது என்ன குண்டு? பொறுங்கள்......

  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 9. #57
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  190,954
  Downloads
  47
  Uploads
  0
  இங்க கொஞ்சம் கவனிங்க மக்களே!
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 10. #58
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  48,459
  Downloads
  78
  Uploads
  2
  கவனிச்சாச்சு ஆதவா..
  அநேகமாக எல்லோர் வாழ்விலும் இம்மாதிரி ரசிக்கத்தக்க..சிற்சில நினைவுகள் இருக்கும். ஆனால் அவற்றை கோர்வையாய் தருவதில் தேர்ந்தவராகி விட்டீர்.

  காதல் ரொம்ப இனிமையான அனுபவம்னு சொல்லுவாங்க. ஆனால் எப்போ யாரிடம் அது வரவேண்டுமென்ற இலக்கணம் ஏதுமில்லை. காதலையும் மீறி வாழ்வியல் எதார்த்தங்கள் உண்டு. அந்த எதார்த்தங்களை சிறு வயதிலேயே அந்த பெண் கொண்டிருக்கிறாள். உங்களை போலவே நானும் அப்பெண்ணை வாழ்த்துகிறேன்.

  ஹ்ம்ம்..(எனக்கு நானே) "இப்படி உணர்ச்சிவசப்படறதை நிறுத்தறியா?".
  சரி..ஆதவா நீங்க அந்த "குண்டு" என்னாங்கறதை சொல்லுங்க..!

 11. #59
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  190,954
  Downloads
  47
  Uploads
  0
  ரொம்ப நன்றிங்க மதி..... குண்டு என்னன்னு அடுத்து விவரமா சொல்றேன்....
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 12. #60
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  39,560
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by ஆதவா View Post
  ரொம்ப நன்றிங்க மதி..... குண்டு என்னன்னு அடுத்து விவரமா சொல்றேன்....
  குண்டா

  கி கி கி

  சரி சரி

  பரிட்சை முடிந்து படிக்கிறேன்.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Page 5 of 8 FirstFirst 1 2 3 4 5 6 7 8 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •