Page 1 of 8 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 95

Thread: எனது டைரியிலிருந்து சில குறிப்புகள்

                  
   
   
 1. #1
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0

  எனது டைரியிலிருந்து சில குறிப்புகள்

  நண்பர்கள், தோழிகள், சகோதரர்கள், சகோதரிகள் ஆகிய உங்கள் எல்லாருக்கும் எனது நன்றி கலந்த வணக்கம்.....

  எனது எண்ணங்களை எங்கே பறக்க விடுவது என்று நீண்ட நாட்களாக குழம்பிப் போயிருந்தேன்... நல்லவேளை. தமிழ்மன்றம் கிடைத்தது.. பறந்து கொண்டிருக்கிறேன்..

  இனி,
  எனது டைரியிலிருந்து சில குறிப்புகள்.... டைரியில் எழுதிய யாவும் பகிர்தல் நல்லதல்ல..... ஆயினும் யாருக்கும் துன்பமில்லாத சில செய்திகளையும் அனுபவங்களையும் பகிர்தல் தவறல்ல என என் மனம் சொல்கிறது

  எனது டைரியைப் பற்றி: நான் டைரி எழுத ஆரம்பிக்கும்போது எனக்கு வயது 11 இருக்கும் (ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்ததாக ஞாபகம்) ஆனால் அவைகள் சில தாள்களில் எழுதிய காரணத்தினால் அழிந்து போயின.. அது போல சிலவற்றை அப்பா படித்து கிழித்துப் போட்டார்....(அதற்கு பல குடும்ப காரணங்கள்)
  யாரும் படிக்காமல் இருக்கும் வண்ணம் டைரி எழுதத் துவங்கியது நான் 10ம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன்.... எப்படி? ஒருவரையோ அல்லது ஒரு பொருளையோ குறிக்கும்போது, பட்டப்பெயர் போட்டு கதை எழுதுவது போல எழுதுவேன்... யாருக்கும் புரியாது. எனக்கு மட்டுமே புரியும் வகையில் இருக்கும்... தற்போது கவிதை கலந்து எழுதுவதால் யாருக்கும் புரியாது...
  முதலில் டைரியெல்லாம் வாங்கவில்லை... நோட்டு புத்தகத்தில் தான் எழுதினேன்.. தற்சமயம் 2007ல் தான் டைரி தனியாக வாங்கி எழுத ஆரம்பித்துள்ளேன்.

  என் குடும்பம் ஒரு சிறு அறிமுகம்: அப்பா, அம்மா, தம்பி, தங்கை,, நான்.. ஆக ஐந்துபேர்........
  அப்பா ஒரு ஓவியர்; அம்மா, தேவியர்; நானோ காவியன்.... எப்படி குடும்பம்????
  அப்பாவின் குடும்பமும் அம்மாவின் குடும்பமும் மிகமிக பெரியது.... ஒரு என் கல்யாணத்திற்கு இவர்கள் குடும்ப நபர்களை அழைத்தாலே போதுமானது.... அந்த அளவுக்கு.............. இதிலே கொடுமை என்ன வென்று கேளுங்கள்....
  இத்தனை பேரப்பிள்ளைகளிலும் ஆணாகப் பட்டவன் நான் ஒருவனே.... எனக்கு நிறைய தங்கைகள் உண்டு (முறைப் பெண்களும்தான்,,) ஆண்களில் என் வயதுக்கு ஈடானவர்கள் ஒருவர்கூட இல்லை...(அப்பா வகையில் ஒருவர் உண்டு ஆனால் அவ்வளவாக தொடர்பு இல்லை...).. எல்லாம் பெண்கள்... அதனால்தான் என்னவோ எனது உறவினர்கள் மத்தியில் நான் ஒரு ஸ்டார்.... அவ்வளவு எளீதில் என்னை விடமாட்டார்கள்.... ( நிறையபேரை எனது அம்மாவாகவே நினைத்துவருகிறேன்... சித்தி, அக்கா, பெரியம்மா, இன்னும் பலர்/// )

  நான் சிறு வயதில்: சிறு வயதில் நான் ரெம்ப ரெம்ப அழகான குழந்தையாம்... ஜப்பான் குழந்தை மாதிரி இருப்பேனாம்.... நிறைய் துறுதுறு..... அடங்க மாட்டேன்... என்னை வைத்து ஒரு போட்டோ கூட எடுக்க முடியாதாம்.. அந்த அளவுக்கு குறும்பு... நான் வளர்ந்தது ஈரோட்டில், ... இரண்டாம் வகுப்பு வரை அங்கேதான் படித்தேன்.. அப்பறமாக குடும்பத்தோடு திருப்பூர் வந்துவிட்டோம்.
  சிறு வயதில் என்னை அடக்கவே என் கையில் புத்தகத்தைத் திணித்தார் எனது தந்தை.... என் கையில் முதன் முதலாக கிடைத்த புத்தகம் கந்த சஷ்டி கவசம்... அப்பறம் என்ன வென்று தெரியவில்லை... சில நாட்களில் இராமாயணமும் மகாபாரதமும் படித்தேன்... எனக்கு அந்த நாட்களில் புத்தகம் படிப்பது மிகவும் பிடித்துப் போனது... நண்பர்களே நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ, நான் ஐந்தாம் வகுப்பு முடிக்கும்போது ராமாயணமும் பாரதமும் முடித்துவிட்டேன்... எனது ஆர்வத்தில் நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார் தந்தை.
  அப்போது கிடைத்த புத்தகம் தான் பாரதியார் கவிதைகள்.......

  கவிதை எழுதியது : நிச்சயமாக சொன்னால் எனது கவிதைக்கு விதை விதைத்தது பாரதிதான்... நல்ல ஞாபகம் இருக்கிறது... பாரதியின் புத்தகத்தை அவ்வளவாக நான் முதலில் விரும்பிப் படிக்கவில்லை.. கவிதைகள் எனக்குப் புரியாது.. ஒரு சமயம் தந்தை என்னிடம் ஒரு கவிதை படித்து விளக்கம் கேட்டார்..

  வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள்
  வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்
  கொள்ளை யின்பம் குலாவு கவிதை
  கூறு பாவலர்தம் உள்ளத்திருப்பாள்

  எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.... அப்போது தந்தை சொன்னார்,,, " ஈஸியாய்னி உண்டிந்த கவித நிங்கு தெலிக்க போத எட்ட தமிழ் ராத்துவு?"
  (மிக எளிமையான இந்த செய்யுளே உனக்கு விளங்காத போது நீ எப்படி தமிழ் படிப்பாய்?)

  நான் முதலில் இந்த கவிதையை திரும்பத் திரும்ப படித்தேன்...

  வெள்ளைத் தாமரை - வெள்ளைத் தாமரை புரியுதே
  பூவிலிருப்பாள் - பூவில் உட்கார்ந்து இருப்பாள் (சரஸ்வதி தானே!!)
  வீணை செய்யும் ஒலியிலிருப்பாள் - அதெப்படி ஒலியில் இருக்க முடியும்????
  கொள்ளை யின்பம் - புரியவில்லை; கொள்ளை என்றால் கொள்ளை அடிப்பதா?
  குலாவு கவிதை - சுத்தமாக புரியவில்லை... குலாவு என்றால் தமிழா?
  கூறு பாவலர்தம் - அய்யோ!!! பாவலர்னா இன்னா?

  கொஞ்சம் புரிந்தது போல இருந்த்து... என் அப்பாவே சொல்லிக் கொடுத்தார்... இது இது இன்ன வார்த்தைகள் என்று..... அப்பறமாக எனக்கு ஒரு வெறியா போட்டுது. எல்லா கவிதைகளையும் படித்து புரிந்து கொண்டேன். தமிழ் வாத்தியார்களிடம் வார்த்தை அர்த்தம் தெரிந்து கொண்டேன்... இது எவ்வளவு பயனாய் போட்டுது? நான் செய்யுள் பகுதியில் கேள்வி பதிலெல்லாம் படிக்கமாட்டேன்.. செய்யுளை மட்டும் படித்துவிட்டு நானாகவே உரை எழுதுவேன்.... (பின்னாடி எனக்கு பாராட்டெல்லாம் கிடைத்தது..)

  இது இருக்க,,, நானும் பாரதியார் மாதிரி கவிதை எழுத ஆரம்பித்தேன்... அவரது சுய சரிதையில் அவர் சின்ன வயதில் சந்தங்களை அடுக்கிக் கொண்டே இருப்பதாக எழுதியிருந்ததை கவனித்தேன்.... அதே மாதிரி நானும்
  உழி
  கழி
  பழி
  விழி
  கிழி

  என்று அடுக்கிக் கொண்டே போனேன்... நிறைய வார்த்தைகள் எனக்கு புதிதாகத் தோன்ற, தமிழ் வாத்தியார்களிடம் சந்தேகம் தீர்த்துக் கொண்டேன்... பாரதியின் பல கவிதைகளுக்க்கு எளிதில் அர்த்தம் புரியும் அளவிற்கு அவரால் ஞானம் பெற்றேன்....

  நிச்சயமாக எனது முதல் கவிதை இதுதான்:

  எந்தையும் தாயையும் என்னைக் காவல்கொள்
  தந்தையும் தங்கையும் தம்பி யோடுமே
  சிந்தை தவறாது காத்த கடவுளுக்கும்
  முந்தை யோருக்கும் போற்றி!!!

  இதற்கு வெண்பா என்று பெயரிட்டு டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்.... ஆனால் வெண்பா அல்ல.... இன்னும் சில வரிகள் எழுதினேன்... இரண்டாவது கவிதை....

  என்னை உலகிற்களித்த தாய்க்கு நன்றி!
  தென்னை போல் வளர்த்த தந்தைக்கு நன்றி!
  முன்னை விடவும் பொலிவு தந்த கடவுளுக்கு நன்றி!
  பின்னையாவும் நடக்கு மிந்த காலத்திற்கும் நன்றி!

  வாழ்விக்க வந்த காந்திக்கும் நன்றி!
  தாழ்வு கொண்டென்னை உயர்த்திய பெரியாருக்கும் நன்றி!
  வீழ்ந்த பகைவனை அரவணைக்கு அன்புக்கு நன்றி!
  சூழ்ந்த சுற்றத்திற்கும் நன்றி!

  பேச வைக்கும் தமிழுக்கு நன்றி
  பாசங் கொண்ட உயிர்களுக்கும் நன்றி!
  தேசமது என்னை வளர்த்ததற்கும் நன்றி
  மோசம் போகாது காத்த அனைவருக்கும் நன்றி!!

  இது எழுதியதும் எனக்குள்ளே ஒரு பாரதி தோன்றிவிட்டதாகவும் நான் பெரிய கவிஞனாகிவிட்டதாகவும் நினைப்பு....

  மீதி உங்கள் வரவேற்புக்கு தக்க.....
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 2. #2
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
  Join Date
  16 Jan 2007
  Location
  திருச்சி
  Posts
  4,192
  Post Thanks / Like
  iCash Credits
  7,486
  Downloads
  14
  Uploads
  0
  ஆதவா
  ஆதியிலேயே இந்த கலக்கல்னா மீதி செல்லவா வேனு...
  உங்களை பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி
  தொடருங்கள் சின்ன பாரதி
  உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
  இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by manojoalex View Post
  ஆதவா
  ஆதியிலேயே இந்த கலக்கல்னா மீதி செல்லவா வேனு...
  உங்களை பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி
  தொடருங்கள் சின்ன பாரதி
  மிக்க நன்றி...... சின்ன பாரதி எல்லாம் ரெம்ப பெரியது........ அதற்கும் எனக்கும் உலக தூரம்.. தொடர்ந்து படியுங்கள்.... எனது ரணமும் காதலும் தெரிந்துகொள்வீர்கள்
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 4. #4
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  36,060
  Downloads
  5
  Uploads
  0
  அன்பு தம்பி ஆதவா
  தங்களின் டைரி படிக்க சுவையாக இருகின்றது

  தங்களுக்கு இளய வயதிலே மிகவும் தெளிந்த சிந்தனை
  மனதார பாராட்டுகிறேன்

  வெண்பா அருமை, கவிதை நன்று
  தொடருங்கள்
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 5. #5
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by ஓவியா View Post
  அன்பு தம்பி ஆதவா
  தங்களின் டைரி படிக்க சுவையாக இருகின்றது

  தங்களுக்கு இளய வயதிலே மிகவும் தெளிந்த சிந்தனை
  மனதார பாராட்டுகிறேன்

  வெண்பா அருமை, கவிதை நன்று
  தொடருங்கள்
  எனதருமை அக்கா!!! மிக்க நன்றி..... அது வெண்பா அல்ல அக்கா!!
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 6. #6
  இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
  Join Date
  05 Jan 2007
  Location
  வவுனியா
  Posts
  781
  Post Thanks / Like
  iCash Credits
  3,881
  Downloads
  37
  Uploads
  0
  படிக்க படிக்க ஆர்வம் கூடுகின்றது அடுத்த பதிப்பு எப்போது...
  **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
  ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
  மதுரகன்
  இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

 7. #7
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by மதுரகன் View Post
  படிக்க படிக்க ஆர்வம் கூடுகின்றது அடுத்த பதிப்பு எப்போது...
  விரைவில் தருகிறேன் நண்பரே!
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  11 Oct 2004
  Location
  தமிழ்மன்றம்
  Posts
  4,511
  Post Thanks / Like
  iCash Credits
  78,511
  Downloads
  104
  Uploads
  1
  ஆதவா...

  மன்றத்தில் பாரதியின் குறிப்புகள் நான் வாசிக்க ஆரம்பித்த போது எனக்கு வாழ்க்கையின் நிகள்வுகளை இத்தனை அருமையாக, பண்பாக கொடுக்க வேண்டியவற்றை மட்டும் அழகாக கொடுக்க முடியுமா என்று வியப்பேன்...
  நம்ம பரம்ஸ் விளையாட்டகவே வேட்டையாடுபவர்... எல்லோர் உள்ளத்தையும்... அருமையான நினைவுகளில் அப்படியே நம்மை சிறுவயதுக்கு கொண்டுபோவார்...
  நம்ம கவிதா.... கவிதையாலும், எழுத்தாலும் நினைவுகளை பகிர்ந்து சிலிர்க்க வைப்பார்கள்...
  அப்புறம்... நானும் சில நினைவுகளை கொடுத்தேன்....
  அதை தொடர்ந்து நம்ம அன்பு தம்பி மயூரேசன் கொடுக்க ஆரம்பித்தான்...

  எல்லோர் எழுத்திலும் ஒரு கண்ணியம் இருக்கும்... அதனாலைய்ற் எல்லோர் மேலேயும் மதிப்பும் அதிகம்...

  இன்று நீங்கள்...

  அருமையாக துவங்கியுள்ளீர்கள்... அற்புதமாக தொடருங்கள்...
  பென்ஸ்

  என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

 9. #9
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
  Join Date
  01 Mar 2006
  Location
  கொழும்பு
  Posts
  3,557
  Post Thanks / Like
  iCash Credits
  9,648
  Downloads
  60
  Uploads
  24
  சிறுவயதை மீட்டுவோர் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள ஆதவனுக்கு நன்றிகள்...
  ஆரம்பமே தூள் பா!
  உங்கள் தந்தையாரின் தாய் மொழி என்ன?

  பாரதி.... உங்களுக்குள்ளும் அவனா! பல தமிழ் உள்ளங்களை கிளறிய தமிழ் வீரன் அல்லது காவலன் என்றே சொல்லலாம்...

 10. #10
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  Singapore
  Posts
  12,057
  Post Thanks / Like
  iCash Credits
  55,890
  Downloads
  18
  Uploads
  2
  ஆதவா அவர்களே,

  அருமையாக ஆரம்புத்திருக்கிறீர்கள். கவிஞர்கள் இப்படித்தான் தோன்றியிருப்பார்களா என்று தோன்ற வைத்திருக்கிறது உங்கள் தொடக்கம். தொடருங்கள். இன்னும் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

  நன்றி வணக்கம்
  ஆரென்

 11. #11
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by benjaminv View Post
  ஆதவா...

  மன்றத்தில் பாரதியின் குறிப்புகள் நான் வாசிக்க ஆரம்பித்த போது எனக்கு வாழ்க்கையின் நிகள்வுகளை இத்தனை அருமையாக, பண்பாக கொடுக்க வேண்டியவற்றை மட்டும் அழகாக கொடுக்க முடியுமா என்று வியப்பேன்...
  இன்று நீங்கள்...

  அருமையாக துவங்கியுள்ளீர்கள்... அற்புதமாக தொடருங்கள்...
  உங்கள் பாராட்டில் நனைந்துகொண்டே (ஜலதோஷம் பிடிக்காமல்) இன்னும் எழுதுகிறேன்.....
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 12. #12
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by mayooresan View Post
  சிறுவயதை மீட்டுவோர் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள ஆதவனுக்கு நன்றிகள்...
  ஆரம்பமே தூள் பா!
  உங்கள் தந்தையாரின் தாய் மொழி என்ன?

  பாரதி.... உங்களுக்குள்ளும் அவனா! பல தமிழ் உள்ளங்களை கிளறிய தமிழ் வீரன் அல்லது காவலன் என்றே சொல்லலாம்...
  மிக்க நன்றி மயூரேசன். எமது தாய்மொழி தெலுகு... ஒவ்வொரு கவிஞன் மனதிலும் அமர்ந்திருக்கும் ஒருவன்.....பாரதி.............
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 1 of 8 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •