Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: ராதைக் காதலன் - தொடர்கவிதை

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0

    ராதைக் காதலன் - தொடர்கவிதை

    வணக்கம்.
    இது பிச்சி...

    நெடுநாட்களாய் என் நெஞ்சில் குழல் ஊதிக் கொண்டிருக்கும் என் காதலன் முகவரியை ஆங்காங்கே இதயத்தின் மேற்புறத்தில் எழுதிவைத்திருந்தேன். ஆரம்பம் முதல் முடிவு வரை அவனைச் சித்திரமாய் வடிக்க, என்னுள் நேர்ந்த வெட்கத்தையும் நீக்கிவிட்டு இங்கு எழுத விழைந்துள்ளேன். என்னவன் கண்ணனவன் வரலாற்றில் ஆங்காங்கே தவறுகள் நேர்ந்தால் குட்டுங்கள். மறக்காமல் இந்த திரியையும் அவ்வப்போது தட்டுங்கள்.

    எனது நன்றி :
    காதலன் கண்ணனுக்கும், இங்குள்ள மன்ற உறவுகளுக்கும். அதிமுக்கியமாக என்னவன் பற்றி எனக்கு முழுவதுமாய் வடித்துக் கொடுத்த எண்ணற்ற புத்தகங்களுக்கும்

    என் காதல் குழைந்த இதய நன்றிகள்.............

    க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண
    க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹே
    க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண
    க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹே
    க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண
    க்ருஷ்ண க்ருஷ்ண ரக்ஷமாம்
    க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண
    க்ருஷ்ண க்ருஷ்ண பாஹிமாம்
    ராம ராகவ ராம ராகவ ராம ராகவ ரக்ஷமாம்
    க்ருஷ்ண கேசவ க்ருஷ்ண கேசவ
    க்ருஷ்ண கேசவ பாஹிமாம்.
    Last edited by பிச்சி; 20-01-2007 at 02:45 PM.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  2. #2
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0

    பூமித்தாய் பிரம்மனிடம் வேண்டுவது

    லோகத்தின் ஓர் காலம்

    இரத்தம் அருந்தும்
    வேட்கையில்
    சதைப் பிண்டமும்
    காதல், காமம், ஆகிய
    அறு சுவைகளையும்
    உட்கொள்ளும்
    கொடூர தேவர்கள்
    உலாவிக் கொண்டிருந்த
    கோரமான நேரம்.

    பூமித்தாயிவள் இங்கே
    எங்கனம் இருப்பாள்?

    நச்சும் நாசமும்
    விஷத் தெரிவின்
    வாசனையும்
    வீழ்த்த முடியா அசுரர்
    வரங்களும்
    வெந்து போன
    வெறுப்புப் பாதையும்
    நீசனின் கண்கொண்ட
    சிவப்பு மலர்களும்
    கத்தியும் கேடயமும்
    ரத்தம் குடிக்கும்
    கோப்ரா பாம்புகளும்
    நித்தம் குடியிருக்கும்
    ஈரலின் துர்நாற்றமும்

    எப்படித் தாங்குவாள்
    பூமித்தாய்?

    கண்கள் ஏங்குகின்றன
    ரணம் தாக்குகின்றன.
    புற்களும் இறுக்கமாய்
    புன்னகை மறந்தன.

    கிளிகளின் மழலை
    சாகடிக்கப் பட்டு
    ஒளியிவள் ஓதல்
    வதம் செய்யப் பட்டன,

    மான்களின் காதல்
    கொம்போடு ஒடிக்கப் பட்டு
    தேனினும் இனிய தமிழ்
    தேவையின்றி வீசப் பட்டன.

    உலகெங்கும்
    சடசட
    படபட
    கடகட

    சக்தி வடிவினள்
    ஆக்ரோசத்தையும்
    அடக்கும்
    புன்னகை பூத்த
    வதனம் கொண்டனள்
    இன்றோ
    கண்ணீர் மல்குகிறாள்.

    இவளின் பெருக்கில்
    அலைகள் மீண்டும்
    மோதுகின்றன சுனாமியாய்!
    லாவக் குழம்புகள்
    தணிந்து போய்
    லோகமும் மழையாக
    பொழிகிறது
    சாபமிடாத சாபமிது.

    அச்சமும் வேதனையும்
    விழிகளில் தெரிக்க
    அதரங்கள் வெடிப்புடன்
    ரத்தமாய் துடிக்க,
    ஓடுகிறாள் அன்னை
    பிரம்மனிடம்.

    ஓ! பிரம்மா!
    நான் முகனோய்!
    மூவுலகம் பெற்ற
    ஆன்மாவின் மைந்தனே!
    பார் புகழும் வேதத்தின்
    இருப்பிடமே!
    அன்றிலிருந்து
    இன்று வரை
    அனைவரையும்
    அணைப்பவனே!

    கண்களில்
    கண்டாயா
    கண்ணீரை?

    பூலோகக்
    கோலோச்சும்
    புலையர்கள் சொல்கிறார்கள்
    வேசியிவள் கூட்டமென்று!
    பிரம்மா! நீ சொல்
    தாசியவள் நானா?
    தாயென்று சொன்னார்களே!

    வாய் வந்ததெல்லாம்
    சொல்லும் பருந்தரசர்கள்
    குடல் தின்னும்
    நோயர்கள்
    இன்று என்
    இதயத்தைக் கீறுகிறார்களே!
    என்ன ஞாயம்?

    உன் வேதப் புத்தகங்கள்
    சொல்கிறதா?
    எட்டு கண்களும்
    சொல்கிறதா?
    என் கண்களில் கோர்த்த
    நீருக்கு பதில் சொல்!
    காமத்தை மெல்லும்
    கோரத்தைக் கொல்!

    விழியிவள் வேதனை
    நெஞ்சுக்கீறி
    வெகுண்டு எழுந்திட்டான்
    மூவருள் தேவனும்,
    முனிவனும் போற்றும்
    நான்முகன்...



    தொடரும்.....
    Last edited by பிச்சி; 20-01-2007 at 03:28 PM.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    உங்களுக்குள் இப்படி ஒரு சோகமா
    தொடருங்கள்....
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  4. #4
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by manojoalex View Post
    உங்களுக்குள் இப்படி ஒரு சோகமா
    தொடருங்கள்....
    மனோஜொலெக்ஸ்!! இது என் சோகமல்ல.. பூமித்தாயின் சோகம்... தொடர்ந்து வாழ்த்துங்கள்...........
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    அருமையான முயற்சி.. தொடருங்கள் வாழ்த்துக்கள்
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    Quote Originally Posted by likesunrisebaby View Post
    மனோஜொலெக்ஸ்!! இது என் சோகமல்ல.. பூமித்தாயின் சோகம்... தொடர்ந்து வாழ்த்துங்கள்...........
    ஓ...........ஓஓஓஓ
    அப்படியா........
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  7. #7
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    அருமையான முயற்சி.. தொடருங்கள் வாழ்த்துக்கள்
    நன்றி அண்ணா! தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  8. #8
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    எழுந்தவன்
    விழுந்த துளிகளை
    பொற்கரங்களால்
    துடைத்திட்டான்

    நாலுமுகத்திலிருந்தும்
    நாலு வார்த்தை சொன்னான்

    பூமித்தாயே!
    நான் உனக்கு என்றும்
    சேய்தான்!

    திரேதா யுகம் இன்று
    பிரேதா யுகம் ஆயினவோ?
    உன் தேகத்தின் சோர்வு
    உன் அதரத்தில் அறிந்தேன்
    உன் பார்வையின் குருடு
    உன் கூந்தலில் அறிந்தேன்
    உன் உறுப்புக்களி ஊனம்
    உன் அனலில் அறிந்தேன்

    விண்மீனே நடுங்கி
    விரல் சொடுக்க
    அண்டங்களின் பூச்சொறிய
    பாற்கடலில்
    பள்ளி கொள்ளும்
    விஷ்ணு இருக்க,
    மேனிக் குருதியெல்லாம்
    நினைவுகளோடு போய்விடும்!

    என்றவன் பிரம்மன்,
    பூமித் தாயோடு,
    அழைத்தான் தேவர்கள்
    அனைவரையும்!
    அற்புதம் தரும்
    அவனியவனைக் காண!

    நாபிக் கமலத்தில்
    மூவுலகும் அமைத்து
    சேடன் மடியில்
    நித்திரை ஆள்வான்

    லட்சுமியிவன் காதலி
    சேடன் இவன் மகன்
    காதல் இவர்கள் குடும்பம்

    பின் கதவருகே
    பிரம்மா
    பூமி
    மற்றும் கோடி
    தேவர்கள் கூட்டம்
    விஷ்ணுவின் தரிசனத்திற்க்காக
    கடல் அதிர காத்திருக்கிறார்கள்

    முத்துக்கள் விழுந்திடுமோ
    என நகையாது
    இருப்பதில்லை இவன்
    அனைத்தும் அறிகுவான்
    அவனியில்
    அவன்.

    அழகனை
    அழைப்பது என்ன சுளுவா?
    புருச சுக்தமில்லாமல்
    புருசன் எழுந்திடுவானா?
    வீணை எழுப்பும் ஒலியில்
    நாணமிழந்து ஓடும்
    காதல் குமரனா இவன்?
    வீணைக் கம்பிகளில்
    இறுக்கமாய் அமர்ந்து
    ஒவ்வொரு அசைவையும்
    எடுத்துக் கொடுக்கும்
    முழுமுதல் இசைதானே இவன்!!

    தேவர் அனைவரும்
    பாடினர் சுதி!
    தேடி வந்து தீர்ப்பாரா
    உலர்ந்து போய்
    நிற்கும் பூமியின் கதி?

    பிரும்மாவுக்குத் தெரியும்
    பரம்பொருள் வெறும்
    ஜடப் பொருளல்ல வென்று
    எழுப்புதல் ஓர் உன்மத்தம்
    அவன் எழுந்தால்
    உலகமே உன்னதம்
    ஆகையால், வெறும் பண்ணுக்கு
    எழமாட்டான்
    என்றறிந்தான் பிரம்மன்..


    தொடரும்....
    Last edited by பிச்சி; 20-01-2007 at 03:28 PM.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  9. #9
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    அருமை பிச்சி மற்றொரு மகாகவியாக எதிர்காலத்தில் புகழ் பெற வாழத்துக்கள்..

    தொடர்ந்து கொண்டே இருங்கள்...
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    தொடருங்கள்.....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    வாழ்த்துகள் பிச்சி..

    வாலியின் காவியங்கள் நினைவுக்கு வருகின்றன..

    பெரிய முயற்சி.. அரிய முயற்சி..

    எடுத்த காரியம் முடிக்கும் கண்ணோட்டமும்
    எம் மன்ற நண்பர் தொடுக்கும் பின்னூட்டமும்
    கார்வண்ணக் காதலன் கண்பார்வையும்
    சீர்வண்ணக் காவியத்தை சிறப்பாக்கட்டும்..

    ----------------------------------

    நல்ல பாம்பு, நச்சரவம் இருக்க கோப்ரா என்ற காப்ரா சொல் ஏன்?
    ஆழிப்பேரலை, அக்னிக்குழம்பிருக்க சுனாமி, லாவா ஏன்?

    என்னுள் கேள்விகள்..
    இறக்கிவிட்டேன்.. அப்பாடி...

    ----------------------------------

    உறுப்புக்களி ஊனம்..
    என்ன ஒரு சொற்றொடர்..
    வியந்து விட்டேன்.. அம்மாடி..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #12
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    கவிதையோடு கூடிய உங்கள் பின்னூட்டம் அழகு........ மிக்க நன்றி..
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •