Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 32

Thread: போலீசில் மாட்டிய ஆதவன்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    போலீசில் மாட்டிய ஆதவன்

    மன்றத்து நண்பர்களுக்கு முதலில் நன்றி.. என்னோட ரஷ்யாகாரி காதலுக்கு நல்ல பின்னூட்டம் கொடுத்தீர்கள்.. இதோ
    அடுத்து..

    நண்பர்களால் பல உதவிகள் நடக்கும்.. உபத்திரவங்கள்? அதிலும் அவர்கள் பங்கு பெறாமலே!!

    2005 டிசம்பர் 5. ஞாயிறு.

    திருப்பூரில் எப்போதுமே டிசம்பர் 6 ஒட்டிய வாரங்களில் பதட்டமிருக்கும்.. காவல் கெடுபிடி அதிகமாக இருக்கும். அல்லா
    கோயில்களிலும் ஹிந்து மசூதிகளிலும் இறைவனுக்கு பாதுகாப்பு அதிகமாக இருக்கும்ம்.. காரணம் சொல்லவேண்டியதில்லை.
    டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம்.. அதனால்தான்.
    அப்படிப்பட்ட பொன்னான வேளையில் சாயுங்காலமாக எனக்கு ஒரு போன்.. நண்பன் கதிர் (பெயர் மாற்றம்
    செய்யப்பட்டுள்ளது) மறுமுனையில்..

    அவன் கோயம்புத்தூரில் ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறான். அதிகம் அவனைப் பற்றி
    சொல்ல வேண்டியதில்லை. போன் செய்தவன் திடீரென்று " திருப்பூர்ல தாண்டா இருக்கேன் புது பஸ்டாண்டுகிட்ட வையிட்
    பண்றேன். சீக்கிரம் வாடா!" என்றான்.
    அவன் திருப்பூருக்கு வருவது அது முதல்முறையல்ல.. நிறையமுறை வந்திருக்கிறான். எப்போது வந்தாலும் அந்த பாழாப்
    போன புது பஸ்டாண்டிலேயே காத்திருப்பான்..
    அன்று வருவதாகச் சொன்னதால் நான் கிளம்பிச் சென்றேன் புது பஸ்டாண்டுக்கு. அங்கே போலீஸ் கூட்டம் மக்களைவிட
    அதிகமாக இருந்தது.. எனக்கு எந்த பயமும் இல்லை. வரவேண்டியவன் அங்கே இல்லை. அதனால் கொஞ்சம் துலாவினேன்..
    அவன் அங்கு இல்லை.. ஒருவேளை பஸ் வர வர போன் செய்திருக்கலாம். காத்திருந்தேன். காத்திருந்ததோடில்லாமல்
    அங்குமிங்கும் அலைந்து துலாவுகையில் ஒரு ஏட்டு என்னை ஏறெடுத்துப் பார்த்தான்.
    " டேய்! இங்க என்னடா பண்ற?" அவன் வார்த்தையில் மரியாதையில்லை.
    " ஃப்ரண்ட் வரதா சொன்னுங்க; அதனாலதான் அவனுக்காக வெயிட் பண்றேனுங்க" இது நான்
    " உன்னை இன்ஸ்பெக்டர் வரச் சொன்னார்; என்னன்னு கேளு"
    " சார் நான் என்ன சார் பண்ணினேன்? "
    " அய்யாட்ட வந்து சொல்லுடா!"
    அவர் சொன்ன அந்த இன்ஸ்பெக்டர் ரொம்ப பிஸியாக இருந்தார். ஊடாக இந்த ஏட்டு சென்று , " சார் இவன் அங்கெயும்
    இங்கெயும் சுத்திகிட்டு இருந்தான். கொஞ்சம் டவுட். என்னன்னு விசாரிச்சா பெரிய இவனாட்டம் பதில் சொல்றான்." போட்டுக்
    கொடுத்துவிட்டான். எனக்கு வேட்டு வைத்துவிட்டான்.
    இன்ஸ்பெக்டர், " தம்பி! இங்க வா!" மரியாதை கலந்து.
    "சார்"
    " இங்க என்ன பண்ற?"
    "ஃப்ரண்ட் வரதா சொன்னுங்க; அதனாலதான் அவனுக்காக வெயிட் பண்றேனுங்க சார்"
    " எந்த ஊரு?"
    "கோயம்புத்தூருங்க சார்"
    "ஓஹோ! என்ன சப்ளை பண்றான்"
    "சார் அவன் ஸ்டீல் கம்பனி வெச்சுருக்கான். அதுதான் சப்ளை பண்றான்"
    "ரெம்ப புத்திசாலித்தனமா பேசற. அவன் வந்துட்டானா இல்லையா?"
    "தெரியலை சார்"
    "அவனுக்கு செல்லு கில்லி ஏதாவது இருக்கா?"
    "இருக்குங்க சார்"
    " சரி போன் போட்டு எங்க இருக்கான்னு கேளு.."
    போன் செய்தேன்.................... " The Airtel you are trying to reach is currently switched off; please try later" னு ஒரு
    அழகான பெண் குரல் கேட்டது...
    ஆஹா!!! மாட்டவுட்டுட்டானே!! போலீசு நம்மள சந்தேகப்படுதே னு கவலைப் பட்டேன்.. இன்ஸ்பெக்டர் கூப்பிட்டார்.
    " என்னப்பா! எங்க இருக்கான்?"
    " சார் ! செல்ல ஆஃப் பண்ணிட்டான் சார்!"
    " என்ன தம்பி! ஊருக்கு வரதா சொன்னவன் எப்படி ஆஃப் பண்ணுவான்? நீ இங்க வந்தே அரமணிநேரம் இருக்கும்ல... அந்த
    நேரத்தில கருமத்தம்பட்டியிலிருந்தே வந்துர்லாமே!! பொய் சொல்றியா?"
    " சார் இல்லீங்க சார்! எப்படியும் வந்துர்வான்..."
    நேரம் போனது.... இரண்டு மணிநேரம். நின்று கொண்டே இருந்தேன்.. கால் வலி வேறு. இவனும் வருவதாகத் தெரியவில்லை..
    போனும் எடுக்கவில்லை.. சரியான கோபம் அவன் மேல். கைக்கு மட்டும் கிடைத்தால் அடுத்த நாளே நான் ஜெயிலில்
    இருப்பேன் கொலைக் கேஸுக்கு.
    மெல்ல மெல்ல இன்ஸ்பெக்டரிடம் போய்,
    " சார்! என்ன பிரச்சனைன்னு தெரியல. அவனக் காணோம். நான் வீட்டுக்கு போகணும் சார்"
    " என்னப்பா! ஒருத்தன் வர்வான்னு சொன்ன. அப்றம் வரலீங்க்ற.. உன்மேல எனக்கு மைல்டா டவுட் வருதே!! நீ ஹிந்து வா
    இல்லை முஸ்லீமா?
    " ஹிந்துங்க"
    " டிசம்பர் 6 என்ன தேதின்னு தெரியுமா? உங்க ஆளுங்கெல்லாம் எங்க? எங்க குண்டு வைக்கலாம்னு ப்ளான்
    பண்ணியிருக்கீங்க.. (சிரித்துக்கொண்டே)
    " சார்! நான் அப்படிப்பட்ட பையனில்லைங்க சார், இதப் பாருங்க என்னோட விசிட்டிங் கார்ட் (பர்ஸிலிருந்து உருவி) இது
    என்னோட XXXX Bank Debit card, இன்னொன்னு XXXX Bank Debit card. ப்ரீதி ஆர்ட்ஸ் ங்ற பேர்ல அப்பாகிட்ட வேலை
    செய்றேன். பெரிய நிறுவனம். நீங்க வேண்ணா வந்து கேளுங்க. (textiles Field ல எங்கப்பா திருப்பூர்ல ரொம்ப பிரபலம்). நான்
    எங்கயும் யாருகிட்டயும் வேலை செய்யல.. என்ணோட சொந்த தொழில் "
    இன்ஸ்பெக்டர் எல்லத்தையும் பார்த்தார். " சரி நம்ம நார்த் ஸ்டேசன்ல வந்து சொல்லீட்டு போ! போன் நம்பர் கொடு! என்று
    எழுதி வாங்கிக் கொண்டார்.
    போகும்போது, "தம்பி! இந்தமாதிரி தேவையில்லாம் சுத்தாத.. உன்ன உன்னோட ஃப்ரண்டு மாட்டிவுட்டான் பாத்தியா!! நீ நல்ல
    நிலமையில இருக்க. கெடுத்துக்காத." என்று சிலபல அட்வைஸ் பண்ணி அனுப்பி வைத்தார்,
    அப்பாடா போதும் போதுமென ஆகிப்போச்சு..
    அதுக்கப்பறம் அவனே போன் பண்ணி " சும்மா சொன்னேண்டா " அப்டீன்னான்,,, எனக்கு கோபம் தலைக்கெறிப் போய் அவனைத் திட்டியதுடன் அவனோடு சுமார் 6 மாதகாலம் பேசவேயில்லை... இப்ப கொஞ்சம் சகஜம் ஆகியாச்சு..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    ஆதவனின் அனுபவங்கள் - நிறைய இருக்கும் போலிருக்கே.
    Last edited by leomohan; 10-01-2007 at 07:19 PM.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    ஆதவா
    பாதி படிக்கும் போழுதே எனக்கு ரொம்பவே கவலையாகிடுச்சு, இப்படியெல்லாம் நண்பர்கல் இருக்கதான் செய்யுறாங்க,

    அப்படியே காவல் அதிகாரி எதாவது அவார்டு வாங்க உங்களை தூக்கி உள்ளே போட்டிருந்தால்!!!
    நினக்கவே கசக்குது, எதிர்காலம் கேள்விகுறிதான்.

    ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்க தம்பி
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by leomohan View Post
    ஆதவனின் அனுபவங்கள் - நிறைய இருக்கும் போலிருக்கே.
    நண்பரே !! எனக்கு சின்ன வயதுதான்.. ஆனால் நிறைய பார்த்துவிட்டதாக எனக்குள்ளே ஒரு பெருமை.. (இன்னும் பார்க்காதது பலவுண்டே!! குறிப்பாக திரூமணம்.)

    மேற்சொன்னது ஒரு சிறு சம்பவம்தான்.. உங்கள் வாழ்க்கையிலும் அம்மாதிரி நடந்திருக்கலாம்..
    ஆனால் ரஷ்யாகாரி மிகப் பெரிய சம்பவம். அதையே சமாளித்துவிட்டேன்..

    நன்றி மோகன்..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    ஆதவா
    பாதி படிக்கும் போழுதே எனக்கு ரொம்பவே கவலையாகிடுச்சு, இப்படியெல்லாம் நண்பர்கல் இருக்கதான் செய்யுறாங்க,

    அப்படியே காவல் அதிகாரி எதாவது அவார்டு வாங்க உங்களை தூக்கி உள்ளே போட்டிருந்தால்!!!
    நினக்கவே கசக்குது, எதிர்காலம் கேள்விகுறிதான்.

    ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்க தம்பி
    ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்... அந்த இன்ஸ்பெக்டருக்கு என்மேல் அவ்வளவாக சந்தேகமில்லை. அதனால்தான் என்னவோ கையூட்டு கூட வாங்கவில்லை.
    அந்த இன்ஸ்பேக்டருக்கே ஒரு நன்றி சொல்லலாம்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    உண்மையில் மறக்க முடியாத அனுபவம்.

    ஆதவன் உங்க நண்பரை விட நீங்க கவன குறைவாக இருந்திருக்கீங்க. அனுபவங்கள் மூலமாகத் தானே பாடங்கள் படிக்கிறோம்.

    இது போன்ற நேரங்களில் நீங்க அருகில் இருக்கும் டீக்கடை, அல்லது ஹாயாக அமர்ந்திருக்கும் வகையில் காத்திருக்க வேண்டும், மேலும் பல இடங்களிலும் ஆட்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும், வேண்டும் என்றால் உங்களுக்கு துணையாக ஏதாவது தெரிந்த பஸ் ஸ்டாண்ட் கடைக்காரரை காட்டி இருக்கலாம், அவரும் போலிஸிடம் தம்பி இந்த ஊர் தான்னு சொல்லியிருப்பார். உங்க நண்பரிடம் போன் இருந்ததால் அவரை நீங்க சொல்லும் இடத்திற்கு வரச் சொல்ல வேண்டும், அல்லது அங்கே தாண்டா நிக்கிறேன்னு பொய் சொல்லியிருக்கணும்.

    என் நண்பர் ஒருவரும் இப்படி தான் 10 கிலோ மீட்டர் தூரத்தில் வரும் போதே வீட்டில் கீழ் நிற்கிறேன், உடனே வா என்பார், நான் போக மாட்டேன், மீண்டும் மீண்டும் தொடர்ந்து மிஸ்ட் கால் வந்தால், ஆகா ஆள் வந்துட்டார்ன்னு போய் பார்ப்பேன், இல்லைன்னா நான் அரை மணிக்கும் மேல் காத்திருக்கணும். ஆளுக்கு ஏற்ப நாம இருக்கணும், இல்லேன்ன தொல்லை தான்.
    பரஞ்சோதி


  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by பரம்ஸ் View Post
    உண்மையில் மறக்க முடியாத அனுபவம்.

    ஆதவன் உங்க நண்பரை விட நீங்க கவன குறைவாக இருந்திருக்கீங்க. அனுபவங்கள் மூலமாகத் தானே பாடங்கள் படிக்கிறோம்.

    இது போன்ற நேரங்களில் நீங்க அருகில் இருக்கும் டீக்கடை, அல்லது ஹாயாக அமர்ந்திருக்கும் வகையில் காத்திருக்க வேண்டும், மேலும் பல இடங்களிலும் ஆட்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும், வேண்டும் என்றால் உங்களுக்கு துணையாக ஏதாவது தெரிந்த பஸ் ஸ்டாண்ட் கடைக்காரரை காட்டி இருக்கலாம், அவரும் போலிஸிடம் தம்பி இந்த ஊர் தான்னு சொல்லியிருப்பார். உங்க நண்பரிடம் போன் இருந்ததால் அவரை நீங்க சொல்லும் இடத்திற்கு வரச் சொல்ல வேண்டும், அல்லது அங்கே தாண்டா நிக்கிறேன்னு பொய் சொல்லியிருக்கணும்.

    என் நண்பர் ஒருவரும் இப்படி தான் 10 கிலோ மீட்டர் தூரத்தில் வரும் போதே வீட்டில் கீழ் நிற்கிறேன், உடனே வா என்பார், நான் போக மாட்டேன், மீண்டும் மீண்டும் தொடர்ந்து மிஸ்ட் கால் வந்தால், ஆகா ஆள் வந்துட்டார்ன்னு போய் பார்ப்பேன், இல்லைன்னா நான் அரை மணிக்கும் மேல் காத்திருக்கணும். ஆளுக்கு ஏற்ப நாம இருக்கணும், இல்லேன்ன தொல்லை தான்.
    ஆமாம் நீங்கள் cஒல்வது cஅரிதான்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    அய்யோ பாவம் ஆதவா.. இனி கவனமா இருங்க..

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by மன்மதன் View Post
    அய்யோ பாவம் ஆதவா.. இனி கவனமா இருங்க..
    இப்பல்லாம் அவ்ளோ சீக்கிரம் யாரையும் நம்பறதில்லை...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    ஆதாவா அவர்களே அனைவருக்கும் ஒரு பாடம் தான்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    ஆதவா, இப்பதான் படித்தேன்..

    கொஞ்சம் மிஸ்ஸாயிடுச்சி போல, இல்லனா
    நான் உன்ன சன் செய்திகள்ல தான் முதல்ல பார்த்திருப்பேன். இல்ல ஆதவா
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    ஹி ஹி ஹி........... ஆமாமாம்..... அந்த நண்பன் இந்த மன்றத்திலயும் வந்தான்.............
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •