Results 1 to 5 of 5

Thread: நானும் மழலைதான்!

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    14 Dec 2006
    Location
    Trivandrum.
    Posts
    16
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    0
    Uploads
    0

    நானும் மழலைதான்!

    தள்ளாடி நடந்தான் அவன்,
    நானும் நடந்தேன்,
    அவன் தானே நடக்கும்வரை.
    கேள்விகள் கேட்டான் அவன்,
    கனிவுடன் பதிலளித்தேன்,
    அவன் தெரிந்துகொள்ளும் வரை.
    வேண்டியவைகள் செய்தேன்,
    அவன் வேண்டிக்கேட்காத முறையில்...
    இவை அவன் மழலையின் காலம்...
    இன்று நானும் மழலைதான்,
    ஆம்..இரண்டாம் மழலைப்பருவத்தில் நான்.
    தடுமாறும் கால்கள்,
    திணறும் மொழிகள்,
    திருந்தக்கேட்கா காதுகள்.
    அவன் வெறுக்கிறான்
    என் இரண்டாம் மழலையை.
    நான் ரசிக்கிறேன்,
    அவன் முதல் மழலை இன்னும் மாறாதிருப்பதை....


    அன்புடன்,
    காந்தி.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    காந்தி,

    இன்றைய முதியோரின் நிலையை அருமையாய் சொன்னீர்கள்.
    என்று தணியும் இந்த ஏக்கம்.???

    பாராட்டுகள் கவிதை அருமை.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நான் ரசிக்கிறேன்,
    அவன் முதல் மழலை இன்னும் மாறாதிருப்பதை....



    மிகவும் மதிக்கப்படவேண்டியவர்கள் நம் பெற்றோர்கள்....

    கவிதையில் தாக்கம் தெரிகிறது
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    நாம் நடக்க முடியாமல் இருக்கும் போது நம் பெற்றோர்கள் நம் கைகளை பிடித்து அழைத்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தேவையான காலத்தில் நாம் வேலை, வியாபாரம் என்று அவர்களை விலகி சென்றுவிடுகிறோம். உருக்கமான கவிதை.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  5. #5
    புதியவர்
    Join Date
    14 Dec 2006
    Location
    Trivandrum.
    Posts
    16
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    0
    Uploads
    0
    கருத்துக்கு நன்றி இனியவர்களே!

    அன்புடன்,
    காந்தி.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •