Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 38

Thread: நேற்றைய கல்லறை - மர்மக் கதை

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  40,681
  Downloads
  126
  Uploads
  17

  நேற்றைய கல்லறை - மர்மக் கதை

  நேற்றைய கல்லறை
  1
  என் யமாஹாவை காந்தி நகர் ஐயங்கார் மெஸ் எதிரில் நிறுத்தினேன். மத்திய கைலாஷ் கோவிலுக்கு அடுத்து அதிகம் வருகை தரும் இடம் இந்த மெஸ் எனலாம்.

  ஐயங்கார் மிகவும் எழை. 3 பிள்ளைகள். பலகாலமாக மெஸ் நடத்திவருகிறார். அவருடைய ஒரே நம்பிக்கை அடையாறில் சுற்றுமுற்றும் ஏறிப்போன மணையின் விலைதான். அந்த 400 சதுரடி நிலமே பல லட்சம் போகும் என்று மக்கள் சொல்ல அதை நம்பி இருந்தார்.

  நான் டைடல் பார்க்கில் வேலை செய்யும் மென் பொருள் நிபுனன். கஸ்தூர்பாய் நகரில் 4 நண்பர்களுடன் வீடு எடுத்து தங்கியிருந்தேன். நானே சோம்பேறி என்றால் என் நண்பர்கள் என்னைவிட கடைந்தெடுத்த சோம்பேறிகள். சமைக்கலாம் என்றால் காத தூரம் ஓடுவார்கள். எனக்கு சமைப்பதில் பிரச்சனையே இல்லை. பாத்திரம் கழுவுவதில் தான்.

  அதனால் ஐயங்கார் மெஸ் தான் எங்களுக்கு அமுதசுரபி. காலையில் டிஃபன். அன்பாக வரவேற்பார். சுடச்சுட இட்லியோ அல்லது பொங்கலோ. பிறகு மதியம் இடைவெளியில் வந்த முழு சாப்பாடு. இன்னும் போட்டுக்கோப்பா என்று விருந்தாளி போன்ற உபச்சாரம் வேறு. இரவு சப்பாத்தி கிழங்கு என்று வடநாட்டு வகை. நான் சுத்த அசைவமாக இருந்தாலும் வீட்டு சாப்பாடு போல் கிடைக்கும் உணவிற்காக பெரும்பான்மை சைவமாக மாறியிருந்தேன். வெளியே கறி சாப்பிட போகும் அன்று வரமாட்டேன் என்று சொல்லிவிடுவேன்.

  மாலை 6.30 மணியாகியிருந்தது. காந்தி நகர் மரங்களில் பறவைகளின் சங்கீதம். சாயங்காலம் கிடைக்கும் பக்கோடாவை ஒரு வெட்டு வெட்டலாம் என்று நேராக அலுவலகத்திலிருந்து வந்துவிட்டேன். ஆபீஸ் காபி நமக்கு ஒத்துவராது. சுடுதண்ணியில் கண்ட பொடிகள்.

  ஐயங்கார், என்ன சௌக்கியமா, சுடச்சுட சிக்கன் கொண்டுவாங்க என்று கலாய்த்தேன்.

  அடேய், வெள்ளிக்கிழமை அதுவுமா என்று செல்லமாக கோபித்துக் கொண்டே பக்கோடா ஒரு காகிதத்திலும் காபியையும் கொண்டுவந்து வைத்தார்.

  அங்கிருந்த குமுதம் ஆனந்த விகடன்களை புரட்டிக் கொண்டே காபியை ருசித்தேன். பிறகு ஒரு பருக்கு விடாமல் பக்கோடா காலி.

  நல்ல லெக் பீஸா வையுங்கோன்னா என்று மீண்டும் கலாய்த்தேன்.

  எடுத்துட்டு வரம்பா என்றார்.

  நான் அந்த பக்கோடா வைத்திருந்த காகித்தை கையில் எடுத்தேன். ஏதோ டையரியின் பக்கங்கள் போலிருந்தது.

  மெல்ல படித்த எனக்கு ஆச்சர்யம்.

  என்னுடைய தாத்தா விட்டுப்போன அந்த சொத்து. அதன் மதிப்பு தெரியாமல் இத்தனை நாள் அலைந்தேன் திரிந்தேன். ஆனால் இறக்கும் வயது வந்தபோது தான் அதன் அருமை புரிந்தது. எனக்கு இது கணக்கில்லா சொத்து தான். ஆனால் தாமதமாக கிடைத்து என்ன பிரயோசனம். இதனை பத்திரமாக லாக்கரில் வைத்திருக்கிறேன். இதன் சாவி என் கழுத்தில். என் மகனுக்கு அறிவு இருந்தால் என் கழுத்திலிருந்து சாவியை எடுத்து அந்த புதையலை எடுத்து கொள்ளட்டும். இல்லையேல் அது என்னோடு மண்ணாக போகட்டும்.
  இருதய ராஜ்
  11 டிசெம்பர் 1976

  ஐயங்கார், ஐயங்கார், இங்கே வாங்க என்று அலறினேன்.

  இது, ...இது எங்கேர்ந்து கிடைச்சுது?

  பழைய பேப்பர் தானேப்பா. அதோ அந்த ஓரத்தில் வெச்சிருக்கேன் என்றார்.

  சட்டென்று ஓடிச் சென்ற அந்த குவியலில் இது போன்ற டையரி காகிதங்களை சேகரித்தேன்.

  ஐயங்கார், நான் நினைச்சது சரியா இருந்தா நாம கோடீஸ்வரங்களா ஆயிடலாம் என்று கத்தினேன்.

  என்னப்பா சொல்றே? என்றார் ஆவலாய்

  இது எங்கேர்ந்து கிடைச்சுது உங்களுக்கு?

  அதுவா என் வீட்டில் ஒருத்தர் குடியிருந்தார். அவரு மூணு மாசமா வாடைதராமா ஓடிட்டார். நானும் அவருக்காக காத்திருந்து விட்டு பிறகு அந்த வீட்டிலுள்ள பொருட்களை காலி செய்தேன் என்றார் சாவகாசமாய் என் அவசரம் புரியாமல்.

  சரி. நாம சீக்கிரம் அங்கே போகனும் வாங்க என்று கடையை மாமியின் கையில் ஒப்படைத்துவிட்டு அவரையும் ஏற்றிக் கொண்டு அவசரமாக அவர் வீட்டுக்கு கிளம்பினோம்.

  -மோகன் கிருட்டிணமூர்த்தி
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 2. #2
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  40,681
  Downloads
  126
  Uploads
  17
  2

  திருவான்மயூரில் இருந்தார் ஐயங்கார். எங்கு என்று தெரியாது.

  வழி சொல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டே நினைவில் ஆழ்ந்தேன்.

  ஐயங்கார்கிட்டே சொந்த வீடு இருக்கா. ரொம்ப ஏழையின்னுல்ல நினைச்சோம். அதைவேறு விட்டு வாடகை வசூல் செய்யறார். பெரிய ஆளுதான் என்று நினைத்தேன். பொறுக்க முடியாமல் அவரிடமே கேட்டுவிட்டேன்.

  என்ன ஐயங்கார். பெரிய ஆளுதான் நீங்க, சொந்த வீடெல்லாம் உண்டா என்றேன் நக்கலாக.

  அட போப்பா. 10 வருஷத்துக்கு முன்னாடி என் மெஸ்ஸிலே சாப்பிட்டுகிட்டு இருந்த பையன் உன்னை மாதிரி தான் கம்யூட்டர்ல ஏதோ பண்றான். அவனோட வீடு அது. அவன் அமெரி்க்கா போகும் போது என் மேல் உள்ள வாஞ்சையாலும் நம்பிக்கையாலும் வீட்டை பாத்துக்கோங்கோ. அடுத்த போர்ஷனை வாடைக விட்டு அதை நீங்க வீட்டு செலுவுக்கு வெச்சிக்கோங்கோன்னு சொல்லிட்டு போனான் புண்யவான். அதை வெச்சி தான் காலம் தள்ளிக்கிட்டு இருக்கேன்.

  அப்பாட ஒரு சந்தேகம் தீர்ந்தது. உடனே என் அடுத்த சந்தேகத்தையும் எடுத்து விட்டேன்.

  அது சரி. வாடகை தராம ஓடிப்போனவரோட பெயர் இருதய ராஜா என்று கேட்டேன்.

  இல்லை. அவரோட பிள்ளை ஏசு நாயகம். அவருக்கு ஒரு 50 வயசு இருக்கும்.

  அது சரி ஆச்சாரமான நீங்கள் எப்படி ஒரு கிறிஸ்டியனுக்கு வாடைக விட்டீங்க. சந்தேக கணைகள், அணைகள் தேடியது

  அவாளும் மனஷங்க தானேப்பா. இந்த காலத்துல் யாரு பாக்கறா இதெல்லாம். ஆனா ஆத்துல கறி சமைக்கப்படாதுன்னு சொல்லிட்டேன். ஸ்மெல் ஆகாதுல்லயோ என்றார் பொதுவாக.


  அவரு வாடகை தரமுடியாத அளவுக்கு ஏழையா.

  இல்லப்பா. அவரு அப்பா நாகப்பட்டினம் பக்கத்துல இருந்தவரு. நல்ல வசதியான குடும்பம் தான். ஆனா, இவருக்கு குடி, ரேஸ், புகை இப்படி சிருஷ்டில இருக்கற எல்லா கெட்ட பழக்கமும் உண்டு. ஆனா எங்க கிட்ட நல்ல மரியாதையா நடந்துப்பார்.

  எத்தனை மாசமா இருந்தாரு.

  அவரு 2 வருஷமா இருந்தாரு. கடைசிலே ஓடி போயிட்டாரு. நிறைய பேர் வந்து என்னை தொந்தரவு செய்வா. நான் சொல்லிட்டேன் என்க்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையினுட்டு.

  சென்னையின் நெறிசலை கடந்து அவருடைய வீட்டை சென்று அடைந்தோம்.

  60க்கு 40 க்ரௌண்ட். அதில் இருபகுதியாக தனி வாசலுடன் கட்டியிருந்தனர்.

  ஐயங்கார், இப்ப யார் வாடைக்கு இருக்காங்க என்று கேட்டேன் சந்தேகத்துடன்.

  இவரு போனப்பிறகு யாரையும் வெச்சிக்கலைப்பா. எதுக்கு பிரச்சனை.

  சரி உள்ளே போய் பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டே சாவி எடுத்து கொண்டு வந்தார்.

  அந்த அறையை நோட்டம் விட்டேன். காலி செய்து விட்டதாக ஐயங்கார் சொல்லியிருந்தாலும் ஏதோ ஒருவர் இருப்பது போன்ற சுவடுகள்.

  பெரிய சிலுவை. சில மெழுவர்த்திகள். சுருட்டு நாற்றம் விட்டு போகவில்லை இன்னும். மூடியே கிடந்ததால் ஒரு வாசம் மூக்கை துளைத்தது. என்னவென்று தெரியவில்லை.

  காகித குவியல்களை புத்தகங்களை அலசினேன். கிடைத்த டையரிகளை எடுத்துக் கொண்டேன். நான் அதிகம் தேடிய விலாசம் கிடைத்தது.

  இருதய ராஜ்
  36 மாரியம்மன் கோவில் தெரு
  வெளிப்பாளையம்
  நாகப்பட்டினம்

  எடுத்து வைத்துக் கொண்டேன்.

  ஐயங்கார், இது பெரிய கதையா போகும் போலிருக்கு. நான் முதல்ல இந்த டையரியை எல்லாம் படிக்கிறேன். நாளைக்கு சனி, மறுநாள் ஞாயிறு, எனக்கு லீவ், காலையிலே கிளம்பினா மதியம் போய் சேந்துடுவோம் நாகப்பட்டினத்திற்கு. என்ன ஏதுன்னு பார்த்துட்டு வருவோம். வந்தா மலை போனா ம.... என்றேன்.

  அவர் திகிலோடு பார்த்தார்.

  என்ன ஐயங்கார் கொலையா பண்ண போறோம். புதையல் தேடப்போறோம் சார்.

  என்ன ஏதுன்னு யாராவது கேட்டா.

  கேட்பாங்க. கேட்டா, வாடகை கொடுக்காம ஓடிப்போன ஏசு நாயகத்தை தேடறோம்னு சொல்லுங்க.

  சரி என்றார்.

  அவரை மீண்டும் கொண்டு வந்து மெஸில் விட்டுவிட்டு இரவு உணவு கழித்து அறைக்கு சென்றேன்.

  யாருக்கும் சொல்லக்கூடாது என்று முடிவு செய்துக் கொண்டேன்.

  ஒவ்வொரு டையரியாக எடுத்து படிக்க ஆரம்பித்தேன். பல சுவாரஸ்யங்கள். பல திடுக்கிடும் செய்திகள்.
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  40,681
  Downloads
  126
  Uploads
  17
  3
  காலையில் 4 மணிக்கே கோயம்பேடு சென்றடைந்தோம். எனக்கு இரவில் தூக்கம் வரவில்லை.

  பஸ்சில் ஏறி அமர்ந்து இரண்டு டிக்கெட் வாங்கிக் கொண்டு குமுதத்தை எடுத்து புரட்டினன். அருமையான வார இதழ் என்று அப்பா சொல்வார். சிறிய வயதில் வீட்டுக்கு வந்ததும் இப்போது குங்குமம் விளம்பரத்தில் வருவதுபோல வீட்டில் அனைவரும் படிக்க சண்டையிடுவோம். ஆனால் தரம் எனும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் வெறும் திரையுலகத்தை நம்பி நிற்கும் குப்பை வார இதழாக மாறி போய்விட்டது. இருந்தாலும் அந்த குப்பையையும் படிக்கும் பழக்கம் போகவில்லை. குமுதத்தை கையில் எடுத்தது வேறு ஒரு காரணத்திற்காகவும் தான். நான் ஐயங்காரின் முன் சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொள்ளத்தான்.

  நீ எந்த ஊரு தம்பி என்று கேட்டார்.

  நான் திருப்பராய்துறை, திருச்சிக்கு பக்கம் என்றேன்.

  அப்பா..

  அப்பா ரிடையர்ட் தெஹசில்தார். அம்மா வீட்டை பார்த்துக்றாங்க. ஒரு அக்கா. கல்யாண ஆகி திருச்சியில் இருக்கா. நான் கடைகுட்டி.
  அப்படியா. தருப்பராய்துறை. அருமையான ஊர். காவரி ஓடும் எல்லா ஊரும் அருமை தான் என்றார்.

  ஆமாம் சார். லீவ்நாள்ல ஆத்தங்கரையிலதான் லூட்டி. இப்ப தண்ணி வர்றதும் போறதுமா இருக்கு என்றேன்.

  எதுக்காக மெட்ராஸ் வந்தே என்றார்.

  நம்ம லைன்ல வேற எங்க வேலை. சென்னை தான். அடுத்தது அமெரிக்கா. எம்சிஏ முடிச்சிட்டு ஒரு திட்டத்தோட தான் வந்தேன். நாம போற வேலை மட்டும் சக்ஸஸ் ஆச்சின்னா, நான் ஒரு பெரிய ஓட்டல் திறந்திடறேன். நீங்க தான் முதலாளி என்றேன் கிண்டலாய்.
  அட அப்பவும் ஓட்டல் தானா என்றார் அலுப்புடன்.

  ஏன் ஐயங்கார். உங்களுக்கு மெஸ் பிடிக்கலையா.

  பிடிச்சாப்பா செய்யறோம். படிக்கிற காலத்துல படிக்கலை. எங்க அப்பாவும் சமையல்காரர். அடேய் நீயாவது படிச்சி தொலைன்னு சொல்வாரு. நான் தெரு பசங்களோட சினிமா பார்த்துட்டு கிராஃப் வைச்சிகிட்டு சுத்துவேன். ஆனா சமைக்கறதுலையும் பரிமாறிதுலேயும் ஒரு சந்தோஷம். காசு வாங்கிட்டாலும் சாப்பாடு போடறோமேன்னு ஒரு திருப்தி என்றார்.

  ஆமா ஐயங்கார். நீங்க இல்லைன்னா நாங்கல்லாம் அனாதை மாதிரி தான் என்றேன் உணர்ச்சிப்பூர்வமாய்.

  என்ன பண்றது. உங்களுக்கெல்லாம் கறி மீனு சமைச்சிபோட முடியாதவனாயிட்டேன் என்றார் நிஜமான வருத்தத்துடன்.
  அதுக்கென்ன சார், ஆயிரம் ஓட்டல் இருக்கு. உங்க கையால சாப்பிடற மாதிரி ஆகுமா என்றேன்.

  அவர் நெகிழந்துவிட்டார்.

  என் மனதில் பல வித கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தது. எதற்கு நாகை போகிறோம். யாரை பார்க்க. என்ன தேடுகிறோம் என்றெல்லாம். சில விடைகளும் வந்து போயின. கேள்வி என்ன பிரம்மச்சாரியா தனியாக சுற்ற?

  இப்படியே திருச்சி, மதுரை, நாகப்பட்டினம் கதைகளை பேசிக் கொண்டே 3 மணிக்கு நாகை புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சேர்தோம். சில்லென்று கடற்கரை காற்று வரவேற்த்தது. இறங்கி நடந்தோம். கண்ணில் பட்ட முதல் ஓட்டலில் நுழைய முயன்றேன்.
  ஐயங்கார் மேலே கண் காட்டினார் அசைவ உணவகம் என்று எழுதியிருந்தது. கெஞ்சலாக பார்த்தார். நான் சிரித்துக் கொண்டே அடுத்த ஓட்டலில் நுழைந்தேன்.

  இருவரும் வரும் வழியில் எதுவும் சாப்பிடவில்லை. பழங்கள் மட்டும். நன்றாக சாப்பிட்டுவிட்டு வெளிப்பாளையத்திற்கு வழி கேட்டோம். இதோ தெரியுதுல்ல கோர்ட்டு அதுக்கு அந்த பக்கமும் இந்த பக்கமும் வெளிப்பாளையம் தான் என்றார் ஓட்டலில் ஒருவர்.

  மாரியம்மன் கோவில் தெரு................. என்று இழுத்தேன்.

  அது கோர்ட்டுக்கு பின்னாடி என்ற கை காட்டினார்.

  இருவரும் நடந்தோம். வெயில் போயிருந்தது. ஆனால் எனக்கு தூக்கம் கண்ணுக்குள் வந்துக் கொண்டிருந்தது. யாரை பார்க்கப் போகிறோம் என்ற கேள்வி இன்னும் பிரம்மச்சாரியாக நின்றது.
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 4. #4
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  மோகன் படித்தேன் ரசித்தேன்...
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 5. #5
  இளம் புயல் பண்பட்டவர் guna's Avatar
  Join Date
  09 Oct 2006
  Location
  Malaysia
  Posts
  249
  Post Thanks / Like
  iCash Credits
  3,787
  Downloads
  3
  Uploads
  0
  உங்கள் எல்லா கதைகளிலும் + தொடர்களிலும் இருந்த விரு விருப்பை, இந்த தொடரில் காணமுடியவில்லையே மோகன்..

  போக போக விரு விருப்பா இருக்குமோ?
  எது எப்படியோ, தொடருங்கள் நன்பரே.

  அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்..

  குணா
  சுகுணா ஆனந்தன்

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  40,681
  Downloads
  126
  Uploads
  17
  3
  காலையில் 4 மணிக்கே கோயம்பேடு சென்றடைந்தோம். எனக்கு இரவில் தூக்கம் வரவில்லை.

  பஸ்சில் ஏறி அமர்ந்து இரண்டு டிக்கெட் வாங்கிக் கொண்டு குமுதத்தை எடுத்து புரட்டினன். அருமையான வார இதழ் என்று அப்பா சொல்வார். சிறிய வயதில் வீட்டுக்கு வந்ததும் இப்போது குங்குமம் விளம்பரத்தில் வருவதுபோல வீட்டில் அனைவரும் படிக்க சண்டையிடுவோம். ஆனால் தரம் எனும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் வெறும் திரையுலகத்தை நம்பி நிற்கும் குப்பை வார இதழாக மாறி போய்விட்டது. இருந்தாலும் அந்த குப்பையையும் படிக்கும் பழக்கம் போகவில்லை. குமுதத்தை கையில் எடுத்தது வேறு ஒரு காரணத்திற்காகவும் தான். நான் ஐயங்காரின் முன் சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொள்ளத்தான்.

  நீ எந்த ஊரு தம்பி என்று கேட்டார்.

  நான் திருப்பராய்துறை, திருச்சிக்கு பக்கம் என்றேன்.

  அப்பா..

  அப்பா ரிடையர்ட் தெஹசில்தார். அம்மா வீட்டை பார்த்துக்றாங்க. ஒரு அக்கா. கல்யாண ஆகி திருச்சியில் இருக்கா. நான் கடைகுட்டி.
  அப்படியா. தருப்பராய்துறை. அருமையான ஊர். காவரி ஓடும் எல்லா ஊரும் அருமை தான் என்றார்.

  ஆமாம் சார். லீவ்நாள்ல ஆத்தங்கரையிலதான் லூட்டி. இப்ப தண்ணி வர்றதும் போறதுமா இருக்கு என்றேன்.

  எதுக்காக மெட்ராஸ் வந்தே என்றார்.

  நம்ம லைன்ல வேற எங்க வேலை. சென்னை தான். அடுத்தது அமெரிக்கா. எம்சிஏ முடிச்சிட்டு ஒரு திட்டத்தோட தான் வந்தேன். நாம போற வேலை மட்டும் சக்ஸஸ் ஆச்சின்னா, நான் ஒரு பெரிய ஓட்டல் திறந்திடறேன். நீங்க தான் முதலாளி என்றேன் கிண்டலாய்.
  அட அப்பவும் ஓட்டல் தானா என்றார் அலுப்புடன்.

  ஏன் ஐயங்கார். உங்களுக்கு மெஸ் பிடிக்கலையா.

  பிடிச்சாப்பா செய்யறோம். படிக்கிற காலத்துல படிக்கலை. எங்க அப்பாவும் சமையல்காரர். அடேய் நீயாவது படிச்சி தொலைன்னு சொல்வாரு. நான் தெரு பசங்களோட சினிமா பார்த்துட்டு கிராஃப் வைச்சிகிட்டு சுத்துவேன். ஆனா சமைக்கறதுலையும் பரிமாறிதுலேயும் ஒரு சந்தோஷம். காசு வாங்கிட்டாலும் சாப்பாடு போடறோமேன்னு ஒரு திருப்தி என்றார்.

  ஆமா ஐயங்கார். நீங்க இல்லைன்னா நாங்கல்லாம் அனாதை மாதிரி தான் என்றேன் உணர்ச்சிப்பூர்வமாய்.

  என்ன பண்றது. உங்களுக்கெல்லாம் கறி மீனு சமைச்சிபோட முடியாதவனாயிட்டேன் என்றார் நிஜமான வருத்தத்துடன்.
  அதுக்கென்ன சார், ஆயிரம் ஓட்டல் இருக்கு. உங்க கையால சாப்பிடற மாதிரி ஆகுமா என்றேன்.

  அவர் நெகிழந்துவிட்டார்.

  என் மனதில் பல வித கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தது. எதற்கு நாகை போகிறோம். யாரை பார்க்க. என்ன தேடுகிறோம் என்றெல்லாம். சில விடைகளும் வந்து போயின. கேள்வி என்ன பிரம்மச்சாரியா தனியாக சுற்ற?

  இப்படியே திருச்சி, மதுரை, நாகப்பட்டினம் கதைகளை பேசிக் கொண்டே 3 மணிக்கு நாகை புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சேர்தோம். சில்லென்று கடற்கரை காற்று வரவேற்த்தது. இறங்கி நடந்தோம். கண்ணில் பட்ட முதல் ஓட்டலில் நுழைய முயன்றேன்.
  ஐயங்கார் மேலே கண் காட்டினார் அசைவ உணவகம் என்று எழுதியிருந்தது. கெஞ்சலாக பார்த்தார். நான் சிரித்துக் கொண்டே அடுத்த ஓட்டலில் நுழைந்தேன்.

  இருவரும் வரும் வழியில் எதுவும் சாப்பிடவில்லை. பழங்கள் மட்டும். நன்றாக சாப்பிட்டுவிட்டு வெளிப்பாளையத்திற்கு வழி கேட்டோம். இதோ தெரியுதுல்ல கோர்ட்டு அதுக்கு அந்த பக்கமும் இந்த பக்கமும் வெளிப்பாளையம் தான் என்றார் ஓட்டலில் ஒருவர்.

  மாரியம்மன் கோவில் தெரு................. என்று இழுத்தேன்.

  அது கோர்ட்டுக்கு பின்னாடி என்ற கை காட்டினார்.

  இருவரும் நடந்தோம். வெயில் போயிருந்தது. ஆனால் எனக்கு தூக்கம் கண்ணுக்குள் வந்துக் கொண்டிருந்தது. யாரை பார்க்கப் போகிறோம் என்ற கேள்வி இன்னும் பிரம்மச்சாரியாக நின்றது.
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 7. #7
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  40,681
  Downloads
  126
  Uploads
  17
  4
  பெரிய வீடு. பல பாகங்களாக பிரிக்கப்பட்டு வாடகை விடப்பட்டிருந்தது என்பது அங்கிருந்த மக்கட் பெருங்கடலை பார்த்தாலே தெரி்ந்தது. கோர்டை தாண்டி ஒரு சந்து வழியாக மாரியம்மன் கோவில் சென்று அடைந்திருந்தோம்.

  ஏசு நாயகம் இருக்காரா என்று ஒரு பெண்மணியை பார்த்து கேட்டேன்.

  அதோ என்று எதிர்புறத்தில் கைகாட்டி விட்டு நாம் ஏதோ குடிகார கும்பலில் இருந்து வந்தது போல வெடுக்கென்றே சென்றார்.
  மெதுவாக கதவை அடைந்து தட்டினோம். உள்ளிருந்து உளறல் குரல் வந்தது. உள்ளே வா என்று சொன்னதாக நினைத்துக் கொண்டு நுழைந்தோம்.

  50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கீழே கிடந்திருந்தார். கையில் மது கோப்பை. சுருட்டு புகை. நாங்கள் இருவரும் நேராக அவரிடம் சென்று அருகிலிருந்த சோபாவின் மீது அமர்ந்தோம்.

  ஐயங்காரை பார்த்ததும் கை எடுத்து கும்பிட்டார். பிறகு அவர் கால் பக்கம் புரண்டு விழுந்து அழுதார். ஐயரே, என்னை மன்னிச்சுடுங்க என்று அழுதார்.

  பலமுறை ஐயருக்கும் ஐயங்காருக்கும் வித்தியாசம் சொல்லியிருந்தும் அவர் தன்னை ஐயரே என்று அழைத்தார் என்பதை நினைவுபடுத்திக் கொண்டார் ஐயங்கார்.

  எங்களை பொருத்த வரையிலும் எல்லாருமே ஐயர் தான் என்பார்.

  என்ன நீங்க, பரவாயில்லை எழுந்து உட்காருங்க என்றார் ஐயங்கார் அனைத்து துரோகங்களை ஒரு சேர மன்னித்த பெருந்தன்மையுடன்.

  இல்லை. உங்க கிட்டே சொல்லாம வந்தது தப்பு தான். நான் பெரிய பிரச்சனையில் மாட்டிக்கிட்டேன். நாலு பக்கமும் கடன் தொல்லை. இந்த வீடு வேற கேசுல இருக்கு. என்னால ஒன்னும் பண்ண முடியலை. உங்க வாடகையை கூட கொடுக்காம ஓடி வந்துட்டேன். தப்பு, தப்பு, தப்பு என்ற கண்ணத்தில் தனக்குதானே அடித்துக் கொண்டார்.

  நான் அவரை கைகளால் பிடித்து சோபாவில் அமர வைத்தேன். நான் நெடுநெடு வென்று வளர்ந்தவன். ஆரம்பத்தில் கிராமத்தில் வளர்ந்ததால் நல்ல கட்டுமஸ்தாய் இருப்பவன். 108 தேங்காய்களை 16 நிமிடத்தில் உரிப்பேன்.

  நீயாருப்பா ................ என்றார் என்னை பார்த்து பயத்துடன். ஒருவேளை வாடகை வசூல் செய்ய அடியாள் அழைத்துவந்து விட்டார் என்று நினைத்தாரோ என்னவோ.

  நான் எதையும் நேரடியாக பேசுபவன். அதிகம் யோசிக்க மாட்டேன். விறுவிறுவென்று முடிவு எடுப்பேன். என் மூளைக்குள் ஒரு கணக்கு ஓடியிருந்தது.

  ஏசு நாயகம் நான் உங்க கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசனும். போய் முகத்தை கழுவிகிட்டு வாங்க என்றேன் சற்று குரலை உயர்த்தி.

  அவர் பூனை போல் உள்ளே சென்று முகம் கழுவி வந்தார். மேசையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினேன். பேசாமல் குடித்தார்.

  சொல்லுப்பா.......... உன் பெயர் என்ன?

  அது உங்களுக்கு அநாவசியம். நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க. உங்க அப்பா சாவறதுக்கு முன் ஒரு பெரிய புதையல் கிடைச்சிருக்கு. அது உங்க பரம்பரை புதையலாக கூட இருக்கலாம். அதை ஒரு பத்திரமான இடத்தில் வைச்சிருக்காரு. அதோட சாவி அவரோடு கழுத்தில இருந்த ஒரு செயினில் மாட்டி வைச்சிருந்திருக்காரு. அவரை புதைக்கும் போது அதையும் சேர்த்து புதைச்சிருக்கலாம். இல்லை அந்த புதையல் உங்களுக்கு கிடைச்சிருக்கலாம். ஆனால் அதுக்கு வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். நீங்க கடன்ல இருக்கறத பார்த்தா அப்படித்தான் இருக்கு. நீங்க எங்களோட ஒத்துழைச்சா நாம மூன்று பேரும் கிடைக்கிறதை சமமாக பங்கு போட்டுக்கலாம். இதுக்கு நீங்க ஒத்து போறதா இருந்தா என் கிட்டே இருக்கற தகவல்களை தரேன். இல்லைன்னா அடுத்த பஸ் பிடிச்சி நாங்க போய்கிட்டே இருக்கோம். என்ன சொல்றீங்க.

  ஐயங்கார் நான் பேசுவதை பார்த்துவிட்டு அசந்து போயிருந்தார். என்னை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

  ஏசு நாயகத்திற்கு குடித்ததெல்லாம் இறங்கி போய்விட்டிருந்தது.

  என்னை பார்த்து மெதுவாக சொன்னார், தேடலாம். என் கடனை அடைச்சா போதும். சாவும் போது கடனோட சாகனுமே அதனால தான் நான் சாகாமல் இருக்கேன். நீ உன் பங்கை எடுத்துக்கோ. ஐயருக்கும் கொடு. அவரு நல்லவர். அவருக்கு நான் கடமை பட்டிருக்கேன். செய்யலாம்.
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  40,681
  Downloads
  126
  Uploads
  17
  5

  மாலை ஆகியிருந்தது. இனிமேல் இடுகாட்டுக்கு செல்ல வேண்டாம். இரவு தூங்கிவிட்டு காலையில் போகலாம் என்றார் ஏசு நாயகன். உணவு உண்டுவிட்டு வருவதாக சொல்லி பஸ் ஸ்டாண்டுக்கு நடையை கட்டினோம் நாங்கள் இருவரும்.

  லேசாக டிபன் சாப்பிட்டோம். பிறகு காபி சாப்பிட்டுக் கொண்டே ஏசு நாயகத்தை பற்றி பேசினோம்.

  பிறகு அருகில் இருந்த ஒரு ஓட்டலில் ஒரு அறையை எடுத்து உறங்கினோம்.

  எனக்கு என்னமோ இது இரண்டு நாளில் முடிகிற வேலையாக தோணலை என்று உள் மனது சொல்லியது. முன்னேற்பாடாக என்னுடைய லாப்டாப்பை எடுத்து வந்திருந்தேன்.

  5 மணிக்கு தானாகவே முழிப்பு வந்தது. ஐயங்கார் முன்பே எழுந்து சந்தியாவந்தனம் செய்துக் கொண்டிருந்தார். நான் குளித்துவிட்டு கீழே சென்று இரண்டு காபியை ப்ளாஸ்டிக் கோப்பையில் எடுத்து வந்தேன். அவர் முடித்து எழுந்ததும் ஒரு கோப்பையை அவரிடம் நீட்டினேன்.

  என்ன பண்ண போறதா உத்தேசம்? என்றார் என்னை பார்த்து மிகவும் யோசனையுடன்.

  போலாம். போய் தோண்டலாம் இருதய ராஜை என்றேன்.

  ஐயோ கல்லறையை திறக்கறது பாவம் என்றார்.

  சாமி, கல்லறையை திறக்கறதும் பாவம், அவருடைய பையன் உயிரோடு சமாதியாகறதும் பாவம். நாம் அவர் பையனுக்கு உதவி பண்ணதா நினைச்சுப்போம். அதுக்கு அவர் நமக்கு கொடுக்கற சன்மானமா நினைச்சுப்போம் என்றேன் சமாதானமாக.

  மௌனமாக இருந்தார்.

  காலை சிற்றுண்டி முடித்துவிட்டு மீண்டும் ஏசு நாயகத்தை சென்று சந்தித்தோம். புதுப்பொலிவுடன் இருந்தார். கால் சராய் அணிந்து ஒரு கருப்பு கோட்டையும் அணிந்திருந்தார். எங்களை கண்டதும், ப்ரேக்ஃபாஸ்ட்? என்றார்.

  நாங்க சாப்பிட்டாச்சு வாங்க போகலாம் என்றேன்.

  பொடி நடையாக கோர்டை கடந்து, பஸ் ஸ்டாண்டை கடந்து, கடற்கரை சாலைக்கு அருகில் இருந்த ஒரு பெரிய இடுகாட்டின் வாயிலுக்கு 15 நிமிடத்தில் சென்று அடைந்தோம்.

  ஐயங்கார் தயக்கத்துடன் வெளியே நின்றுவிட்டார். அவரை நான் அதிகம் தொந்தரவு செய்யவில்லை. தர்ம-அதர்ம வியாக்கியானங்கள் செய்யும் நிலையிலும் நான் இல்லை.

  யார் கேர் டேக்கர் என்று தேடினோம். ஒரு நடுவயது நபர் கண்ணில் பட்டார்.

  என் பேரு ஏசுநாயகம். எங்கப்பா இருதய ராஜ். 1978ல் காலமானாரு. இந்த இடுகாட்டில் தான் புதைச்சோம். நான் ரொம்ப நாளா வெளிநாட்டில இருந்ததால அவருக்கு மரியாதை செலுத்தல. இன்னிக்கு பார்க்கனும். எங்கேன்னு கொஞ்சம் சொல்லமுடியுமா என்றார் கையில் இருந்த பூக்கொத்தை காட்டி காட்டி பேசினார்.

  இத்தனை நாள் இந்த பக்கமே வரலையா இந்த மனுஷன் என்று நினைத்துக் கொண்டேன்.

  அவர் சற்று யோசித்தார். 28 வருஷம் ஆச்சு. ம்ம். அப்பாவை கேட்கறேன் என்று சொல்லிவிட்டு சுருக்க நடந்து சென்றார். காலை வெயில் நெற்றியில் சுட்டது. சாவிற்கு முன்பே இடுகாட்டுக்கு வந்ததை நான் ஒரு பெரிய சாதனையாக நினைக்கவில்லை.

  வேண்டா வெறுப்பாக இருந்தது. இருந்தாலும் வரப்போகும் புதையல் பொறுத்துக் கொள் என்றது.

  வெளியே ஐயங்காருக்கும் அதே மனநிலை என்பதை அவர் குறுக்கும் நெடுக்குமாக அலைவதை பார்த்து உணர்தேன்.

  10 நிமிடத்தில் திரும்பிய அந்த மனிதர் அதோ அந்த மூலையில் போய் பாருங்க. காம்பௌண்ட் பக்கம் என்றார்.

  நானும் ஏசு நாயகமும் விரைந்து இடுகாட்டின் மூலைக்கு நடந்தோம். அங்கிருந்த ஒரு காயந்த குச்சியை கையில் எடுத்துக் கொண்டேன்.

  ஒவ்வொரு கல்லறையாக பார்த்துக் கொண்டே வந்தோம். பெயர் மறைந்திருந்த கல்லறைகளில் குச்சியை கொண்டு குப்பையையும் தூசியையும் விலக்கி பார்த்தேன். ஏசு நாயகம் அவசரத்தில் இருந்தார்.

  இங்கே தான் எனக்கு நினைவிருக்கு என்றார். அவர் சொன்ன இடத்தில் காம்பௌண்ட் சுவர்.

  இந்த காம்பௌண்ட் சுவர் முன்னாடி இல்லை. இங்க முள்வேலி கூட இல்லை. காலி இடம். இங்கெல்லாம் இத்தனை வீடுகளும் இல்லை அப்போது. நாகையே இத்தனை முன்னேற்றம். சென்னை எப்படி ஆயிருக்கு பாருங்க என்றார்.

  எனக்கு தமிழ்நாடு எத்தனை முன்னேறிவிட்டது என்று அவர் வாயால் தெரிந்துக் கொள்ளும் அவசியம் ஏற்படவில்லை.

  என்ன சார், உங்கப்பாவோட கல்லறை எங்கேன்னு உங்களுக்கு தெரியலைன்னு சொல்றீங்க.

  தம்பி, எனக்கு எங்க அப்பா மேல பெரிய பிடிப்பு இல்லை. அப்புறம் என் வாழ்கையில் நடந்த ஒரு சம்பவத்தாலே அப்பாவும் எனக்கும் சண்டை. அப்புறம் பல கெட்ட பழக்கங்கள். அதனால வருஷாவருஷம் வர்ற பழக்கம் எல்லாம் இல்லை.

  தேடி பார்த்து அலுத்துவிட்டோம்.

  கையில் கிடைத்த புதையல் மீண்டும் தொலைவுக்கு சென்றது போல் இருந்தது.
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 9. #9
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  40,681
  Downloads
  126
  Uploads
  17
  6

  ஒருவேளை நீங்க எந்த பக்கம் புதைச்சீங்க அப்படிங்கறதை மறந்திருப்பீங்க. நான் எல்லா பக்கமும் பார்த்துட்டு வர்றேன் என்று ஒவ்வொரு கல்லறையாக தேடினேன்.
  உச்சி வெயில் நடுமண்டையை சுட்டது. இப்படி கல்லறைகளை தேடி இடுகாட்டில் அலைகிறேன் என்று என் தந்தைக்கு தெரிந்தால் நல்ல அடி விழும். கபடி ஆடி வந்து கால் முட்டியில் மண் இருப்பதை பார்த்தால சின்ன சவுக்கு கழியை கொண்டு மடேர் மடேர் என்று நான்கு அடிவிழும்.

  மு. இருதயராஜ் தோற்றம் 1.1. 1916 மறைவு 3.1. 1978 கண்ணுக்கு பட்டது. சட்டென்று குளிர்ந்தேன். ஏசு நாயகம் இங்கே வாங்க, இங்கே வாங்க என்று மறுபுறம் நின்றிருந்தவரை பார்த்து கத்தினேன்.

  அவர் ஓடி வந்தார். கல்லறையை காட்டினேன். உதடு பிதுக்கினார். எங்க தாத்தா பேரு இசாக்ராஜ். இ. இருதயராஜ். இது அவருடைய கல்லறை இல்லை.

  சோர்ந்து அந்த கல்லறையின் மேலே உட்கார்ந்தேன். பின்புறம் சுட்டது. பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்கும் கேடு கெட்ட மானிடரே கேளீர், கூடு விட்டு ஆவி தான் போயின்பின் யார் தான் அனுபவிப்பாரோ பாவிகளாய் அந்த பணம் என்று பள்ளிநாட்களில் படித்தது அநாவசியமாய் நினைவுக்கு வந்தது. மனதிலும் சுட்டது.

  தம்பி சோர்வடையாதீங்க. எங்க அப்பாவோட சடங்கை செய்தவர் ஃபாதர் தேவசகாயம். அவரை போய் பார்த்தால் அவரால சொல்ல முடியும் என்றார்.

  எழுந்தேன். மெதுவாக வெளி நோக்கி நடந்தேன். அவர் கேர் கேட்கரிடம் நின்று ஃபாதரை எங்கு பார்க்கலாம் என்று கேட்டது காதில் விழுந்தது.

  நான் ஐயங்காரை நோக்கி நடந்தேன். அவர் வெயில் தாங்காமல் எதிர் புறத்தில் இருந்த ஒரு பாயின் வீட்டில் சென்று அமர்ந்திருந்தார்.

  நாகை அருமையான ஊர். இந்திய ஒருமை பாட்டின் சின்னம் என்று சொல்லலாம். ஒரு புறம் நாகூர். முஸ்லீம்கள் பிரதானம். இன்னொரு புறம் வேளாங்கன்னி, அன்னையின் புனித தலம். கிறித்துவர்கள் பிரதானம். இதன் நடுவில் நாகை அம்மன் பிரசித்தம். நாகூர் ஆண்டவருக்கு சந்தனதேர் இழுத்தாலும் நாகையை தாண்டி தான் கூட்டம் போகும். வேளாங்கன்னி செல்லும் கூட்டமும் நாகையை தாண்டி தான். கலவரம் வந்ததாக சரித்திரமே இல்லை.

  பள்ளிக்கூடத்தில் பிள்ளை பல மதத்தவரோடு சேர்ந்து படிக்க அங்கிருந்து நட்பு பெரிதான பிறகு விரோதமாகும் வாய்ப்பு சிறிதானது.

  இப்ப அந்த ஃபாதர் வேளாங்கன்னியில் இருக்கிறார் என்று அவர் சொன்னது காதில் விழுந்தது.

  செய் அல்லது செத்து மடி என்று சொல்லிக் கொண்டேன் ஏதோ சுகந்திரத்திற்கு போராடுபவன் போல.

  கையில் இருந்த அலைபேசியை எடுத்த நண்பனிடம் பேசினேன்.

  டேய் ஒரு பர்ஸனல் வேலை வந்துடுத்து. நான் இரண்டு நாளைக்கு வரமாட்டேன். ஏதாவது முக்கிய வேலை இருந்தா சோர்ஸ் கோட் அனுப்பிடு. சரி பண்ணி அனுப்பறேன் என்றுவிட்டு வைத்தேன்.

  கணினி துறையில் எப்போதும் அலுவலகம் போகவேண்டிய அவசியம் இல்லை. எங்கிருந்தாலும் வேலை செய்யலாம். மென்பொருள் வல்லுனர்களுக்கு இது தனி சலுகை. நாகையில் இணைய தொடர்பு எந்த அளவுக்கு என்று எண்ணவதற்கு பதிலாக வேளாங்கன்னி எப்போது போவோம் என்று மனம் நினைத்தது.

  மூவரும் நேராக ஒரு ஓட்டலுக்கு சென்று மதிய உணவை முடித்தோம். பிறகு வேளாங்கன்னிக்கு பஸ் பிடித்தோம். சுமார் 25 நிமிடத்தில் வேளாங்கன்னியை சென்றைடந்தோம்.

  வழியில் யாரும் எதுவும் பேசவில்லை.

  மாதா கோவிலை சென்று அடைந்தோம். ஐயங்கார் உள்ளே வரமாட்டார் என்று நினைத்தேன். ஆனால் அவர் வந்தார். நான் மாதாவை கையெடுத்து கும்பிட்டேன். அவரும் கைகோர்த்து வணங்கினார். ஏசு நாயகம் மண்டியிட்டு வணங்கினார். நான் என்ன கேட்டேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், ஐயங்கார் என்ன கேட்டார் என்று தெரிந்துக் கொள்ள ஆவலாக இருந்தேன். கேட்டும் விட்டேன்.

  புதையல் கிடைக்கிலேன்னாலும் உனக்கு எதுவும் பிரச்சனை வரக்கூடாதுன்னு வேண்டின்டேன் என்றார்.

  எனக்கு கண்களில் நீர் சட்டென்று வந்தது. பணத்திற்கு எந்த தேவையும் இல்லாத நான் புதையலை தேடி ஓடுகின்றேன். பணத்திற்கு அதிகம் தேவையுள்ள அவர் புதையல் கிடைக்க வேண்டும் என்று வேண்டியிருப்பார் என்று நினைத்த என் சிறு மனதை நொந்துக் கொண்டேன்.

  அவர் கைகளை பிடித்துக் கொண்டேன். ஒன்னும் பயப்படாதீங்க ஐயங்கார். பிரச்சனை வர்ற மாதிரி இருந்தா நாம போயிடுவோம். பணத்துக்காக மட்டும் நான் இதை எடுத்துக்கலை. இது ஒரு சுவாரஸ்யமா இருக்கு. அதுக்காவும் தான் என்று சப்பைகட்டு கட்டினேன். யோசித்து பார்த்ததில் நிஜமும் அது தான் என்றும் உணர்ந்தேன். பணத்தி்ற்கு தேவையே இல்லை எனக்கு. திருப்பராயத்துறையில் பெரிய வீடு. நிலங்கள் எங்களுக்கு.

  தேவசகாயம் அமைதியாக அமர்ந்திருந்தார். பிறகு பேசினார்.

  ஏசு நாயம், ஆண்டவன் உங்களை இங்கு அனுப்பியிருக்கிறார். நான் இன்னும் இரண்டு நாளில் சேவைக்காக பீஹார் போகவேண்டியதிருந்தது.

  கொஞ்சம் வருஷத்துக்கு முன் லாண்ட் சர்வே அலுவலகத்திலிருந்து ஒரு கடுதாசி வந்துச்சு. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பரியல் க்ரௌண்டை தாண்டி நாங்க நிறைய இடம் ஆக்கரமிச்சிருக்கோம்னு சொல்லி. நிலத்துக் சொந்தக்காரர்கள் எல்லாம் புகார் பண்ணதாலே, மறுபடியும் சர்வே பண்ணி இடம் காலி செய்யனும்னு சொன்னாங்க. இது நம்ம வழக்கத்தில் இல்லாதது. இருந்தாலும் நாம் இருக்கற நாட்டோட சட்டம் பெரிசு இல்லையா.

  சுமார் 7 கல்லறைகள் இடுகாட்டு எல்லையை தாண்டி போயிருந்தது. அவங்களோட வாரிசுகளுக்கு கடிதம் எழுதினோம். யாரும் பதில் அனுப்பலை. 30 நாட்கள் காத்திருந்துட்டு இடுகாட்டு சுத்தி காம்பௌண்ட் எழுப்பிட்டோம். அதுக்கப்புறம் அந்த நிலங்களில் வீட்டு சொந்தக்காரங்க வீடு கட்டிக்கிட்டாங்க. அந்த 7 கல்லறைகளோட பட்டியலும் அந்த கல்லறைகள் இருந்த லே அவுட்டும் நான் பத்திரமா எடுத்து வைச்சிருக்கேன். நாளைக்கு நாகைக்கு வரேன். எடுத்து தரேன். நீங்க வேண்டுமானால் அந்த வீட்டு ஓனர்கள் கிட்டே பேசிப்பாருங்க என்றார்.

  நல்லது சாமி. எங்க அப்பாவுக்காக அந்த வீடுகள் அத்தனையும் வாங்க கூட தயாராக இருக்கிறேன் என்றார் சல்லிக்காசு இல்லாத ஏசு நாயகம்.

  சந்தோஷம். நீங்க இப்ப கிளம்புங்க. நாளைக்கு 8 மணிக்கு பரியல் க்ரௌண்டோட ஆபீஸ்ல பார்க்கலாம் என்றுவிட்டு விடைபெற்றார் ஃபாதர்.

  நாங்கள் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் கிளம்பினோம்.
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 10. #10
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  40,681
  Downloads
  126
  Uploads
  17
  7

  இரவு அறைக்குள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

  தம்பி, அப்படி என்னத்தான் அந்த டையரியில் எழுதியிருக்காரு இருதயராஜ் என்று கேட்டார் ஐயங்கார்.

  ஓ. அவருடைய கதை ரொம்ப சுவாரஸ்யம் சார். அப்பாகிட்டே கோவிச்சிகிட்டு அவர் கிட்டே ஒரு லட்சம் கடைசியாக காசு வாங்கிட்டு வீட்டை விட்டு வந்துட்டாரு. பிறகு நாகப்பட்டினத்துல போட் வாங்கி மீன் வியாபாரம் செஞ்சிருக்காரு. மளமளன்னு பணக்காரர் ஆகிட்டாரு. பிறகு மீன் தொழிலோட கடத்தல் விவாகாரம் எல்லாம் செஞ்சிருக்காரு. நிறைய பணமும் சம்பாதிச்சுட்டாரு.

  ஓ அப்படியா.

  நடுவிலே ஒரு சமயம் அவரு அப்பாவை போய் பார்த்துட்டு 1 லட்சத்துக்கு 5 லட்சமா வெச்சிக்கோன்னு பணத்தை முகத்திலே தூக்கி எறிஞ்சுட்டு வந்துட்டாரு. அவரு துக்கத்தில படுத்த படுக்கையாகிட்டாரு.

  அடப்பாவமே.

  அப்புறம் ஒரு நாள் அவரோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு போய் பாத்திருக்காரு. அவரும் பெரிய பணக்காரர் தான். அப்ப தான் அவரை ஒரு அறைக்கு கூட்டிக்கிட்டு போய் ஒரு பெட்டியை திறந்து புதையலை காட்டியிருக்காரு. அப்படியே அவரு அப்பா காதுல விழுந்து அழுதிருக்காரு இருதய ராஜ். அப்புறம் இந்த கள்ளக்கடத்தல் வேலையெல்லாம் விட்டுட்டு வெறும் மீன் தொழில் மட்டும் பார்த்துகிட்டு அவரு அப்பாவோடவே இருந்துட்டாரு. ரொம்ப கடவுள் ஈடுபாடும் வந்துடுச்சி அவருக்கு.

  ஏசு நாயகத்தை பத்தி என்ன எழுதியிருக்காரு.

  நெறைய பக்கங்கள் கிடைக்கலை ஐயங்கார். கிடைச்ச வரையிலும் ஏசு நாயகமும் நல்ல மனுஷனாக தான் இருந்திருக்காரு. நல்லா படிச்சவரு. அவரும் அப்பாவோட சண்டைபோட்டுகிட்டு போனவர் தான். அவரு ஒரு இந்து பொண்ணை காதலிச்சிருக்காரு. அதை இருதய ராஜ் ஏத்துக்கலை. வீட்டை விட்டு வெளியே போயிட்டாரு. வீட்டை விட்டு போனா சொத்தில சல்லிக் காசு கிடைக்காதுன்னு சொல்லிட்டாரு. அப்படி சொன்னாரே தவிர்த்து அவருக்கு அந்த எண்ணம் ஏதும் இல்லை.

  ஆனா இவருதான் கோவிச்சிகிட்டு வீட்டை விட்டு வந்துட்டாரு. அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்திச்சு. அதுக்கப்புறம் தான் தெரிஞ்சு அது இவருக்கு பிறந்த குழந்தையில்லைன்னு. பெண்டாட்டி புள்ளைகளை காரைக்காலில் விட்டுட்டு மனசு ஓடிஞ்சி போயி ஊர்ஊரா சுத்தினாரு. குடி, ரேஸ்ஸூன்னு எல்லாத்தையும் பார்த்தாரு. மீன் வியாபாரத்தை வித்தாரு. போட்டுகளை வித்தாரு. நிலபுலங்களை வித்தாரு. குடிச்சி அழிச்சாரு. அவரோட மனைவி இந்த வீட்டு மேல சொந்தம் கொண்டாடி கேசு போட்டாங்க. வீட்டு விஷயத்தை கோர்டுல சொன்னா அசிங்கம். அதனால் கோர்டுல வேற மாதிரி சண்டை போட்டுகிட்டு இருக்காங்க.

  அடப்பாவமே. இவங்க குடும்பத்தில எல்லாரும் அப்பாவோட சண்டை போட்டு ஓடறவங்களா.

  அப்பா பேச்சை கேட்காம கல்யாணம் பண்ணிக்கிட்டோமேன்னு இந்த மனுஷன் அவர் அப்பாவை பாக்கவே வரலை. செத்தபிறகு தான் வந்திருக்காரு. அவன் வந்தா இந்த புதையலை கொடுப்பேன்னு பல இடத்தில எழுதியிருக்காரு இருதய ராஜ். அவர் சொத்து பூராவும் ஏசு நாயத்தின் பேர்ல தான் எழுதி வச்சிருக்காரு.

  செத்தப்போ வந்த ஏசு நாயகம் இந்த வீட்டை வாடகைக்குவிட்டுட்டு தன் பொருளை எல்லாம் எடுத்துகிட்டு சென்னைக்கு போயிட்டாரு. அங்கே ஏதோ சின்னசின்ன வேலைகள் செஞ்சிருக்காரு. கடைசி ரெண்டு வருஷமா உங்க வீட்டில இருந்திருக்காரு.

  அப்ப இந்த கல்லறை பரிபோறன விஷயம் அவருக்கு தெரியலையா.

  கடிதாசு வந்திருக்கும். இவரு போயிருக்க மாட்டாரு. குடி போதையிலே சதாசர்வகாலமும் இருந்தா.

  இவ்வாறாக கதைகள் பேசிவிட்டு உறங்கச் சென்றாம். நாளைக்கு கிடைக்குமா புதையல் இல்லை இன்னும் எத்தனை நாள் ஆகும் என்று புரியாத குழப்பத்தில் இருந்தேன்.
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 11. #11
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  40,681
  Downloads
  126
  Uploads
  17
  8

  சொன்னபடியே ஃபாதர் எட்டு மணிக்கு வந்துவிட்டார். நாங்களும் போய் நின்றோம். அவர் பழைய காகிதங்களை தேடி இரண்டு வரைபடங்களை எடுத்து வந்தார்.

  ஒன்றில் கல்லறைகளின் பெயரும், இடமும் வரைந்து விவரம் எழுதப்பட்டிருந்தது. இன்னொன்றில் இடுகாட்டின் நீள அகல விவரங்கள் எந்த பகுதியில் இந்த ஆக்ரமிப்பு கல்லறைகள் இருந்தன என்ற விவரங்களும் இருந்தது.

  சார் இதை ஒரு போட்டோகாப்பி எடுத்துட்டு நாங்க திருப்பி தர்றோம் என்றேன்.

  அவசியம். ஆனா மறக்காம கொண்டு வந்து கொடுத்துடுங்க. உங்களை மாதிரி உறவினர்கள் பல ஆண்டுகளுக்கு அப்புறம் வந்து கேட்டா எங்ககிட்டே ரிக்கார்டு இருக்கனுமில்லையா.

  உங்க சேவையை மறக்க மாட்டோம் என்று கூறினார் ஏசு நாயகம்.

  நாங்கள் அவரிடம் விடைப்பெற்று பெரிய தெருவுக்கு வந்து போட்டோ காப்பி எடுத்து அவர்களிடம் ஒரிஜினல் திருப்பி தந்தோம்.

  வரும் வழியில் ஒரு ஹார்ட்வேர் கடைக்குள் நுழைந்து ஒரு டேப் வாங்கிக் கொண்டேன். பெரிய காலண்டரில் கிருஷ்ணபரமாத்மா அர்ஜூனனுக்கு கீதை சொல்லிக் கொண்டிருந்தார். நீ வரும்போது என்ன கொண்டு வந்தாய், போகும் போது என்ன கொண்டு செல்லப்போகிறாய். என்ன எடுத்தாயோ அதை இங்கிருந்தே எடுத்தாய். என்ன விட்டுச் செல்கிறாயோ அதை இங்கே விட்டுச் செல்கிறாய். எது உனது என்று அழுகிறாய். மனதை நெருடியது. மனம் சொல்லும் பேச்சை கேட்டால் பிரச்சனை இருக்காது இவ்வுலகில். நானும் கேட்கவில்லை.

  மீண்டும் இடுகாட்டுக்கு சென்றோம். அதே வெயில். ஆனால் இலக்கு அருகாமையில் என்று ஒரு மகிழ்ச்சி. பொறுமையாக நானும் அவரும் இடுகாட்டின் இடது மூலையை அளந்தோம். ஐயங்கார் வெளியேதான் இன்றும். பிறகு அந்த சரியான இடம் வந்ததும் ஒரு செங்கல்லை எடுத்து சுவற்றில் குறியிட்டேன்.

  அதற்கு அப்பால் ஒரு வீடு. பால் சிமெண்ட் போட்டிருந்தார்கள் வெளி சுவரில். வீட்டின் பின்புறம் இடுகாட்டை நோக்கியிருந்தது.

  என்னுடைய கணக்குப்படி வீட்டின் கொள்ளைபுறத்தில் தான் இருதயராஜின் கல்லறை வந்திருக்கவேண்டும். ஆக வீட்டின் அடிக்கால் வந்து இடித்திருக்க வாய்ப்பில்லை. சுவரை ஏறி குதிக்க தோன்றினாலும் ஆவலை அடக்கிக் கொண்டேன்.

  இந்த வீடு தான் ஏசு நாயகம். வாங்க போய் பார்க்கலாம் என்றேன்.

  இடுகாட்டை விட்டு வெளியே வந்து தெருமூலம் சுற்றிக் கொண்டு அந்த வீட்டை சென்று அடைந்தோம்.

  பயிற்சிக்காக அமெரிக்கா, லண்டன் போயிருக்கும் போதெல்லாம் இடுகாட்டை சுற்றி மக்கள் எப்படியிருக்க முடியும் என்று வியப்பேன். இந்த சினிமாவில் வரும் வெள்ளை காலில்லாத உருவங்களின் பயம் இல்லையா இவர்களுக்கு என்று. அது நம் நாட்டிலும் நடப்பதை கண்டு மேலும் வியந்தேன். இட தட்டுப்பாடா இல்லை மக்களுக்கு தைரியம் அதிகமாகிவிட்டதா என்று நினைத்தேன். அது சரி, சுடுகாட்டு பக்கத்தில் இருந்தால் தானே பிரச்சனை. புகை, நாற்றம் வரும். இது இடுகாட்டுத்தானே. நிரந்தரமாக உறங்கிக் கொண்டிருக்கும் பிணங்களின் அருகில் தற்காலிகமாக உறங்கும் பிணங்கள். சரிதான் என்று மனதில் நினைத்தேன். யாரிடமும் சொல்லவில்லை.


  வீடு காலியாக இருந்தது போல் இருந்தது. யாரும் இல்லை. காலிங் பெல் தட்டியது தான் மிச்சம். ஆனால் யாரோ இருந்திருக்கிறார்கள் என்றது பராமரிக்கப்பட்ட மரங்களும் அங்கிருந்த கால் சுவடுகளும். வீட்டின் முனையில் சிலுவை. ஆக வீட்டின் சொந்தக்காரரும் கிறிஸ்துவர் தான்.

  என்ன செய்யலாம் என யோசிக்கும் போதே, ஏசு நாயம் அருகில் இருந்த வீட்டுக்குள் நுழைந்து இந்த வீட்டின் சொந்தக்காரர் யார் என்ன என்ற விவரங்களை கேட்டு வந்தார்.

  இந்த வீட்டு சொந்தக்காரர் எனக்கு தெரிஞ்சவர் தான். வாங்க அவர்கிட்டே போய் பேசி பார்க்கலாம் என்றார்.

  அங்கிருந்து இன்னுமொரு 15 நிமிட நடையில் ஒரு வீடு. உள்ளே சென்றோம். அனைவரையும் அமரச் சொல்லி குடிக்க நீர் தந்தார்கள்.

  ஏசு நாயகம், எங்க அப்பா ........... என்று பேசத்தொடங்கினார்.

  நான் அவரை சட்டென்று வழிமறித்து பேசினேன். சார், நான் ஒரு கதாசிரியன். சென்னையிலேர்ந்து வர்றேன். ஏசு நாயகம் சார், ஐயங்கார் சார் வீட்டில் தான் குடியிருந்தார். அதனால இரண்டு பேருக்கும் பழக்கம். இங்க கடற்கரை பக்கமா வீடு வேண்டும். ஒரு மாசம் உட்கார்ந்து சினிமாவுக்காக கதை எழுதனும். அதனால வீடு தேடினப்ப உங்க வீடு பார்த்தோம். பிடிச்சிருந்தது. வாடகைக்கு விடமுடியுமா என்றேன்.

  ஐயங்காரும் ஏசு நாயகமும் நான் சரளமாய் புளுகுவதை பார்த்து வாய் பிளந்து நின்றனர்.

  அப்பான்னு ஏதோ சொன்னாரே என்று ரொம்ப ஓவர் ஸ்மார்டாக ஒரு கேள்வி கேட்டார் அந்த வீட்டின் உரிமையாளர்.

  அதுவா எங்கப்பாவும் உங்கப்பாவும் நல்ல பழக்கம். உங்களுக்கு தெரியுமா என்று சமாளித்தார் ஏசு நாயகம். அட்ராசக்கை என்று நினைத்துக் கொண்டேன்.

  வீடு காலியாதான் இருக்கு. வாடகை விடலாம். என்று இழுத்தார்.

  சார் நீங்க சினிமாகாரங்கன்னு பயப்படவேண்டாம். நான் இருக்கப்போறது ஒரு மாசம் தான், ஆனால் இதோ 3000 ரூபாய். மூன்று மாசத்திற்கு அட்வான்ஸ். போகும்போது உங்ககிட்டே 2000 ரூபாய் வாங்கிக்கறேன். போதுமா என்றேன். எதற்கும் தேவைப்படும் என்று 10,000 ரூபாய் ஏடிஎம்மிலிருந்து எடுத்து வந்திருந்தேன். 5000 மேல் எடுக்க முடியாது என்பதால் இரண்டு வங்கி கணக்குகள் வைத்திருந்தேன்.

  அடடே அதுக்காக சொல்லலை. சார் நமக்கு தெரிஞ்சவருதான் என்று ஏசு நாயகத்தை காட்டி சொல்லவிட்டு உள்ளே சென்று சாவி எடுத்து வந்தார். இத்தனை சுலபமாக வேலை நடக்கிறதே என்று ஒரே சந்தோஷம் எனக்கு.

  திரும்பி வரும் வழியில் சார் கடப்பாறை, மண்வெட்டி எல்லாம் தேவை என்றேன் ஏசு நாயகத்தை பார்த்து.

  அதையெல்லாம் நான் எடுத்துகிட்டு ராத்திரி வர்றேன் என்றார்.

  எதுக்கு என்றார் ஐயங்கார்.

  தோண்டனுமே என்றேன்.

  பெருமாளே என்றார். பிறகு அமைதியானார். ஓட்டலுக்கு வந்ததும், நான் ஊருக்கு ஒரு எட்டு போயிட்டு வந்திடறனே. மாமி தனியாக கடையையும் வீட்டையும் பாத்துக்க முடியாது என்றார் ஐயங்கார்.

  கல்லறை தோண்டும் படலத்தில் அவரை சேர்ப்பதாக நான் இல்லை. இருந்தாலும் அவர் போவது என்னவோ போலிருந்தது. ஆனால் நான் ஒன்றும் சொல்லவில்லை.

  சரி நீங்க ஊருக்கு போங்க. திரும்ப வேண்டிய அவசியம் இருக்காது. இரண்டு நாள்ல புதையலோடு ஊருக்கு வர்றேன். நீங்க தோண்டும்போது இல்லாட்டாலும் கணக்கு கரெக்டா இருக்கும். நீங்க 33 பர்சென்ட் பார்ட்னர் தான் என்றேன் சிரித்துக் கொண்டே.

  அடே நீ சொல்லனுமா. உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்குப்பா என்று சொன்னார். பிறகு அவரை பஸ் ஏற்றிவிட்டு, ஊருக்கு போனதும் போன் பண்ணுங்க என்று என் செல்பேசி எண்ணை கொடுத்தேன்.

  அவர் போனதும் காபி சாப்பிட்டுவிட்டு அறையை காலி செய்துக் கொண்டு என் புது வாடகை வீட்டுக்கு சென்று ஏசு நாயகத்திற்காக காத்திருந்தேன்.
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 12. #12
  இளம் புயல் பண்பட்டவர் gayathri.jagannathan's Avatar
  Join Date
  13 Dec 2006
  Location
  Bangalore
  Posts
  273
  Post Thanks / Like
  iCash Credits
  3,825
  Downloads
  9
  Uploads
  0
  மோகன் அவர்களே
  கதை மிகவும் சுவாரசியமாக செல்கின்றது.... ஆரம்பமே அட்டகாசம்... விறு விறு நடை அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்...
  தமிழபிமானி
  ஜெ.காயத்ரி.

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •