Page 1 of 8 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 95

Thread: ரஷ்யாகாரி காதல்

                  
   
   
 1. #1
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0

  Thumbs up ரஷ்யாகாரி காதல்

  நண்பர்களே, தோழிகளே
  சுவையான சம்பவங்கள் தலைப்பை இப்போதுதான் தொடுகிறேன். என் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சி ஒன்றை உங்களுக்கு பகிர்ந்திட விரும்புகிறேன்

  என்னைப்பற்றி அவ்வளவாக அறிமுகம் தேவையில்லை. சுமார் 3 வருடங்களுக்கு முன்பு நானும் என் தந்தையும் தொழில் தொடங்கினோம். அப்போது வீட்டிலேயே தொழில் ஆரம்பித்துவிட்டேன். தொலைபேசி இணைப்பு என் வீட்டில் தொழில் தொடங்குவதற்கு முன்பிருந்தே இருக்கிறது. அதன் வழியாக இணையம் கனெக்சன் வாங்கினேன்..

  இணைய கனெக்சனை அப்பொதெல்லாம் அரட்டை அடிப்பதற்கும், மெயில் பார்ப்பதற்கும் மட்டுமேதான் உபயோகித்தேன். வேறெதுவும் தெரியாது, இப்படியிருக்கையில் அரட்டை அடிக்கும் போது பொதுவாக நாங்கெல்லாம் பெண்களையே தேடுவோம். நானும் அப்படித்தான். ஒருநாள் அரட்டையில் ஒரு பெண்ணை பிடித்தேன். எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கும். இந்த ID யில் இருப்பது பெண்ணா இல்லை ஆணா என்று..
  ஆனால் அது நிச்சயம் பெண்தான் ( உறுதிபடுத்தியது எப்படி? எனக்கே தெரியவில்லை. நேரில் பார்த்தபோது.. ) அவள் பெயர் நடாஸா என்றும் ரஷ்யாவை சேர்ந்தவள் என்றும் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டாள்..

  தினமும் இரவு நேரம் அவள் அரட்டைக்கு வருவாள். என்னோடு அதிகம் பேசுவாள்.. என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றி கேட்பாள். இத்தனைக்கும் என்னைவிட அவளுக்கு ஆங்கில அறிவு அதிகம். . ( ஓரளவு நல்லாவே பேசுவேன்பா) இருந்தாலும் அவள் சகித்துக்கொண்டாள்.. தமிழ்நாட்டு உணவு வகைகளை செய்வது எப்படி என்று நிறைய சொல்லிக் கொடுத்தேன். கவிதைகளின் அர்த்தங்களை ஓரளவு ஆங்கிலப்படுத்தி சொன்னேன். அவளும் கவிதை எழுதுவாள்.
  ( என்னுடைய மெயிலில் அவள் கவிதை இருக்கும் என்று நினைக்கிறேன் ).

  ஒருநாள் முகவரி பரிமாறிக்கொண்டோம். முகமும் பார்த்துக்கொண்டோம். என் தொலைப்பேசி எண் கேட்டாள். கொடுத்தேன், அவளும் அப்படியேதான் கொடுத்தாள். ( ரெண்டுபேருமே பேசிக்கலைங்கரது அப்பறம்). எங்கள் நட்பு நீடித்தது..

  கிட்டத்தட்ட 3 மாதங்களில் 100 மெயில்கள் அனுப்பினாள். ஒவ்வொன்றையும் படிக்கவே அரைமணிநேரம் ஆகிவிடும்.. பதில் மெயில் எழுதவே எனக்கு ஒருமணிநேரம் ஆகிவிடும்.
  இவ்வாறு இருக்கையில் ஒருநாள் எனக்கு அந்த மெயில் கிடைத்தது.. அவள் என்னை மணம் செய்யப் போவதாக சொன்னாள். வீட்டாரின் அநுமதியோடு.. எனக்கு ஷாக் ஆகிவிட்டது.. இருப்பினும் விளையாடுகிறாள் என்று எண்ணி, பதில் எழுதினேன், நல்லவேளை காதல் கீதல் என்று எழுதாமல் எப்பொழுதும் போல எழுதினேன்.. அடுத்த மெயிலிலேயே ஏன் காதலுக்கு பதிலில்லை என்று எழுதியிருந்தாள்.. அதற்கு அது முடியாது; எனக்கும் உனக்கும் வயது பற்றாது; நீ வேற நாடு நானும் வேற நாடு ; மொழி மதம் என எல்லா வேறுபாடுகளையும் பட்டியலிட்டேன்.

  அடுத்த மெயில் எனக்கு ஒற்றை வரிகளில் வந்தது.

  நான் முன்பு அவளிடம் அரட்டை அடிக்கும்போது பாரதியாரைப் பற்றி பெருமையாகச் சொல்லுவேன். ஓரிடத்தில்
  "கவிதை எழுதுவதால் மட்டும் அவன் கவிஞன் ஆவதில்லை; அவன் எழுதிய கவிதைபோல் நடப்பவனே கவிஞன் " என பாரதியார் சொன்னதை அவளிட சொல்லியிருக்கிறேன். நானும் அதன்படிதான் நடக்கிறேனென்றும் சொன்னேன் என் கவிதைகளை ஒன்று ," இனம், மதம், மொழி, விழி ஆகியவற்றை கடந்து வருவதே காதல்" என்று சொல்லியிருந்தேன்..

  அதை அவள் மேற்கோள் காட்டினாள்..

  நான் உடனே அரட்டை அடிப்பதையும் மெயில் அனுப்புவதையும் நிறுத்திவிட்டேன்..

  சுமார் 1 மாத காலத்தில் 20 மெயில்கள் அவளிடமிருந்து வந்தன.. எதற்கும் பதில் அனுப்பவில்லை.

  ஒருநாள் வெள்ளிக் கிழமை எனக்கு சென்னையிலிருந்து போன்... நல்லவேளையாக நான் ரிசீவரை எடுத்தேன்,, மறுமுனையில் நடாஸா...

  எப்படியிருக்கும் யோசித்துப் பாருங்கள்.. பதற்றம் உண்டாகிவிட்டது.. என் அம்மாவுக்கு மட்டும் இது தெரிந்தால் அவ்வளவுதான். பின்னி எடுத்துவிடுவார்கள்..
  அவள் ஏதோ ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் உடனடியாக் சென்னை வரவேண்டும் என்றும் சொன்னாள்... நானோ இருக்கிற வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வரமுடியாதென்றும், உடனே கோவைக்கு வரவேண்டும் என்றும் சொன்னேன்.

  மறுநாளே அதாவது சனிக்கிழமை வந்துவிட்டாள்.. எந்நேரமும் போனுக்கு அடியிலேயே உட்கார்ந்திருந்தேன்.. ( அப்போது கைப்பேசியில்லை) போன் வந்ததும் கோவை கிளம்பினேன்.. எனக்கு உடலெல்லாம் பதற்றம். கோவையில் ஏதோ ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தாள். கைகால்கள் உதறலோடு முதல் முறையாக அவளை நேரில் பார்த்தேன்.. அதிலும் அவள் எனக்காகவே வந்திருந்தாள்..

  அவளிடம் என்னுடைய மறுப்பை சொன்னேன். அவள் அதற்கு உடன்படவேயில்லை. எப்படியாவது மணம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடே இருந்தாள். இத்தனை தூரம் தள்ளி வந்திருக்கும் என்னை தள்ளி வைக்காதே என மன்றாடினாள், எனக்கு அழுகையே வந்துவிட்டது. அவள் அறையில் உட்கார்ந்து சிறிது நேரம் அழுதேன்..

  அப்பொழுதும் அவள் மனம் மாறவேயில்லை. இதற்கெல்லாம் இடையில் மொழிப் பிரச்சனை வேறு... அவளின் ஆங்கிலமே ஒருமாதிரியாக இருந்தது, பல விஷயங்கள் அவள் சொன்னது புரியவேயில்லை..

  ஒருவாறு அவளை அனுப்பி விடுவதற்க்காகவே காதலை ஒப்புக்கொள்வதாக சொன்னேன். அவள் இன்னும் இரண்டு வாரங்கள் தங்கியிருந்துதான் போக முடியும் அதனால் வீட்டில் தங்கவேண்டினாள்... அய்யோ!! என் அம்மா அவ்வளவுதான் ருத்திரதாண்டவம் ஆடிவிடுவார் என்று சொல்ல, அவள் சுற்றுலா பயணிகள் விசாவில் வந்ததால் இந்தியாவை சுற்றிப் பார்த்துவிட்டு பின் செல்வேன் என்றாள். அதுவரையிலும் நிம்மதி..

  அடுத்து பிறந்தது துன்பம்

  என்னையும் அவளோடு அழைத்தாள்.. நான் மறுக்கவே மீண்டும் முருங்கைமரத்தில் ஏறிக்கொண்டாள்... பின் ஒரு வழியாக சமாதானம் பேசி அனுப்பிவைத்தேன்.. இந்த சம்பாஷணைகள் முடியவே இரவு ஆகிவிட்டது..

  அவள் ஊருக்குச் சென்று எனக்கு மெயில் அனுப்பினாள் (சுமார் ஒருமாதமிருக்கும்).. ஏனோ தெரியவில்லை. காதல் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.. எனக்கும் நிம்மதி.

  அதில் விட்டதுதான்,, இப்பொழுதெல்லாம் அரட்டையே அடிப்பதில்லை

  (பிகு: நண்பர்கள் யாராவது கேட்டீர்களேயானால் அவளின் திருமுகத்தைக் காட்ட விரும்புகிறேன் கூடவே அவள் கடிதமும்.. )
  Last edited by ஆதவா; 25-12-2006 at 04:30 PM.
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  56,107
  Downloads
  4
  Uploads
  0
  அந்தரங்கம் புனிதமானது..
  ஆகவே பெயர், படம் வேண்டாமே ஆதவா..

  பல பாடங்கள் இந்த அனுபவத்தில் - பிறர் கற்க..
  பகிர்ந்தமைக்கு நன்றி...
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by ilasu View Post
  அந்தரங்கம் புனிதமானது..
  ஆகவே பெயர், படம் வேண்டாமே ஆதவா..

  பல பாடங்கள் இந்த அனுபவத்தில் - பிறர் கற்க..
  பகிர்ந்தமைக்கு நன்றி...
  நன்றி இளசு அவர்களே!!!
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 4. #4
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
  Join Date
  16 Jan 2004
  Posts
  10,688
  Post Thanks / Like
  iCash Credits
  25,384
  Downloads
  10
  Uploads
  0
  ஆதவன் அவர்களே!

  நான் சொல்வதை தவறாக நினைக்க வேண்டாம்.

  இளசு அண்ணா சொன்னதை தான் நானும் சொல்கிறேன்.

  நம்ம அந்தரங்கமான விசயங்களை வெளியே சொல்லக்கூடாது, இன்று இல்லை என்றாலும் ஒரு நாள் அதுவே நமக்கு துன்பம் தரும் விசயமாக மாறிவிடும். நீங்க இப்படி பகிரங்கமாக இதை சொல்லியிருப்பது, அவரது நட்பை களங்கப்படுத்துவதாக இருக்குது, மேலும் புகைப்படம் கொடுக்க நினைப்பது மிகப் பெரிய தவறு.

  சில சமயம், இது போன்றவை நாம் வெளியே சொல்வதாக நமக்கு புகழ் கிடைக்கும், ஹீரோ மாதிரியான ஒரு இமேஜ் கிடைக்கும் என்று நம் மனசு சொல்லும், என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். அது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எழுதுங்கள். முடிந்தால் இப்பதிவை நீக்க இளசு அண்ணாவிடம் சொல்லுங்க.

  உங்க நலம் விரும்பும் நண்பன்,
  பரஞ்சோதி
  Last edited by பரஞ்சோதி; 27-12-2006 at 05:02 AM.
  பரஞ்சோதி


 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
  Join Date
  01 Mar 2006
  Location
  கொழும்பு
  Posts
  3,557
  Post Thanks / Like
  iCash Credits
  9,648
  Downloads
  60
  Uploads
  24
  Quote Originally Posted by ilasu View Post
  அந்தரங்கம் புனிதமானது..
  ஆகவே பெயர், படம் வேண்டாமே ஆதவா..

  பல பாடங்கள் இந்த அனுபவத்தில் - பிறர் கற்க..
  பகிர்ந்தமைக்கு நன்றி...
  நிச்சயம்!
  தப்பாக நினைக்காதீங்க!! உங்களை நம்பி அவர் அனுப்பிய படத்தை அப்படி செய்வது அவ்வளவு நல்லதல்ல!!

 6. #6
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  உங்கள் எல்லாருக்கும் என் முதற்கண் வணக்கம்...

  இது நடந்து மூன்று வருடங்களுக்கும் மேலாகிறது.. இக்காலத்தில் அவள் என்னை ஒருமுறைகூட அல்லது ஒரு மெயில் கூட போடவில்லை.. சுத்தமாக மறந்திருக்கக் கூடும்..

  யாவருக்கும் இதில் பாதிப்பில்லை என்றறிந்துதான் இங்கே வெளியிட்டேன்.. என்னுள் பல அந்தரங்கங்கள்..... சில சொல்லத் தகுந்தவை. சில மறைக்கத் தகுந்தவை...

  நிச்சயமாக படங்களை வெளியிட மாட்டேன்...

  எனினும் பதில் அளித்த நண்பர்களுக்கு நன்றி...
  Last edited by ஆதவா; 28-12-2006 at 04:03 PM.
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 7. #7
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  34,827
  Downloads
  15
  Uploads
  4
  ஆதவா இது மாதிரி கதை கேட்டிருக்கேன்.. இந்த அனுபவம் வித்தியாசமாக உள்ளது.
  ----------
  தைவானில் இருக்கும்போது, நானும் இப்படி நண்பர்களை பிடிக்க போய்.. சாட் பண்ணி போன் நம்பர் ஒரு பெங்களூர் பெண்ணுக்கு கொடுத்தேன்..

  இரவில் போன் கால் வந்தது. என்னன்னு கேட்டா...

  "எங்க பெற்றோருக்கு சம்மதம். உங்க அம்மா கிட்ட சொல்லிட்டிங்களான்னு" அவள்
  "என்னத்த சொல்லுறது" நான்
  " என்னை பற்றி" அவள்
  "உன்னைப்பற்றியா!! எதுக்கு அவங்க கிட்ட சொல்லணும்" நான்
  "இல்ல நம்ம கல்யாண விசயம் பற்றி" அவள்
  "என்னது கல்யாணமா... நான் சும்மா நட்பு தான் கேட்டேன். ஈமெயில் பாரு..." என்று சொல்லி போனை துண்டித்தேன்.

  பிறகு ஈமெயில் சமாளிப்பு கடிதம் எழுதி தப்பித்தேன்.

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
  Join Date
  15 Dec 2006
  Location
  சென்னை
  Posts
  4,771
  Post Thanks / Like
  iCash Credits
  32,572
  Downloads
  26
  Uploads
  1
  ஆஹா.. நிறைய இரகசியங்கள் வெளியே வரும் போல இந்த திரியில...
  Email: arpudam79@gmail.com
  Web: www.nisiyas.blogspot.com
  Web: www.shenisi.blogspot.com

  கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
  __________________________________________________

  என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

 9. #9
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  ஹி ஹி எல்லாம் நம்ம வேலைதான்......
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 10. #10
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
  Join Date
  20 Dec 2005
  Location
  மும்பை
  Posts
  3,551
  Post Thanks / Like
  iCash Credits
  32,906
  Downloads
  288
  Uploads
  27
  Quote Originally Posted by ஆதவா View Post
  ஹி ஹி எல்லாம் நம்ம வேலைதான்......
  ஆதவன் அது என்ன location: காதலியின் கல்லறை?? பிரதீப்புக்கு விளக்கம் தேவையாம்
  சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

 11. #11
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by sarcharan View Post
  ஆதவன் அது என்ன location: காதலியின் கல்லறை?? பிரதீப்புக்கு விளக்கம் தேவையாம்
  என் காதலும் காதலியும் கல்லறையில் இருக்கக் கூடாதா?

  இன்று காதலின் புனிதமான சின்னமாகக் கருதப்படும் தாஜ்மஹால் கூட கல்லறைதானே!!!

  காதலின் கடைசி நிலை சாதல் எனச் சொன்ன கவிஞர்கள் பலர்.. அதிலும் மேலே கல்லறை ஒன்று இருப்பதை மறந்துபோனார்கள்.

  எது எப்படியோ.. செத்துப்போன காதலியின் கல்லறையில் காவலாக காத்திருக்கிறேன்.. மீண்டும் அவள் உயிர்த்தெழ...
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 12. #12
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
  Join Date
  20 Dec 2005
  Location
  மும்பை
  Posts
  3,551
  Post Thanks / Like
  iCash Credits
  32,906
  Downloads
  288
  Uploads
  27
  Quote Originally Posted by ஆதவா View Post
  என் காதலும் காதலியும் கல்லறையில் இருக்கக் கூடாதா?
  எது எப்படியோ.. செத்துப்போன காதலியின் கல்லறையில் காவலாக காத்திருக்கிறேன்.. மீண்டும் அவள் உயிர்த்தெழ...

  ஷாஜகான்....
  சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

Page 1 of 8 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •