Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 25

Thread: மனதோடு மழைக்காலம்!

                  
   
   
 1. #1
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
  Join Date
  27 Jul 2005
  Location
  கனடா
  Posts
  1,999
  Post Thanks / Like
  iCash Credits
  29,749
  Downloads
  53
  Uploads
  5

  மனதோடு மழைக்காலம்!

  நிஜமாதான் சொல்றீங்களாப்பா!..... சந்தேகத்துடனே அவன் கண்களை உற்று நோக்கினாள் திவ்யா.

  ஆமா! திவ்யா! என்னை மன்னிச்சுடு! நான் செஞ்சது எல்லாம் தப்பு அப்படின்னு உன்கிட்ட மன்னிப்பு கேட்கறதுக்காக சொல்லலை. நீ இப்படி ஒன்னைப் பண்ணிட்டு வந்து என் கிட்ட சொல்லி இருந்தா அதை நான் எப்படி எடுத்துப்பேன்னும் எனக்குத் தெரியாது. ஆனா உன்னளவுக்கு அமைதியா கேட்டுக் கிட்டு உட்கார்ந்து கிட்டு இருக்க மாட்டேன். இதுக்குக் காரணம் நான் ஆம்பளைன்னு திமிர் இல்லை. உன்னளவுக்கு என் மனசு பக்குவப் படலை திவ்யா. என்னைப் புரிஞ்சுக்கோ! அரவிந்த் அடுக்கிக் கொண்டே போக திவ்யாவின் முகம் கலவரப் பட்டுக் கொண்டே போனது!

  அமைதியாக கடலில் எழும் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா! அவன் நினைவலைகளும் கடலலைகள் போல எழுந்து அடங்கின.

  ரொம்பப் பிடிக்குமா? திவ்யா மெளனம் கலைத்தாள்.

  ஹ்ம்ம்

  அவங்களுக்குமா?

  ஆமா

  அப்புறம் ஏம்பா! என்னாச்சு?

  வீட்ல ஒத்துக்கலை திவ்யா! வேற இனம்! பொருளாதார நெருக்கடி! வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடாம காலேஜ்ல அப்பா காசில படிச்சப்போ இதெல்லாம் தெரியலை. வெளியே வந்து ஒரு வருசமா வேலை கிடைக்கலை. ஏறு வெயில் எப்படி நேரம் ஆக ஆகச் சுடும், அப்படிச் சுரீர்னு நிதர்சனம் சுட ஆரம்பிச்சிருச்சு திவ்யா! பொண்ணுக்கு வயசாகிட்டே போறதுன்னு அவங்க வீட்ல சொந்தத்ல மாப்பிள்ளையைப் பார்த்து கட்டி வச்சிட்டாங்க.

  அவங்க ஒண்ணுமே சொல்லலையா?

  போராடினோம் திவ்யா! முடியலை. ப்ச்ச்ச்! வாழ்க்கையோட சவால்கட்கு முன்னால் காதல் ஜஸ்ட் இல்யூஷன் தானே!

  அதுக்கப் புறம் பார்த்தீங்களா?

  இல்லை! கல்யாணம் முடிஞ்ச கையோட யு.எஸ். போயிட்டதா கேள்விப்பட்டேன். அவளுக்கு கல்யாணம் முடிஞ்சதுக்கப் புறம் நான் படிச்ச காலேஜ் பக்கமே போகலை! அவமானம். காதல் தோல்வி, வேலை கிடைக்கலை! டிபெண்டண்ட் சன் வேற! கண்கள் அவனையறியாமலே கலங்கின!

  சாரிப்பா! மனசுக்கு கஸ்டமாயிருக்கு!

  பரவாயில்லை! திவ்யா. காலம் தான் எல்லாக் காயத்துக்கும் நல்ல மருந்தாச்சே!

  அப்போ அவங்க நினைப்பே இப்ப உங்களுக்கு வராதா??

  எப்போவாவது வர்றது உண்டு அதோ அந்த அலைகள் போல! எழும்! விழும்!. முதல் தடவை கடலைப் பார்த்தால் இருக்கிற எக்சைட்மெண்ட் கொஞ்ச நாள்ல போயிறதில்லையா? அது போலத்தான் எல்லாம் அடங்கிப் போயாச்சு! இப்போவும் நல்லா யோசிச்சுக்கோ திவ்யா! நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க முழு மனசோட சம்மதிக்கறியா?

  எஸ்! அரவிந்த். ஜஸ்ட் பீ பிராக்டிகல். யார் லவ் பண்ணலை சொல்லுங்க! எனக்கு உங்க மேல காதல் வந்திச்சு. உங்ககிட்ட காதலை சொல்லாம இப்போ உங்களைக் கல்யாணம் பண்ணிக்காம நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணினா அது தப்பா?

  அது வேற இது வேற திவ்யா!

  சரி விடுங்கப்பா! முடிஞ்சு போனதைப் பத்தி பேசி என்ன ஆகப் போறது. கிளம்புங்க அரவிந்த் போகலாம்.
  ஆடைகளில் ஒட்டிக் கொண்டிருந்த மணல் துகள்களை தட்டி விட்டுக் கொண்டே எழுந்தான் அரவிந்த்.

  ச்சே! பழைய நினைவுகளும் இது போல ஈசியா விழுந்திட்டா எவ்ளோ நல்லா இருக்கும்.
  ரம்யாவுடனான காதல் நினைவுகள் வந்து வதைத்தன!

  அவனுக்குப் பிடித்த கவிதைகளும், அவளுக்குப் பிடித்த பாலகுமாரனும் இருவருக்கும் பிடித்த பாரதியும் அவர்கட்குப் பிடித்துப் போயினர்.

  ஹே! உனக்கு மகிழம் பூ வாசனை பிடிக்குமா?

  ஹ்ம்ம்ம்! உனக்குப் பிடிச்சிருக்கா?

  அதனால தான் கேட்கறேன்!

  (எண்ணக் குதிரைகளின் ஓட்டம் அதி வேகமாய்!)

  ஹே! அரவிந்த் என்னாச்சுப்பா! என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க! காரில் ஏறி இன்னமும் ஸ்டார்ட் செய்யாமல் அமர்ந்திருந்த
  தன்னை திவ்யா உலுக்கிய பின் தான் நிஜவுலகிற்கு வந்தான் அரவிந்த்.

  ஒண்ணுமில்லை திவ்யா!

  ஹே! பீலிங்ஸா

  ச்சே! ச்சே! நான் அதெல்லாம் மறந்தாச்சு திவ்யா!

  ஒரு சுபயோக சுபதினத்தில் திவ்யா, மிஸஸ். அரவிந்தும் ஆகிப் போனாள்.காதல் தோல்விக்குப் பின் அவர்கள் இருவருக்கும் பிடித்தவை அரவிந்த் ஒதுக்கியே வைத்திருந்தான். ரம்யாவை மறந்து நாட்களாகி விட்டிருந்தன. ரம்யாவின் நினைவுகளே இப்பொழுது வருவதில்லை. அவர்களின் வாழ்க்கை வசந்தமாகத்தான் போனது!
  மழைக்காலம் வரும் வரை. சில்லென்ற அடித்த காற்று எங்கோ பூத்திருந்த மகிழம் பூ வாசனையை கொண்டு வந்து சேர்த்தது. ரம்யாவையும் சேர்த்துத்தான்.
  சில வாசனைகள் மனதோடு ஒட்டியே இருக்கும். நுகராமலே உணரும்படி!
  Last edited by mukilan; 21-12-2006 at 07:11 PM.

 2. #2
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  47,109
  Downloads
  78
  Uploads
  2
  பின்னிட்டீங்க முகிலன்...
  என்ன தான் ஆனாலும் சில ஞாபகங்கள் மனதின் ஆழத்தில் இருக்கும். அவ்வப்போது இல்லேன்னாலும் எப்போதாவது மன அலைகள் அவற்றை மேலே கொண்டு வரும். ஆயினும் அதன் பாரங்கள் அவற்றை ஆழத்திற்கு தள்ளும். அது தான் நல்லதும் கூட எல்லோருக்கும்...!

  ஆ..ஆஆஆ...என்னாச்சு எனக்கு? தத்துபித்துவமெல்லாம் பேசறேன்.
  ம்ம்..கலக்குங்க முகிலன்...மேலும் எதிர்பார்க்கிறோம்.

 3. #3
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
  Join Date
  31 Aug 2006
  Location
  Singapore
  Posts
  1,432
  Post Thanks / Like
  iCash Credits
  17,559
  Downloads
  12
  Uploads
  0
  முகிலன்,

  நல்லா இருக்கு.நினைவுகள் தொடருங்கள்.
  நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

  என்றும் அன்புடன்
  மீரா

 4. #4
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  119,434
  Downloads
  4
  Uploads
  0
  முகிலன்,

  ஆரோக்கியமான சிறுகதை. வாழ்த்துகள்!

  ஏறுவெயில் ஏற ஏற - அதன் சூடும் ஏறும்.

  இருபதுகளில் வாழ்க்கையின் நிதர்சனத்தை ஒப்பிட்டது அழகு!
  அந்த வெக்கையில் - காதல் ஒரு இல்லூஷன் --
  பகல் நேரத் தார்ச்சாலை பயணத்தில் எதிர்வரும் கானல் நீர்க்குளம்..!!!

  கடலலை எழும்..விழும்!
  தொடக்கப்பார்வைதான் ஆச்சர்யம்.. என்றீர்கள்..
  உண்மைதான்..
  ஆனால் கடலடிப் பிரளயங்கள் அடிமனதில் ஆழத்தில்..
  மழைக்கால மகிழம்பூ வாசம் போல் எங்கோ சலனித்தபடியேதான்
  அல்லவா....  அழகி படத்தில் ஒரு வசனம்:
  அவனவன் நிம்மதி எல்லாம் பழைய காதலியைப் பார்க்கும் வரைக்கும்தான்!

  பார்ப்பது மட்டுமல்ல..
  வாசநினைவுகளும் தவணை வகை நிம்மதிக்குலைவுகளே!..
  (இருபாலருக்குமே)..


  நிதர்சனம் +அழகு + ஆரோக்கியமான சிறுகதைக்குப் பாராட்டுகள்!
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 5. #5
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
  Join Date
  27 Jul 2005
  Location
  கனடா
  Posts
  1,999
  Post Thanks / Like
  iCash Credits
  29,749
  Downloads
  53
  Uploads
  5
  Quote Originally Posted by Rajeshkumar View Post
  பின்னிட்டீங்க முகிலன்...
  என்ன தான் ஆனாலும் சில ஞாபகங்கள் மனதின் ஆழத்தில் இருக்கும். அவ்வப்போது இல்லேன்னாலும் எப்போதாவது மன அலைகள் அவற்றை மேலே கொண்டு வரும். ஆயினும் அதன் பாரங்கள் அவற்றை ஆழத்திற்கு தள்ளும். அது தான் நல்லதும் கூட எல்லோருக்கும்...!

  ஆ..ஆஆஆ...என்னாச்சு எனக்கு? தத்துபித்துவமெல்லாம் பேசறேன்.
  ம்ம்..கலக்குங்க முகிலன்...மேலும் எதிர்பார்க்கிறோம்.
  என்னத்தைப் பின்றது. எல்லாருக்கும் நல்லது. எனக்குப் புரிஞ்சிடுச்சி. சரி சரி! மலரும் நினைவுகளா மதி! உங்க எதிர்பார்ப்புதான கொஞ்சமாவது எழுத வைக்குது! நன்றி!

 6. #6
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
  Join Date
  27 Jul 2005
  Location
  கனடா
  Posts
  1,999
  Post Thanks / Like
  iCash Credits
  29,749
  Downloads
  53
  Uploads
  5
  Quote Originally Posted by meera View Post
  முகிலன்,

  நல்லா இருக்கு.நினைவுகள் தொடருங்கள்.
  நினைவுகள் இல்லை மீரா! கதைதான். நன்றி உங்கள் பாராட்டிற்கு!

 7. #7
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
  Join Date
  27 Jul 2005
  Location
  கனடா
  Posts
  1,999
  Post Thanks / Like
  iCash Credits
  29,749
  Downloads
  53
  Uploads
  5
  நான் இந்தக் கதையை எழுதும் போது இப்படி எல்லாம் அலசி எழுதலை அண்ணா. ஆனால் உங்க விமர்சனம் படித்த பிறகு என் புரிதலே வேறு. மிக்க நன்றி அண்ணா. உங்கள் வாழ்த்துக்களுக்கும், விமர்சனத்திற்கும் புதிய பரிமாணத்தில் கதையைப் புரிய வைத்ததற்கும்.

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  11 Oct 2004
  Location
  தமிழ்மன்றம்
  Posts
  4,511
  Post Thanks / Like
  iCash Credits
  80,461
  Downloads
  104
  Uploads
  1
  முகில்ஸ் முதலில் கையை கொடுங்க.... (சூடு வைக்க இல்லப்பா, தைரியமா கொடுங்க)
  என்ன இப்படி கலக்கி போட்டிங்க, ஒரு சிறு கரு...
  அதுவும் அனேகர் வாழ்வில் வரும் நிமிடங்கள் இவை..
  அதை இத்தனை அருமையாக கொடுக்க முடிந்ததே....

  இந்த விஷயத்தில் ராகவனை பார்த்து நான் பொறாமை பட்டது உண்டு..
  இப்போ உங்களையும்....

  எழிதான கவிதை போல ....
  சுகமான வரிகள்...
  செம்ம வாழ்த்துகள்ப்பா....

  இளசு...
  எப்படிங்க இது....

  ஒரு கவிதை அல்லது கதையை அனுபவிக்கும் நேரத்தில் மனதில் எழும் உனர்வுகல் சுகமானதோ ட்ர்குக்கமானதோ அதை அளவிடுவதே, இல்லை குறிப்பதோ எத்துனை கடினமானது.... அவை எப்படி உங்களால் வரிகளை, எழுத்துகளாஇ... அதுவும் ஊக்குவித்து, சுவரிசியமாக வாசிக்கும் வகையில்.....

  சந்தோசம்: இந்த வரிகளும் என் மனதில் அப்படியே எழுந்தவை...
  வருத்தம்: என்னால் அவற்றி எழுத்தாய் வடிக்க முடியாதது... எனக்கு முன்னால் நீங்கள் எழுதியது :-)


  முகில்ஸ்...
  இந்த கதை இருக்கே .. அதுல ஒரு விஷயத்தை மட்டும் சொல்லனும். இது நம்ம பாரதிராஜா "அலைகள் ஓய்வதில்லை" படம் மாதிரி காதல் ஜோடிகள் சேருவது வரைதான் சொல்லி இருக்கு, "அலைபாயுதே" மாதிரி அதுக்க அப்புறம் என்ன நடக்கும் என்று சொல்லுறதில்லை.....

  இந்த காலத்து பசங்களுக்கு புதுசா ஒரு பொண்ணுகிட்ட உணர்வுபூர்வ பந்தம் வந்தால் போது அவன் கடந்த காலத்தில் இருந்தது, இருக்கனுன்னு நினச்சது எல்லாத்தையும் சொல்லிடுவான்.... சில பெண்களும்தான்....

  பெண்கள் இதில் முதிர்ச்சி அடைதவரக்ள் என்று சொல்லுவதை விட, புத்திசாலிகள் என்று சொல்லலாம்... அவர்கள் உறவுகளில் உள்ள "நிச்சயமில்லாமை" போன்றவற்றி ஆலோசித்து இந்த மாதிரி விஷயத்தை அதிகமாக சொல்லுவதில்லை.... அதே போல் தெரிந்து கொள்ளவும் முயர்சி எடுப்பதில்லை. ஆனா நம்ம பசங்க "தவளை.. தவளை" மாதிரி வாயை கொடுத்து வாங்கி கட்டி கொள்ளுகிறார்கள்....

  சுருக்கமாக:
  கடந்தகால காதலை மனைவியிடமோ, காதலியிடமோ சொல்லலாமா என்றால்.... தேவையில்லை. அது எடுத்து கொள்ளுபவர்கள் ஆரோக்கியமான மனநிலை கொண்டவர்களாக இருந்தாலும் உறவுகளில் அது ஒரு முள் தான்.... அவளுக்கு நீங்க எதைவிடவும் முதலிடம் கொடுக்கிறிர்கள் என்று கண்டிப்பாக தெரிந்த பின் , அவள் இதை கண்டிபாக விளையாட்டாக மட்டுமே எடுத்து கொள்ளலாம். அது சில நேரம் அறுபது வயதாகவும் இருக்கலாம்...

  நான் மனயியல் ஆலோசனை கொடுக்கும் போது இதை வலியுறுத்துவது உண்டு.. அதனால் இங்கும்
  பென்ஸ்

  என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

 9. #9
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
  Join Date
  01 Mar 2006
  Location
  கொழும்பு
  Posts
  3,557
  Post Thanks / Like
  iCash Credits
  11,871
  Downloads
  60
  Uploads
  24
  அனேகம் இருபதுகளில் பலருக்கு நடக்கும் சில கசப்பான நிகழ்வுகள் அது சுபமாக முடிந்தால் சரி இல்லாவிட்டால் அதை மறந்து விடுவதே நன்று.

  மனைவியிடம் போயி இப்படிச் சொல்லுவது எல்லாம் என்னைப் பொறுத்த வரையில் ப்ராக்டிகல் இல்லைங்க!!! எந்தப் பொண்ணும் இதை இவ்வளவு ஈசியா எடுத்துப்பாளா?? எனக்குத் தெரியல!!!

  முகிலன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.. அதிகம் அறிந்த கேட்ட சம்பவம் ஆனாலும் வாசிக்கையில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கன்றது. பாராட்டுக்கள்.. தொடர்ந்து எழுதுங்ள்!!!

 10. #10
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
  Join Date
  27 Jul 2005
  Location
  கனடா
  Posts
  1,999
  Post Thanks / Like
  iCash Credits
  29,749
  Downloads
  53
  Uploads
  5
  பென்ஸூ! கையைக் கொடுத்திட்டேன். எப்பொழுதுமே உங்க விமர்சனம் அலசி ஆராய்ந்த படியாக இருக்கும். அதுதானே எழுத்தை மெருகேற்ற உதவும்.

  ராகவன் அளவுக்கா?? அவர் போல வளரணும்னு வாழ்த்துங்க ஒத்துக்கலாம். என்னைப் பார்த்தெல்லாம் ஏன்யா பொறாமைப் படறீங்க. பசங்க எல்லாம் ரொம்ப நேர்மையானவங்க வெகுளின்னு நினைச்சா பசங்க "தவளை"னு கவுத்திட்டீங்களே. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். மனவியல் படிச்சவர். "மனை(வி)யியல் எப்போ படிக்க போறீங்க?

  வாழ்த்துக்களுக்கும் விமர்சனத்திற்கும் பாரட்டுக்கும் அறிவுரைகட்கும் நன்றி பென்ஸூ.

 11. #11
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
  Join Date
  27 Jul 2005
  Location
  கனடா
  Posts
  1,999
  Post Thanks / Like
  iCash Credits
  29,749
  Downloads
  53
  Uploads
  5
  மனைவியிடம் சொல்றதுக்கு தைரியம் வேணும் மயூரேசா. மனைவி ஆகிறதுக்கு முன்னாடி சொல்லிப் பார்க்கலாம், தப்பில்லை. ஆனா அதுக்கப்புறம் எடுத்தற்கெல்லாம் சந்தேகம் வரும். பென்ஸூ அட்வைஸ் கேட்டுக்கோ. வாழ்க்கைக்கு உதவும்.
  மிக்க நன்றி மயூரேசா!

 12. #12
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  07 Aug 2005
  Location
  TAMILNADU
  Posts
  402
  Post Thanks / Like
  iCash Credits
  5,738
  Downloads
  1
  Uploads
  0
  நல்ல கதை முகிலன் சார். தெளிவா சுருக்கமா சொல்லப்பட்ட கதை. பாராட்டுக்கள்

  நானும் மயூரேசன் சார் கட்சி. மனைவியாக போரவங்ககிட்ட சில பழையதை ம\ரச்சா தப்பில்ல.

  பொய் சொல்ல கூடாது
  ஆனா நல்லதுக்கக சில உண்மைய ம\ரைக்கலாம் இல்லீங்களா

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •