Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 25

Thread: இன்று பாரதியாரின் பிறந்தநாள் !

                  
   
   
 1. #1
  இளம் புயல் பண்பட்டவர் franklinraja's Avatar
  Join Date
  24 Oct 2006
  Location
  சென்னை
  Posts
  341
  Post Thanks / Like
  iCash Credits
  5,049
  Downloads
  2
  Uploads
  0

  Exclamation இன்று பாரதியாரின் பிறந்தநாள் !

  இன்று பாரதியாரின் பிறந்தநாள் என்பது ஏன் யாருடய நினைவிற்கும் வரவில்லை..?

  அதுவும் நான் இன்று கிளம்பும் நேரத்தில்தான் எனக்கே நினைவுக்கு வந்ததது..!

  பாரதியின் சுவையான தகவல்களை இங்கே பதியுங்களேன்..!
  அன்புடன்...
  Franklin Raja

  "புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  37,420
  Downloads
  5
  Uploads
  0
  அன்மைய காலமாக மன்றத்தில் உலவும் ஒரு முக்கிய தலைபினை தொட்டு மகாகவின் ஒரு சில பாடல்கல் இங்கு பதிக்கபட்டுல்லன...காதல் புனிதமானது, தெய்வீகமானது அதனால் .காதல்...காதலி....காதலன்....


  தங்களுக்கு பிடித்த வரியை தெர்வு செய்து.....பின்னூட்டத்தை போட்டு அதில் இவ்வரிகலை வர்ணிக்கவும்........
  அனைவரும் கலந்து சிறப்பிக்கவும்  நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டம்

  சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் சில..........

  கண்ணம்மா - என் காதலி - 1
  (காட்சி வியப்பு)
  செஞ்சுருட்டி - ஏகதாளம்
  ரசங்கள் : சிருங்காரம், அற்புதம்

  சுட்டும் விழிச்சுடர் தான், - கண்ணம்மா!

  சுட்டும் விழிச்சுடர் தான், - கண்ணம்மா!
  சூரிய சந்திர ரோ?
  வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
  வானக் கருமை கொல்லோ?
  பட்டுக் கருநீலப் - புடவை
  பதித்த நல் வயிரம்
  நட்ட நடு நிசியில் - தெரியும்
  நக்ஷத் திரங்க ளடீ! ...

  சோலை மல ரொளியோ - உனது
  சுந்தரப் புன்னகை தான்
  நீலக் கடலலையே - உனது
  நெஞ்சி லலைக ளடீ!
  கோலக் குயி லோசை - உனது
  குரலி னிமை யடீ!
  வாலைக் குமரி யடீ, - கண்ணம்மா!
  மருவக் காதல் கொண்டேன். ...

  சாத்திரம் பேசுகிறாய், - கண்ணம்மா!
  சாத்திர மேதுக் கடீ!
  ஆத்திரங் கொண்டவர்க்கே, - கண்ணம்மா!
  சாத்திர முண்டோ டீ!
  மூத்தவர் சம்மதியில் - வதுவை
  முறைகள் பின்பு செய்வோம்;
  காத்திருப் பேனோ டீ? - இதுபார்,
  கன்னத்து முத்த மொன்று! ...
  Last edited by ஓவியா; 11-12-2006 at 04:48 PM.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 3. #3
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  37,420
  Downloads
  5
  Uploads
  0
  கண்ணம்மா - என் காதலி - 2
  (பின் வந்து நின்று கண் மறைத்தல்)
  நாதநாமக்கிரியை - ஆதிதாளம்
  சிருங்கார ரசம்

  மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே

  மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
  வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
  மூலைக் கடலினையவ் வான வளையம்
  முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
  நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
  நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
  சாலப் பலபல நற் பகற்கனவில்
  தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். ...

  ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
  ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
  பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்.
  பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்,
  ஓங்கிவரு முவகை யூற்றி லறிந்தேன்;
  ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
  ''வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
  மாய மெவரிடத்தில்?'' என்று மொழிந்தேன். . ...

  சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே
  திருமித் தழுவி ''என்ன செய்தி சொல்'' என்றேன்;
  ''நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
  நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
  திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
  சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
  பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
  பெற்ற நலங்கள் என்ன? பேசுதி'' என்றாள். ...

  ''நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
  நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
  திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
  சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
  பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
  பெற்றுதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
  சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே,
  திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்''. ...
  Last edited by ஓவியா; 11-12-2006 at 03:43 PM.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 4. #4
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  37,420
  Downloads
  5
  Uploads
  0
  கண்ணம்மா - என் காதலி - 3
  (முகத்திரை களைத்தல்)
  நாதநாமக்கிரியை - ஆதிதாளம்
  சிருங்கார ரசம்

  தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி!

  தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்
  திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
  வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த
  மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
  வல்லி யிடையினையும் மார்பு ரண்டையும் - துணி
  மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
  சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச்
  சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ ? ...

  ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் - பண்டை
  ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ ?
  ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும்
  ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
  யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் - வலு
  வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
  காரிய மில்லையடி வீண்ட சப்பிலே - கனி
  கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ? ...
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 5. #5
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  37,420
  Downloads
  5
  Uploads
  0
  கண்ணம்மா - என் காதலி - 4
  (நாணிக் கண் புதைத்தல்)
  நாதநாமக்கிரியை - ஆதிதாளம்
  சிருங்கார ரசம்


  மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை


  மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை - இவன்
  மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?
  சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ? - இங்கு
  செய்யத் தகாதசெய்கை செய்தவ ருண்டோ ?
  வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன் - நின்றன்
  மதங்கண்டு துகிலினை வரிதுரிந்தேன்.
  என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? - எனக்
  கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா! ...

  கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? - கன்னங்
  கன்றிச் சிவக்கமுத்த மிட்ட தில்லையோ!
  அன்னிய மகாநம்முள் எண்ணுவதில்லை - இரண்
  டாவிவயுமொன் றாகுமெனக் கொண்ட தில்லையோ?
  பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? - துகில்
  பறித்தவள் கைப்பறிக்கப் பயங்கொள்வனோ?
  என்னைப் புறமெனவுங் கருதுவதோ? - கண்கள்
  இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ? ...

  நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும் - சுவை
  நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
  பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் - தம்முள்
  பன்னி உபசரணை பேசுவ துண்டோ ?
  நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே - விண்ணை
  நின்று புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ?
  மூட்டும் விறகிளையச் சோதி கவ்வுங்கால் - அவை
  முன்னுப சாரவகை மொழிந்திடுமோ? ...

  சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திடேன்; - அவர்
  சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;
  நேற்று முன்னாளில் வந்து உறவன்றடீ! - மிக
  நெடும்பண்டைக் காலமுதற் சேர்ந்து வந்ததாம்.
  போற்றுமி ராமனென முன்புதித்தனை, - அங்கு
  பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்;
  ஊற்றுமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோ ன்- கண்ணன்
  உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்கு நான். ...

  முன்னை மிகப்பழமை இரணியனாம் - எந்தை
  மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ;
  பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன் - ஒளிப்
  பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்.
  சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர்காண்; - அவர்
  சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை;
  இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; - இதில்
  ஏதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே? ...
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 6. #6
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  37,420
  Downloads
  5
  Uploads
  0
  கண்ணம்மா - என் காதலி - 5
  (குறிப்பிடம் தவறியது)
  செஞ்சுருட்டி - ஆதி தாளம்
  சிருங்கார ரசம்

  தீர்த்தக் கரையினிலே

  தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்
  செண்பகத் தோட்டத்திலே,
  பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
  பாங்கியோ டென்று சொன்னாய்.
  வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!
  மார்பு துடிக்கு தடீ!
  பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே
  பாவை தெரியு தடீ!
  ...

  மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே
  வேதனை செய்கு தடீ!
  வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா
  வந்து தழுவுது பார்!
  மோனத் திருக்கு தடீ! இந்த வையகம்
  மூழ்கித் துயிலினிலே,
  நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர்
  நகரத் துழலுவதோ? ...

  கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும்
  காவலுன் மாளிகையில்;
  அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான்
  அங்கு வருவதற் கில்லை;
  கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும்
  கூடிக் கிடக்கு தங்கே;
  நடுமை யரசி யவள் - எதற்காகவோ
  நாணிக் குலைந்திடுவாள். ...

  கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம்
  கொஞ்சிக் குலவி யங்கே,
  ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை
  ஆயிரங்கோடி முறை
  நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான்
  நல்ல களி யெய்தியே,
  பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம்
  பண்ணிய தில்லை யடி! ...
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 7. #7
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  37,420
  Downloads
  5
  Uploads
  0
  கண்ணம்மா - என் காதலி - 6
  யோகம்

  பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
  (வீணையடி நீ யெனக்கு)


  பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
  தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
  வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
  தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! ...

  வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
  பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
  காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
  மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! ...

  வான மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
  பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு;
  ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்;
  ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே கண்ணம்மா! ...

  வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
  பண்ணுசுதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
  எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
  கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! ...

  வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
  பேசுபொருள் நீ யெனக்குப் பேணு மொழி நானுனக்கு;
  நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
  ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! . ...

  காதலடி நீ யெனக்குக் காந்தமடி நானுனக்கு;
  வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
  போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
  நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா! . ...

  நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
  செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
  எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
  முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! ...

  தரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
  வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
  தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
  ஓருருவமாய்ச் சமைத்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! ...
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 8. #8
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  17,030
  Downloads
  62
  Uploads
  3
  எனக்கு மிகவும் பிடித்தமான சில பாடல்களை இங்கே தந்து, பாரதியாரை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி ஓவியா.

 9. #9
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,914
  Downloads
  9
  Uploads
  0
  மூண்டாசு கவிங்கன் நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 10. #10
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  37,420
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by பாரதி View Post
  எனக்கு மிகவும் பிடித்தமான சில பாடல்களை இங்கே தந்து, பாரதியாரை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி ஓவியா.
  பாரதி அண்ணா,
  மகாகவின் பாடலில் தங்களுக்கு பிடித்த, எதாவது ஒரு கவிதையின் வரிக்கு விமர்சனம் எழுதினால் நாங்கள் சந்தோஷப்படுவோம்....


  Quote Originally Posted by mgandhi View Post
  மூண்டாசு கவிங்கன் நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி
  நண்பரே,
  நீங்களும் தான்
  Last edited by ஓவியா; 11-12-2006 at 05:05 PM.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 11. #11
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  17,030
  Downloads
  62
  Uploads
  3
  தனித்தனியே பாரதியாரின் கவிதைகளை ரசிக்கத்தான் முடியுமே தவிர விமர்சிக்கும் அளவிற்கு எனக்கு தகுதியில்லை.

  இயற்கையை அவர் வர்ணித்து ஒப்பிடும் பல இடங்கள் மிகவும் ஆச்சரியப்படுத்தும். மேலும் ஒன்று அவர் பாடல்கள் பல இராகங்களில் பாடப்பெற்றும் எல்லாமே நம்மை கவர்ந்திழுக்கும்.

  வாழ்க நீ எம்மான் - பாடிய பாரதியாருக்கு
  வாழ்க நீ பாரதி.

 12. #12
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  36,087
  Downloads
  15
  Uploads
  4
  பாரதியின் பாடல்கள் என்றும் அழியாதவை.......

  சிறு வயதில் எட்டையபுரம் சென்று அவர் இருந்த இடத்தை பார்த்துள்ளேன்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •