Results 1 to 3 of 3

Thread: புதிய 7 உலக அதிசயங்கள் போட்டியில் தாஜ் மகா

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    புதிய 7 உலக அதிசயங்கள் போட்டியில் தாஜ் மகா

    புதிய 7 உலக அதிசயங்கள் போட்டியில் தாஜ் மகால்

    உலக அதிசயங்களில் ஆக்ராவில் உள்ள புகழ்பெற்ற தாஜ் மகாலும் ஒன்று என்பது பழைய செய்தி.

    இப்போது புதிதாக 7 உலக அதிசயங்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். இதிலும் தாஜ்மகால் இடம்பெறுகிறது.

    7 புதிய உலக அதிசயங்களுக்கான தேர்வு பட்டியலில் தாஜ்மகால் உள்பட 21 நினைவுச் சின்னங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. உலகம் முழுவதும் வாக்கெடுப்பு நடத்தி இதிலிருந்து புதிய 7 உலக அதிசயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

    புதிய பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பு தாஜ்மகாலுக்கு பிரகாசமாக இருப்பதாக இப்போட்டியை நடத்தும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த "நியூ செவன் வொண்டர்ஸ்' அமைப்பின் நிறுவனர் பெர்னார்டு வெபெர் தெரிவித்துள்ளார்.

    உலக அதிசயங்களுக்கான போட்டியில் தாஜ்மகாலும் இடம்பெற்றிருப்பதற்கான அதிகாரபூர்வ சான்றிதழை ஆக்ரா சுற்றுலா இணை இயக்குநர் டி.கே.பர்மனிடம் வெபெர் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

    இதற்கான வாக்களிப்பு வலைதளம், தொலைக்காட்சி மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தொடங்கிவிட்டது. இதுவரை தாஜ்மகாலுக்கு ஆதரவாக 1.70 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.

    ஜூலை 6-ம் தேதி வரை வாக்களிக்கலாம். ஜூலை 7-ம் தேதி போர்ச்சுகலின் லிஸ்பனில் புதிய 7 உலக அதிசயங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

    சீனப் பெருஞ்சுவர், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, பிரான்சு தலைநகர் பாரீஸில் உள்ள ஈஃபிள் கோபுரம் உள்ளிட்டவையும் உலக அதிசயங்களுக்கான போட்டியில் உள்ளன.

    உலக அதிசயத்தில் மின்டும் நம் காதல் சின்னம் வெற்றிப்பெற வாக்களியுங்கள்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    தகவளுக்கு நன்றி காந்தி

    நண்பர்களே இந்த தலைப்பினை சிறிது அலசுவோமா?

    என் முதல் கேள்வி
    இது காதல் சின்னமா?


    இரண்டாவது
    (முக்கிய கேள்வி)
    ஷஜகான் அரசர், (மனைவி இருக்க)
    இன்னோரு பெண்ணின் மேல் காதல் கொண்டதும் அப்பெணிடம் உறவு கொண்டதும் சரியா தவறா?

    முக்கியமான மூன்றாவது கேள்வி
    வடிவைமைத்த சிற்பிகளின் கண்களை குருடாக்கியது மானிட தர்மத்தில் முறையா?

    தயவு செய்து அனைத்து நண்பர்களும் தங்களின் விமர்சனத்தை பத்திதால் நன்று

    ***********************************************************************************************
    Last edited by ஓவியா; 07-12-2006 at 07:31 PM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    போதும்யா ஏற்கனவே மீனாச்சியம்மங் கோயில இவுக எல்லாம் சேந்து ஒலக அதிசயமாக்குன கூத்து.
    எங்கூருல எல்லாப்பயலும் போயி ஐஎஸ்டி கால் போட்டுக் காசக் கரியாக்கி அந்த வலைத்தளக் காரன வாழ வச்சதுதேன் மிச்சம்.
    ஆள விடுங்க சாமி!!!
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •