கொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிஜேபி முன்னாள் எம்.பி.யுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை அளித்து பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

மேலும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதுடன், தண்டனையை அடுத்த மாதம் (ஜனவரி) 31ம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் மேதாப் சிங் கில், பல்தேவ் சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று உத்தரவிட்டது.

சித்துவுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்ட போதிலும், குர்னாம்சிங் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சித்து தாக்கவில்லை என்பதால் 3 ஆண்டு சிறைத் தண்டனையே விதிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.