Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 26

Thread: போடு சீட் பெல்ட். இல்லைனா டிக்கெட்

 1. #1
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
  Join Date
  27 Jul 2005
  Location
  கனடா
  Posts
  1,999
  Post Thanks / Like
  iCash Credits
  28,159
  Downloads
  53
  Uploads
  5

  போடு சீட் பெல்ட். இல்லைனா டிக்கெட்

  இது சுவையான சம்பவம் இல்லை. பெருமைபடக் கூடிய விசயமும் இல்லை. இருந்தாலும் நண்பர்களை எச்சரிக்க என்னாலான சிறு அனுபவ பாடம்.

  இன்னைக்கு மதியம் அப்படியே பள்ளிக்கூடத்தில் கொஞ்ச வேலைகளை முடிச்சிட்டு அப்படியே என் நண்பர் ஒருவரோட சாப்பிடப் போயிட்டு வயிற்றுக்கும் வாகனத்துக்கும் எரிபொருள் போட்டுவிட்டு அவரை அவர் அறையினில் விட்டு விட்டு வந்து கொண்டிருந்தேன். கடந்த வரத்தில் பெய்த கடும் பனிப் பொழிவில் ரோட்ல வண்டி ஓட்றது போல இல்லாமல் ஐஸ் ஸ்கேட்டிங் போறது போல அனுபவம்.

  வண்டியில் அழகாகச் சிரித்தது அந்த நிலவு என ஜெயச்சந்திரன் கேட்க அதுதான் இதுவோ என ஜானகி பதில் சொல்லிக் கொண்டிருந்தாங்க. உருகிப் போய்க் கேட்டுக் கொண்டே வந்து கொண்டிருந்தேன். எ ன் வீட்டுக்குத் திரும்பும் சிறு சாலைக்கு பிரதான சாலையின் சிக்னலில் காத்திருந்தேன். சிக்னலில் எதிர்புறம் ஒரு வெள்ளைக்காரப் போலீஸ் அக்கா (ஆமா போலீஸ்காரர் மாமானா பெண் போலீஸ் அக்காதானே) அவுங்க வண்டியில் உக்கார்ந்துக்கிட்டு எமினெம் பாட்டைக் கேட்டுக்கிட்டு அப்பப்போ வாக்கி டாக்கில ஏதோ பேசிக்கிட்டு இருந்தாங்க. என்னை வேற உத்துப் பார்த்துக்கிட்டே இருந்தாங்க. ச்சே பரவாயில்லை! நம்மளை யாரோ சைட் அடிக்கிறாங்கன்னு நினைச்சுக்கிட்டேன். . அத்தோட கண்ணாடில மூஞ்சைப் பார்த்துக்கிட்டு சின்ன டச் அப் வேற!!!

  பச்சை சிக்னல் கொடுத்ததும் நான் பாட்டுக்கு கிளம்பி என் வீடு செல்லும் சாலையில் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்பதான் பார்த்தேன் நான் முன்ன பார்த்த அந்த அக்காவோட வண்டில என்னைப் பின் தொடர்ந்துகிட்டு இருந்தாங்க. ஃப்ளாஷ் லைட் வேற போட்டுக் கிட்டு இருந்தாங்க. சரின்னு வண்டியை ரோட்டோரமா நிறுத்தினேன். வீட்டுக்குப் பக்கம் வந்திட்டேன் கூட.

  அக்கா வந்தாங்க. ஹலோ! நல்லா இருக்கியான்னாங்க. நானும் நல்லா இருக்கேன்? நீங்கன்னேன். நான் நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு ஏன் தம்பி சீட் பெல்ட் போடலைனு தெரிஞ்சிக்கலாமானு கேட்டாங்க. அப்போதுதான் கவனிச்சேன் ஆப்பு சீட் பெல்ட் ரூபத்தில வந்திருக்குன்னு. எனக்கு சீட் பெல்ட் போடாத உணர்வே இல்லை. இல்லை போட்டதற்கப்புறம் கழண்டு விட்டதான்னு ஒரே குழப்பம். அக்கா லைசன்ஸ் எல்லாம் வாங்கிட்டுப் போனாங்க. நானும் என்னோட கார்லேயே காத்திருந்தேன்.

  வீட்டுக்குப் பக்கத்தில் இருந்ததால அப்பக்கம் சென்ற வாகனங்கள்ல இருந்த்தவங்க எல்லாம் எனக்கு பெரும்பாலும் தெரிஞ்சவங்கதான். அதில் சில பேரோட பார்வை என்னை ஏதோ கொலைக் குற்றத்திற்காக தேடிப் பிடிச்சதைப் போல வேறு இருந்திச்சு. எனக்கொரு நாள் வராமலா போயிடும். ஒவ்வொரு நாய்க்கும் சொந்த நாள் இருக்கு ( அட அதாங்க "Every dog has its own day"). அப்புறமா அக்கா வந்தாங்க. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். நான் வேணும்னு பண்ணலை. இந்த ஒரு தடவை தெரியாமப் பண்ணிட்டேன். இனிமேல் கட்டாயம் சீட் பெல்ட் போட்டிருக்கேனா செக் பண்றேன்னு. அவங்க என்ன நம்ம ஊர்ல உள்ளவங்களைப் போல பாசக்கார மாமா, அக்காங்களா, அதெல்லாம் இல்லை ஒரு $165 கட்டிடுன்னு டிக்கெட் கொடுத்திட்டாங்க. அப்படி இல்லைனா சமூக சேவை செய்னு சொன்னாங்க இல்லைனா கோர்ட்டுக்கு போன்னு சொல்லிட்டு "Drive safely, Have a nice day" னு ஒரு வாழ்த்து வேற.

  நான் 50 கி.மீ ஸ்பீட் லிமிட்ல 80ல எல்லாம் ஓட்டி இருக்கிறேன் அப்போ யாருமே கொடுக்கலை. ஆனா என்னை அறியாம செஞ்ச தப்பில இப்போ பெருசா மாட்டிக்கிட்டேன். அரசு அன்று கொல்லும், சாஸ்கட்டூன் போலிஸ் நின்று கொல்லும்.B) :angry:

  என்ன சொல்ல வர்றேன்னா, தயவு செஞ்சு போடுங்க சீட் பெல்ட். இல்லைனா டிக்கெட்.
  Last edited by mukilan; 04-12-2006 at 11:46 PM.

 2. #2
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  45,519
  Downloads
  78
  Uploads
  2
  நல்ல அனுபவம்...முகிலன்.
  இங்கெல்லாம் ஹெல்மெட் போட்டுட்டு ஓட்டுன்னு அரசாங்கமே சொன்னாலும் அதை எதிர்ப்பதற்கே இவ்ளோ பேர் இருக்காங்க..
  இதுல சீட் பெல்ட்-டா?? சான்ஸே இல்ல..

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,827
  Post Thanks / Like
  iCash Credits
  24,119
  Downloads
  183
  Uploads
  12
  Quote Originally Posted by Rajeshkumar View Post
  நல்ல அனுபவம்...முகிலன்.
  இங்கெல்லாம் ஹெல்மெட் போட்டுட்டு ஓட்டுன்னு அரசாங்கமே சொன்னாலும் அதை எதிர்ப்பதற்கே இவ்ளோ பேர் இருக்காங்க..
  இதுல சீட் பெல்ட்-டா?? சான்ஸே இல்ல..
  எனக்கு கார்த்திகேயன் ஈஸ்வரமூர்த்தி என்ற நண்பர் உண்டு. ஃபிரீமாண்டிலிருந்து சன் மைக்ரோ சிஸ்டம் செல்ல ஹைவே 84 ஐ உபயோகிப்பார்.. அவர் மௌரி அவென்யூ விலிருந்து 880 நெடுஞ்சாலையில் நுழையுமிடத்தில் பன்னெடுங்காலமாகவே ஒரு போலீஸ் கார் மறைவில் நிற்பதைக் கண்டு இவங்களுக்கு இங்க என்ன வேலை.. அப்படி யாரைப் பிடிக்கப் போகிறார்கள் என யோசித்துக் கொண்டே போவது வழக்கம்..

  ஒருமுறை அவர்களை பார்த்துக் கொண்டே நெடுஞ்சாலை நுழைவில் நுழைந்த போது விளக்குகள் மின்னலடிக்க அவரை நிறுத்தினார்கள்..

  கார்த்திக்கு என்ன தவறு செய்தோம் என்றே தெரியவில்லை.. மாமா வந்து விளக்கமளித்தார்..

  இந்த வெள்ளைக் கோடு இருக்கில்லையா அதை கார்த்தி சாலிடாக இருந்த இடத்தில் தாண்டினாராம்..

  கார்த்திக்க்கு இப்போ புரிந்தது...

  இதே போல ஒரு முறை

  நெடுஞ்சாலை 80 ல் ஆடோமேடிக் கேமிரா வைத்திருப்பார்கள்..

  ஒருவன் அதில் 75 மைல் வேகத்தில் செல்ல காமிரா கிளிக்க மின்ன்லடித்தது.. அவனுக்கு ஒரு சந்தேகம் சரி என எக்ஸிட் எடுத்து எதிர் பக்கமாய் 65 மைல் வேகத்தில் செல்ல மற்பட்யும் கேமிரா கிளிக்..

  இது என்ன என்று வியந்து மறுபடியும் எக்ஸிட் எடுத்து அதே இடத்தை 50 மைல் வேகத்தில் கடக்க மறுபடியும் கிளிக்...

  இரண்டு நாட்கள் கழித்து அஞ்சலில் மூன்று தனித் தனி டிக்கெட்டுகள்..
  1. வேகமாய் பெல்ட் அணியாமல் சென்றதற்கு
  2. பெல்ட் அணியாமல் சென்றதற்கு
  3. பெல்ட் அணியாமல் சென்றதற்கு
  Last edited by தாமரை; 04-12-2006 at 10:32 AM.
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.

  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 4. #4
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  43,915
  Downloads
  126
  Uploads
  17

  Smile

  Quote Originally Posted by mukilan View Post
  இது சுவையான சம்பவம் இல்லை. பெருமைபடக் கூடிய விசயமும் இல்லை. இருந்தாலும் நண்பர்களை எச்சரிக்க என்னாலான சிறு அனுபவ பாடம்.

  இன்னைக்கு மதியம் அப்படியே பள்ளிக்கூடத்தில் கொஞ்ச வேலைகளை முடிச்சிட்டு அப்படியே என் நண்பர் ஒருவரோட சாப்பிடப் போயிட்டு வயிற்றுக்கும் வாகனத்துக்கும் எரிபொருள் போட்டுவிட்டு அவரை அவர் அறையினில் விட்டு விட்டு வந்து கொண்டிருந்தேன். கடந்த வரத்தில் பெய்த கடும் பனிப் பொழிவில் ரோட்ல வண்டி ஓட்றது போல இல்லாமல் ஐஸ் ஸ்கேட்டிங் போறது போல அனுபவம்.

  வண்டியில் அழகாகச் சிரித்தது அந்த நிலவு என ஜெயச்சந்திரன் கேட்க அதுதான் இதுவோ என ஜானகி பதில் சொல்லிக் கொண்டிருந்தாங்க. உருகிப் போய்க் கேட்டுக் கொண்டே வந்து கொண்டிருந்தேன். எ ன் வீட்டுக்குத் திரும்பும் சிறு சாலைக்கு பிரதான சாலையின் சிக்னலில் காத்திருந்தேன். சிக்னலில் எதிர்புறம் ஒரு வெள்ளைக்காரப் போலீஸ் அக்கா (ஆமா போலீஸ்காரர் மாமானா பெண் போலீஸ் அக்காதானே) அவுங்க வண்டியில் உக்கார்ந்துக்கிட்டு எமினெம் பாட்டைக் கேட்டுக்கிட்டு அப்பப்போ வாக்கி டாக்கில ஏதோ பேசிக்கிட்டு இருந்தாங்க. என்னை வேற உத்துப் பார்த்துக்கிட்டே இருந்தாங்க. ச்சே பரவாயில்லை! நம்மளை யாரோ சைட் அடிக்கிறாங்கன்னு நினைச்சுக்கிட்டேன். . அத்தோட கன்ணாடில மூஞ்சைப் பார்த்துக்கிட்டு சின்ன டச் அப் வேற!!!

  பச்சை சிக்னல் கொடுத்ததும் நான் பாட்டுக்கு கிளம்பி என் வீடு செல்லும் சாலையில் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்பதான் பார்த்தேன் நான் முன்ன பார்த்த அந்த அக்காவோட வண்டில என்னைப் பின் தொடர்ந்துகிட்டு இருந்தாங்க. ஃப்ளாஷ் லைட் வேற போட்டுக் கிட்டு இருந்தாங்க. சரின்னு வண்டியை ரோட்டோரமா நிறுத்தினேன். வீட்டுக்குப் பக்கம் வந்திட்டேன் கூட.

  அக்கா வந்தாங்க. ஹலோ! நல்லா இருக்கியான்னாங்க. நானும் நல்லா இருக்கேன்? நீங்கன்னேன். நான் நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு ஏன் தம்பி சீட் பெல்ட் போடலைனு தெரிஞ்சிக்கலாமானு கேட்டாங்க. அப்போதுதான் கவனிச்சேன் ஆப்பு சீட் பெல்ட் ரூபத்தில வந்திருக்குன்னு. எனக்கு சீட் பெல்ட் போடாத உணர்வே இல்லை. இல்லை போட்டதற்கப்புறம் கழண்டு விட்டதான்னு ஒரே குழப்பம். அக்கா லைசன்ஸ் எல்லாம் வாங்கிட்டுப் போனாங்க. நானும் என்னோட கார்லேயே காத்திருந்தேன்.

  வீட்டுக்குப் பக்கத்தில் இருந்ததால அப்பக்கம் சென்ற வாகனங்கள்ல இருந்த்தவங்க எல்லாம் எனக்கு பெரும்பாலும் தெரிஞ்சவங்கதான். அதில் சில பேரோட பார்வை என்னை ஏதோ கொலைக் குற்றத்திற்காக தேடிப் பிடிச்சதைப் போல வேறு இருந்திச்சு. எனக்கொரு நாள் வராமலா போயிடும். ஒவ்வொரு நாய்க்கும் சொந்த நாள் இருக்கு ( அட அதாங்க "Every dog has its own day"). அப்புறமா அக்கா வந்தாங்க. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். நான் வேணும்னு பண்ணலை. இந்த ஒரு தடவை தெரியாமப் பண்ணிட்டேன். இனிமேல் கட்டாயம் சீட் பெல்ட் போட்டிருக்கேனா செக் பண்றேன்னு. அவங்க என்ன நம்ம ஊர்ல உள்ளவங்களைப் போல பாசக்கார மாமா, அக்காங்களா, அதெல்லாம் இல்லை ஒரு $165 கட்டிடுன்னு டிக்கெட் கொடுத்திட்டாங்க. அப்படி இல்லைனா சமூக சேவை செய்னு சொன்னாங்க இல்லைனா கோர்ட்டுக்கு போன்னு சொல்லிட்டு "Drive safely, Have a nice day" னு ஒரு வாழ்த்து வேற.

  நான் 50 கி.மீ ஸ்பீட் லிமிட்ல 80ல எல்லாம் ஓட்டி இருக்கிறேன் அப்போ யாருமே கொடுக்கலை. ஆனா என்னை அறியாம செஞ்ச தப்பில இப்போ பெருசா மாட்டிக்கிட்டேன். அரசு அன்று கொல்லும், சாஸ்கட்டூன் போலிஸ் நின்று கொல்லும்.B) :angry:

  என்ன சொல்ல வர்றேன்னா, தயவு செஞ்சு போடுங்க சீட் பெல்ட். இல்லைனா டிக்கெட்.
  நல்ல கதை தான் முகிலன். ஆனால், போலீஸ் அக்கா என்று உறவுமுறை சொல்லி பல டக்கர் போலீஸ் பெண்மணிகள் ஸசட்டு அடிக்கமுடியாத படி சதி பண்ணி விட்டீர்கள்.
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  11 Oct 2004
  Location
  தமிழ்மன்றம்
  Posts
  4,511
  Post Thanks / Like
  iCash Credits
  78,871
  Downloads
  104
  Uploads
  1
  ஹ ஹா... எனக்கும் சீட் பெல்ட் போடனுன்னு ஆசைதான் ஆனா என்னோட பைக்கில் அப்படி எந்த பெல்டும் இல்லை, அதனால என்னொட பேன்டுக்கு மட்டும் பெல்ட் போட்டுகிறென்.
  முகில்ஸ்.... என்னா சந்தோசமா இருக்கு தெரியுமா... நான் மட்டும் உங்க கூட இருந்திருந்தேன்னு வையுங்க உங்களுக்கு டிரீட்டே கொடுத்திருப்பேன்....
  ஆனா, தலைப்பை பார்த்து உள்ள வந்து ஒரு சிறு ஏமாற்றம்...
  பென்ஸ்

  என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

 6. #6
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  4,136
  Downloads
  5
  Uploads
  0
  சரிதாங்க.. நம்மூரு மாதிரி சம்திங் வாங்கிக்கறீங்களான்னு நீங்க ஒரு வார்த்தை கேட்டிருந்தா, அக்கா அவங்க வீட்டுக்கே கூட்டிட்டுப் போயி உங்களுக்குச் சவரட்சணை செஞ்சிருப்பாங்க. என்ன நீங்க இதே பதிவை எழுதுறதுக்கு இன்னும் நாலைந்து மாசம் ஆயிருக்கும்...
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 7. #7
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  36,520
  Downloads
  5
  Uploads
  0
  அடடே
  தலைப்பை பார்த்து முகியோட லேடஸ்ட் பதிவா, உடனே படிக்க வந்தா....காலயில் முதல் பதிவே அட்வைஸ்.......

  சரி இனி நானும் மறக்காம பெல்ட் அணிந்து கொள்கிறேன்...

  எலே பெஞ்சு கண்ணா,
  எனக்கு ஒரே பொறாமையா இருக்குலே, இந்த சேலைக்கு ஒரு பெல்ட் வைக்கனும்னு யாருக்கும் தோனலையே, இல்லாட்டி நாங்களும் இப்படியெல்லாம் பதிவு போடுவோமில்லே.....
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 8. #8
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  16,130
  Downloads
  62
  Uploads
  3
  அன்பு முகிலன்,

  வெளிநாடுகளில் வசிக்கும் பலரையும் எச்சரிக்கையாக இருக்கச் சொன்னதற்கு நன்றிகள்.
  Last edited by பாரதி; 07-12-2006 at 08:25 AM.

 9. #9
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  35,187
  Downloads
  15
  Uploads
  4
  Quote Originally Posted by பாரதி View Post
  அன்பு முகிலன்,

  வெளிநாடுகளில் வசிக்கும் பலரையும் எச்சரிக்கையாக இருக்கச் சொன்னதற்கு நன்றிகள்.

  வலைத்தளங்களில் உலாவும் பலரும் செய்யும் தவறை - தலைப்பை கொஞ்சமும் பொருந்தாமல் - மோசமான வகையில் வைப்பதை - நீங்களும் கடைபிடித்ததற்காக உண்மையில் வருத்தப்படுகிறேன்.
  பாரதி தங்களின் விருப்பத்திற்கிணங்க.. தலைப்பை மாற்ற சொல்லிவிட்டார். மாற்றியாச்சு...

 10. #10
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  35,187
  Downloads
  15
  Uploads
  4
  நல்ல பயனுள்ள தகவல்...

  காரில் ஏறினவுடன்.. பெல்டுக்கு கை போய்விடுகிறது.... அதனால் அந்த பிரச்சனை வராது.

  வேகம் தான் சிக்கல்.. 65 மைல் போட்டால் நம் வேகம் 90-100 மைல் என்று செல்கிறது... ஏதோ கடவுள் புண்ணியத்தால்.. எந்த டிக்கெட்டும் வாங்கவில்லை.

  தைவானில்... கேமரா மூலம் வேகத்தை கண்காணிப்பார்கள்... ஆனால்.. நாங்கள் அந்த கேமராவை கண்காணிக்க டிடெக்டர் பொறுத்தி சமாளிப்போம்.... என்ன பண்ணுவது.. ஊர் அப்படி...?

 11. #11
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  56,467
  Downloads
  4
  Uploads
  0
  மிக அவசியமான பதிவு. நன்றி முகிலன்.

  அந்த நேரத்தில் வரும் ஆதங்கம் ,அதுவும் அவர்கள் தன்மையான வார்த்தைகள் சொல்லிக்கொண்டே ஆப்பு வைப்பது- ஆஹா! சொல்லில் அடங்காது!!

  ராகவனின் மேல்தகவல்களுக்கும் நன்றி. ஆனாலும் மூணு முறை வலம் வந்தவருக்கு ரொம்பத்தான்............
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 12. #12
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
  Join Date
  27 Jul 2005
  Location
  கனடா
  Posts
  1,999
  Post Thanks / Like
  iCash Credits
  28,159
  Downloads
  53
  Uploads
  5
  Quote Originally Posted by பாரதி View Post
  அன்பு முகிலன்,

  வெளிநாடுகளில் வசிக்கும் பலரையும் எச்சரிக்கையாக இருக்கச் சொன்னதற்கு நன்றிகள்.

  வலைத்தளங்களில் உலாவும் பலரும் செய்யும் தவறை - தலைப்பை கொஞ்சமும் பொருந்தாமல் - மோசமான வகையில் வைப்பதை - நீங்களும் கடைபிடித்ததற்காக உண்மையில் வருத்தப்படுகிறேன்.
  பாரதி அண்ணா உங்கள் கருத்துக்கு நன்றி. தலைப்பை மாற்றி விட்டேன். அவ்வப்பொழுது வந்து இப்படிக் குட்டிச் செல்லுங்கள்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •