Page 11 of 212 FirstFirst ... 7 8 9 10 11 12 13 14 15 21 61 111 ... LastLast
Results 121 to 132 of 2533

Thread: ♔. ராஜாவின் ரவுசு பக்கம்..!

                  
   
   
  1. #121
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    நல்லவேளைப்பா.. மைக்ரோசாஃப்ட் கார் விற்பனை செய்யலே..
    ஒருவேளை கார் தயார் பண்ணியிருந்தா, அது..

    1.ஒவ்வொரு தடவையும் ஸ்பேர் பார்ட்ஸ் மாத்தி மாத்தி தயார் பண்ணி அதுக்கு தகுந்த காரை அப்பப்போ வாங்க சொல்லுவாங்க.

    2.நல்ல மேட்டுல ஏறிக்கிட்டு இருக்கும்போது திடீர்ன்னு ரிப்பேர் ஆயி நின்னுரும். போன் பண்ணி சொன்னா, மறுபடி ஸ்டார்ட் (Re-start)பண்ணுங்கம்பாங்க. ஏன்னு கேட்டா காரணம் அவங்களுக்கே தெரியாது.

    4.அப்படியும் சரியா வரலியேன்னா, எஞ்சினைக் கழட்டிட்டு மாட்டுங்க (Re-install) சரியாயிடும்ன்னு சொல்வாங்க.

    5.திடீர்ன்னு ஒரு மாடல் கண்டுபிடிப்பாங்க. பெட்ரோல் வேண்டாம்.. இருமடங்கு வேகம்..ஒட்டும் களைப்பு பாதியா குறையும்ன்னு சொல்லிட்டு வெறும் 5 % சாலைகள்ல தான் ஓட்ட முடியும்பாங்க.

    6.மக்களும் மைக்ரோசாஃப்ட்ன்கிற பேரைப் பார்த்து மயங்கிடுவாங்க. இதைவிட நல்ல கார் மார்க்கெட்ல கிடைக்கும்ங்கிறதையே மறந்துடுவாங்க.

    7.இதையெல்லாம் விட பெரிய கொடுமை என்னன்னா அவசரமா சடன் பிரேக் போட நெனைச்சிங்கன்னா, "உண்மையிலேயே பிரேக் போட விரும்புகிறீர்களா..?" ன்னு புத்திசாலித்தனமா ஒரு கேள்வி கேட்கும்..!
    __________________

  2. #122
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    முதல் முதல்ல பசு மாட்டு மடியப் பிடிச்சு அமுக்கினா பால் கிடைக்கும்ன்னு யோசிச்சவர் யாரா இருக்கும்..?

    அதைப் பார்த்துட்டு கழுதைகிட்ட முயற்சி செஞ்சவர் கதி என்னவா இருக்கும்..?

    அரளிக் கொட்டை விஷம்ன்னு தெரிய வச்ச தியாகிக்கு தாமிரப் பத்திரம் கொடுத்தோமா..?

    என்னென்னவோ கண்டுபிடிக்கிற ஜப்பான் காரன் ஓட்டைப் படகு ஏன் இன்னும் கண்டுபிடிக்கல..?

    50/50 விதி சொல்லுது ஒரு செயலைப் புதுசா செய்யும்போது 50% தப்பாகவோ 50% சரியாகவோ வாய்ப்பு இருக்குன்னு.ஆனா நமக்கு மட்டும் 90% தப்பாவே போகுதே எப்படி..?

    பேட்டரி லைட்.. அவசரத்துல உபயோகப்படுவதற்கா இல்லே வீணாப்போன பேட்டரி கட்டைகளை வச்சுக்கறதுக்கா..?

    தப்பு செஞ்சா அபராதம் கட்டணும்.. உண்மையா நடந்தீங்கன்னா வரி கட்டணும்.. எப்படி வசதி..?

    சினிமா தியேட்டர் விதி ; முனை சீட்டுக் காரங்க எல்லாம் முன்னாலேயே வந்து உக்காந்துடுவாங்க.. ஆனா சுவத்தை ஒட்டி சீட்டுக்காரங்க தாமதமாவே வருவாங்க.. அதும் ஒவ்வொருத்தரா..!

    நம்ம மாமா பொண்ணு அத்தை பொண்ணெல்லாம் அட்டு ஃபிகரா இருக்கும்.. ஆனா நண்பனோட முறைப்பொண்ணுங்க எல்லாம் நச்ச்' ஃபிகரா இருக்கும்.. நொந்துருக்கீங்களா..?

  3. #123
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    நீங்களோ நானோ ஒரு ஆரஞ்சுப் பழத்தை இன்னொருத்தருக்குக் கொடுக்கணும்ன்னா சிரிச்சுக்கிட்டே கொடுப்போம்.. அவரும் சிரிச்சுக்கிட்டே வாங்கிப்பாரு.. ஆனா ஒரு வழக்கறிஞர் கொடுத்தா எப்படிக் கொடுப்பார்ன்னு ஒரு சின்னக் கற்பனை...

    நாளது ##ம் வருடம் ##ம் நாள் சென்னை வியாசர்பாடி, கொள்ளைக்காரன் பேட்டை, அரிவாள் தூக்கித் தெரு, 13ம் எண் விலாசத்தில் வசிக்கும் தமுக்கடிச்சான் மகன் டமாரம் கொட்டி ஆகிய நான், மேற்படி ஊரில் அதே தெருவில் 14 ம் எண் வீட்டில் வாடகை கொடுக்காமல் குடியிருந்து வரும் ஈயடிச்சான் மகன் கொசு கடிச்சான் அவர்களுக்கு, என்னால் கோயம்பேட்டில் அழு'கிய மணவாளன் கடையில் கடனுக்கு வாங்கப்பட்டிருக்கும் சிட்ரஸ் ஆரண்டியம் என்ற உயிரியல் பெயரும் கொடை ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு என்ற சாதாரணப் பெயர்களையும் கொண்ட இப்பழத்தைக் கொடுப்பதோடு மட்டுமல்லாது, இதன் பேரில் எனக்கிருக்கும் உரிமை, சொந்தம், பாத்தியம்,ஆதாயம் ஆகியவற்றையும் உங்கள் அனைவர் முன்னிலையில், என் சுய புத்தியோடும், முழு மனதோடும், எவ்வித நெருக்குதலுக்கு ஆளாகாமலும், மனமுவந்து அளிக்கிறேன்.
    இதை இவர், உடனடியாகவோ அல்லது தான் விரும்பும் போதோ, தனக்காகவோ அல்லது பிறர்க்காகவோ பயன்படுத்தலாம். இதைக் கடித்துத் தின்னவோ, உறித்துத் தின்னவோ, கொட்டையுடனோ அல்லது அவற்றை அகற்றிவிட்டோ தின்னவோ எவ்வித தடையுமில்லை.
    இந்தப் பழத்தை நம்மில் இரண்டாவது நபரானவர், அப்படியே ஒரே தடவையிலோ அன்றிப் பகுதியாகவோ, சுளையாகவோ, அல்லது சாறு பிழிந்தோ சுவைக்க உரிமை பெற்றவர் ஆகிறார்.இதன் தோலைத் தின்னவோ தூக்கி எறியவோ அல்லது கண்ணில் பீய்ச்சிக்கொண்டு கத்தவோ பாத்தியப் பட்டவராகிறார்.
    இதன் விதைகளைப் பயிராக்க இவருக்கு நான் உரிமையளித்திருப்பதால் இதைப் பயிராக்கி அந்த மரத்திலிருந்து கிடைக்கும் பழங்களை இவரோ இவரது வம்சாவளியினரோ சர்வ சுதந்திரமாக விற்பனை செய்யவோ இலவசமாக வழங்கவோ, தூக்கி எறியவோ யாதொரு இடர்ப்பாடும் இல்லை.. அந்த ஆரஞ்சு மரத்தை வெட்டி விறகாகவோ அல்லது...

    என்னங்க..நில்லுங்க.. ஏன் இப்படி ஓடறீங்க.. சொன்னாக் கேளுங்க நில்லுங்க..!
    __________________

  4. #124
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    பேப்பரில் ஒரு விளம்பரம்..
    புத்தம் புது ஸ்கார்ப்பியோ வாகனம் விலை ரூ 10000

    பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ்வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை. ஒருவர் மட்டும் வந்தால் மலை என்ற முடிவோடு அணுகினார். விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள்.
    ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது.வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது.
    பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்..

    "அம்மணி.. இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?"

    அவள் ஒன்றும் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினாள்..
    அது அவள் கணவர் வேலைக்காரியுடன் வீட்டைவிட்டு எங்கோ ஓடும்போது எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம்..


    " அன்பே என்னை மன்னித்துக் கொள்..இவ்வளவு நாள் என்னுடன் நீ வாழ்ந்தமைக்கு நம் வீட்டை நீ எடுத்துக் கொள்..நானும் முனியம்மாவும் புது வாழ்க்கை துவக்க 7 லட்சம் பெறுமானமுள்ள நம் ஸ்கார்ப்பியோவை உடனடியாக என்ன விலைக்காவது விற்று பணத்தை அனுப்பு...!!!!"
    __________________

  5. #125
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    சின்னா ரொம்ப குறும்புக்காரன். அந்த ஊர்ல எந்த கலாட்டா நடந்தாலும் அவந்தான் காரணமா இருப்பான். அவன் தொல்லை தாங்காம அவன் அம்மா அப்பா பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.
    ஒருநாள் அவங்க ஊருக்கு ஒரு சாமியார் வந்தார். எல்லாரும் அவங்க கஷ்டத்தை அவர்ட்ட சொல்லி தீர்வு கண்டாங்க. சின்னாவோட அம்மாவும் போய் சொன்னவுடன் சின்னாவை மட்டும் விட்டுட்டுப் போம்மா.. நான் புத்தி சொல்லி அனுப்பறேன்னுட்டாரு. சின்னா ஒண்ணும் புரியாம உக்காந்துருந்தான். எல்லாருக்கும் அறிவுரை சொல்லி அனுப்பிட்டு சின்னாவை கூப்பிட்ட சாமியார் கேட்டார்..

    "கடவுளை அறிவாயா..?"

    சின்னாவுக்கு ஒண்ணும் புரியல். தாடி, மீசை வேற பயமுறுத்துச்சு.

    "கடவுள் எங்கு இருக்கிறார்.. சொல்..?"

    சின்னா தொறந்த வாய் மூடாம் அவரையே பாத்துட்டு இருந்தான்..

    "சொல்லப்பா.. கடவுள் எங்கே..?" இதைக் கேட்ட சாமியார் எதற்கோ சற்றுத் திரும்ப, சின்னா சிட்டய்ப் பறந்தான் வீட்டை நோக்கி..வழியில் அவன் நண்பன் அவனை நிறுத்திக் கேட்டான்..

    "சாமியார் என்னடா சொன்னார்..? ஏன் இப்படி ஓடி வரே..?"

    "பயங்கர சிக்கல்ல மாட்டிக்கிட்டேண்டா.. நம்மூரு சாமியைக் காணோமாம்.. அதையும் நான் தான் ஒளிச்சு வச்சுட்டேன்னு நெனைக்கிறாருடா..!"
    __________________

  6. #126
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    உலகிலேயே மிக கடினமான செயல், அடுத்தவனை சிரிக்க வைப்பதுதான்.. நீங்கள் அதை நிறையவே சிறப்பாகவே செய்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  7. #127
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    ராஜா உன்மையில் சிரிக்க வைக்க நீங்க ராஜதான் நன்றி
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  8. #128
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    உங்கள் சிரிப்புகள் ஆரஞ்சாக தித்திக்குதே..

  9. #129
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    நச்செனும் நகைச்சுவை. சாமி-யாரு
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  10. #130
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    ஆரஞ்சு பழ நகைச்சுவை....அபாரம்

    நன்றி அண்ணா
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  11. #131
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    ஜிம்மி, ஜாக்கி என்ற இரு நாய்களும் சர்தார் மாதவ் சிங்கும் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பப் பட்டார்கள்.தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து [த.க.நி.] ராக்கெட்டுக்கு ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன.

    த.க.நி. ; ஜிம்மி...

    ஜிம்மி ; லொள்.. லொள்..

    த.க.நி. ; சிவப்பு பொத்தானை அழுத்து..! [ஜிம்மி அவ்வாறே செய்கிறது]

    த.க.நி. ; ஜாக்கி....

    ஜாக்கி ; லொள்..லொள்..

    த.க.நி. ; நீல நிற கைப்பிடியை முன்னோக்கித் தள்ளு..[ ஜாக்கி சொன்னபடியே செய்கிறது ]

    த.க.நி. ; மாதவ்..

    மாதவ் சிங் ; லொள்..லொள்..

    த.க.நி. ; குரைக்கிறதை நிறுத்து.. ரெண்டு நாய்க்கும் சாப்பாட்டை வை.. வேற எதுவும் பண்ணாதே.. ஏன்னா உனக்கு புத்திசாலித்தனமான விஷயங்கள் எதுவும் புரியாது..!

  12. #132
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று. முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி. அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

    கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!

Page 11 of 212 FirstFirst ... 7 8 9 10 11 12 13 14 15 21 61 111 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •