Results 1 to 10 of 10

Thread: குழந்தையின் 'நீதிக் கதை'

  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    குழந்தையின் 'நீதிக் கதை'

    சென்னை உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரிறவர் சென்னது;;

    "சாதாரணமாக தனியார் பள்ளிகளில் தமிழை தீண்டத் தகாத ஒரு மொழியாகத் தான் பார்ப்பார்கள்; ஒதுக்கியும் வைப்பார்கள் சார்... ஆனால், நான் பணிபுரியும் பள்ளி கொஞ்சம் வித்தியாசமானது; தமிழுக்கு இங்கே மரியாதை உண்டு.

    "யூ.கே.ஜி., படிக்கும் குழந்தைகளுக்கு படம் பார்த்துக் கதை சொல்லும் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்...

    "ஆலமரத்தில் கூடு கட்டி முட்டையிட்டிருக்கும் காக்கையின் முட்டைகளை, அதே மரத்தின் பொந்தில் வசிக்கும் பாம்பு "ஸ்வாஹா' செய்து வருவதையும், பாம்பைப் பழிவாங்க நினைக்கும் காகம், ராணியின் முத்து மாலையைக் காவலர்கள் கண் முன்னே கவர்ந்து வந்து, அதை பாம்பு வசிக்கும் பொந்தில் போட, பாம்பைக் கொன்று முத்து மாலையை காவலர்கள் எடுத்துச் சென்று, காகத்தை அதன் பிரச்னையிலிருந்து விடுவிப்பதையும் குழந்தைகளுக்குப் புரியும்படி விளக்கிக் கூறினேன்.

    "தலையைத் தலையை ஆட்டியபடி எல்லாக் குழந்தைகளும் கதையை ரசிக்க, ஒரேயொரு குழந்தை மட்டும் எழுந்து நின்று "இது என்ன கதை மிஸ்?' என்றது. "ம்... நீதிக் கதை' என்றேன். "இந்தக் கதையில என்ன நீதி இருக்கு?' எனக் கேட்டது. "தன்னை விட பலசாலியான எதிரிகளைத் தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்!' என்றேன். அதுக்காக காகம் என்ன செஞ்சது?' என்றது. "ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டுது!' என்றேன்.

    "உடனே, அக்குழந்தை, "ஒருத்தருக்குச் சொந்தமான பொருளை அவங்களுக்குத் தெரியாம எடுத்துட்டு வந்தா, அதுக்கு என்ன பேரு?' என்றது. "திருட்டு...' என்றேன். "அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க, திருடறது தப்பு தானே?' எனக் கேட்டது.

    "குழந்தையின் அந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை... "திரு திரு' வென்று விழித்தேன். குழந்தை மேலும் தொடர்ந்தது... "என்ன தான் காக்காவோட முட்டைகளை பாம்பு சாப்பிட்டாலும், அதுக்காக பாம்பைக் கொலை பண்றது தப்பில்லையா மிஸ்? பாம்பும் ஒரு உயிர் தானே!' என்றது.

    "நான், "தப்பு தான்!' என்றேன். உடனே, "இந்தக் கதையில திருடுறதையும், கொலை பண்றதையும் தானே குழந்தைகளுக்கு சொல்லித் தந்திருக்கீங்க மிஸ்! இது பேர் நீதிக் கதையா?' எனக் கேட்டது.

    "வயசுக்கு மீறிய பேச்சுக்களையும், பேசும் குழந்தைகளையும் அதுவரை திரைப்படங்களில் மட்டும் தான் நான் பார்த்திருக்கிறேன். அன்று நேரில் பார்த்தேன். இதே கதையை தான் நம் பெற்றோரும் படித்திருக்கின்றனர்; நாமும் படித்திருக்கிறோம். யாராவது இது குறித்து இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?

    "குழந்தை தொடர்ந்தது... "காக்காவோட முட்டைகளும் பத்திரமா இருக்கணும்; பாம்பும் சாகக் கூடாது. அதுக்கு உங்களுக்கு வேற வழி ஏதும் தோணலியா மிஸ்?' எனக் கேட்டது. "தோணலியே ராஜா...' என்று என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன். ஒப்புக் கொண்டு விட்டாலும் உள்ளே ஒரு குறுகுறுப்பு. குறை கூறத் தெரிந்த குழந்தையின் மனதில் எதுவும் ஐடியா இருக்குமோ என்று அறியும் ஆர்வம் பீறிட, "வேற எதாவது வழி இருக்கா?' என்றேன்.

    "உடனே அது, "இருக்கே!' என்றது. "எங்கே சொல்லு, கேட்போம்...' என நான் கூறியதும், "காகம் சாது. பாம்பு துஷ்டன். துஷ்டனைக் கண்டா துர விலகுன்னு சொல்லி இருக்கில்லையா. அதனால, பொந்து இல்லாத வேற ஒரு மரத்துல போய் காக்கா கூடு கட்டி முட்டை போட்டா, முட்டையும் பத்திரமாக இருக்கும்; பாம்பும் சாகாது இல்லையா?' எனக் கேட்டது.

    "உண்மையில் நான் உறைந்து தான் போனேன். இப்படியொரு கோணத்தில் நாம் யாருமே ஏன் இதுவரை சிந்தித்துப் பார்த்ததில்லை என்று நினைத்தேன்!' எனக் கூறி முடித்தார் அந்த இளம் ஆசிரியை.

    நம்முடைய தலைமுறை வரை கேள்வி கேட்காமல் பெரியவர்கள் சொல்வதை, "பிளைண்ட்'டாக நம்பிக் கொண்டிருந்தோம்; இந்தக் காலத்து பிள்ளைகள் துணிந்து கேள்வி கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர்... வரவேற்க தக்க முன்னேற்றம் தான் என எண்ணினேன்.
    Last edited by mgandhi; 29-11-2006 at 05:49 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    காந்தி,
    நல்லதொரு பதிவுதான்.

    ஆழ சிந்திப்பது எவ்வளவு முக்கியம் என்பதனை விளக்கியுல்லீர்கள்..

    நன்றி
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஒவ்வொரு தலைமுறைக்கும் சில மில்லியன் நியூரான்கள்
    மனித வம்ச மூளையில் கூடிக்கொண்டே போவது அறிவியல் கூற்று!

    பல பில்லியன் நியூரான்கள் ஒரு சுகமான ம்யூட்டேஷனில்
    சட்டென கூடி இருக்குமோ என எண்ண வைக்கிறது
    இந்த மழலையின் பேச்சு!

    -- நன்றி காந்தி!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by mgandhi View Post
    சென்னை உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரிறவர் சென்னது;;

    "சாதாரணமாக தனியார் பள்ளிகளில் தமிழை தீண்டத் தகாத ஒரு மொழியாகத் தான் பார்ப்பார்கள்; ஒதுக்கியும் வைப்பார்கள் சார்... ஆனால், நான் பணிபுரியும் பள்ளி கொஞ்சம் வித்தியாசமானது; தமிழுக்கு இங்கே மரியாதை உண்டு.

    "யூ.கே.ஜி., படிக்கும் குழந்தைகளுக்கு படம் பார்த்துக் கதை சொல்லும் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்...

    "ஆலமரத்தில் கூடு கட்டி முட்டையிட்டிருக்கும் காக்கையின் முட்டைகளை, அதே மரத்தின் பொந்தில் வசிக்கும் பாம்பு "ஸ்வாஹா' செய்து வருவதையும், பாம்பைப் பழிவாங்க நினைக்கும் காகம், ராணியின் முத்து மாலையைக் காவலர்கள் கண் முன்னே கவர்ந்து வந்து, அதை பாம்பு வசிக்கும் பொந்தில் போட, பாம்பைக் கொன்று முத்து மாலையை காவலர்கள் எடுத்துச் சென்று, காகத்தை அதன் பிரச்னையிலிருந்து விடுவிப்பதையும் குழந்தைகளுக்குப் புரியும்படி விளக்கிக் கூறினேன்.

    "தலையைத் தலையை ஆட்டியபடி எல்லாக் குழந்தைகளும் கதையை ரசிக்க, ஒரேயொரு குழந்தை மட்டும் எழுந்து நின்று "இது என்ன கதை மிஸ்?' என்றது. "ம்... நீதிக் கதை' என்றேன். "இந்தக் கதையில என்ன நீதி இருக்கு?' எனக் கேட்டது. "தன்னை விட பலசாலியான எதிரிகளைத் தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்!' என்றேன். அதுக்காக காகம் என்ன செஞ்சது?' என்றது. "ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டுது!' என்றேன்.

    "உடனே, அக்குழந்தை, "ஒருத்தருக்குச் சொந்தமான பொருளை அவங்களுக்குத் தெரியாம எடுத்துட்டு வந்தா, அதுக்கு என்ன பேரு?' என்றது. "திருட்டு...' என்றேன். "அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க, திருடறது தப்பு தானே?' எனக் கேட்டது.

    "குழந்தையின் அந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை... "திரு திரு' வென்று விழித்தேன். குழந்தை மேலும் தொடர்ந்தது... "என்ன தான் காக்காவோட முட்டைகளை பாம்பு சாப்பிட்டாலும், அதுக்காக பாம்பைக் கொலை பண்றது தப்பில்லையா மிஸ்? பாம்பும் ஒரு உயிர் தானே!' என்றது.

    "நான், "தப்பு தான்!' என்றேன். உடனே, "இந்தக் கதையில திருடுறதையும், கொலை பண்றதையும் தானே குழந்தைகளுக்கு சொல்லித் தந்திருக்கீங்க மிஸ்! இது பேர் நீதிக் கதையா?' எனக் கேட்டது.

    "வயசுக்கு மீறிய பேச்சுக்களையும், பேசும் குழந்தைகளையும் அதுவரை திரைப்படங்களில் மட்டும் தான் நான் பார்த்திருக்கிறேன். அன்று நேரில் பார்த்தேன். இதே கதையை தான் நம் பெற்றோரும் படித்திருக்கின்றனர்; நாமும் படித்திருக்கிறோம். யாராவது இது குறித்து இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?

    "குழந்தை தொடர்ந்தது... "காக்காவோட முட்டைகளும் பத்திரமா இருக்கணும்; பாம்பும் சாகக் கூடாது. அதுக்கு உங்களுக்கு வேற வழி ஏதும் தோணலியா மிஸ்?' எனக் கேட்டது. "தோணலியே ராஜா...' என்று என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன். ஒப்புக் கொண்டு விட்டாலும் உள்ளே ஒரு குறுகுறுப்பு. குறை கூறத் தெரிந்த குழந்தையின் மனதில் எதுவும் ஐடியா இருக்குமோ என்று அறியும் ஆர்வம் பீறிட, "வேற எதாவது வழி இருக்கா?' என்றேன்.

    "உடனே அது, "இருக்கே!' என்றது. "எங்கே சொல்லு, கேட்போம்...' என நான் கூறியதும், "காகம் சாது. பாம்பு துஷ்டன். துஷ்டனைக் கண்டா துர விலகுன்னு சொல்லி இருக்கில்லையா. அதனால, பொந்து இல்லாத வேற ஒரு மரத்துல போய் காக்கா கூடு கட்டி முட்டை போட்டா, முட்டையும் பத்திரமாக இருக்கும்; பாம்பும் சாகாது இல்லையா?' எனக் கேட்டது.

    "உண்மையில் நான் உறைந்து தான் போனேன். இப்படியொரு கோணத்தில் நாம் யாருமே ஏன் இதுவரை சிந்தித்துப் பார்த்ததில்லை என்று நினைத்தேன்!' எனக் கூறி முடித்தார் அந்த இளம் ஆசிரியை.

    நம்முடைய தலைமுறை வரை கேள்வி கேட்காமல் பெரியவர்கள் சொல்வதை, "பிளைண்ட்'டாக நம்பிக் கொண்டிருந்தோம்; இந்தக் காலத்து பிள்ளைகள் துணிந்து கேள்வி கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர்... வரவேற்க தக்க முன்னேற்றம் தான் என எண்ணினேன்.
    எங்கே அந்த வாரிசு.. எங்கே அந்த வாரிசு...

    அட நம்ம பாணி சாகாதுப்பா... நாளை உலகம் கண்டிப்பா உருப்படும்..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அண்ணா .....ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கலாமே
    அதுலே ஒன்னு உங்க விட்டில் இருக்கு போலே
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    இந்த காலத்து பசங்க..(ஹி..ஹி..இதுல நானும் சேர்த்தி)
    எவ்ளோ யோசிக்கறாங்க...
    அந்த தம்பியை நினைத்து பெருமைபடறேன்...

    (எழுதியிருக்கறத படிச்சிட்டு எல்லா அங்கிளும் திட்டக்கூடாது ஓகேயா..)
    Last edited by மதி; 01-12-2006 at 02:07 AM.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by Rajeshkumar View Post
    இந்த காலத்து பசங்க..(ஹி..ஹி..இதுல நானும் சேர்த்தி)
    எவ்ளோ யோசிக்கறாங்க...
    அந்த தம்பியை நினைத்து பெருமைபடறேன்...

    (எழுதியிருக்கறத படிச்சிட்டு எல்லா அங்கிளும் திட்டக்கூடாது ஓகேயா..)
    ஹலோ மதி,

    நல்லவேளை அந்த அண்ணாவைன்னு சொல்லலை!

    அப்புறம்.... உங்களையாவது.. திட்டறதாவது..!!!!
    அங்க்கிள் ஆக ஆசை இல்லாத - இளசு!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    நல்ல கதை காந்தி,

    அந்த குழந்தையின் அறிவு மெய்சிலிர்க்க வைத்தது.

    ம்ம்ம் மதி,முடியலை, முடியலை,வேண்டாம் அழுதுருவேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    நல்லா கதை சொல்றீங்க காந்தி ;-)
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  10. #10
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    சபாஷ்டா செல்லம், என்ன அருமையாக கேள்வி கேட்டிருக்கிறாய்.

    நம்ம தாமரையாரின் புதல்வரும் இது மாதிரி தான் கேள்விகள் கேட்பார்.
    பரஞ்சோதி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •